SS ஐயப்பன் சகஸ்ர நாமாவளி! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஐயப்பன் சகஸ்ர நாமாவளி!
ஐயப்பன் சகஸ்ர நாமாவளி!
ஐயப்பன் சகஸ்ர நாமாவளி!

1. சிவபுத்ர-சிவனுக்கு புதல்வன், மங்களகரமான, மிகவும் அழகான வடிவுள்ளவன். சிவம் என்னும் சொல்லுக்குப் பொருள் பல. அந்த பல பொருள்களும் நிறைந்த வடிவானவன். விநாயகர் சுப்ரமணியரைப் போல. சிவனுக்குப் பிரியம் வாய்ந்த குமாரன். ஆகையால் எங்கும் எப்போதும் எல்லோராலும் போற்றப்படுகின்றவன்.
 
2. மஹாதேஜா:- அதிக காந்தி (ஒளி) படைத்தவன். ஒப்பற்ற பலம் உள்ளவன்.

3. சிவகார்யதுரந்தர:- பரமசிவனின் கட்டளைப்படி சகலகாரியங்களையும் நடத்துபவன்; அல்லது அந்தக் காரியபாரங்களை வகித்தவன், மங்களகரமான கிரியைகளை கொண்டவன். ஆகவே அமங்கலகார்யம் அற்றவன்.

4. சிவப்ரத:- சிவனுக்கு இஷ்டத்தை அளிப்பவன். எல்லாருக்கும் மங்களத்தை அளிப்பவன்.

5. சிவஜ்ஞானீ - சிவனை அறிந்தவன், மங்களகரமான அறிவுள்ளவன்.

6. சைவதர்ம ஷுரக்ஷித:- சிவனது தர்மங்களையும் காப்பாற்றுபவன், அதாவது சிவனது கோயில், குளம், பூஜை அவைகளுக்குரிய பொருட்கள் எல்லாம் இவனால் தான் ரக்ஷிக்கப்படுகின்றன.

7. சங்க தாரீ- சங்குதரித்தவன், வனபதியான படியால் தனதுவரவைத் தெரிவிப்பதற்கென சங்கை கைக்கொண்டவன்.

8. ஸுராத்யக்ஷெ:- தேவர்களுக்கு முன்னுள்ளவன் தேவர்களால் போற்றப்படுகிறவன்.

9. சந்த்ர மௌளீ :- தனது தந்தையைப் போல மதியைச் சூடியவன்.

10. ஸுரோத்தம:- மேலான தேவர்களைக் கொண்டவன். மேலான தேவன்.

11. காமேச:- மன்மதனுக்கு ஈசன், மன்மதனால் போற்றப்படுபவன். (முன்னொரு காலத்தில் தேவராஜனின் கட்டளைப்படி இமயமலை சிகரத்தில் பரமசிவனின் யோக நிலையைக்கலைப்பதற்கு மன்மதன் அக்காட்டில் செல்வதற்கு முன் மன்மதனால் பூஜிக்கப்பட்டவன் என்றும் சொல்லுவர்.

12. காமதேஜஸ்வீ - மன்மதனுக்கு ஒப்பானவன்.

13. காமாதி பலஸம்யுத:- அடியவர்களுக்கு அனுக்ரஹிக்க வேண்டி, காமம், அர்த்தம், தர்மம், மோக்ஷம் என்ற நான்கு புருஷார்த்தங்களைக் கைக்கொண்டவன். இச்சாரூபிணிகளான ஸ்திரீகளால் அளிக்கப்படும் பலனோடு கூடியவன்.

14. கல்யாண:- மங்களரூபன்.

15. கோமளாங்க:- அழகான கை, கால் முதலிய அவயவங்கள் உடையவன்.

16. கல்யாண பலதாயக:- மங்களத்தை அளிப்பவன், திருமணம் ஆகாத கன்னியர்க்கும் புருஷர்களுக்கும் விவாஹத்தை நடத்தி வைப்பவன். ஆகையால் விவாஹத்துக்கு முன் இவனை உலகம் போற்றுகிறது. (ஓர் வெள்ளித்தகட்டில், ஊஞ்சல் மீது ஓர் தம்பதியர் அமர்ந்துள்ளது போன்ற உருவாரம் செய்து அதை முறைப்படி பூஜித்து சபரிமலைக்குக் காணிக்கையாக செலுத்தினால், நீண்டகாலமாகத் தடைப்படும் திருமணங்களும் கைகூடிவரும் என்பது அனுபவ பூர்வமானது)

17. கருணாப்தி:- கடல் போன்ற தயை உள்ளவன்.

18. கர்மதக்ஷ:- உலக காரியங்களை நடத்துவதில் வல்லவன்.

19. கருணாரஸ ஸாகர:- சிருங்காரம் முதலான ஒன்பது ரஸங்களில் கருணாரஸத்தையே கடலாக அதாவது அதிகமாகக் கொண்டவன்.

20. ஜகத்ப்ரிய: உலகிற்கு ப்ரியமானவன், உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு கொண்டவன்.

21. ஜகத்ரக்ஷக:- உலகத்தைக் காப்பவன்.

22. ஜகதானந்த தாயக:- உலகுக்கு ஆனந்தம் அளிப்பவன்.

23. ஜயாதி சக்தி ஸம்ஸேவ்ய:- ஜயை விஜயை முதலான சக்திகளால், அல்லது ஜயாதி எனும் சக்தி மந்திரங்களால் நன்றாக ஸேவிக்கப்பட்டவன். யுத்தத்தில் வெற்றிபெற,  முதலிலும் முடிவிலும் தனது பரிவாரங்களால் போற்றப்படுபவன்.

24. ஜனாஹ்லாத:- ஜனங்களுக்கு சந்தோஷத்தை அளிப்பவன்.

25. ஜிகீஷுக:- வெற்றியை விரும்புகிறேன்.

26. ஜிதேந்த்ரிய:-  அடக்கப்பட்ட இந்திரிய வியாபாரங்களை உடையவன் (கர்மேந்திரியம்-5, ஞானேந்திரியம்-5)

27. ஜிதக்ரோத:- குரோதத்தை-கோபத்தை-அகற்றியவன்.

28. ஜிததேவாரி ஸங்கக:- தேவர்களுக்குப் பகைவர்களான அரக்கர்களை வென்றவன்.

29. ஜைமின்யாதி முனிஸேவ்ய:- ஜைமினி முதலான முனிவர்களால் பூஜிக்கப்பட்டவன். ஜைமினி என்பவர் வேதவ்யாஸரின் சிஷ்யர்களில் ஒருவர். ஸாம வேதத்தை வெளியிட்டவர். கர்மகாண்ட நூலை (மீமாம்ஸா ஸூத்ரங்கள்) இயற்றியவர். வியாஸரின் அருளால் ஞானம் பெற்று சிதம்பரக்ஷேத்திரம் வந்து வேதபாதஸ்தவம் எனும் ஸ்தோத்ரத்தால்ஸ்ரீ நடராஜரைத் துதித்துப்பரமனின் அருள் பெற்றவர். அந்த முனிவராலும் சிதம்பரத்தில் ஹரிஹரபுத்திரன் பூஜிக்கப்பட்டவன் ஆவன் என்பது கருத்து.

30. ஜராமரண நாசக:- மூப்பு, நரை, மரணம் இவைகøணு அகற்றுபவன்.

31. ஜனார்த்தன ஸுத:- திருமாலின் புதல்வன், விஷ்ணு மோஹினியின் குமாரன்.

32. ஜ்யேஷ்ட:- முதன்மையானவன்.

33. ஜ்யோஷ்டாதி  கண ஸேவித:- பெரியண்ணன் முதலான கண்களால் ஸேவிக்கப்பட்டவன்.

34. ஜன்மஹீன:- பிறவியற்றவன்.

35. ஜிதாமோஹ:- மோஹத்தை வென்றவன், ஆமோஹன் என்ற அசுரனை அல்லது காமனை வென்றவன்.

36. ஜனகேனாபிபூஜத:- ஜனகராஜனால் பூஜிக்கப்பட்டவன், ஜனகன் தனது மிதிலா நகரத்தில் எட்டுத்திக்குகளிலும் சாஸ்தாவை ப்ரதிஷ்டை செய்து சத்ருக்கள் அணுகாமல் இருப்பத்தற்காக பூஜித்தான் என்பது புராணம், (ஜனகன் என்றால் தந்தை என்று பொருள். எனவே தந்தையாலும் பூஜிக்கப்படவன் என்பது பொருள். சபரிமலையில் ஸ்ரீ தர்மசாஸ்தாவாக மணிகண்டனை ஆவாஹனம் செய்து ஐயனின் தந்தை பந்தள ராஜபாண்டியன் பூஜித்து முக்தி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

37. பரமேஷ்:- உன்னதமான நிலையில் இருப்பவன்.

38. பசுபதி:- கால்நடை பிராணிகளுக்கு இறைவன்.

39. பங்கஜாஸன பூஜித:- பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டவன்.

40. புரஹம்தா- முப்புரங்களையும் வென்றவன், சிவரூபி.

41. புரத்ராதா:- அடியவர்கள் வேண்டும் போது முன் நின்று காப்பவன்

42. பரமைச்வர்ய தாயக:- மிகுந்த ஐச்வர்யங்களை (செல்வங்களை) அளிப்பவன்.

43. பவனாதிஸு ரைஸ்ஸேவ்ய:- வாயு முதலான தேவர்களால் துதிக்கப்பட்டவன்.

44. பஞ்சப்ரஹ்ம பராயண:- ஈசானம்-தத்புருஷம்-அகோரம்-வாமதேவம்- ஸத்யோஜாதம் என்ற ஐந்து பிரம்ம மந்திரங்களை ஓதுபவன்.

45. பார்வதீ தனய:- பார்வதியின் புதல்வன் திருமால் பார்வதியின் உருவமானதால் பார்வதி தனயன் என்று கூறப்படுகிறான்.

46. ப்ரஹ்மா- ப்ரும்மரூபன்

47. பரானந்த:- உத்க்ருஷ்டமான ஆனந்தம் உள்ளவன்.

48. ப்ரும்ஹிஷ்ட:- எல்லாவற்றுக்கும் மேம்பட்டவன்.

49. பராத்பர:- பிரம்மத்தோடு இரண்டறக் கலந்து இருப்பவன். பூர்ணா என்னும் அன்னைக்கு ப்ரஹ்மீ என்றும் பெயர். அந்த அம்பிகையோடு இருப்பவன் பூர்ணாகாந்தன்.

50. ஞான நிரத:- சிவஞானப்பேறு பெற்றவன்.

51. குணா குண நிரூபக:- மூன்று குணங்களோடு கூடியதும், அவைகள் அற்றதுமான பொருள்களைக்காட்டுபவன்

52. குணாத்யக்ஷ:- மூன்று குணங்களையும் அறிந்தவன்.

53. குணநதி:- குணங்களுக்கு இருப்பிடமானவன்.

54. கோபாலோனாபி பூஜித:- கண்ணனால் பூஜிக்கப்பட்டவன்.

55. கோரக்ஷக:- பசுக்களைக் காப்பாற்றுபவன், கோரக்ஷகன் என்ற சித்த உருவானவன்.

56. கோதன:- பசுக்களையே செல்வமாகக் கொண்டவன்.

57. கஜாரூட:- யானையை வாகனமாகக் கொண்டவன் இந்த வடிவத்தை ஜகன் மோகன சாஸ்தா என்று கூறுவர்.

58. கஜப்ரிய:- யானையிடம் அன்பு கொண்டவன், வேழமுகம் கொண்ட விநாயகப்பெருமானிடம் பிரியமானவன்.

59. கஜக்ரீவ:- யானையின் கழுத்தைப்போன்று கழுத்து உள்ளவன்.

60. கஜஸ்கந்த:- யானையின் தோளைப்போன்ற திண் தோள் படைத்தவன்.

61. கபஸ்தி:- சூரிய வடிவானவன்.

62. கோபதி:- பசுக்களுக்கு பதி: பசுக்களை உடையவன்.

63. ப்ரபு:- வல்லமை உள்ளவன், ரக்ஷகன் (நமது குருநாதரின் நாமம், ஸ்ரீ குருப்யோநம:)

64. கிராமபால:- கிராமங்களைக் காப்பாற்றுபவன்.

65. கஜாத்யக்ஷ:- யானைகளுக்கெல்லாம் அரசன்.

66. திக்கஜேனாபி பூஜித:- எட்டுத்திக்குகளிலும் உள்ள யானைகளால் பூஜிக்கப்பட்டவன். (திக்கஜங்களாவன-ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்ஜனம், புஷ்பதந்தம், ஸார்வ பௌமம், ஸுப்ரதீகம்).

67. கணாத்யக்ஷ:- பரமசிவனின் பிரமத கணங்களுக்கும் கட்டளையிடுபவன்.

68. கணபதி:- கணங்களுக்கு அரசன்.

69. கவாம்பதி:- பசுக்களுக்குப் பதியானவன்.

70. அஹாப்தி:- சூரியன்.

71. ஜடாதர:- ஜடை தரித்தவன். வேதங்களின் ஜடை என்கிற உச்சாரண பேதத்தைத் தரித்தவன்; ஓதுகிறவன், வேத ஜடா பாராயணத்தில் பிரியம் உள்ளவன்.

72. ஜலநிப:- தண்ணீரைப் போன்றவன்.

73. ஜைமின்யைரபி பூஜித:- வேதத்தில் ஜைமினீ சாகையை ப்ரதானமாகத் தங்கள் வேதமாகக் கொண்ட அந்தணர்களால் பூஜிக்கப்பட்டவன். (ஆயிரம் பிரிவுகள் கொண்ட ஸாம வேதத்தில் ஜைமினீ சாகை என்று ஒரு பிரிவு உள்ளது)

74. ஜலநிப:- தண்ணீரைப் போன்றவன்.

75. சோணாக்ஷ:- சிவந்த கண்களை உடையவன்

76. சோணாவாஸஸ:- சிவந்த ஆடை தரித்தவன்.

77. ஸுராதிப:- தேவர்களுக்கு அதிபதி.

78. சோகஹந்தா:- துயரங்களை அகற்றுபவன்

79. சோபாக்ஷ:- அழகான விழிகளை உடையவன்.

80. ஸூர்யதேஜஸ:- சூரியனைப்போல் காந்தி உள்ளவன்.

81.  ஸுரார்ச்சித:- தேவர்களால் பூஜிக்கப்பட்டவன்.

82. ஸுரைர்வந்த்ய:- தேவர்களால் வணக்கத்தக்கவன்.

83. சோணாங்க:- சிவந்த அவயங்களை உடையவன்.

84. சல்மலீபதி:- சல்மலீ என்ற வ்ருஷத்துக்கு பதியானவன்.

85. ஸஜ்யோதி:- நல்ல பிரகாசம் உள்ளவன்.

86. சரவீரக்ன:- பாணத்தால் வீரர்களைக் கண்டிப்பவன்.

87. சரச்சந்த்ரநிபானன:- சரத்கால சந்திரன் போன்ற முகம் உள்ளவன்.

88. ஸனகாதிமுனித்யேய:- ஸனகர் முதலிய முனிவர்களால் கருதத்தகுந்தவன்.

89. ஸர்வக்ஞான ப்ரத:- எல்லா ஞானங்களையும் அளிப்பவன்.

90. விபு:- எங்கும் இருப்பவன்.

91. ஹலாயுத:- கலப்பையை ஆயுதமாகத் தரித்தவன்

92. ஹம்ஸநிப:- அன்னம் போன்றவன்

93. ஹாஹா ஹூஹூ முகஸ்துத:- ஹா ஹா ஹூ ஹூ என்ற கந்தவர்களால் போற்றப்பட்டவன்.

94. ஹரி:- திருமாலின் வடிவானவன்.

95. ஹரப்ரிய:- சிவனிடம் பிரியம் உள்ளவன்.

96. ஹம்ஸ:- அன்னபக்ஷக வடிவானவன். அல்லது ஸந்யாஸி என்றும் கூறலாம்.

97. ஹர்யக்ஷாஸனதத்பர:- சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளவன்.

98. பாவன:- பரிசுத்தன்.

99. பாவக நிப:- அக்னி போன்றவன்.

100. பக்தபாபவிநாசன:- பக்தர்களின் பாபங்களை அகற்றுபவன்.

101. பஸிதாங்க:- விபூதி தரித்தவன்

102. பயத்ராதா - பயத்தில் இருந்து காப்பவன்.

103. பானுமான்:- கிரணங்களை உடையவன்

104. பயநாசன:- ஆபத்துத் தாரகன்.

105. த்ரிபுண்ட்ரதாரீ:- விபூதிண்டரம் பூண்டவன்.

106. த்ரிநயன:- முக்கண்ணன்.

107. த்ரிபுண்ட்ராங்கிதமஸ்தக:- விபூதி -புண்டரம் அணிந்த தலை உடையவன்.

108. த்ரிபுரக்ன:- முப்புரம் எரித்தவன், சிவன்.

109. தேவவர:- தேவர்களுள் மேன்மையானவன், தேவர்களை உயர்ந்தோராகக் கருதியவன்.

110. தேவாரி குலஸம்ஹர:- தேவ்களின் சத்துருக்களை அழித்தவன்.

111. தேவஸேனாதிப:- தேவர்களின் படைத்தலைவன், கந்தரூபன்.

112. தேஜ:- தேஜஸ்வரூபன்.

113. தேஜோ ராசி:- ஒளி மிருந்தவன்.

114. தசானன:- பத்துமுகங்கள் உள்ளவன். பத்து முகம் கொண்ட சாஸ்தா உருவம் மந்த்ர சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. தசத்வம் த்வகராம் போஜ த்ருதபாச கசாயுதம் ஸிம்ஹா ரூடம் மஹாபீடம் த்யாயேத் ஹரிஹராத் மஜம் என்றும் கூறுதல் உண்டு.

115. தாருண:- (எதிரிகளுக்கும் தீயவர்களுக்கும்) கொடுமையானவன்.

116. தோஷஹந்தா:- தோஷங்களை போக்குபவன்.

117. தோர்தண்ட:- கோல் போன்ற கைகளை உடையவன்.

118. தண்டநாயக:- சிக்ஷைகளுக்கு அல்லது தண்டனை வழங்குவதற்கு அதிபதி. அல்லது தண்டவனத்திற்கு அரசன் (திண்டிவனம் முதல் திருச்சி வரை உள்ள பிரதேசம் தண்டவனம் எனப்படும்.)

119. தனுஷ்பாணி:- வில்லைக் கையில் ஏந்தியவன்.

120. தராத்யக்ஷ:- பூபதியானவன்.

121. தனிக:- ஐச்வர்யம் உள்ளவன். பொருளாளி.

122. தர்மவத்ஸல:- தர்மத்தில் ப்ரீதி(விருப்பம்) உள்ளவன்.

123. தர்மஞ்:- தர்மத்தை அறிந்தவன்.

124. தர்மநிரத:- தர்மம் செய்பவன்.

125. தனுச்சாஸ்த்ர பராயண:- வில் வித்தையைக் கொண்டவன்.

126. ஸ்தூல கர்ண:- பெரிய காதுகளை உடையவன்.

127. ஸ்தூலனு:- பெருத்த  சரீரம் படைத்தவன்.

128. ஸ்தூலாக்ஷ:- பெரும் கண்களை உடையவன்.

129. ஸ்தூலபாஹுக:- பெரிய கரங்களை உடையவன்.

130. தநூத்தம:- உயர்ந்த சரீரம் உள்ளவன் அடியவர் அளிக்கும் பொருட்கள் அல்பமாயினும் (சிறிதாயினும்) அதையே உத்தமமாக, மேலாகக் கொள்பவன்.

131. தனுத்ராண:- மிகக் குறைந்த அளவு போற்றினாலும் அதாவது  ஒரு கணம் நினைந்துருகினாலும் கூட, ரக்ஷிப்பவன்.

132. தாரக:- கரை ஏற்றுபவன், தன்னை வேண்டியவர்களுக்கு இறுதிக் காலத்தில் தாரகப் பொருளைக் கூறுபவன்.

133. தேஜஸாம்பதினு:- ஒளிகளை விளக்குபவன்.

134. யோகீச்வர:- யோகம் பயின்றவர்களுக்கு ஆசான்.

135. யோகநிதி:- யோகத்தை நிதியாகக் கொண்டவன்.

136. யோகின:- யோகிகள் உருவன்.

137. யோக ஸாம்பதி:- யோகத்தில் அமர்ந்திருப்பவன்.

138. மந்தாரவாடிக:- மந்தார உத்யாவனத்தில் இருப்பவன்.

139. மத்த:- செருக்கு உள்ளவன்.

140. மலயாசல வாஸபூ:- மலயமலையில் இருப்பவன்.

141. மந்தாரகுஸுமப்ரக்ய:- மந்தாரபுஷ்பம் போன்றவன்.

142. மந்தமாருத ஸேவித:- தென்றல் காற்றால் ஸேவிக்கப்பட்டவன்.

143. மஹாபாஸ:- பேரொளி படைத்தவன்.

144. மஹாவக்ஷா:- பெரிய பரந்த மார்பை உடையவன்.

145. மனோஹர மதார்ச்சித:- ருசிகரமான வஸ்துக்களால் பூஜிக்கப்பட்டவன்

146. மஹோன்னத:- மிகவும் உயர்ந்தவன்.

147. மஹா காய:- பெரிய சரீரம் கொண்டவன்.

148. மஹா நேத்ர:- பெரிய கண்களை உடையவன்.

149. மஹாஹனு:- பெரிய தாடைகளை உடையவன்.

150. மருத் பூஜ்ய:- காற்றினால் பூஜிக்கத் தகுந்தவன்.

151. மானதன:- மானத்தைப் பொருளாகக் கொண்டவன்

152. மோஹ:- உலகத்தை மோஹிக்கச் செய்பவன்.

153. மோக்ஷ தாயக:- மோக்ஷத்தை (முக்தியை) அளிப்பவன்.

154. மித்ரம்:- சிநேகிதன்-(சூர்யனது பெயர்களின் மித்ரன் என்பதும் ஒன்று).

155. மேதா-புத்தி வடிவானவன்.

156. மஹௌஜஸ்வீ- அதிக வீர்யம் உள்ளவன்.

157. மஹாவர்ஷப்ரதாயக:- பெரிய மழையை உண்டு பண்ணுவன். அந்தந்த ஊரில் உள்ளவர்கள் கிராம தேவதையான சாஸ்தாவை வருஷ ஆரம்பத்தில் பூஜித்தால் நல்ல மழை பெய்து உணவுப்பொருட்கள் செழித்தோங்கும்.

158. பாஷக:- பேசுகின்ற தெய்வம்.

159. பாஷ்ய சாஸ்த்ரக்ஞ:- பாஷ்யம் முதலான சாஸ்திரங்களை அறிந்தவன்.

160. பானுமத் பானுதேஜஸ:- சூர்யன் போன்ற தேஜஸ் உடையவன்.
161.

162. பவானீ புத்ரக:- பவானியின் புதல்வன் (பவானி என்பது ஜீவநாமமாகும்).

163. பிஷக்- வைத்தியன்.

164. பவதாரண காரண:- ஸம்ஸார பந்தத்தைத் தாண்டுவதற்கு காரணமானவன்.

165. நீலாம்பர:- நீலவண்ண ஆடைதரித்தவன்.

166. நீலநிப:- நீல வண்ண ஒளிபடைத்தவன்.

167. நீலக்ரீவ:- கருத்து கழுத்து உடையவன்.

168. நிரஞ்ஜன:- பரமன் மஹோன்னதமானவன்.

169. நேத்ரத்ரய:- மூன்று கண்களை உடையவன்.

170. நிஷாதக்ஞ:- (நிஷாதனால்) வேடனால் அறியப்பட்டவன்.

171. நானாரத்னோப சோபித:- அனேகரத்தினங்களால் விளங்குபவன்.

172. ரத்னப்ரப:- மாணிக்க ஒளி படைத்தவன்.

173. ரமா புத்ர:-  லக்ஷ்மி குமாரன்.

174. ரமயா பரிதோஷித:- லக்ஷ்மியால் ஸந்தோஷிக்கப்பட்டவன்.

175. ராஜஸேவ்ய:- அரசர்களால் ஸேவிக்கத் தகுந்தவன்.

176. ராஜதன:- அரசர்களின் ஐச்வர்யம் போன்றவன்.

177. ரணதோர்தண்ட மண்டித:- யுத்த காலத்தில் கரத்தில் கதையை ஏந்தியவன்.

178. ரமண:- இன்பம் அளிக்கும் புமான்.

179. ரேணுகா ஸேவ்ய:- ஜமத்கனி முனிவரின் பத்தினியும் பரசுராமரின் தாயுமான ரேணுகாவினால் ஸேவிக்கத் தகுந்தவன்.

180. ரஜனீ சர தாரண:- ராக்ஷஸர்கரை சிக்ஷிப்பவன்.

181. ஈசான:- ஈசான ரூபன்.

182. இபராட்ஸேவ்ய:- யானை அரசரால் ஸேவிக்கத் தகுந்தவன். இதனால் சாஸ்தாவிற்கு யானை வாகனம் கொடுப்பது, கோயில் முன்புறம் அவ்வடிவம் அமைத்தல் நல்லது.

183. ஈஷணாத்ரய நாசன:- மண்-பொருள் இம்மூன்று ஆசைகளையும் அழிப்பவன்.

184. இடாவாஸ:- இடா எனும் நாடியில் வசிப்பவன். பூமி, வேள்வியில் உபயோகப்படும் ஒரு திரவ்யம், வலது மூக்கு-இவைகளில் வசிப்பவன்.

185. ஹேமநிப:- தங்கம் போன்றவன்.

186. ஹைம ப்ராகார சோபித:- தங்க மயமான பிராரகாரங்களால் விளங்குபவன். (காந்த மலையில் ஸ்வர்ணமய விதானத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா காக்ஷி தருகிறார்.)

187. ஹரிஹராத்மஜ:- விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் புதல்வன், சைவ-வைஷ்ண சைதன்யன்.

188. ஹம்ஸ:- அன்னபக்ஷி வடிவானவன். சன்யாஸி உருவன். பரமாத்ம ஸ்வரூபன்.

189. ஹயக்ரீவ:- குதிரை முகம் கொண்டவன், ஹயக்ரீவ உருவினன்

190. ஹயப்ரிய:- குதிரையிடம் பற்றுக் கொண்டவன்.

191. ஹாடகஸ்படிகப்ரக்ய:- தங்கத்தில் பதித்த ஸ்படிகம் போன்றவன்.

192. ஹம்ஸாரூடேன ஸேவித:- அன்னவாகனம் கொண்ட பிரும்ம தேவனால் ஸேவிக்கப்பட்டவன்.

193. வனவாஸ:- காட்டில் வசிப்பவன்.

194. வனாத்யக்ஷ:- காடுகளுக்கு அரசன்.

195. வாமதேவ:- வாமதேவ ரூபன், ஸ்திரீகளுக்கு தெய்வம்; தனது இடது புறத்தில் தேவர்களை உடையவன்.

196. வரானன:- ச்ரேஷ்டமான முகம் உள்ளவன்.

197. வைவஸஅவத பதி:- சூரியனின் புதல்வர்களான யமனுக்கும், சனிபகவானுக்கும் பதியானவன், சாஸ்தாவை முக்கியமாக பூஜித்து உபாஸிப்பவர்களுக்கு யமபாதையோ, சனிபாதையோ உண்டாகாது.

198. விஷ்ணு:- எங்கும் இருப்பவன்.

199. விராட்ரூப:- பெரிய உருவம் உள்ளவன், உலகத்தின் உருவினன்.

200. விசாலவான்-விஸ்தார முள்ளவன். ப்ரஸித்தன்.

201. வேணுநாத:- குழல் ஊதுபவன்; புல்லாங்குழலின் இனிய நாதம் உள்ளவன்.

202. வரக்ரீவ:-  அழகான கழுத்து உடையவன்.

203. வராபய கரான் வித:- வரம், அபயம் ஆகிய முத்திரகைளைத் தரித்த கரங்களுடன் கூடியவன்.

204. வர்சஸ்வீ:- தேஜஸ் உள்ளவன்.

205. விபுலக்ரீவ:- நீண்ட கழுத்து உடையவன்.

206. விபுலாக்ஷ:- நீண்ட கண்களை உடையவன்.

207. வினோதவான்:- இன்பன்.

208. வைணவ வன வாஸ:- மூங்கில் காட்டில் வசிப்பவன்.

209. வாமதேவேன ஸேவித:- வாமதேவர் எனும் முனிவரால் போற்றப்பட்டவன்.

210. வேத்ர ஹஸ்த:- சாட்டையைக் கையில் தரித்தவன்.

211. வேஷநிதி:- பல வேஷங்களுக்கும் இருப்பிடமானவன், தனது மாயையினால் பல உருவங்கள் கொள்பவன்.

212. வம்சதேவ:- சூரனுக்கு பயந்து மூங்கில் உருவம் கொண்ட தேவேந்திரானால் போற்றப்பட்டவன் (அல்லது) வம்ச பரம்பரையாக அவரவர்களால் கலதெய்வமாகப் போற்றப்படுகிறவன்.

213. வராங்க:- ச்ரேஷ்டமான அங்கங்களை அல்லது பரிவார ஸேனைகளைக் கொண்டவன்.

214. ஹ்ரிம்கார:- ஹ்ரீம் என்ற அக்ஷரத்தை முதலாகக் கொண்ட மந்திரம் உடையவன்.

215. ஹ்ரீம்மனா:- மேற்படி ஹ்ரீம்காரத்தில் நினைவு உள்ளவன்.

216. ஹ்ருஷ்ட:- ஸந்துஷ்டன்.

217. ஹிரண்ய:- பொன்மயமான உருவம் உள்ளவன்.

218. ஹேமஸம்பவ:- தங்கத்தில் உதித்தவன், சிவபெருமானின் வீர்யம் பொன் என்று கூறப்படுகிறது.

219. ஹுதாச:- பக்தர்கள் மனமுவந்து கொடுக்கும் அன்னம், ஆஹுதி போன்ற ஹோம திரவ்யம் எதுவாயினும் மன நிறைவுடன் ஏற்றுக் கொள்ளுபவன். தீ வடிவன்.

220. ஹுதநிஷ்பன்ன:- வேள்வியில் உண்டானவன், அல்லது வேள்வியை விக்னமின்றி பூர்த்தி செய்து தருபவன்.

221. ஹும்கார க்ருதிஸுப்ரபு:- ஹும் என்று கூச்சலிடுபவர்களுக்கு, வீரர்களுக்கு அரசன்.

222. ஹவ்யவாஹ:- வேள்வியில் அளிக்கப்படும் ஹவிஸை ஏற்பவன்.

223. ஹவ்யகர:-(அந்த) ஹவிஸைக் கையில் தரித்தவன்.

224. அட்டஹாஸ:- அட்டகாசமாகப் பெரும் கூச்சல் இடுபவன்.

225. அபராஹத:- வெல்ல முடியாதவன்.

226. அணுரூப:- அணு என்பது ஒரு அளவு பதார்த்தம். அதன் உருவன். அனேக அணுக்களின் சேர்க்கையால்தான் இவ்வுலகு நிறைந்துள்ளது.

227. ரூபகர:- உருவத்தை உண்டாக்குபவன்.

228. அஜர:- கிழத்தன்மை அற்றவன்.

229. அதனுரூபக:- பெரிய உருவம் உள்ளவன் சரீரம் இல்லாதவன், அதாவது ஆகாசரூபன்.

230. ஹம்ஸமந்த்ர:- ஹம்ஸ என்னும் சொல்லை மந்திரமாகக் கொண்டவன்.

231. ஹுதபுக்:- அக்னியில் அளிக்கப்படும் ஹவிஸை புசிப்பவன்.

232.) ஹோம்பர ஸுலக்ஷண:- பொன்னாடையினால் அழகு வாய்ந்தவன்.
233.)

234. நீப்ரிய:- கடம்ப விருக்ஷ புஷ்பங்களில் பிரியம் உள்ளவன்.

235. நீலவாஸா:- நீல ஆடைதரித்தவன், அல்லது நீலன் என்ற வீரனோடு இருப்பவன்.

236. நிதிபால:- நிதியை (பொக்கிஷத்தை)க் காப்பவன்.

237. நிராதப:- வெயில் இல்லாத இடம் கொண்டவன். அதாவது தோப்புகளின் கோயில் கொண்டவன்.

238. க்ரோடஹஸ்த:- மார்பில் கையை ஊன்றி இருப்பவன் (யோகசாஸ்தா); பொந்துகளில் கையை விடுபவன்; பன்றியை தரித்தவன்.

239. தபஸ்த்ராதா- முனிவர்களின் தவத்தை ரக்ஷிப்பவன்.

240. தபோரக்ஷ- தவத்தால் உலகத்தைக் காப்பாற்றுபவன்.

241. தபாஹ்வய:- தவமென்ற பெயர் பூண்டவன். வஸ்ந்த காலத்தில் கொண்டாடப்பட்டவன்.

242. மூர்தபிஷக்-வைத்ய ச்ரேஷ்டன்.

243. மானதன:- மானத்தைப் பொருளாகக் கொண்டவன்.

244. மந்தரரூப:- (விஞ்ஞை) மந்திரங்களின் வடிவமானவன்.

245. ம்ருட:- களிப்புடையவன்.

246. மனு:- மனு உருக்கொண்டவன்.

247. மேதாவீ:- புத்திமான்

248:- மேதஸ:- ஞானி, புத்தி உருவன்.

249. முஷ்ணு:- துஷ்டர்களின் பொருளை அபகரிப்பவன்.

250. மகர:- மகர ராசியின் உருவம் உள்ளவன். முதலை வடிவமான மண்டலத்தில் செல்லுபவன். அல்லது கடலில் மகர மீனைப் பிடிப்பவன்.

251. மகராலய:- மீன்கள் வசிக்கும் கடல் உருவினன்.

252. மார்த்தாண்ட:- சூரியன்.

253:- மஞ்சுகேச:- அழகான கேசம் உள்ளவன்.

254. மாஸபால:- மாதம் தோறும் நடத்தப்படும் அவரவர்களுக்குரிய நல்ல காரியங்களை நடத்தி வைத்து ரக்ஷிப்பவன்.

255. மஹெணுஷதி:- பெரிய ஔஷதி ரூபன். (பவப்பிணி தீர்த்துவைக்கும் அருமருந்தானவன்.)

256. ச்ரோத்ரிய:- வேதங்கள் கற்றவன்.

257. சோபமான:- விளங்குபவன்.

258. ஸவிதா:- காலையில் உதிக்கும் சூரியன்.

259. ஸர்வ தேசிக:- எல்லா தேசங்களிலும் விளங்குபவன். எல்லோருக்கும் குருவானவன்.

260. சந்த்ரஹாஸ:- சந்திரனிடத்தில் சந்தோஷம் உள்ளவன். பூர்ணசந்திரன் போன்ற சிரிப்பு உள்ளவன். வாள் கொண்டவன்.

261. சம:- பொறுமை மிக்கவன்.

262.சக்த:- பலிஷ்டன்

263. சசிபாஸ:- சந்திரன் போன்ற மேனியுடையவன்.

264. ஸமாதிக:- (மற்ற தெய்வங்களுக்கு) ஸமமாகவும் அதிகமாகவும் சக்தி வாய்ந்தவன்.

265. ஸுதந்த:- அழகான பற்களை உடையவன்.

266. ஸுகபோல:- அழகான தாடை உள்ளவன்.

267. ஷட்வர்ண:- ஆறு எழுத்தில் உள்ள விஞ்சை (மந்திரம்) கொண்டவன்.

268. ஸம்பதோதிப:-  செல்வத்தினால் அரசு உரிமை கொண்டவன்.

269. கரள:- விஷரூபன்.

270. காலகண்ட:- கறுத்த நெஞ்சு உடையவன்.

271. கோநேதர:- இந்திரிய ப்ரேரகன், பசுக்களை ஓட்டுபவன்.

272. கோமுகப்ரபு:- பசுக்கள், ஆடுகள் முதலிய பிராணிகளால் நிறைந்தவன். கோமுக வாத்ய ஒலியினால் பிரசித்தமானவன், சிவாலயங்களில் கோமுகத்வாரத்தில் விளங்குபவன். சிதம்பர க்ஷேத்திரத்தில் தேவஸபையின் கோமுகத்வாரத்தில் சாஸ்தாவின் சந்நதி இருக்கிறது.

273. கௌசிக:- விச்வாமித்ர முனிவரால் பூஜிக்கப்படடவன், ஆந்தையால் ஸூசிக்கப்பட்டவன், கௌசிக உருவன்.

274. காலதேவ:- நிமேஷா தி காலங்களுக்கு ஸ்வாமி.

275. க்ரோசக:- இரண்டு நாழிகைப் பொழுதில் நடந்து செல்லும்வழிக்கு க்ரோசம் என்று பெயர். அவ்விதம் உள்ள வழிகள் தோறும் ஆலயம் கொண்டவன். ஒலி நிறைந்தவன்.

276. க்ரௌஞ்ச பேதக:- க்ரௌஞ்சன் என்னும் அரக்கனை, மலையை அல்லது பக்ஷியை போதித்தவன்.

277. க்ரியாகர:- சகல க்ரியைகளையும் செய்கிறவன்.

278. க்ருபாளு:- தயை உள்ளவன்.

279. கரவீரகரோருஹ:- நரஸிம்ஹமூர்த்தியைப்போல், எதிரிகளை அழிக்கக்கூடிய நீண்ட கூரிய நகங்களுடன் கூடிய கரங்களை உடையவன், அரளிபுஷ்பம் போன்ற விரல்களை உடையவன்.

280. கந்தர்பதர்ப ஹாரீ- காமனின் அகந்தையை அடக்கியவன்.

281. காமதாதா:- கபாலம் தரித்தவன்.

283. கைலாஸ வாஸ:- கயிலை மலையில் வஸிப்பவன்.

284. வரத:- வரமளிப்பவன். விவாஹம் ஆகாத கன்னிகளுக்குக் கணவனை அளிப்பவன்.

285. விரோசன:- மிகவும் பிரகாசிக்கிறவன்.

286. விபாவஸு:- முச்சுடர் உருவினன்.

287. பப்ருவாஹ:- கீரி வாகனன்.

288. பலாத்யக்ஷ:- பலன் என்பவளை ஸேனாதிபதியாக கொண்டவன்.

289. பணாமணி விபூஷண:- ரத்னங்கள் உள்ள நாகங்களை அணிந்தவன்.

290. ஸுந்தர:- அழகானவன்.

291. ஸுமுக:- அழகான முகம் உள்ளவன்.

292. ஸ்வச்ச:- சுத்தமானவன்.

293. ஸபாஸத்:- சபையில் இருப்பவன்.

294. ஸபாகர:- சபையை உண்டு பண்ணுபவன்.

295. சரா நிவ்ருத்த:- அவுணர்களின் பாணங்களால் அடிக்கப்படாதவன்.

296. சங்காப்த:- ஏதோ ஒரு காரணத்தினால் ஏற்பட்ட சங்ககையால் தரிக்கப்பட்ட சடைகளை உடையவன். சங்கா எனும் ரிஷி பத்தினிக்கு தோழன்.

297. சரணாகத பாலக:- சரணடைந்தவர்களைக் காப்பாற்றுபவன்.

சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வஸ்ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுசா
என்ற கீதை மொழிக்கேற்ப சரணாகதி ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு சரணமய்யப்பா என்று உருகும் அடியார்க்கு சகல சௌபாக்யமும் தந்தருளும் சரணாகத ரக்ஷகன்.

298. தீக்ஷ்ண தம்ஷ்ட்ர:- கூர்மையான பற்களை உடையவன்.

299. தீர்க ஜிஹ்வ:- நீண்ட நாவினை உடையவன்.

300. பிங்கலாக்ஷ:- பழுத்த கண்களை உடையவன்.

301. பிசாசஹா:- பைசாசங்களை அகற்றுபவன்.

302. அபேத்ய:- பேதிக்க முடியாதவன்.

303. அங்கதாட்ய:- தோள்வளையம் பூண்டவன்.

304. போஜ பால:- உணவு கொடுப்பவனைக் காப்பாற்றுபவன்.

305. பூபதி:- பூமிக்கு அரசன்.

306. க்ருத்ர நாஸ:- கழுகினைப்போல மூக்கு உடையவன்.

307. அவிஷஹ்ய:- (அதர்மத்தை) ஸகிக்க முடியாதவன்.

308. திக்கேஹ:- திக்குகளைச் சரீரமாகக் கொண்டவன், விச்வரூபி.

309. தைன்ய தாஹக:- தரித்திரத்தைப் பொசுக்குபவன்.

310. படபாபூரிதமுக:- (சமுத்திரத்தில் உண்டாகும்) படபாக்னி தரித்த முகம் உள்ளவன்.

311. வ்யாபக:- எங்கும் வியாபித்து இருப்பவன்.

312. விஷமோசக:- விஷங்களைப் போக்கடிப்பவன்.

313. ஹஸ்நத:- ஹஸந்தம் எனும் ஆயுதம் கொண்டவன்.

314. ஸமரக்ருத்த:- யுத்தத்தில் கோபம் கொண்டவன்.

315. புங்கவ:- புருஷர்களின் ச்ரேஷ்டன்.

316. பங்கஜாஸன:- தாமரையில் அமர்ந்தவன்.

317. விச்வ தர்ப:- அதிக கர்வம் உள்ளவன்.

318. நிச்சிதாக்ஞ:- நிச்சயித்துக் கட்டளை இடுபவன்.

319. நாகாபரண பூஷித:- நாகங்களை ஆபரணங்களாக அணிந்துள்ளவன்.

320. பரத:- பரதன் என்ற சக்கரவர்த்தி உருவினன். பரத கண்டமென்ற நமது தேசத்திற்கு அதிபதி. எல்லா பாரங்களையும் தாங்குபவன். நர்த்தனம் செய்பவன். பரதன், நடிகன்.

321. பைரவாகரா:- பைரவனின் உருவினன். பயங்கர வடிவம் கொண்டவன், நாய்களை ஸூசிக்கிறவன்.

322. பரண:- கூலி கொடுப்பவன்.

323. வாமனக்ரிய:- வாமனரின் செயல் கொண்டவன்.

324. ஸிம்ஹாஸ்ய:- சிம்மத்தின் முகம் கொண்டவன்.

325. ஸிம்மரூப:- சிம்மத்தின் உருவம் கொண்டவன்.

326. ஸேனாபதி:- தேவ ஸேனைகளுக்கு பதியானவன்.

327. ஸகாரக:- பெயர்ச்சொல் வினைச்சொல், இவ்விரண்டுகளோடு கூடியவன்.

328. ஸனாதன:- ப்ராசீனன், ஸனாதன முனி ரூபன்.

329. ஸித்தருசி:- சித்தர்களிடம் ஆசை (அன்பு) கொண்டவன்.

330. ஸித்ததர்ம பாராயண:- சித்தர்களின் தர்மத்தைக் கையாளுபவன்.

331. ஆதித்ய ரூப:- சூரியனின் உருவம் கொண்டவ்ன.

332. ஆபத்க்ன:- ஆபத்துக்களைப் போக்கடிப்பவன், ஆபத்பாந்தவன்.

333. அம்ருதாம் போதி வாஸபூ:- அமிர்தமாகிய பாற்கடலில் வசிப்பவன்.

334. யுவராஜ:- இளவரசன்.

335. யோகிவர்ய:- சிறந்த யோகி

336. உஷஸ் தேஜா:- காலையில் விளங்குபவன்.

337. உடுப்ரப:- நக்ஷத்திரம் போன்ற சோபை உள்ளவன்.

338. தேவாதி தேவ:- தேவர்களுக்கும் முந்திய தேவன்.

339. தைவக்ஞ:- ஜோதிடன்.

340. தாம் ரோஷ்ட:- சிவந்த உதடுகளை உடையவன்.

341. தாம்ர லோசன:- சிவந்த கண்களை உடையவன்.

342. பிங்கலாக்ஷ:- பொன் நிறமான கண்களை உடையவன்.

343. பிஞ்ச சூட:- மல்லிகைப் பூவினைச் சூடியவன், மயிற்பீலியைச் சூடியவன்.

344. பணாமணி விபூஷித:- நாகரத்தினம் அணிந்தவன்.

345. புஜங்க பூஷண:- நாகங்களைப் பூண்டவன்.

346. போக:- சுகரூபன், போகர் என்ற ஸித்தரானவன்.

347. போகானந்தகர:- போகத்தில், அல்லது போகர் என்கிற ஸித்தருக்கு ஆனந்தத்தை உண்டு பண்ணுபவன்.

348. அபய:- பயம் அற்றவன்.

349. பஞ்ச ஹஸ்தேன ஸம்பூஜ்ய:- யானையால் பூஜிக்கப்பட்டவன்.

350. பஞ்ச பாணேன ஸேவித:- மன்மதனால் வணங்கப்பட்டவன்.

351. பவ:- எல்லாவற்றையும் உண்டுபண்ணுபவன்.

352. சர்வ:- சர்வன் என்ற பெயர் பூண்டவன்.

353. பானுமய:- ஒளிக்கிரணங்கள் நிறைந்தவன்.

354. ப்ராஜாபத்ய ஸ்வரூபக:- தனது பொருட்கள் எல்லாவற்றையும் பிறருக்குக் கொடுத்து, விரக்தனாய் ஸன்யாசம் பூண்ட உருவினன். (பட்டிணத்தடிகளின் உருவம்).

355. ஸ்வச்சந்த:- தனது இஷ்டப்படி இருப்பவன்.

356. சந்தச் சாஸ்த்ரக்ஞ:- சந்தஸ், சாஸ்திரம் இவைகளை அறிந்தவன்.

357. தாந்த:- தயாளு, அடக்குபவன்.

358. தேவ மனுப்ரபு:- தேவர்களுக்கு மனுக்களுக்கு பிரபுவானவன், அல்லது  தேவமனு என்பவருக்கு இஷ்டத்தை அளித்தவன்.

359. தசபுக்:- பத்து வித ஆகாரங்களைப் புசிப்பவன். காய், கிழங்கு, வேர், பட்டை, இலை, சரகு, பிஞ்சு, பழம், புஷ்பம், பிசின் இவைகள் பத்தையும் உணவாக யோக நூல் கூறுகின்றது.

360. தலாக்யக்ஷ:- தளன் என்பவனை சேனாதிபதியாகக் கொண்டவன்.

361. தானவானாம் வினாசன:- அசுரர்களை அழிப்பவன்.

362. ஸஹஸ்ராக்ஷ:- ஆயிரம் கண்கள் உடையவன்.

363. சதநிஷ்பன்ன:- ஒரே சமயத்தில் நூறு (அனேக) விதமான உருவங்களைக் கொண்டவன்.

364. சதானந்த:- நூறு மடங்கு அதிகம் ஆனந்தம் கொண்டவன். அல்லது பிரமவ், சதானந்தர் என்ற தசரதரின் மந்திரி உரு கொண்டவன்.

365. ஸமாகம்:- லக்ஷ்மியோடு கூடிய திருமாலின் வரவு பெற்றவன்.

366. கருடாத்ரிவாஸ:- கருடமலையில் வசிப்பவன். கருடபர்யாயபதம்- சபரீ; ஆகவே சபரிமலையில் வசிப்பவன்.

367. கம்பீர:- அடர்ந்து பெருத்த உருவம் உள்ளவன்.

368. கந்தக்ராஹ:- வாஸனையைக் கிரகிப்பவன் வாஸனை உள்ள மீன்கள் நிறைந்த நீரோடை கொண்டவன். (குளத்துப்புழை பாலன்.)

369. கணேச்வர:- ப்ரமதர்களுக்கு அல்லது இந்தியங்களுக்கு ஈச்வரன்.

370. கண்டகாவாஸ:- கண்டக நதிதீரத்தில் வசிப்பவன்.

371. கோமேத:- கோமேத ரத்னம் தரித்தவன். கோமேதம் என்ற வேள்வியில் பிரியம் உள்ளவன்.

372. கோகுலை:- பரிவாத:- பசுக்களால் சூழப்பட்டவன்.

373. பரிவேஷ:- மண்டலம் பூண்டவன்.

374. பதக்ஞானீ:- சகல கலைகளிலும் உள்ள பதங்களை அறிந்தவன்.

375. ப்ரியங்குத்ரும வாஸக:- தினை விளையும் வயலில் உள்ள மரத்தடியில் இருப்பவன், வேடராஜன் வேண்டுகோளால் வள்ளியைக் காக்கவேண்டி தினை விளையும் வயலில் இருப்பவன் என்றும் கூறுவர்.

376. குஹாவாஸ:- (பக்தர்களின் ஹிருதயம் எனும்) குகையில் வசிப்பவன்.

377. குருவா:- உயர்ந்த குருவானவன்.

378. வந்தனீய:- எல்லோராலும் வணங்கத்தக்கவன்.

379. வதான்யக:- கொடையாளி-வள்ளல்.

380. வ்ருத்தாகார:- சந்தஸ்ஸின் உருவன், நல்ல வடிவினன்.

381. வேணுபாணி:- புல்லாங்குழல் தரித்தவன்.

382. வீணாதண்டதர:- வீணையைத் தரித்தவன்.

383. ஹர:- பாபங்களை அகற்றுபவன்.

384. ஹைமில்ய:- ஹைமிலி என்ற மரத்தில் தோன்றியவன்.

385. ஹோத்ரூஹுபுக:- ஹோமம் செய்கிறவர்களுக்குப் பிரியன், மங்களம் அளிப்பவன்.

386. ஹௌத்ரக்ஞ:- ரிக்வேதம் அறிந்தவன். ரிக் வேதத்தை ஹௌத்ரசாகை என்று கூறுவர்.

387. ஓஜஸாம்பதி:- ஒளிகளுக்கு பதியானவன்.

388. பவமான:- வாயுரூபி, சுத்தன்.

389. ப்ரஜாதந்துப்ரத:- புத்திரப்பேறு அளிப்பவன். (மணிகண்டனது வரவினால் பந்தளத்தரசியின் மலட்டுத் தன்மை நீங்கி சந்தான பாக்யம் ஏற்பட்டது).

390. தண்ட விநாசன:- தண்டன் என்பவனைக் கொன்றவன். அல்லது தண்டத்தால் சக்ரூக்களை வென்றவன்.

391. நிமீல்ய:- மறைந்து இருப்பவன்.

392. நிமிஷார்தக்ஞ:- அரை இமை கொட்டும் நேரத்திற்குள் எல்லாவற்றையும் அறிந்தவன்.

393. நிமிஷாகாரகாரண:- நிமிடம் முதலிய கால அளவுகளுக்குக் காரணமானவன்.

394. லிகுடாப:- மஞ்சள் மேனியன்.

395. லிடாகார:- நெருங்கின அங்கங்கள் கொண்ட உருவன்.

396. லக்ஷ்மீவந்த்ய:- லக்ஷ்மியால் வணங்கப்பட்டவன்.

397. வரப்ரபு:- அடியவர்கள் வேண்டிய வரங்களை அளிப்பதில் சிறந்தவன்.

398. இடாக்ஞ:- பூமிக்குப் பிரோகன். இடா என்ற நாடியை அடக்குபவன். வேள்வியில் உள்ள இடா என்ற ஹவிஸை கொண்டவன்.

399. பிங்களாவாஸ:- பிங்களன் என்ற ஸேனாபதியோடு வசிப்பவன். பிங்களா என்ற நாடியை அடக்குபவன்.

400. ஹுஷும்னா மத்யஸம்பவ:- ஸுஷும்னா என்ற நாடியின் நடுவில் உண்டானவன்.

401. பிக்ஷாடன:- பிக்ஷை எடுப்பவன்.

402. பீமவர்ச்ச:- பயத்தைக் கொடுக்கும் ஒளி உடையவன்.

403. வரகீர்த்தி:- அடியவர்களுக்கு வரம் அளிப்பதால் பெருமை வாய்ந்தவன். அதிகப்புகழ் பெற்றவன்.

404. ஸ்பேச்வர:- சபைக்கு ஈச்வரன்.

405. வாசாதீத:- வாக்குகளுக்கு அப்பாற்பட்டவன்.

406. வரநிதி:- சங்கநிதி முதலிய ச்ரேஷ்டமான நிதிகளைக் கொண்டவன்.

407. பரிவேத்தா:- தமையனாருக்கு முன் திருமணம் செய்து கொண்டவன்.

408. ப்ரமாணக:- நிச்சயமானவன்.

409. அப்ரமேய:- கருத முடியாதவன்.

410. அநிருத்த:- தகைய முடியாதவன்.

411. அனந்தாதித்ய வர்சஸ:- அனேக சூர்ய ஒளி படைத்தவன்.

412. வேஷப்ரிய:- வேஷத்தில் விருப்பம் உள்ளவன்.

413. விஷக்ராஹ:- விஷஐந்துக்களை உடையவன். பாற்கடலில் உண்டான காலகூடம் என்ற விஷத்தைக் கையினால் எடுத்தவன். (நந்தி உருவன்).

414. வரதான கரோத்தம:- அடியவர்களின் இஷ்டங்களை அளிப்பதில் பெருமை வாய்ந்தவன்.

415. விபின:- காடுகளை உடையவன்.

416. வேதஸார:- வேதங்களில் நுட்பமாகக் கூறப்பட்டவன்.

417. வேதாந்தத்தை:- பரிதோஷித:- உபநிஷத்துக்களால் சந்தோஷிக்கப்பட்டவன்.

418. வக்ராகம:- வக்ரமான கணங்களின் வருகை உள்ளவன். வக்ரமான அதாவது சுலபமல்லாத வழியால் அடையத் தகுந்தவன். ஆகையால் சாஸ்தாவின் ஆலயங்கள் சுலபமில்லாத வழிகளால் அடையக்கூடியதாக இருக்கிறது.

419. வக்ரவாக்-வக்கிரமான பேச்சுள்ளவன்.

420. பலதாதா- சரீர பலத்தை அளிப்பவன்.

421. விமானவான - மஞ்சத்தில் விளங்குபவன்.

422. வஜ்ரகாந்த:- வைரம் போல் விளங்குபவன்.

423. வம்சவர:- உயர்ந்த வம்சத்தில் உதித்தவன். வேணுதண்டம் தாங்கினவன்.

424. வடுரக்ஷா விசாரத:- குழந்தைகளைக் காப்பாற்றுவதில் ச்ரேஷ்டமானவன்.

425. வப்ரக்ரீட:- நதிகளின் கரையில் விளையாடுபவன்.

426. விப்ரபூஜ்ய:- அந்தணர்களால் பூஜிக்கத்தகுந்தவன்.

427. வேலாராசி சலாலக:- கடற்கரையில் தோன்றும் அலைகளைப் போல

428. அசைகின்ற கேசங்கள் தரித்தவன்.

429. க்ரோடாஸ்ய:- பன்றி முகன்; பொந்து போன்ற முகன், அல்லது இந்த விதமான சேனைகளை உடையவன்.

430. க்ரோட நேத்ர:- பன்றிக் கண்ணன் அல்லது பன்றியை உசுப்புவன். அர்ஜுனனுக்கு வரமளிக்க வேட உருக்கொண்ட பரமசிவனோடு காட்டில் பன்றியை உசுப்பினவன். (இந்தக் கதை சிதம்பரத்தில் நடந்ததாகப் புராணம் கூறும். அதனால் பன்றியை உசுப்பின இடம் உசுப்பூர் என்று வழங்குகிறது.

431. கோலாஹல:- அதிகம் கூச்சல் உள்ளவன்.

432. கபாலப்ருத்- கபாலம் தரித்தவன்.

433. கஞ்ஜரீட:- தாமரையில் விளையாடுபவன், கஞ்ஜரீடம் என்கிற யக்ஷிகளால் சூழப்பட்டவன்.

434. மஞ்சுவாஸா:- அழகான ஆடை தரித்தவன்.

435. க்ரியமாண:- எல்லா கார்யங்களையும் செய்து கொண்டிருப்பவன்.

436. க்ரியாப்ரத:- செய்கை அருளுபவன்.

437. க்ரீடாநாத:- விளையாட்டிற்கு நாதன்.

438. கீலஹஸ்த:- சூலம் தரித்தவன்.

439.க்ரோசமான:- இரண்டு மைல் அளவு கொண்டவன்.

440. குலாந்தக:- தீயவர்களின் குலத்திற்கு அந்தகன்.

441. கனக:- தோண்டுகிறவன்.

442. ஹோத்ரூபாக:- ஹோமம் செய்பவர்களிட் பங்கு கொண்டவன்.

443. கவாஸ:- ஆகாயத்தில் இருப்பவன்.

444. கசர:- ஆகாயத்தில் சஞ்சரிப்பவன்.

445. கக:- பக்ஷி உருவன்.

446. கணக:- களிப்பவன்.

447. குண நிர்துஷ்ட:- குணங்களால் தோஷமற்றவன்.

448. குணத்யாக:- குணங்களைத் தியாகம் செய்பவன்.

449. குசாதிப:- குசத்தீவுக்கு அதிபன்.

450. பாடல:- (வெண்சிவப்பு நிறம் கொண்ட) மாதிரி புஷ்பம் போன்றவன்.

451. பத்ரதாரீ:- இலைகளைத் தரித்தவன்.

452. பாலாச:- பாலை, புரச மரங்களால் சூழப்பட்டவன்.

453. புத்ர வர்தன:- ஸந்ததி விளங்க ஆண் மகவை அளிப்பவன்.

454. பித்ரு ஸச்சரித:- தந்தையைப்போல நல்ல தடத்தை உடையவன்.

455. பேஷ்டு:- பிசைகிறவன்.

456. பாப பஸ்மா:- பாபங்களைச் சாம்பலாக்குகிறவன்.

457. புணச்சுசி:- அஜாமுகியிடம் சிக்கிய இந்திராணியை மீட்டு சுத்தி செய்தவன்.

458. பால நேத்ர:- நெற்றியில் கண் உடையவன்.

459. புல்ல கேச:- மலர்ந்த கேசம் உள்ளவன்.

460. புல்ல கல்ஹார பூஷித:- மலர்ந்த செங்கழு நீர் புஷ்பம் அணிந்தவன்.

461. பணிஸேவ்ய:- நாகங்களால் ஸேவிக்கப்பட்டவன்.

462. பட்ட பத்ர:- கச்சை-பட்டை கொண்டவன்.

463. படு:- புத்திமான்-சமர்த்தன்.

464. வாக்மீ:- சிறந்த பேச்சு )வாக்விலாஸம்) உள்ளவன்.

465. வயோதிக:- வயதில் பெரியவன்.

466. சோரநாட்ய:- மறைவாக நடிப்பவன்.

467. சோரவேஷ:- திருடன் போல் வேடம் பூண்டவன்.

468. சோரக்ன:- திருடர்களைக் கொல்லுபவன்.

469.சௌர்யவர்த்தன:- திருட்டை விளக்குபவன்.

470. சஞ்சாலக்ஷ:- அசைகின்ற கண்களைக் கொண்டவன்.

471. சாமரக:- வெண்சாமரம் பூண்டவன்.

472. மரீசி:- சூரியனுக்கு 12 நாமங்கள் உண்டு. அதில் மரீசி என்பது ஒன்றாகும். எனவே சூரியனைப் போல ஒளியுடன் விளங்குபவன். மரீச முனிவரால் துதிக்கப்பட்டவன். மிளகு எனும் தான்யத்தில் பிரியம் உள்ளவன்.

473. மந்தகாமிக:- மெதுவாகச்செல்பவன்.

474. ம்ருடாப:- குளிர்ந்த காந்திமான். மிருடனை (சிவனை)ப் போன்றவன். பொறுமை வாய்ந்தவன்.

475. மேஷவாஹ:- ஆட்டுக் கடாவை வாகனமாகக் கொண்டவன். (கந்தன், இந்திரன்.)

476. மைதில்ய:- மிதிலா நகரத்தில் இருப்பவன்.

477. மோசக:- விடுவிப்பவன்.

478. மன:- மனோரூபன்.

479. மனுரூப:- மந்திர உருவன், மனுக்களின் உருவமானவன்.

480. மந்திரதேவ:- பிரணவம் முதலான மந்திரங்களுக்கு தேவன்.

481. மந்த்ராசி:-  மந்திரங்களைக் கூட்டமாகக் கொண்டவன்.

482. மஹாத்ருட:- மிகுந்த பலவான்.

483. ஸ்தூபிக்ஞ:- உயர்ந்த நிலை அறிந்தவன்.

484. தனதாதா:- பொருள் (செல்வம்) அளிப்பவன்.

485. தேவவந்த்ய:- தேவர்களால் வணங்கத்தகுந்தவன்.

486. தாரண:- (ஸம்ஸாரக்கடலைத்) தாண்டுபவன்.

487. யக்ஞப்ரிய:- யாகத்தில் ஆசை உள்ளவன்.

488. யமாத்யக்ஷ:- யமனுக்கு முன்னிருப்பவன்.

489. இபக்ரீட:- யானைகளோடு விளையாடுபவன்.

490. இபேக்ஷண:- யானைகளைப் பார்க்கின்றவன்.

491. ததிப்ரிய:- தயிரில் பிரியம் உள்ளவன்.

492. துராதர்ஷ:- பிறரால் தாக்கப்படாதவன்.

493. தாருபால:- மரங்களைப் பாதுகாப்பவன்.

494. தனூஜஹா:- தானவர்களை சம்ஹரித்தவன்.

495. தாமோதர:- கயிற்றால் கட்டப்பட்ட வயிறு உடையவன். உலகங்களைத் தன்னுள் அடக்கிக்கொண்டிருப்பவன்.

496. தாமதர:- கயிறு தரித்தவன்.

497. தக்ஷிணாமூர்த்திரூபக:- தக்ஷிணாமூர்த்தி உருவமானவன்.

498. சசீபூஜ்ய:- இந்திராணியால் பூஜிக்கப்பட்டவன்.

499. சங்க கர்ண:- சங்குபோல் காது உடையவன்.

500. சந்த்ர சூட:- பிறைமதி சூடியவன்.

501. மனுப்ரிய:- வேத மந்திரங்களில் பிரியம் உள்ளவன்.

502. குடரூப:- வெல்லம் போன்ற உருவினன்.

503. குடாகேச:- அர்ஜீனன்(அர்ஜுனனுக்கு குடாகேசன் என்று பெயர் உண்டு.)

504. குலதர்ம பாரயண:- அவரவர்களின் குலத்திற்கு உரிய தர்மங்களை நடத்தி வைப்பவன்.

505. காலகண்ட:- கருத்த நிறமுள்ள கழுத்தை உடையவன்.

506. காடகாத்ர:- கெட்டியான (உறுதியான சரீரம் உள்ளவன்.)

507. கோத்ரூப:- கோத்ரரிஷி உருவினன் அல்லது ஒளிந்து கொண்ட கோத்ரன் என்ற அரக்கர்களை இந்திரனுக்குக் காண்பித்தவன்.

508. குலேச்வர:- ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவன்.

509. ஆனந்த பைரவாரத்ய:- ஆனந்த பைரவனால் பூஜிக்கப்பட்டவன்.

510. ஹயமேத பலப்ரத:-  தன்னை பூஜிப்பவர்களுக்கு அச்வமேதயாகத்தின் பலனை (அதாவது இந்திர பதவியை) அளிப்பவன்.

508. குலேச்வர:- ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவன்.

509. ஆனந்த பைரவாரத்ய:- ஆனந்த பைரவனால் பூஜிக்கப்பட்டவன்.

510. ஹயமேத பலப்ரத:- தன்னை பூஜிப்பவர்களுக்கு அச்வமேதயாகத்தின் பலனை (அதாவது இந்திர பதவியை) அளிப்பவன்.

511. தத்யன்னாஸக்தஹ்ருதய:- தயிர் அன்னத்தில் விருப்பம் உள்ளவன்.

512. குடான்னப்ரீத மானஸ:- சர்க்கரைப் பொங்கலில் பிரியம்முள்ள மனம் உடையவன்.

513. க்ருதான்னா ஸக்த ஹ்ருதய:- நெய் கலந்த அன்னத்தில் பிரியம் உள்ள இதயம் கொண்டவன்.

514. கௌராங்க:- பொன்மயமான அவயவங்கள் உடையவன்.

515. கர்வபஞ்சக:- கர்வத்தை அகற்றுபவன்.

516. கணேச பூஜ்ய:- கணேசனால் பூஜிக்கத் தகுந்தவன்.

517. ககந:- ஆகாசரூபன்.

518. கணானாம்பதி:- சிவகணங்களுக்கு, இந்திரியங்களுக்கு அதிபதி.

519. கர்ஜித:- கர்ஜிக்கிறவன்.

520. சத்மஹீன:- கபடம் இல்லாதவன்.

521. சசிரத:- சந்திரன்போல் வெண்மையான பற்களை உடையவன்.

522. சத்ரூணாம்பதி:- சத்துருக்களையும் காப்பவன்.

523. அங்கிரா:- அங்கிரஸ் என்னும் முனிவரின் உருவினன்.

524. சராசரமய:- அசைகின்றதும் அசையாததுமான பொருட்களின் உருவானவன், (சபரிமலை செல்லும் அடியார்கள், அசையும் பொருள் அசையாப் பொருள் எவற்றையும் குறிப்பிடும்போது ஐயப்பன் எனும் அடைமொழியைச் சேர்த்துக் கூறுவது குறிப்பிடத்தக்கது.)

525. சாந்த:- சாந்த குணம் உள்ளவன்.

526. சரபேச:- எட்டுக்கால் பக்ஷி வடிவினன்.

527. சதாதப:- சதாதபர் முனி வடிவினன்.

528. வீராராத்ய:- போர் வீரர்களால் பூஜிக்கத் தகுத்தவன்.

529. வக்ராகம:- கோணலான நடை போடுபவன்.

530. வேதாங்க:- வேதங்களை அங்கமாகக் கொண்டவன். அல்லது ரதகஜக துரக பதாதிகளைக் கொண்டவன்.

531. வேதஸஞ்சர;- வேதத்தில் கூறப்பட்டுள்ளவன்.

532. பர்வதா ரோஹண:- மலைகளில் ஏறுபவன்.

533. பூஷா:- சூர்யன்.

534. பரமேச:- மேலான இறைவன்.

535. ப்ரஜாபதி:- படைப்பவன், பிரம்ம ரூபன்.

536. பாவக்ஞ:- அபிப்ராயம் அறிந்தவன்.

537. பவரோகக்கன:- ஸம்ஸாம் என்ற ரோகத்தை அகற்றுபவன்.

538. பவஸாகரதாரண:- ஸம்ஸாரம் என்ற கடலைத் தாண்டுவிப்பவன்.

539. சிதக்னிதேஹ:- ஞானாக்னி சரீரன்.

540. சித்ரூப:- ஞான ரூபன்.

541. சிதானந்த:- ஞானானந்தன்.

542. சிதாக்ருதி:- ஞான வடிடானவன்.

543. நாட்யப்ரிய:- நடனத்தில் விருப்பம் உள்ளவன்.

544. நரபதி:- மனிதர்களுக்குப் பதியாக இருப்பவன்.

545. நர நாராயணார்ச்சித:- நர நாராயணர்களால் (கிருஷ்ணன், அர்ஜுனன் இவர்களால்) பூஜிக்கப்பட்டவன்.

546. நிஷாதராஜ:- வேடர்களுக்கு அரசன்.

547. நீஹார:- மூடுபனி உருவமானவன்.

548. நேஷ்டா- நேஷ்டா எனும் பெயர் உடைய வேள்விக்கான ரூபன்.

549. நிஷ்டுரபாஷண:- (எதிரிகளிடம்) கொடுமையான சொற்கள் உடையவன்.

550. நிம்னப்ரிய:- பள்ளமான இடங்களில் பிரியம் உள்ளவன்.

551. நீலநேத்ர:- கறுமை நிற கண்களை உடையவன். நீலன் எனும் பூத கணத்தை எல்லாக் காரியங்களிலும் ஏவுபவன்.

552. நீலாங்க:- கறுமை நிற அங்கங்களை உடையவன்.

553. நீலகேச:- கறுமையான கேசம் உள்ளவன்.

554. ஸிம்ஹாக்ஷ:- சிம்மத்தின் கண்கள் போல் உடையவன்.

555. ஸர்வவிக்னேச:- எல்லா தடைகளையும் அகற்றுபவன்.

556. ஸாம வேத பராயண:- ஸாம வேதம் ஓதுபவன்.

557. ஸனகாதி முனித்யேய:- ஸனகர் முதலிய முனிவர்களால் கருதத்தகுந்தவன்.

558. ஸர்வரீச:- இரவுக்கு ஈசன்.

559. ஷடானன:- ஆறுமுகங்கள் தரித்தவன்.

560. ஸுருப:- நல்ல உருவம் உள்ளவன்.

561. ஸுவர்க:- ஸ்வர்கம் அளிப்பவன்.

563. சரீநாதனே பூஜ்ய:- இந்திரனால் பூஜிக்கப்பட்டவன்.

564. காகின:- காகினீ தேவிக்குப் பதியானவன்.

565. காமதஹன:- காமனைச் சுட்டெரித்தவன்.

566. தக்தபாப:- பாபங்களைப் பொசுக்கியவன்.

567. தராதிப:- பூமி-மலைகளுக்கு அதிபதியானவன்.

568. தாமக்ரந்தி:- கச்சைபட்டையை இடுப்பில் தரித்தவன்.

569. சாஸ்த்ரீச:- நூறு மனைவிகளைக் கொண்டவன்.

570. தந்த்ரீபால:- தந்திரம் கற்றவர்களைக் காப்பவன்.

571. தாரக:- ப்ரணவ உருவமானவன். வீடு விப்பவன்.

572. தாம்ராக்ஷ:- சிவந்த கண்களை உடையவன். தாமரை மணிமாலை தரித்தவன்.

573. தீக்ஷ்ணதம்ஷ்ட்ர:- கூர்மையான பற்களை உடையவன்.

574. திலபோஜ்ய:- எள்ளு சாப்பிடுபவன்.

575. திலோதர:- எள்ளு போன்ற வயிறு உள்ளவன்.

576. மாண்டுகர்ண:- குண்டலங்கள் அணிந்த காதுகளை உடையவன்.

577. ம்ருடாதீச:- பொறுமை வாய்ந்தவன்.

578. மேருவர்ண:- மேருமலையைக் கொண்டாடுபவன்.

579. மஹோதர:- பெருத்த வயிறு உடையவன்.

580. மார்த்தாண்டபைரவாராத்ய:- மார்த்தாண்டபைரவனால் பூஜிக்கத்தகுந்தவன்.

581. மணிரூப:- ரத்னமணி போன்ற உருவன்.

582. மருத்வஹ:- காற்றை வகிக்கிறவன்.

583. மாஷப்ரிய:- உளுந்து தானியத்தில் பிரியம் உள்ளவன். மாஷன் என்ற வீரனிடம் பிரியம் உடையவன்.

584. மதுபான:- தேன் அருந்துபவன்.

585. ம்ருணாள:- தாமரையைக் கொண்டவன்.

586. மோஹினீபதி:- மோகினி என்பவருக்குப் பதி.

587. மஹாகாமேசநயன:- மஹாகாமேசனுக்கு நேத்ரம் போல் (விழிபோல்) பிரியமானவன்.

588. மாதவ:- திருமால்

589. மதகர்வித:- மதத்தால் கர்வம் உள்ளவன்.

590. மூலாதாராம் புஜா வாஸ:- மூலாதார கமலத்தில் வீற்றிருப்பவன்.

591. மூலவித்யாஸ்வரூபக:- மூலமந்த்ர உருவன்.

592. ஸ்வாதிஷ்டானமய:- ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் விளங்குபவன்.

593. ஸ்வஸ்த:- வேலையின்றி சுகமாக இருப்பவன்.

594. ஸ்வஸ்திவாக்ய:- மங்களகரமான சொற்களை உடையவன்.

595. ஸ்ருவாயுத:- ஸ்வரூபம் என்பது வேள்வியில் ஹோமம் செய்யக்கூடிய சிறியகரண்டி போன்ற பாத்திரம். இந்த ஸ்ருவத்தை ஆயுதமாகக் கொண்டவன்.

596. மணிபூராப்ஜ நிலய:- மணிபூரகத்தில், அதாவது, நாபிச் சக்கரத்தில் இருப்பவன்.

597. மஹா பைரவ பூஜித:- மஹா பைரவனால் பூஜிக்கப்பட்டவன்.

598. அனாஹத்õப்ரஜரஸிக:- இதய கமலத்தில் விளங்குபவன்.

599. ஹ்ரீங்காரரஸபேஸல:- ஹ்ரீங்கார உச்சரிப்பினால் மனோகரமானவன்.

600. ப்ரூமத்யவாஸ:- புருவங்களின் நடுவில் வஸிப்பவன்.

601. ப்ரூகாந்த:- அழகான புருவங்கள் உடையவன். ப்ரூகன் என்பவனை சமீபத்தில் கொண்டவன்.

602. பரத்வாஜேனபூஜித:- பரத்வாஜ முனிவரால் பூஜிக்கப்பட்டவன்.

603. ஸஹஸ்ராராம்புஜவாஸ:- ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் வஸிப்பவன்.

604. ஸவிதா:- சூரியன்; எல்லாவற்றையும் உண்டு பண்ணுபவன்.

605. ஸாமவாசக:- ஸாம வேதம் ஓதுபவன்.

606. முகந்த:- முகுந்தன் என்னும் பெயர் உள்ளவன்.

607. குணாதீத:- குணங்களுக்கு அப்பாற்பட்டவன்.

608. குணபூஜ்ய:- நல்ல குணமுள்ளவர்களால் பூஜிக்கத்தகுந்தவன்.

609. குணாச்ரய:- குணவான்களால் ஆச்ரயிக்கப்பட்டவன்.

610. தன்ய:- க்ருதார்த்தன்.

611. தனப்ருத்:- தனங்களைக் கொண்டவன்.

612. தாஹ:- தஹிக்கிறவன்.

613. தனதான கராம்புஜ:- தனம் அளிக்கும், தாமரை போன்ற கைகளை உடையவன்.

614. மஹாசய:- பெரிய அபிப்ராயம் உள்ளவன்.

615. மஹாதீத:- மஹத் தத்துவத்தைக் கடந்தவன்.

616. மாயாஹீன:- மாயை இல்லாதவன்.

617. மதர்சித:- சந்தோஷமாக பூஜிக்கப்பட்டவன்.

618. மாடர:- பாரிபார்ச்சுவன். சூரியனின் அருகில் இருப்பவன், மடங்களில் எஜமானனாக விளங்குபவன்.

619. மோக்ஷபலத:- முக்தி இன்பம் அளிப்பவன்.

620. மத்வைரீகுல நாசன:- மதம் கொண்ட சத்ருகுலத்தை நாசம் செய்கிறவன்.

621. பிங்கள:- பிங்கள முனிவரின் வடிவன், பிங்கள வருஷத்துக்கு அதிதேவதை.

622. பிஞ்சசூட:- மயில் இறகு சூடியவன்.

623. பிசிதாச பவித்ரக:- மாமிசம் உண்ணுபவர்களை சுத்தி செய்கிறவன்.

624. பாயஸான்ன ப்ரிய:- பாயஸ அன்னத்தில் பிரியம் உள்ளவன்.

625. பர்வபக்ஷ மாஸ விபாஜக:- பர்வம், பக்ஷம், மாதம் இவைகளைப் பிரிக்கிறவன்.

626. வஜ்ரபுஷ:- வயிரம் பூண்டவன்.

627. வஜ்ரகாய:- வஜ்ரம் போன்ற தேகம் உடையவன்.

628. விரிஞ்ச:- பிரம்மன்.

629. வரவக்ஷஸ:- ச்ரேஷ்டமான மார்பு உடையவன்.

630. விக்ஞான கலிகா ப்ருந்த:- மிகவும் பிரகாசமான மலர், மொக்குகளைக் கொண்டவன்.

631. விச்வரூப ப்ரதர்சக:- பெரிய உருவம் காண்பிப்பவன், விச்வரூப தரிசனம் கொடுப்பவன்.

632. டம்பக்ன:- கர்விகளின் கர்வத்தை அடக்குபவன்.

633. தமகோஷக்ன:- தமம் என்ற வாத்தியத்தின் கோஷத்தினால் சத்ருக்களை கொல்லுபவன்.

634. தாஸபால:- அண்டினவர்களைக் காப்பாற்றுபவன்.

635. தபௌஜஸ:- க்ரீஷ்ம காலத்தில் பலம் உள்ளவன்.

636. த்ரோணகும்பாபிஷிக்த:- துரோண முனிவரால் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றவன். (அல்லது) நான்கு படி நீர் கொள்ளக்கூடிய குடத்திற்கு த்ரோணம் என்று பெயர். அப்படிப்பட்ட குடத்தினால் நீராடியவன்.

637. த்ரோஹி நாச:- துரோகிகளை நாசம் செய்கிறவன்.

638. தாபதுர:- சத்ருக்களை உஷ்ணத்தினால் பீடிப்பவன்.

639. மஹாதீரேந்த்ர வரத:- மஹா தீரனான இந்திரனுக்கு வரம் அளித்தவன்.

640. மஹா சம்சார நாசன:- பெரிய ஸம்சார பந்தத்தை அகற்றுபவன்.

641. லாகினீ ஹாகினீ லப்த:- லாகினீ ஹாகினீ என்னும் தேவியரால் அடையப்பட்டவன்.

642. லவணாம்போதி தாரண:- உப்புக்கடலைத் தாண்டியவன்.

643. காகின:- காகினி என்ற சக்தியோடு ஸ்வாதிஷ்டானத்தில் விளஙகுபவன்.

644. காலபாசக்ன:- காலனுடைய பாசத்தை த்வம்ஸம் செய்தவன்.

645. கர்மபந்த விமோசக:- முன் பிறவியில் செய்யப்பட்ட பாபங்களினால் ஏற்படும் தீமைகளை (கஷ்டங்களை)ப் போக்கடிப்பவன்.

646. மோசக:- விடுவிப்பவன்.

647. மோஹநிர்பின்ன:- மோகமற்றவன்.

648. பகாராத்ய:- சூரியனால் ரகசியமாகப் பூஜிக்கத்தகுந்தவன்.

649. ப்ருஹத்தனு:- பெரியசரீரம் உள்ளவன்.

650. அக்ஷய:- நாசமற்றவன்.

651. அக்ரூரவரத:- குரூரம் அற்றவர்களுக்கு அல்லது அக்ரூரருக்கு வரமளித்தவன்.

652. வக்ராகம விநாசன:- கெட்ட (தீய) வழியில் செல்லுபவர்களை நாசம் செய்கிறவன்.

653. டாகின:- டாகினி என்ற சக்தியோடு விசுத்தி சக்கரத்தில் இருப்பவன்.

654. ஸூர்ய தேஜஸ்வீ:- சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.

655. ஸர்வபூச:- எல்லாம் அணிந்தவன்.

656. ஸத்குரு:- ஸன்மார்க்கத்தைப் போதிக்கும் குருநாதன்.

657. ஸ்வத்ந்ர:- பிற ஏவல் அற்றவன்.

658. ஸர்வதந்த்ரேச:- எல்லா காரியங்களுக்கும் எஜமானன்.

659. தக்ஷிணாமூர்த்தி ரூபக:- தக்ஷிணாமூர்த்தி உருவம் கொண்டவன்.

660. சித்ஸதானந்த கலிக:- ஸச்சிதானந்த ரூபன்.

661. ப்ரேமரூப:- இதரர்களால் விரும்பத் தகுந்த உருவமும் உள்ளமும் கொண்டவன். அன்புவடிவானவன்.

662. ப்ரியங்கர:- அடியவர்களுக்குப் பிரியத்தை அளிப்பவன்.

663. மித்யா ஜகததிஷ்டானஊ- பொய்யான உலகைக் கொண்டவன்.

664. முக்தித:- மோக்ஷம் அளிப்பவன்.

665. முக்திரூபக:- மோக்ஷம் அடையும் வழியைக் காண்பிப்பவன்.

666. முமுக்ஷு:- விடுதலையை விரும்பியவன்; அதாவது மோக்ஷத்தைக் கருதியவன்.

667. கர்மபலத:- கர்மங்களுக்குப் பலன் அளிப்பவன்.

668. மார்க்கதக்ஷ:- வழி நடையில் ஸமக்தன்.

669. கார்மண:- கர்மாக்களில் சம்பந்தித்தவன்.

670. மஹாபுத்த:- பெரிய புத்தன்-உருவன்.

671. மஹாசுத்த:- ரொம்பவும் சுத்தமானவன்.

672. சுகவர்ண:- கிளிபோல் நிறம் உள்ளவன்.

673. சுகப்ரிய:- சுகமுனிவரிவம் (கிளியிடம்) பிரியம் கொண்டவன்.

674. ஸோமப்ரிய:- சந்திரனிடம் பிரியம் கொண்டவன்.

675. ஸுரப்ரீத:- தேவர்களால் ஸந்தோஷிக்கப்பட்டவன்.

676. பர்வாராதன தத்பர:- பருவ கால பூஜையில் ஆசை கொண்டவன்.

677. அஜப:- அஜபர மந்திர ரூபன்.

678. ஜனஹம்ஸ:- ஜனங்களுக்கு ஹம்ஸம் போன்றவன்.

679. ஹலபாணி ப்ரபூஜித:- கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராமனால் பூஜிக்கப்பட்டவன்.

680. அர்ச்சித:- அர்ச்சிக்கப்பட்டவன்.

681. வர்ச்சஸ:- காந்தன்.

682. வாக்மீ:- பேச்சாளன்.

683. வீரவேஷ:- வீரவேஷம் பூண்டவன். வீரன் என்ற தேவதையின் உருவன்.

684. விதுப்ரிய:- சந்திரனிடம் பிரியம் உள்ளவன்.

685. லாஸ்யப்ரிய:- ஸ்திரீகள் செய்யும் ஒரு வித கூத்திற்கு லாஸ்யம் என்று பெயர். அதில் விருப்பம் உள்ளவன்.

686. லயகர:- மறைத்தலைச் செய்பவன்.

687. லாபாலாப விவர்ஜித:- லாப நஷ்டங்களைத் தள்ளினவன்.

688. பஞ்சானன:- ஐந்து முகம் உள்ளவன். சிங்கத்தை வைத்துக் கொண்டவன். விரிந்த (மலர்ந்த) முகமுள்ளவன்.

689. பஞ்சகுரு:- பஞ்ச பாண்டவர்களுக்கு ஆசான். பராசரன் முதலிய ஐந்து மூர்த்திகளைக் குருவாகக் கொண்டவன்.

690. பஞ்சயக்ஞ பலப்ரத:- ஐந்து விதமான வேள்வியின் பலனை அளிப்பவன். அவைகளாவன:-1) அக்னிஹோத்ரம், 2) தர்ச பூர்ணமாஸௌ, சாதுர்மாஸ்யம், 3) பசு பந்தம், 4) ஸோம் யாகம் (அல்லது) தேவ, பிரம்ம, பூத, பித்ரு, மனுஷ்ய யக்ஞங்கள் அல்லது அபிகமனம், உபாதானம், இஜ்யா, ஸ்வாத்யாயம், யோகம் என்பவைகளாகும். விச்வஸ்ரூஜாமயனம் என்ற ஓர் பெரிய வேள்வி:- ஸத்ரயாகம் அனேக நாட்கள் பலதீக்ஷிதர்களால் நடத்தக்கூடியது. பிருத்வீ, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்து தத்துவங்களால் பூஜிப்பது என்ற மந்திர சாஸ்திரம் கூறும் பூஜையின் பலனை அளிப்பவன்.

691. பரசுஹஸ்த:- கோடாலியைக் கையில் கொண்டவன்.

692. பாவகேச:- தீ இறைவன்.

693. பர்ஜன்ய ஸம கர்ஜித:- இடிபோல் கர்ஜிப்பவன்.

694. பாபாரி:- பாவிகளுக்கு சத்துரு ஆனவன்.

695. பரமோதார:- மிகவும் உதாரகுணம் உள்ளவன்.

696. ப்ரஜேச:- பிரஜைகளுக்கு அரசன்.

697. பங்கநாசன:- பாபத்தை அகற்றுபவன்.

698. நஷ்ட கர்மா:- கர்மங்கள் அற்றவன்.

699. நஷ்டவைர:- வைரமற்றவன்.

700. இஷ்டஸித்தி ப்ரதாயக:- வேண்டுபவற்றை அளிப்பவன்.

701. நாகாதீச:- ஸர்ப்பங்களுக்கு ஈசன்.

702. நஷ்ட பாப:- பாபம் அற்றவன்.

703. இஷ்டநாம விதாயக:- இஷ்டர்களுக்குக் கெடுதல் செய்யாதவன்.

704. ஸாமரஸ்ய:- சமரசப் போக்கு உள்ளவன்.

705. அப்ரமேய:- ஊகிக்க முடியாதவன்.

706. பாஷண்டீ:- பாஷண்டன் போன்றவன்.

707. பர்வதப்ரிய:- மலையில் ஆசை உள்ளவன்.

708. பஞ்சக்ருத்ய:- ஐந்து தொழில் கொண்டவன்.

709. பரோபேத:- இதரர்களோடு சேர்ந்தவன்.

710. பஞ்சமஞ்சாதி ஸாயிக:- பெரிய மஞ்சத்தில் படுத்திருப்பவன்.

711. ப்தமாக்ஷ:- தாமரைக்கண்ணன், தாமரை மணிகளைப் பூண்டவன்.

712. பத்மவதன:- தாமரை போன்ற முகம் உடையவன்.

713. பாவகாப:- தீ போன்ற வடிவானவன், அல்லது தீ குழியோடு விளங்குபவன்.

714. ப்ரியங்கர:- பிரியம் அளிப்பவன்.

715. கார்த்த ஸ்வராங்க:- தங்கம் போன்ற அவயங்கள் உடையவன்.

716. கௌராங்க:- சிவந்த அங்கம் உள்ளவன்.

717. கௌரீ புத்ர:- கௌரியின் புதல்வன்.

718. கணேச்வர:- சிவ கணங்களுக்குத் தலைவன்.

719. ஆச்லிஷ்ட:- (பூர்ணா-புஷ்களா இவர்களால்) ஆலிங்கனம் செய்யப்பட்டவன்.

720. ச்லிஷ்டவபு:- அழகான சரீரம் உள்ளவன்.

721. சீதாம்சு:- குளிர்ந்த காந்தி உள்ளவன்.

722. சுபதீதிதி:- மங்களமான காந்தி உடையவன்.

723. தக்ஷத்வம்ஸ:- தக்ஷனை ஸம்ஹரித்தவன்.

724. தக்ஷகர:- பலம் உள்ள கைகளை உடையவன்.

725. வர:- ச்ரேஷ்டன், மாப்பிளை.

726. காத்யாயனீஸுத:- காத்யாயன முனிவரின் புதல்வியான தேவிக்கு புதல்வன்.

727. ஸுமுக:- அழகான முகம் உடையவன்.

728. மார்கண:- தேடுகிறவன், யாசிப்பவன், ஜல உருவினன்.

729. கர்ப:- உள்ளே இருப்பவன், கர்ப அகற்றியவன்.

730. கர்வபங்க:- கர்வங்களை அகற்றியவன்.

731. குசாஸன:- தர்பைகளை ஆசனமாகக் கொண்டவன், கொடுமையாகக் கட்டளை இடுபவன்.

732. குலபாலபதி:- பதிவ்ருதைகளுக்கு தெய்வம், சக்தி மதத்தைப் பின்பற்றியவர்களுக்குப் பதயானவன்.

733. ச்ரேஷ்ட:- சிரேஷ்டமானவன்.

734. பவமான:- வாயு, பரிசுத்தன்.

735. ப்ரஜாதிப:- பிராணிகளுக்கு அதிபதி.

736. தர்சப்ரிய:- அமாவாசையன்று தன்னை பூஜை செய்வதில் விருப்பம் உள்ளவன். தனது தரிசனத்தால் பிரியம் அளிப்பவன்.

737. தர்விகார:- பாம்பின் படம் போன்றவன்.

738. தீர்க்ககாய:- நீண்ட சரீரம் உள்ளவன்.

739. திவாகர:- பகல் பொழுதைச் செய்பவன் (சூரியன்).

740. பேரீநாதப்ரிய:- படஹ வாத்ய த்வனியில் பிரியம் உள்ளவன்.

741. ப்ருந்த:- ப்ருந்தன் எனும் பெயர் கொண்டவன்.

742. ப்ருஹத்தனு:- பெரிய சேனையைக் கொண்டவன்.

743. ஸுபாலக:- நன்றாகக் காப்பாற்றுபவன்.

744. ஸுப்ரஹ்மா- உயர்ந்த அந்தணன்.

745. ப்ரஹிமரஸிக:- பிராமணனிடம் கூடி இருப்பவன். வேதத்தில் விருப்பம் உள்ளவன். பரம்பொருளோடு ஐக்கியமானவன்.

746. ரஸக்ஞ:- ருசி அறிந்தவன்.

747. ரஜதாத்ரிப:- கைலை மலைபோல் காந்தி உள்ளவன்.

748. திமிரக்ன:- இருட்டை அகற்றுபவன், கண் நோயை அகற்றுபவன்.

749. மிஹிராப:- சூரியன் போன்றவன்.

750. மஹாநீல ஸமப்ரப:- பெரிய நீலக்கல் போன்றவன். தனக்கு ஒப்பான பலம் உள்ள மஹாநீலன் என்பவனை உடையவன்.

751. ஸ்ரீசந்தன விலிப்தாங்க:- நல்மணம் கமழும் சந்தனம் பூசிக் கொண்டவன்.

752. ஸ்ரீபுத்ர:- லக்ஷ்மீகுமாரன்.

753. ஸ்ரீதருப்ரிய:- வில்வமரத்தில் ஆசை கொண்டவன்.

754. லாக்ஷாவர்ண:- அரக்கு போன்றவன்.

755. லஸத்கர்ண:- அழகான காதுகள் உள்ளவன்.

756. ரஜனீத்வம்ஸி ஸந்நிப:- மதி- சந்திரனுக்கு ஒப்பானவன்.

757. பிந்துப்ரிய:- அமிர்தத்தில் பிரியம் கொண்டவன்.

758. அம்பிகாபுத்ர:- அம்பிகையின் புதல்வன்.

759. பைந்தவ:- பிந்து சக்கரத்தில் விளங்குபவன்.

760. பலநாயக:- பலனக்கு நாயகன், பலராமனுக்கு நாயகன்.

761. ஆபன்னதாரக:- ஆபத்துக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றுபவன்.

762. தப்த:- (சத்ருக்களைப்) பொசுக்கியவன்.

763. தப்தக்ரூச்ரபலப்தர:- தப்தக்ருச்சிரம் என்ற விரதத்திற்குப் பலனளிப்பவன்.

764. மருத்வ்ருத:- காவேரி தீரங்களில் இருப்பவன்.

765. மஹாகர்வ:- மிகவும் குள்ளமானவன், கோடிக்கணக்கான ஜனங்களால் நிறைந்தவன்.

766. சிராவாஸ:- வெகுகாலமாக இருப்பவன்.

767. சிகிப்ரிய:- மயிலின் மேல் பிரியம் உடையவன்.

768. ஆயுஷ்மான்:- ஆயுள் உள்ளவன்.

769. அநக:- பாபம் அற்றவன்.

770. தூத:- பரமசிவனின் தூதன்.

771. ஆயுர்வேதபராயண:- வைத்ய சாஸ்திரம் அறிந்தவன்.

772. ஹம்ஸ:- ஹம்ஸரூபன்.

773. பரமஹம்ஸ:- ஸந்யாஸி ரூபன்.

774. அவதூதாச்ரமப்ரிய:- நிர்வாணமாக இருக்கும் முனிவர்களிடம் பிரியம் கொண்டவன்.

775. ஆசுவேக:- மிகவும் வேகமாகச் செல்பவன்.

776. அச்வஹ்ருதய:- குதிரையின் நோக்கம் அறிந்தவன்.

777. ஹயதைர்ய பலப்ரத:- குதிரையை அச்சமின்றி ஓட்டுபவனுக்கு பலம் அளிப்பவன்.

778. ஸுமுக:- அழகான முகம் உள்ளவன்.

779. துர்முக:- துஷ்டர்களுக்கு பயத்தை உண்டுபண்ணும் மகம் கொண்டவன்.

780. விக்ன:- காரியங்களுக்குத் தடையை உண்டு பண்ணுகிறவன்.

781. அவிக்ன:- காரியங்களைத் தடையின்றி பூர்த்தி செய்து அருளுபவன்.

782. விக்னவிநாசன:- விக்கினங்களை நாசம் செய்பவன்.

783. ஆர்ய:- பூஜ்யன்.

784. நாத:- இறைவன்.

785. அர்யமாபாஸ:- சூரியனை விளங்கும்படி செய்பவன்.

786. பல்குண:- அர்ஜுனன்-சிறிய உருவன்.

787. பார்வதிப்ரிய:- பார்வதிக்குப் பிரியமானவன்.

788. அராதிக்ன:- சத்ருக்களைக் கொல்லுபவன்.

789. கனக்ரீவ:- மேகம் போன்ற கழுத்து உடையவன்.

790. க்ரிஷ்மஸூர்ய ஸமப்ரப:- க்ரீஷ்மகால(ஆனி, ஆடி மாதம்) சூரியன் போல் காந்தி உள்ளவன்.

791. க்ரீடி:- கீரிடம் தரித்தவன்.

792. கல்பசாஸ்த்ரக்ஞ:- கல்ப சாஸ்திரம் அறிந்தவன்.

793. கல்பானலவிதாயக:- பிரளயகாலத்து நெருப்பை ஏற்கிறவன்.

794. ஞானவிக்ஞானபலத:- விசேஷமான அறிவை அளிப்பவன்.

795. விரிஞ்சாரிவிநாசன:- ப்ரம்ம சத்ருக்களைக் கொல்லுபவன்.

796. வீரமார்த்தாண்டவரத:- வீரமார்த்தாண்டன் என்பவருக்கு வரம் அளித்தவன்.

797. வீரபாஹு:- வீரபாகு உருவன், சுப்ரமண்யரின் சேனைகளுக்கு அதிபதி. பலமான தோள்களை உடையவன்.

798. பூர்வஜ:- முன்னால் உண்டானவன்.

799. வீரஸிம்ஹாஸன:- மிகவும் பலம் பொருந்திய ஸிம்மத்தில் ஏறிக்கொண்டவன், வீரர்களுக்குள் சிங்காதனம் கொண்டவன்.

800. விக்ஞ:- விசேஷ ஞானம் உள்ளவன்.

801. வீரகார்ய:- வீரச்செயல் புரிபவன்.

802. அஸ்த்ரதானவ:- ஆஸுராஸ்த்ரம் தரித்தவன்.

803. நரவீர ஸுஹ்ருத்ப்ராதா:-அர்ஜுனனுக்குத் தோழனான கண்ணபிரானின் தம்பி உருவன், ஸாத்யகி.

804. நாகரத்ன விபூஷித:- நாகரத்தினம் அணிந்தவன்.

805. வாசஸ்பதி:- வாக்குகளுக்கு அதிபதி.

806. புராராதி:- முப்புரங்களுக்குச் சத்துருவானவன். சிவபெருமானின் உருவன்.

807. ஸம்வர்த:- ப்ரளயகாலன்.

808. ஸமரேச்வர:- யுத்தங்களுக்கு அதிபதி.

809. உருவாக்மீ:- பெரிய பேச்சாளன்.

810. உமாபுத்ர:- உமையின் புதல்வன்.

811. உடுலோகஸுரக்ஷக:- நக்ஷத்திர உலகத்தைக் காப்பவன்.

812. ச்ருங்காரராஸ ஸம்பூர்ண:- சிருங்கார ரஸம் நிறைந்தவன்.

813. ஸிந்தூர திலகாங்கித:- ஸிந்தூரப் பொட்டு அணிந்தவன்.

814. குங்குமாங்கித ஸர்வாங்க:- குங்குமத்தை எல்லா அவயங்களிலும் தரித்தவன்.

815. காலிகேய விநாசன:- காலிகேயன் எனும் சர்ப்பம் (அல்லது) காலிகேயன் எனும் அரக்கன் இவர்களை ஸம்ஹரித்தவன்.

816. மத்தநாகப்ரிய:- மதம் உள்ள யானையிடம் பிரியம் உள்ளவன்.

817. நீத:- அடைவிப்பவன்.

818. நாககந்தர்வபூஜித:- நாகர்கள், கந்தர்வர்கள் இவர்களால் பூஜிக்கப்பட்டவன்.

819. ஸுஸ்வப்ன போதக:- நல்ல கனவில் அடியவர்களுக்கு நன்மை போதிப்பவன்.

820. போத:- விழிப்பு நிலையில் உள்ளவன். அதாவது ஞான நிலை உருவன்.

821. கௌளீதுஸ்வப்ன நாசன:- பல்லியின் கனவால் உண்டாகும் பீடையøப் போக்குபவன்.

822. சிந்தாராசி பரித்வமஸீ:- மனக்கவலைகளை அகற்றுபவன்.

823. சிந்தாமணி விபூஷித:- விரும்பியதை அளிக்கும் திறன் வாய்ந்த சிந்தாமணி எனும் இரத்தினம் அணிந்தவன்.

824. சராசரஜக ஸ்ரஷ்டா:- அசைவதும் அசையாததுமான பொருள்களை உடைய உலகத்தை சிருஷ்டித்த அப்பன்.

825. சலத்குண்டலகர்ணயுக்:- ஆடுகின்ற குண்டலங்கள் பூண்ட காதுகளை உடையவன்.

826. முகுராஸ்ய:- கண்ணாடி போன்ற முகம் உடையவன்.

827. மூலநிதி:- கருவூலன் -பொக்கிஷதாரன்-மூலன் என்ற சித்தனால் நிதிபோல் அமைக்கப்பெற்றவன்.

828. நிதித்வய நிஷேவித:- சங்கம், பதுமம் என்கிற இரண்டு நிதிகளால் போற்றப்பபட்டவன்.

829. நீராஜனப்ரீதமனா:- கற்பூர ஹாரத்தியில் பிரியம் கொண்ட மனதுள்ளவன்.

830. நீரநேத்ர:- ஜலம் போன்ற கண்களை உடையவன்.

831. நயப்ரத:- நியாயப்படி அருளுகிறவன்.

832. கேதாரேச:- கேதார க்ஷேத்திரபதி, பூபதி.

833. கிராத:- வேடுவன். எருமேலி நிலையன்.

834. காலாத்மா:- கால ரூபன்.

835. கல்ப விக்ரஹ:- இஷ்டப்படி உருவம் எடுத்துக் கொள்ளுபவன். கல்பம் என்பது எத்தனையோ வருடங்கள் கொண்ட கால அளவு. அவ்வளவு காலம் போர் புரிபவன், ஸமர்த்தன். சரீரத்தில் களைப்பு இல்லாதவன் என்பதும் பொருள்.

836. கல்பாந்த பைரவா ராத்ய:- பிரளய காலத்தில் பைரவனால் பூஜிக்கத் தகுந்தவன்.

837. காகபத்ரசராயுத:- காக்கை இறகை பாணமாகக் கொண்டவன்.

838. கலாகாஷ்டா ஸ்வரூப:- கலை காஷ்டா என்கிற காலரூபன். எல்லா கலைகளின் முடிவான ரூபன்.

839. ருதுவர்ஷாதி மாஸவான்:- வஸந்தம் முதலான ருதுக்கள், பிரபவ முதலான வருடங்கள், சித்திரை முதலான மாதங்கள் இவைகளுக்கு அதிஷ்டான தேவதைகளால் சூழப்பட்டவன்.

840. தினேசமண்டலாவாஸ:- சூர்ய மண்டலத்தில் வசிப்பவன்.

841. வாஸவேனப்ரபூஜித:- இந்திரனால் பூஜிக்கப்பட்டவன்

842. பஹுலஸ்தம்ப கர்மக்ஞ:- நெல் முதலிய தானியங்களை அதிகமாக விளைவிக்கும் தொழிலை அறிந்தவன்.

843. பஞ்சாஸத்வர்ண ரூபக:- வடமொழி எழுத்துக்கள்(50). தான், எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்று நிரூபித்தவன்.

844. சிந்தாஹீன:- வேறு நினைவுகள் அற்றவன்.

845. சிதாக் ராந்த:- ஞானம் நிறைந்தவன்.

846. சாருபால:- அழகாகக் காப்பாற்றுகிறவன்.

847. பலாயுத:- சரீரபலத்தை ஆயுதமாகக் கொண்டவன்.

848. பந்தூககுஸும ப்ரக்ய:- செம்பருத்தி புஷ்பம் போன்றவன்.

849. பரகர்வ விபஞ்சன:- சத்துருக்களின் கர்வத்தை அகற்றுபவன்.

850. வித்வத்தம:- பெரிய படிப்பாளி.

851. விராதக்ன:- விராதன் என்னும் அரக்கனை அழித்தவன். ஸ்ரீராம உருவன்.

852.  ஸசித்ர:- ஆச்சரியமான காரியங்களோடு கூடியவன். சித்ரகுப்தன் என்ற தேவனோடு இருப்பவன் கணக்கன்.

853. சித்ரகர்மக:- சித்தரிப்பவன்.

854. ஸங்கீத கோலுப மன:- சங்கீதத்தில் இசைந்த மனம் உடையவன்.

855. ஸ்னிக்த கம்பீர கர்ஜித:- அழகாயும், பயங்கரமாயும் கர்ஜிப்பவன்.

856. துங்கவக்த்ர:- உயர்த்த முகம் உள்ளவன்.

857. ஸ்தவரஸ:- துதிப்பதில் பிரியம் உள்ளவன்.

858. அப்ராப:- ஆகாசம் போன்றவன்.

859. ப்ரமரேக்ஷண:- வண்டு போன்ற கண்கள் உடையவன்.

860. லீலாகமல ஹஸ்தாப்ஜ:- விளையாடுவதற்காகத் தாமரை புஷ்பங்களைக் கையில் தரித்தவன்.

861. பாலகுந்த விபூஷித:- இளமையான முல்லை புஷ்பம் சூடியவன்.

862. லோத்ர ப்ரஸவ சுத்தாப:- லொத்தி மரத்தின் பிசின் போன்றவன். (லொத்தி மரத்தின் பிசின் அதிஸார ரோகத்தைப் போக்கும்).

863. கிரீஷ குஸும ப்ரிய:- வாகை புஷ்பத்தில் பிரியம் உள்ளவன்.

864. த்ராஸத்ராணகர:- பயத்திலிருந்து விடுவிப்பவன்.

865. தத்வ:- உண்மையானவன்.

866. த்தவ வாக்யார்த்த போதக:- உண்மையான சொற்களின் பொருளை விளக்குபவன்.

867. வர்ஷீயான்- வயோதிகன்.

868. விதாதவ்ய:- கட்டளை இடக்கூடியவன்.

869. வேதாந்த ப்ரதிபாதக:- வேதாந்த சாஸ்திரங்களில் கூறப்பட்டவன்.

870. மூலபூத:- எல்லாவற்றுக்கும் மூலமானவன்.

871. மூலதத்வ:- தத்துவங்களுக்குள் முதலானவன். அதாவது க்ரக்ருதி ரூபன்.

872. மூலகாரண விக்ரஹ:- ப்ரக்ருதிக்குக் காரணமான உருவன்.

873. ஆதிநாத:- படைப்புக் காலத்தில் தோன்றிய முதல் கடவுள்.

874. அக்ஷயபலபாணி:- நாசமற்ற பலனை அளிக்கும் கரங்களை உடையவன்.

875. ஜன்மபராஜித:- பிறவியை ஜயித்தவன்.

876. காணப்ரிய:- ஸங்கீதத்தில் பிரியம் உள்ளவன். (நாகப்ரிய:- ஸர்ப்பங்களிடம் பிரியம் கொண்டவன்.)

877. கானலோல:- ஸங்கீதன்.

878. மஹேச:- மகேசன்.

879. விக்ஞாமானஸ:- பெரிய அறிவாளி.

880. கிரிஜாஸ்தன்ய ரஸிக:- அம்பிகையின் ஸ்தன்யத்தில் விருப்பம் உள்ளவன்.

881. கிரிராஜ வரஸுத:- கைலை நாதனின் புத்திரன்.

882. பீயூஷகும்ப ஹஸ்தாப்ஜ:- அமிர்த கலசத்தைக் கையில் கொண்டவன்.

883. பாசத்யாக:- ஆசைகள் அற்றவன். போரில் சத்ருக்கள் மீது பாசாயுதம் தொடுத்தவன்.

884. சிரந்தன:- எப்போதும் உள்ளவன்.

885. ஸுதாலாலஸ வக்த்ராப்ஜ:- அமிர்தம் போல் இனிக்கும் குரலை உடைய முகம் கொண்டவன்.

886. ஸுரத்ரும பலேப்ஸித:- ஸ்வர்க்கத்திலுள்ள மரங்களின் பழங்களில் ஆசை கொண்டவன்.

887. ரத்ஜஹாடக பூஷாங்க:- ராவணன் முதலிய அரக்கர்களால் பூஜிக்கப்பட்டவன்.

888. ராவணாதி ப்ரபூஜித:-ராவணன் முதலிய அரக்கர்களால் பூஜிக்கப்பட்டவன்.

889. கனத்காலேச ஸுப்ரீத:- கனத்காலேசன் என்பவனிடம் பிரியம் கொண்டவன்.

890. க்ரௌஞ்சகர்வ விநாசன:- மலை உருவம் கொண்ட கிரௌஞ்சன் என்ற அரக்கனின் அகந்தையை அழித்தவன்.

891. அசேஷஜன ஸம்மோஹ:- எல்லா ஜனங்களையும் தனது உருவத்தாலும் செய்கையாலும் மோகிக்கச் செய்கிறவன்.

892. ஆயுர்வித்யா பலப்ரத:- ஆயுளையும் வித்யைதனையும் அளிப்பவன். வைத்ய முறையில் பலனளிப்பவன்.

893. அவபத்ததுகூலாங்க:- வெண் பட்டில் மேலாடை தரித்தவன்.

894. ஹாராலங்க்ருத கந்தர:- ஹாரங்களை (மாலைகளை) தரித்தவன்.

895. கேதீக குஸுமப்ரீத:- தாழம்பூவில் ஆசை கொண்டவன்.

896. கலலை:- பரிவாரித:- யானைகளால் சூழப்பட்டவன்.

897. சேகாப்ரிய:- மயிலின் அகவலில் பிரியம் உள்ளவன்.

898. கார்த்திகேய:- கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன். முருகன்.

899. ஸாரங்கி நிதப்ரிய:- ஸாரங்கி வாத்திய ஒலியில் பிரியம் கொண்டவன்.

900. சாதகாலாய ஸபந்துஷ்ட:- சாதக பக்ஷிகளின் கூச்சலில் பிரியம் கொண்டவன்.

901. சம்ரீம்ருக ஸேவித:- சமரீ என்ற மிருகங்களால் ஸேவிக்கப்பட்டவன்.

902. ஆம்ர கூடாத்ரி சஞ்சார:- ஆம்ரகூடம் என்ற மலையில் ஸஞ்சரிப்பவன். மாமரங்கள் அடர்ந்த மலையில் ஸஞ்சரிப்பவன்.

903. ஆம்நாய பலதாயக:- வேதத்தில் கூறப்பட்டுள்ள பலன்களை அளிப்பவன்.

904. அக்ஷூத்ர த்ருதபாணி:- ருத்ராக்ஷ மாலையைக் கையில் தரித்தவன்.

905. அக்ஷிரோக விநாசன:- கண்களின் நோயைப் போக்கடிப்பவன். (த்ருஷ்டி தோஷத்தை அகற்றுபவன்).

906. முகுந்தபூஜ்ய:- முகுந்தனால் பூஜிக்கப்பட்டவன்.

907. மோஹாங்க:- மோகத்தை உண்டு பண்ணும் அங்கங்களை அல்லது சேனைகளை உடையவன்.

908. முனிமானஸ தோஷித:- முனிவர்களின் மனதிற்குச் சந்தோஷத்தை அளிப்பவன்.

909. தைலாபிஷிக்த ஸுசிரா:- எண்ணையால் அபிஷேகம் செய்யப்பட்ட தலையை உடையவன்.

910. தர்ஜனீமுத்ர தர்சன:- அதிகார முத்திரையை காண்பிப்பவன்.

911. தடாதகாமன ப்ரீத:- ஸ்ரீமீனாக்ஷி தேவியின் மனதுக்குப் பிரியமானவன்.

912. தமோகுண விநாசன:- தமோ குணத்தைக் கண்டிப்பவன்.

913. அநாமய:- பிணி இல்லாதவன்.

915. அர்ஜுனாப ஹுதப்ரிய:- வெண்சங்கத்தில் பிரியம் உள்ளவன்.

916.

917. ஷாட்குண்ய பரிஸம்பூர்ண:- ஸந்தி, விக்ரகம், யானம், ஆவனம், த்வைதம், ஆச்ரயம் என்று மனுவினால் ராஜநீதியில் கூறப்பட்டுள்ள ஆறு வித குணங்களால் நிறைந்தவன்.

918. ஸப்தாச்வாதி கிரஹைஸ்துத:- சூரியன் கிரஹங்களால் போற்றப்பட்டவன்.

919. விதசோக:- சோகமற்றவன்.

920. பிரஸாதக்ஞ:- அனுராகம் அறிந்தவன்.

921. ஸப்தப்ராண வரப்ரத:- ஸப்த ரிஷிகளுக்கும் ப்ரணாதாரணா யோகவரம் அளித்தவன்.

922. ஸப்தார்ச்சி:- அக்னி உருவமானவன்.

923. த்ரிநயன:- மூன்று கண்களை உடையவன்.

924. த்ரிவேணீபல தாயக:- கங்கை யமுனை சரஸ்வதி என்று மூன்று நதிகளின் ஸங்கமத்தில் ஸ்நானம் செய்வதால் ஏற்படும் பலனை அளிப்பவன். (சபரிமலை யாத்ரா மார்கக்த்தில், கங்கையை ஒத்த பம்பா நதியும், யமுனையை ஒத்த கல்லாறும் கலக்கும் இடத்தில் அந்தர் வாகினியாக சரஸ்வதியும் சேர்ந்து ஓர் திரிவேணி ஸங்கமம் ஏற்படுகிறது. திரவேணி ஸ்நான பலன், இங்கு ஸ்நானம் செய்தாலும் கிடைப்பதாகப் பெரியோர்கள் கூறுவர்.)

925. க்ருஷ்ணவர்மா:- கருத்த சட்டை அணிந்தவன்.

926. வேதமுக:- வேதம் ஓதுபவன்.  நான்கு முகம் உள்ளவன்.

927. தாருமண்டல மத்யக:- மரங்கள் அடர்ந்த  இடத்தில் இருப்பவன்.

928. வீரநூபுர பாதாப்ஜ:- வீரசலங்கை அணிந்த திருவடிகளை உடையவன்.

929. வீரகங்கண பாணிமான்:- வீர வண்டையம் பூண்ட கரங்களை உடையவன்.

930. விச்வமூர்த்தி:- உலகத்தின் உருவானவன்.

931. சுத்தமுக:- உலகத்தின் உருவானவன்.

932. சுத்தபஸ்மானு லேபன:- வெளுத்த திரு நீற்றைத் தரித்தவன்.

933. சும்பத்வம்ஸனீ ஸம்பூஜ்ய:- கம்பன் என்ற அரக்கனை வதம் செய்த காளியால் பூஜிக்கப்பட்டவன்.

934. ரக்கும்ப குலாந்தக:- ரக்தகும்பன் என்ற அரக்கனின் குலத்திற்கு யமன் போன்றவன்.

935. நிஷாதாதி ஸ்வரப்ரீத:- நிஷாதம் முதலிய ஸங்கீத ஸ்வரங்களில் பிரியம் கொண்டவன்.

936. நமஸ்கார பலப்ரத:- தன்னை வணங்கிறவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பவன். (ஆரியங்காவில் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்வது விசேடமாகக் கருதப்படுகிறது).

937. பக்தாரி பஞ்சதாதாயீ:- பக்தர்களின் சத்ருக்களைக் கொல்பவன்.

938. ஸஞ்சீக்ருதசராயுத:- தயார் செய்யப்பட்ட வில் முதலிய ஆயுதங்களை உடையவன்.

940. குப்ஜிகாமந்த்ர விக்ரஹ:- குப்ஜிகா என்ற மந்திர எழுத்துக்களால் வரையப்பட்ட தேகத்தை உடையவன். குப்ஜிகா என்ற தேவதையின் மந்திர பலத்தைக் கொண்டு அவுணர்களுடன் போர் புரிகிறவன்.

941. தூம்ராஸ்த்ர:- புகையை அஸ்திரமாகக் கொண்டவன்.

942. உக்ரதேஜஸ்வீ:- உக்ரமான காந்தி உள்ளவன்.

943. தசகண்ட விநாசக:- ராவணைக் கொன்றவன். ஸ்ரீராமனின் உருவினன்.

944. ஆசுகாயுத ஹஸ்தாப்ஜ:- சீக்கிரம் செல்லக்கூடிய ஆயுதம் கொண்டவன்.

945. கதாயுதகராம்புஜ:- கதாயுதத்தைக் கையில் கொண்டவன்.

946. பாசாயுதஸுபாணி:- பாசாயுதம் தரித்தவன்.

947. கபாலாயுத ஸத்புஜ:- கபாலத்தை ஆயுதமாகக் கொண்டவன்.

948. ஸஹஸ்ரமூர்த்தவதன:- ஆயிரம் தலைகளைக் கொண்டவன்.

949.  ஸஹஸ்ர த்வய லோசன:- இரண்டாயிரம் கண்களைக் கொண்டவன்.

950. நாநாஹேதி தரபாணி:- நாநாவிதமான ஆயுதங்களைக் கொண்டவன்.

951. நாநாஸ்திபூஷணப்ரிய:- நாநாவித எலும்புகளை (எலும்பு மாலைகளை சூடிக்கொள்ளப்பிரியம் கொண்டவன். அனேக எலும்புமாலைகளை தேரித்த பரமசிவனுக்குப் பிரியமான புத்திரன்.

952. ஆச்யாமகோமளதனு:- நீலவர்ணத்தினால் அழகான உருவம் உள்ளவன்.

953. ஆரக்தாபாங்க லோசன:- சற்றே சிவந்த கடைக்கண் பார்வை உடையவன்.

954. த்வாதசா ஹக்ரதுப்ரீத:- 12 நாட்களில் முடியும் வேள்வியில் பிரியம் கொண்டவன்.

955. பௌண்டரீக பலப்தர:- பௌண்டரீகம் என்னும் வேள்வியின் பலன் அளிப்பவன் அல்லது பௌண்டரீக முனிவருக்கு அருள் செய்தவன்.

956. அப்தோர்யாம க்ரதுமய:- அப்தோர்யாமம் என்ற வேள்வியின் உருவமானவன்.

957. சயநாதி பலப்ரத:- சயனம் முதலிய வேள்வியின் பலனை அளிப்பவன்.

958. பசுபந்த பலதாதா:- பசு பந்தம் என்ற வேள்வியின் பலனை அளிப்பவன்.

959. வாஜபேயாத்ம தைவத:- வாஜபேயம் என்ற வேள்வியின் பிரதான தேவதையாக இருப்பவன். ப்ரஜாபதி என்கிற தேவஸ்ரூபன்.

960. ஆப்ர்ஹகீட ஜனனாவனாத்மா:- பிரஹ்மா முதல் புழுக்கள் வரை உள்ள சகல ஜீவ ராசிகளையும் ரக்ஷிப்பதற் கெனவே உருவம் கொண்டவன்.

961. சம்பகப்ரிய:- சம்பக புஷ்பத்தில் பிரியம் கொண்டவன்.

962. பசுபாச விபாகக்ஞ:- தானபதியானதால், பசுக்களுடையதும் அதாவது ஜீவன்களுடையதும், பாசங்களுடையதுமான வேற்றுமை அறிந்தவன்.

963. பதிக்ஞான ப்ரதாயக:- பதியை  அறியும் அறிவை அருளுபவன்.

964. கல்பேச்வர:- கல்பம் என்பது நாட்களின் கூட்டமாகும். அவைகளுக்கு யஜமானன் அல்லது கல்பம் என்பது ஒரு நூலாகும். அதை வெளியிட்டவன்.

965. கல்பவர்ய:- கல்பங்களில் கூறப்பட்டவன் அல்லது சிரேஷ்டமான தனது உபாஸனா கல்பங்களை கொண்டவன்.

966. ஜாத வேத:- வேதங்களை உண்டு பண்ணியவன் ப்ரபாகர:-காந்தி அளிப்பவன்.

967. கும்பீச்வர:- அரவங்களுக்கு அரசன். ஆதிசேஷனின் உருவன்.

968. கும்பபாணி:- பூர்ண கும்பத்தைக் கையில் தரித்தவன்.

969. குங்குமாக்தலலாடக:- நெற்றியில் குங்குமம் தரித்தவன்.

970. சிலித்ர பத்ர ஸங்காச:- சிலித்ரம் என்ற இலையைப் போன்றவன்.

971. ஸிம்ஹவக்த்ர பப்ரமார்த்தன:- சிங்கமுகன் என்ற அவுணனைக் கொன்றவன்.

972. கோகிலத்வனிதாகர்ணீ:- குயில் கூவுதலைக் கேட்பவன்.

973. கால நாசன தத்பர:- காலனை அகற்றுபவன்.

974. நையாயிக மதக்ன:- வேதப்ரமாணமன்றி அனுமான ப்ரமாணத்தால் ஈச்வரனை வாதிக்கிற தர்க்க வாதங்களில் ஸித்தாந்தத்தை அகற்றுபவன்.

975. பௌத்தஸங்க விநாசன:- பௌத்த கூட்டங்களை அழிப்பவன்.

976. ஹேமாப்ஜாத்ருத பாணி:- தங்கத்தாமரையைக் கையில் வைத்திருப்பவன்.*

977. ஹோமஸந்துஷ்ட மானஸ:- ஹோமத்தில் சந்தோஷம் அடைபவன்

978. பித்ருயக்ஞஸ்ய பலத:- பித்ருக்களை உத்தேசித்து செய்யும் கர்மாக்களின் பலனளிப்பவன்.

979. பிதேவ ஜனரக்ஷக:- தந்தையைப் போல் ஜனங்களைக் காப்பாற்றுபவன்.

980. பதாதிகர்ம நிரத:- காலாட் படையின் செயல்களைக் குறிப்பிடுபவன்.

981. ப்ருஷதாஜ்ய ப்ரதாயக:- தயிர் கலந்த நெய் அளிப்பவன். இது வேள்வியில் உள்ளது.

982. மஹாஸுர வதோத்யுக்த:- பெரிய அசுரர்களை ஸம்ஹரிப்பதில் தயாராக இருப்பவன்.

983. ஸ்வாஸ்த்ர ப்ரதத்யத்ஸ்த்ரவர்ஷ:- யுத்தத்தில் தனது பாணங்களை எதிரிகள் ஏவும் பாணங்களுக்கு தக்கவாறு வர்ஷிப்பவன்.

984. மஹாவர்ஷ திரோதான:- பெரிய மழையை அடக்குபவன்.

985. நாகாக்ருத கராம் புஜ:- பாம்பை கையில் கொண்டவன்.

986. நம: ஸ்வாஹா வஷட் ச்ரௌஷட் பல்லவ ப்ரதி பாதக:- நம: என்னும் சொல் ஸம்பத்தை அளிக்கக் கூடியது. ஸ்வாஹா என்பது சரீர ஆரோக்கியம் அளிப்பது. வஷட் என்பது வசியத்தை அளிப்பது. ச்ரௌஷட் என்பது பிரியத்தை அளிப்பது. இவைகளைப் பரமனது மந்திரத்தில் எந்தெந்த விருப்பம் உள்ளதோ அவ்விதம் சேர்த்து அன்பர்களால் ஜபித்துக் கொண்டாடப்பட்டவன். இந்த நாமாவினால் பரமன் மந்திர மயமான உருவன்; எல்லா தேவர்களும் மேலான தேவன்; வேள்வி உருவினன்; அக்னி வடிவினன்; அன்பர்களின் இஷ்டங்களை இந்தக் கலியுகத்தில் சீக்கிரம் அளிப்பவன், ஸர்வோத்தமன் ஆவான் என்று பலவிதமாகப் போற்றப்படுகிறான்.

987. மிஹிரஸத்ருசக்ரீவ:- சூர்யனுக்குத் துல்லியமான கழுத்தை உடையவன்.

988. மிஹிரஸத்ரு சஸ்தவ:- சூரியன் போல் எங்கும் பிரகாசிக்கும் (பக்தர்களால் சொல்லப்பட்ட) தனது ஸ்தோத்திரத்தை உடையவன்.

989. தந்த்ரீ வாகன ஹஸ்தாக்ர:- எப்போதும் வீணை முதலான வாத்யங்களின் தந்திகளை மீட்டிக் கொண்டிருக்கும் கையை உடையவன்.

990. ஸங்கீதப்ரியமானஸ:- ஸங்கீதத்தில் பிரியமான மனது உடையவன்.

991. சிதம்ச முகுராவாஸ:- ஞானரூபமான கண்ணாடியில் வசிப்பவன்.

992. மணிகூடாத்ரி ஸஞ்சார:- மணிகூடம் என்ற மலையில் சஞ்சரிப்பவன்.

993. லீலா ஸஞ்சார தனுக:- விளையாட்டாக வில்லைக் கையிலேந்தி ஸஞ்சரிப்பவன்.

994. லிங்க சாஸ்த்ர ப்ரவர்த்தக:- பும்லிங்கம், ஸ்த்ரீலிங்கம், நபும் ஸகலிங்கம் (அதாவது ஆண், பெண், அலி) என்ற மூன்று லிங்கத்தைத் தீர்மானம் செய்யும் சாஸ்திரத்தை வெளிப்படுத்துபவன் (அல்லது) சிவலிங்க பூஜா விதியை பிரகாசிக்கும்படி செய்பவன்.

995. ராகேந்துத்யுதிஸம்பன்ன:- பௌர்ணமிகால சந்திரன் போன்றவன்.

996. யாக கர்ம பலப்ரத:- வேள்வியின் பலனை அளிப்பவன்.

997. மைனாககிரி ஸஞ்சார:- (இந்திரனுக்கு பயந்து சமுத்திரத்தில் ஒளிந்திருக்கும் இமயமலையின் புதல்வனான) மைனாகம் என்ற மலையில் ஸஞ்சரிப்பவன்.

998. மதும்ச விநாசன:- மது என்ற அரக்கனின் வம்சத்தை அழித்தவன்.

999. தாலகண்ட புராவாஸ:- தாலகண்டம் என்ற நகரத்தில் வசிப்பவன்.

1000. தமால நிப தேஜ:- தமாலம் போல் காந்தி உடையவன். (தமாலம் என்பது ஒருவகை இலை. இது மிகவும் காந்தி உள்ளதாக இருக்கும்).


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar