Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கிருஷ்ணன்
  உற்சவர்: ராஜகோபாலசுவாமி
  அம்மன்/தாயார்: ருக்மணி, சத்யபாமா
  ஊர்: நாகர்கோவில்
  மாவட்டம்: கன்னியாகுமரி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கிருஷ்ண ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி  
     
 தல சிறப்பு:
     
  காவல்தெய்வம் பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில். வடசேரி, நாகர்கோவில், கன்னியாகுமரி.  
   
போன்:
   
  +91 4652 - 274 499. 
    
 பொது தகவல்:
     
  மூலஸ்தானம் எதிரிலுள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப் பட்டிருக்கிறது. இங்கு கிருஷ்ணரே பிரதானம் என்பதால் கோஷ்ட மூர்த்திகள் இல்லை. முன் மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர். பிரகாரத்திலுள்ள காவல்தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள கிருஷ்ணரை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
 

குழந்தை கண்ணன்: மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்புபூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார். மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தபோது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜகோபாலரையும் வடித்துள்ளனர். சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது ராஜகோபால சுவாமியே தேரில் எழுந்தருளுவார். வைகுண்ட ஏகாதசியன்றும் இவரே சொர்க்கவாசல் கடக்கிறார். இத்தலத்து கிருஷ்ணர் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதால், இவரது பெயரில் இந்தக் கோயில் இருக்கும் இடம் கிருஷ்ணன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.


குழந்தை பிரார்த்தனை: தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார். இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார். ஆடி கடைசி சனிக்கிழமையன்று இவருக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தண்ட சுவாமி: மூலஸ்தானம் எதிரிலுள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இங்கு கிருஷ்ணரே பிரதானம் என்பதால் கோஷ்ட மூர்த்திகள் இல்லை. முன் மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சந்நிதியில் காட்சி தருகின்றனர். பிரகாரத்திலுள்ள காவல்தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார். சபரிமலையில் மண்டல பூஜை நடக்கும் நாளன்றும், தை மாத பிறப்பன்றும் மட்டும் இந்த தண்டத்திற்கு விசேஷ பூஜை நடக்கும். சாஸ்தா சந்நிதியும் உள்ளது. பங்குனி உத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் நெல்லிமரம் இத்தலத்தின் விருட்சம். இங்குள்ள கொன்றை மரத்தடியில் அருகில் நாகருடன், சிவலிங்கம் இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் லிங்கம், நாகத்திற்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.



 
     
  தல வரலாறு:
     
  இப்பகுதி ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது. குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோயில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தைக்கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி கோயில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: காவல்தெய்வம் பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar