Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
திருச்சி
1. அருள்மிகு அழகிய மணவாளர் கோயில்,
உறையூர்
அருள்மிகு அழகிய மணவாளர் கோயில்
மூலவர் : அழகிய மணவாளர்
அம்மன்/தாயார் : கமலவல்லி
இருப்பிடம் : திருச்சி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ., தூரத்தில் உறையூர் உள்ளது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது.
போன் : +91-431 - 2762 446, 94431 88716.
பிரார்த்தனை : கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க இங்கு ...
சிறப்பு : திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர். ...
2. அருள்மிகு உத்தமர் கோயில்,
உத்தமர் கோவில்
அருள்மிகு உத்தமர் கோயில்
மூலவர் : புருஷோத்தமன்
அம்மன்/தாயார் : பூர்ணவல்லி, அம்பாள்: சவுந்தர்ய பார்வதி
இருப்பிடம் : திருச்சி - சேலம் செல்லும் வழியில் 5 கி.மீ., தூரத்தில் இக்கோயில் இருக்கிறது. பிச்சாண்டார் கோவில் ஸ்டாப்பில் இறங்கி நடந்து செல்லலாம்.
போன் : +91- 431 - 2591 466, 2591 040.
பிரார்த்தனை : குழந்தை பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, ...
சிறப்பு : பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய ...
3. அருள்மிகு ரங்கநாத பெருமாள் கோயில்,
ஸ்ரீரங்கம்
அருள்மிகு ரங்கநாத பெருமாள் கோயில்
மூலவர் : ரங்கநாதர்
அம்மன்/தாயார் : ரங்கநாயகி
இருப்பிடம் : திருச்சியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் ஸ்ரீரங்கம் உள்ளது.
போன் : +91 - 431- 243 2246.
பிரார்த்தனை :
மோட்சம் தரும் தலம் இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் ...
சிறப்பு : நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் ...
4. அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோயில்,
திருவானைக்கா
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோயில்
மூலவர் : ஜம்புகேஸ்வரர்
அம்மன்/தாயார் : அகிலாண்டேஸ்வரி
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 6 கி.மீ., தூரத்தில் திருவானைக்காவல் உள்ளது.
போன் : 91-431- 2230 257.
பிரார்த்தனை : கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு ...
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் (அப்பு) தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது ...
5. அருள்மிகு மாரியம்மன் கோயில்,
சமயபுரம்
அருள்மிகு மாரியம்மன் கோயில்
மூலவர் : மாரியம்மன்
இருப்பிடம் : சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சமயபுரம் இருப்பதால் நிறைய பஸ் வசதி உள்ளது. திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நகரப்பேருந்து வசதி நிறைய உண்டு. திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் 15 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
போன் : +91-431 -207 0460, 267 0460
பிரார்த்தனை : இத்தலத்து அம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள். சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முது மொழிக்கு ஏற்றபடி பக்தர்களின் வேண்டுதல்களை ...
சிறப்பு : பூச்சொரிதல் : ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத நாட்கள் மொத்தம் 28. இந்த காலங்களில் ...
6. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்,
குமாரவயலூர்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்
மூலவர் : சுப்ரமணியசுவாமி , ஆதிநாதர் (அக்னீஸ்வரர்)
அம்மன்/தாயார் : வள்ளிதேவசேனா , ஆதிநாயகி (பூர்வ சித்தி நாயகி)
இருப்பிடம் : முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருச்சி நகரிலிருந்து - 11 கி.மீ., தமிழகத்தில் மிக முக்கிய நகர் திருச்சி என்பதால் போக்குவரத்து வசதி எளிது. திருச்சி நகரிலிருந்து நகர பேருந்து வசதி மூலம் கோயிலை சென்றடையலாம்.
போன் : +91 431 2607 344, 98949 84960.
பிரார்த்தனை :

நாக சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருக்குளத்தில் (நாக சர்ப்ப தோஷம்) மூழ்கி முருகனை தரிசித்தால் திருமணத்தடை நீங்கி சுப காரியம் நடைபெறும். இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள ...

சிறப்பு : முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் இங்கு உள்ளது. சிவனை முருகன் பூஜித்த தலம்.இக்கோயில் சோழர்களால் ...
7. அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில்,
குணசீலம்
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில்
மூலவர் : பிரசன்ன வெங்கடாஜலபதி
இருப்பிடம் : திருச்சி- சேலம் ரோட்டில் 24 கி.மீ., தூரத்தில் குணசீலம் உள்ளது. பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் உள்ளது.
போன் : +91 4326 275 210 275 310 94863 04251
பிரார்த்தனை : கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து ...
சிறப்பு : சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. பெரும்பாலான கோயில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோயிலில் ஒவ்வொரு ...
8. அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) கோயில்,
மணப்பாறை
அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) கோயில்
மூலவர் : நல்லாண்டவர் என்ற மாமுண்டி
இருப்பிடம் : திருச்சியிலிருந்து மணப்பாறை சென்று அங்கிருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ள ஆண்டவர் கோயிலுக்கு டவுன்பஸ், மினிபஸ், ஆட்டோக்களில் செல்லலாம்.
போன் : +91- 4332 - 267 586, 98658 55061
பிரார்த்தனை : குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், உடன்பிறந்தவர்களுக்கு தொந்தரவு, கணவன் மனைவி பிரச்னை, விஷ ஜந்துக்களால் தொந்தரவு, பெண்களுக்கு மனது ரீதியாக ஏற்படும் எந்த பிரச்னையாக ...
சிறப்பு : இத்தலத்தில் சப்த கன்னிமார்கள், நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இங்கு இவர்களுக்குத்தான் முதல் பூஜை. லாட ...
9. அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில்,
சிறுகனூர், திருப்பட்டூர்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில்
மூலவர் : பிரம்மபுரீஸ்வரர்
அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)
இருப்பிடம் : திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் செல்லும் பஸ்களில் சென்று 30 கி.மீ., தொலைவிலுள்ள சிறுகனூரில் இறங்கி, அங்கிருந்து மேற்கே பிரியும் ரோட்டில் 4 கி.மீ.,தூரம் சென்றால் திருப்பட்டூரை அடையலாம். சிறுகனூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.
போன் : +91- 431 2909 599
பிரார்த்தனை : குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ...
சிறப்பு : பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு ...
10. அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்,
திருச்சி
அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்
மூலவர் : உச்சி பிள்ளையார்
இருப்பிடம் : திருச்சி நகரின் நடுவில் மலைக்கோட்டையின் உச்சியில் கோயில் அமைந்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ்வசதி உள்ளது.
போன் : +91-431- 270 4621, 270 0971, 271 0484.
பிரார்த்தனை : எந்த காரியங்கள் தொடங்கினாலும் இவரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி ...
சிறப்பு : மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில் ...
 
மேலும் திருச்சி அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar