Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்துகுமார சுவாமி
  அம்மன்/தாயார்: வள்ளி தெய்வானை
  ஊர்: பவளமலை
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  திருக்கார்த்திகை, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம்  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள கைலாசநாதர் லிங்கம் சுயம்புவாக தோன்றியது என்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில் பவளமலை, ஈரோடு.  
   
போன்:
   
  +91 97157 40960 
    
 பொது தகவல்:
     
  திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம். கைலாசநாதர், பெரியநாயகி அம்பாள் சந்நிதியும் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு கிடைக்க,  அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல், செவ்வாய் தோஷம் நீங்க, நோய் குணமடைய இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

பச்சைமலை, பவளமலை எங்கள் நாடு, பரமேஸ்வரன் வாழும் மலை எங்கள் நாடு என்ற குற்றாலக் குறவஞ்சியில் ஒரு வரி இருக்கிறது. அதில் குறிப்பிடப்படுவதும், முல்லைக்கு தேர்கொடுத்த பாரி ஆண்ட பகுதி என்ற பெருமை கொண்டதும் இந்த பவள
மலையே. தூர்வார ரிஷி இத்தலத்து முருகனை வணங்கியுள்ளார். செட்டிநாட்டு பாடல் பெற்ற தலம். பழமையான இக்கோயிலில் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.

திரிசதார்ச்சனை: திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதை என்றால் 300. முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பின், இந்திரன் முதலான தேவர்கள் கூடி, அவருக்கு செய்த அர்ச்சனையே திரிசதார்ச்சனை. வெற்றியைப் புகழ்ந்து செய்ததால் இதற்கு சத்ரு சம்ஹார திரிசதார்ச்சனை என்று பெயர் வந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழிலும் சிவனைப் போன்று முருகனுக்கும் இருக்கிறது என்று போற்றப்படும் அர்ச்சனையாக விளங்குகிறது. சூரசம்ஹாரம், வள்ளிதேவசேனா கல்யாணம், தந்தைக்கு உபதேசம், தேவர் குலம் காக்க, பிரம்ம சாஸ்திரம், பக்தர்களுக்கு அனுக்கிரஹம் ஆகிய ஆறு காரணங்களுக்காக முருகனுக்கு ஆறுமுகம் ஏற்பட்டது. அதிலிருந்து சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் (க்ஷடாசரம்) உருவானது. கேடு மற்றும் இடையூறு நீங்க, ஒரு முகத்திற்கு 50 அர்ச்சனை வீதம் ஆறுமுகத்துக்கு 300 மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தைப்பேறும் கிடைக்கிறது. அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல் ஆகிய வற்றுக்காகவும் இந்த அர்ச்சனையைச் செய்கின்றனர்.

செவ்வாய் தோஷ பரிகாரம்: பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர். பவளமலையில் திரிசதார்ச்சனை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்குகிறது. செவ்வாய் மாலை ஐந்து மணிக்கு பருப்பு பாயாசம், உளுந்தவடை நைவேத்தியமாக படைக்கப்பட்டு திரிசதார்ச்சனை நடக்கும். இதில் பங்கேற்றால், நினைத்தது நடக்குமென்பது ஐதீகம்.

தவத்தில் வள்ளி தெய்வானை: மூலவர் முத்துக்குமார சுவாமி பிரம்மசாரியாக எழுந்தருளியுள்ளார். வாயு மூலையில் வள்ளி தெய்வானைமுருகனைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவம் இருக்கின்றனர். அதாவது, திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம். கைலாசநாதர், பெரியநாயகி அம்பாள் சந்நிதியும் உள்ளது. செவ்வாய் காலை சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

கைலாசலிங்கம்: முருகன் சந்நிதி அருகில் கைலாசநாதர் லிங்கம் அருகிலுள்ள வயல்வெளியில் புதைந்துஇருந்தது. விவசாயிகள் வயலை உழும் போது லிங்கம் கிடைத்தது. விவசாயிகள் இதனை எடுத்து வந்து கோயிலில் பூஜித்துவருவதால் அதை சுயம்புலிங்கமாக (தானாகவே தோன்றும் லிங்கம்) கருதுகின்றனர். கைலாசநாதரை வணங்கினால் நோய் குணமடைகிறது.

 
     
  தல வரலாறு:
     
  வாயுவும், ஆதிசேஷனும் தமக்குள் யார் சக்திமிக்கவர் என்று போட்டி போட்டனர். வாயு புயலாக மாறி வீசத்துவங்கினார். சக்தி வாய்ந்த மேருமலையையே தகர்க்கும் நோக்கத்துடன், தன்னுடைய முழுபலத்துடன் மலை மீது மோதினார். காற்றின் வேகம் தாளாமல், மலையின் சிகரங்களில் ஒன்று பூலோகத்தில் விழுந்தது. அந்த சிகரமே பவளமலை. ஞானப்பழம் கிடைக்காததால் பெற்றோரிடம் கோபித்த முருகப்பெருமான் பழநியில் தங்கினார். அதன்பிறகு குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக உலகத்தார் வழிபடத் துவங்கினர். அவ்வகையில், பவளமலையில், கணவால குல ÷க்ஷத்திரத்தை சேர்ந்த பக்தர்களால், முருகன் கோயில் எழுப்பப்பட்டது. இவருக்கு, முத்துக்குமார சுவாமி என்பது திருநாமம்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள கைலாசநாதர் லிங்கம் சுயம்புவாக தோன்றியது என்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar