Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நவநீத கிருஷ்ணர்
  அம்மன்/தாயார்: மகாலட்சுமி
  ஊர்: மதுரை
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கோகுலாஷ்டமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி.  
     
 தல சிறப்பு:
     
  3 மாதங்கள் ஸ்ரீநிவாசர் மீது சூரிய ஒளி விழுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில், பந்தடி 5வது தெரு, விளக்குத்தூண், மதுரை-625 001. மதுரை மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 92451 45226. 
    
 பொது தகவல்:
     
 

இக்கோயில் கட்டும்போது கிடைத்த மகாகணபதி, முன்மண்டபத்தில் இருக்கிறார். சன்னதி முன்புறம் உள்ள தூணின் இடதுபுறம் ஆஞ்சநேயர், வலதுபுறம் கருடாழ்வார் இருவரும் துவாரபாலகர் போல இருக்கின்றனர். மற்றொரு தூணில் ஜெய, விஜயர்களும் உள்ளனர்.கோயிலுக்கு வெளியே மதுரையின் காவல் தெய்வம் கருப்பசாமியை, சாட்டை ரூபத்தில் வைத்துள் ளனர். அரிவாள், கதை ஆகிய ஆயுதங்களும் இந்த சன்னதியில் உள்ளன.



 
     
 
பிரார்த்தனை
    
  கிரகங்கள் சார்ந்த தோஷம் உள்ளவர்கள் ராகு, கேதுவிற்கு பூஜை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். பிரகாரத்தில் உள்ள நாகர் சன்னதியில் மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  புத்திரதோஷம் உள்ளவர்கள் இவருக்கு வெண்ணெய், சர்க்கரை பொங்கல், அவல் நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  முன்மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சன்னதி உள்ளது. இச்சன்னதி எதிரே ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.கிருஷ்ணர் பிறந்த தினமான கோகுலாஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமிக்கு மறுநாள் மாலையில் பகவத்கீதை பாராயணம் நடக்கிறது.மூலஸ்தானத்தில் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணெயுடன், சிரித்த முகத்துடன், பாலகனாக நின்ற கோலத்தில் அருளுகிறார். இவரது வலது மார்பில் மகாலட்சுமியும், அருகிலேயே உற்சவரும் இருக்கின்றனர். இவர் வீதியுலா செல்வது கிடையாது. ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரத்திலும் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

சாளக்கிராம கற்கள்:
சுவாமி சன்னதிக்கு பின்புறம் ஸ்ரீநிவாசப்பெருமாள், அலர்மேலுமங்கை தாயார் இருவரும் இருக்கின்றனர். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் சூரிய உதயத்தின்போது, தொடர்ந்து 3 மாதங்கள் ஸ்ரீநிவாசர் மீது சூரிய ஒளி விழுகிறது.தினமும் காலையில் கிருஷ்ணருக்கு பூஜை செய்யும்போது, 27 நட்சத்திர தீபம் மற்றும் 108 தீபம் ஏற்றி தூபம் காட்டுகின்றனர்.இந்தக் கோயிலில் கண்டகி நதியில் கிடைத்த சாளக்கிராம கற்கள் இருக் கின்றன. சாளகிராமம் மற்றும் ஜடாரிக்கு தினமும் பாலபிஷேகம் நடக்கிறது. இந்த தரிசனம் கண்டால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பரிகார தலம்: 
பொதுவாக பெருமாள் கோயில்களில் நவக்கிரக சன்னதி வைக்கப்படுவதில்லை. கண்ணன், காளிங்கன் என்ற நாகத்திற்கு முக்தி கொடுத்து அதன் மீது நின்று ஆடியவர் என்பதால், இங்கு ராகு, கேது கிரகங்கள் மட்டும் சிலை வடிவில் உள்ளன.
 
     
  தல வரலாறு:
     
  "நவநீதம்' என்றால் "வெண்ணெய்' எனப்பொருள். தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகி விடும். உயிர்களான நாமும், கடவுளால் அருளப்பட்ட இந்த பூமியை நமக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.""ஏ மனிதனே! நீ தண்ணீரில் கலக்கும் பால் போல் அல்லாமல், அந்த பாலில் இருந்து பிறந்து அந்த பாலிலேயே கலக்க மறுக்கும் வெண்ணெயைப் போல், ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இந்த பூமியில் வாழ்.பிருந்தாவனத்து கோபியர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து, எப்படி என்னை வந்தடைந்தார்களோ, அப்படியே வந்துசேர்,'' என்று உணர்த்தவே, அவன் பூமியில் அவதரித்தான்.வெண்ணெய் திருடினான். ஆம். உலகப்பற்று இல்லாமல், அவனையே எண்ணிக்கொண்டிருந்த மனிதர்களுக்கு அவன் மோட்சம் தந்தான். அவனை அடைய மறுத்து வெறுத்த கம்சன், சிசுபாலன், துரியோதனன், கர்ணன் போன்றவர்களை கட்டாயப்படுத்தி மோட்சத்திற்கு அனுப்பி "கருணாமூர்த்தி' என பெயர் பெற்றான்.இப்படிப்பட்ட பெருமை களைக் கொண்ட சின்னக்கண்ணனான நவநீதகிருஷ்ணன் மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகிலுள்ள பந்தடி 5ம் தெருவில் அருள்பாலிக்கிறான்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 3 மாதங்கள் ஸ்ரீநிவாசர் மீது சூரிய ஒளி விழுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar