SS ஏகஸ்லோகி (ராமாயண சுருக்கம்)! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஏகஸ்லோகி (ராமாயண சுருக்கம்)!
ஏகஸ்லோகி (ராமாயண சுருக்கம்)!
ஏகஸ்லோகி (ராமாயண சுருக்கம்)!

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவன் ஸ்ரீராமன். அப்பெருமானின் சரிதத்தை, மகரிஷி வால்மீகி முதற்கொண்டு, போதாயனர், வியாசர், துளசிதாசர், கம்பர் போன்றோர் வெவ்வேறு மொழிகளில் உலகம் உய்ய எடுத்துக்காட்டினர். அனைவரும் அவசியம் படித்துணர வேண்டிய இம்மகா காவியத்தை, சுருக்கமாகப் பாராயணம் செய்யத்தக்க வகையில் நமது இதழில், கடந்த ஒன்பது ராமாயண காவியத்தை விளக்குகிறது இந்த சுலோகம்.

ஆதௌ ராம தபோ வனாதி கமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹீ ஹரணம் ஜடாயு மரணம்
சுக்ரீவ சம்பாஷணம்
வாலீ நிக்ரஹணம் சமுத்ர தரணம்
லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவணகும்பகர்ணநிதனம்
ஏதத்தி ராமாயணம்

ஆதௌ ராம தபோ வனாதி கமனம்...

தசரதன் மைந்தன் ஸ்ரீராமச்சந்திரன்
தந்தை சொல் காக்க தவசியாய் ஆனான்
பதினாலு வருஷம் வனவாசம் போனான்
பத்தினி ஜானகி உத்தமியோடு.

ஹத்வா ம்ருகம் காஞ்சனம்...
மாய மானான மாரீசனாலே
நேய மனையாளை நீங்கினான் ராமன்.

வைதேஹீ ஹரணம்...
தனித்திருந்த சமயம் தசகண்ட ராவணன்
ஜானகித் தாயைச் சிறையெடுத்துப் போனான்

ஜடாயு மரணம்...
தடுத்தார் ஜடாயு எடுத்தானே வாளை
விறகை வெட்டினாற்போல் இறகை வெட்டிப் போட்டான்
ஸ்ரீராமனிடமே சேதி சொல்லி இறந்தார்
ஆறாத துயரம் கொண்டாரே பெருமாள்

சுக்ரீவ சம்பாஷணம்...
வந்தானே அனுமான்- வாயுவின் மைந்தன்
தந்தானே அம்மன்- தரிச்சிருந்த நகையை
கோதண்ட ராமன் சுக்ரீவனோடு
கொண்டானே நேசம் கொண்டவளைத் தேட

வாலீ நிக்ரஹணம்...
வல்லவன் ராமன் வாலியைக் கொன்று
நல்ல தம்பிக்கே நாட்டைக் கொடுத்தான்

சமுத்ர தரணம்...

எண்ணாத தூரம் இலங்காபுரிக்கே
அண்ணாந்து பார்த்தே அனுமந்தன் தாவினான்

லங்காபுரி தஹனம்...
கணையாழி கொடுத்தான் காலைப் பணிந்தான்
இலங்காபுரியை எரிச்சானே அனுமான்

பஸ்சாத் ராவண கும்பகர்ண
நிதனம் ஏதத்தி ராமாயணம்
பத்துத் தலை உருள
பனங்காயைப் போல
கொத்தோடே உதிர்த்தான்
கோதண்ட ராமன்

பட்டாபிஷேகம்
பத்தினியை மீட்டுப் பாரெங்கும் புகழப்
பட்டாபிஷேகம் கொண்டாரே பெருமாள்
பட்டாபிஷேகம் கொண்ட ஸ்ரீராமன்
பாதார விந்தம்-பாடுவோமே நித்தம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar