Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நவகோடி நாராயணப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு நவகோடி நாராயணப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நவகோடி நாராயணப் பெருமாள்
  உற்சவர்: நவகோடி நாராயணப் பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  தல விருட்சம்: வெடத்தலை மரம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  புராண பெயர்: மாலுமிபட்டி
  ஊர்: கோயமுத்தூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதேசி, கோகுலாஷ்டமி போன்றவை  
     
 தல சிறப்பு:
     
  ராமானுஜர் துறவறம் பூண்டு தோசம் நீங்கி, நிவர்த்தி பெற்ற தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நவகோடி நாராயணப் பெருமாள் திருக்கோயில் மலுமாச்சம்பட்டி பொள்ளாச்சி மெயின் ரோடு, ஒத்தக்கால் மண்டபம், கோயமுத்தூர்–641032  
   
போன்:
   
  +91 422 2672000, 2677700 , 99431 98008 
    
 பொது தகவல்:
     
  கோட்டை கோயில் என்ற பேர் பெற்ற தலம். தற்போதும் இங்கு உடைந்த உயரமான மண் சுவர்கள் இங்கு உள்ளன. பல கல்வெட்டுகள் அழிந்த நிலையில் இங்கு காணப்படுகின்றன. ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது.

 
     
 
பிரார்த்தனை
    
   எந்த விதமான தோசங்களும் நிவர்த்தி பெரும் தலமாக இது அமைந்துள்ளது. 
 
    
நேர்த்திக்கடன்:
    
  செண்பகப் பூ மற்றும் மல்லிகை பூ இறைவனுக்கு சூடி வழிபாட்டில் நினைத்தது நடக்கும். 
    
 தலபெருமை:
     
  ராமானுஜர் துறவறம் பூண்டு  தோசம் நீங்கி, நிவர்த்தி பெற்ற தலம். சுமார் 1000 ஆண்டு முற்பட்டது என்ற தகவல் உண்டு. ஆனால் கோவில் வரலாறு கல்வெட்டுகள் அழிந்துள்ளதால் சரியான ஆண்டு கணிக்க முடியவில்லை. இக்கோயிலுக்கு சொந்தமாக நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.  
     
  தல வரலாறு:
     
  சேர மன்னன் மீது, முகலாயமன்னன் போர் தொடுத்தபோது இந்த கோயிலை போர் வீரர்கள் பயன்படுத்தி உள்ளனர். கோயமுத்தூரின் மத்திய பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவிலும், புற நகர் பகுதியில் இக்கோயிலையும் அப்போதைய அரசர்கள் பயன்படுத்தி உள்ளனர். போரின் போது இக்கோவில் முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில், இவற்றில் இன்றும் பல இடங்களில் பீரங்கி குண்டுகளால் ஏற்பட்ட துளைகள் காணலாம். மேலும் அப்தோதைய கேரள மாநிலத்தில் படகுகள் செலுத்த மாலுமிகள், இக்கோயிலில் தங்க வைக்கப்பட்டதால், இந்த ஊரை மாலுமிமச்சம்பட்டி என்று அழைத்து, அது மருவி இன்று மலுமாச்சம்பட்டி என்று அழைக்கபடுகிறது என்ற தகவல் உண்டு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ராமானுஜர் துறவறம் பூண்டு தோசம் நீங்கி, நிவர்த்தி பெற்ற தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar