Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் முருகன் கோயில்
 
நாகப்பட்டினம் முருகன் கோயில் (93)
 
அருள்மிகு முருகப் பெருமாள் திருக்கோயில்
கூட்டுமாங்காடு-ஆச்சாள்புரம்-609 101, நாகப்பட்டினம் மாவட்டம்
சீர்காழிக்கு வடகிழக்கே மயேந்திரபள்ளி வழியில் 14 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
தோணித்துறை (அணைக்குடி)-609 102 நாகப்பட்டினம் மாவட்டம்
ஆச்சாள்புரம் வழியில் உள்ளது.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
கொரநாடு-609 002, நாகப்பட்டினம் மாவட்டம்
மாயூரம் அருகே.
அருள்மிகு குமரன் திருக்கோயில்
அருவாப்பாடி-609 203, நாகப்பட்டினம் மாவட்டம்
மாயூரத்துக்கு வடக்கே 5 கி.மீ.
அருள்மிகு பழனிஆண்டவர் திருக்கோயில்
கோகூர்-611 104, நாகப்பட்டினம் மாவட்டம்
கீழ்வேளூருக்கு வடகிழக்கே 5 கி.மீ.
அருள்மிகு பழனியப்பசாமி திருக்கோயில்
தன்னிலபாடி-611 109, நாகப்பட்டினம் மாவட்டம்
சிக்கலுக்குத் தென்மேற்கே 7 கி.மீ.
அருள்மிகு முருகன் திருக்கோயில்
வல்லமங்கலம் (நாகை வட்டம்), நாகப்பட்டினம் மாவட்டம்
அருள்மிகு முருகன் திருக்கோயில்
மஞ்சாடி, நாகப்பட்டினம் மாவட்டம்
முருகன் கணபதியை மஞ்சளில் பிடித்து வணங்கிய தலம்.
அருள்மிகு தண்டபாணி திருக்கோயில்
அருள்மிகு தண்டபாணி திருக்கோயில், பொரவாச்சேரி, வழி சிக்கல், நாகை வட்டம் மற்றும், மாவட்டம் 611108.
+91 4366-269332, 9443462760
நாகப்பட்டினம் திருவாரூர் சாலையில் நாகையிலிருந்து 4 கிமீ. சிக்கலிலிருந்து 1 கிமீ.
இத்தலத்தில் முருகன் 12 கரங்களுடன் ஆறுமுகன் மயில் மீது இடக்காலை மடித்து வலக்கால் தொங்க அமர்ந்த கோலத்தில் பெரும் சித்திர வேலைப்பாடு அமைந்த கோலத்தில் அருள்கிறார். பொருள் வைத்த சேரியே பொராவாச் சேரி ஆனது. எட்டுக்குடி, எண்கண், சிக்கல் மற்றும் இக்கோயிலின் முருகன் ஒரே சிற்பியினால் செதுக்கப்பட்டது. திருவாசியுடன் தேவியர்களும் உள்ளனர். மயில் பாம்பினைக் கவ்வி இரு கால்களுடன் முருகனைத் தாங்கி நிற்கும் வண்ணம் காணற்கரிய சிற்பமாக இது திகழ்கிறது. அந்தச் சிற்பி கட்டை விரல், கண்கள் இழந்தும் முருகன் சிலையினை வடித்தான் என்பதே ஆச்சரியமான உண்மை. அவர் ஓர் சித்தர் என்றும் அவரது சமாதியும் எண்கண்ணில் உள்ளது.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், திருமயிலாடி, கொள்ளிடம் வட்டம், வழி வடகல் 609115, நாகை மாவட்டம்.
+91 4364-263342, 9940751068, 9940751068
சிதம்பரம் சீர்காழி பாதையில் உள்ள புத்தூரிலிருந்து அரை கிமீ தொலைவில் உள்ளது திருமயிலாடி கொண்டல் மற்றும் கொள்ளிடக் கரையில் உள்ள வடரங்கம் அருகே உள்ள இதர தலங்கள். தாண்டவன் குளம், மாதானை தலங்களும் அருகே உள்ளன. சீர்காழி சிதம்பரம் பாதையில் சீர்காழியிலிருந்து 7 கிமீல் உள்ள புத்தூருக்கு மேற்கே 5 கிமீல் திருமயிலாடி. நேரடி நகரப் பேருந்து உள்ளது. கொள்ளிடத்தின் கிழக்குக் கரையில் சீர்காழியில் இருந்து 12 கிமீ. ஏ-8 வழித்தடம் சீர்காழியிலிருந்து வடரங்கத்திற்குச் செல்லும். முதல் பேருந்து காலை 5 மணிக்கு. அரை மணி நேரத்திற்கு ஓர் பேருந்து. சீர்காழி ரயிலடியிலிருந்து புதிய பைபாஸ் சென்று இத்தலத்தை அடையலாம். ஆட்டோ வசதியும் உள்ளது.
இத்தலத்தில் சுந்தரேஸ்வரர், பிரகதாம்பாள் சன்னதி உள்ளன. அம்பாள் மயிலாக ஆடிவந்து வழிபட்ட தலம். வில்வாரண்ய க்ஷேத்திரம். முருகனுக்கு மயில் வாகனம் இல்லை. சேவற்கொடியுடன் நின்ற கோலத்தில் பாலசுப்பிரமணியர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் உள்ளார். இரண்டு அம்பாள் சிலை உள்ளது. முதலில் ஒன்று பின்னமானதால் வேறு அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிற்காலத்தில் பின்னமானது தானாகவே சரியானது. கந்த சஷ்டியின் போது சிறப்பாக பூஜைகள் நடைபெறுகின்றன.
பூஜை நேரம்: -
<< Previous  7  8  9  10  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar