SS வேங்கடேச மங்களாசாஸனம் (தமிழ்) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வேங்கடேச மங்களாசாஸனம் (தமிழ்)
வேங்கடேச மங்களாசாஸனம் (தமிழ்)
வேங்கடேச மங்களாசாஸனம் (தமிழ்)

1. திருக்கேள்வா மங்களங்கள் பொழிபவனே பொலிபவனே
பெரு நெறியே ஸ்ரீனிவாசா வேங்கடவா மங்களங்கள்

2. பெருந்தவத்தாய் மைய்யலுறப் பேருலகைப் புரந்தருளும்
திருப்புருவ அருள் கண்ணா வேங்கடவா மங்களங்கள்

3. வேங்கடத்து மலைப்பொலி சேர் விழையணியாம் திருத்தாளாய்
ஓங்கிய சீர் மங்களத்தாய் வேங்கடவா மங்களங்கள்

4. எல்லார்க்கும் எப்பொழுதும் எழில் மயக்கம் அளித்தருளும்
நல்லழகுப் பெருமானே வேங்கடவா மங்களங்கள்

5. அழிதணையாய் குற்றமில்லாய் மாற்றமில்லாய் நிறைமகிழ்வே
எழில் ஞான உயிர் முதலே வேங்கடவா மங்களங்கள்

6. எல்லாமும் அறிந்தவனே படைப்பவனே ஆள்பவனே
நல்குணனே எளிமையனே வேங்கடவா மங்களங்கள்

7. பரப்ரம்மா பரமாத்மா விழைந்தனர்கள் பெற அருளும்
பரம் பொருளே பரதத்வா வேங்கடவா மங்களங்கள்

8. தவமேனித் தனியழகைச் சலித்தலின்று தியானிப்போர்
தெவிட்டாது தூய்த்துணரும் வேங்கடவா மங்களங்கள்

9.சரண் புகுவார் மோட்சநிதி தனதடியை என வலது
கரத்தாலே காட்டியருள் வேங்கடவா மங்களங்கள்

10. பெரும் கருணைப் பேரமுதப் பேராற்றின் அலைகளெனும்
திருவிழியால் துயர் நீக்கும் வேங்கடவா மங்களங்கள்

11. திருமாலை பட்டாடை திரு அணிகள் பெருமை பெற
வரு பெறுவன் துயர் தணிக்கும் வேங்கடவா மங்களங்கள்

12. அருள் பொழிய வைகுந்தம் தவிர்த்தருளி கோனேறித்
திருக் கரையில் புணர்ந் தாடும் வேங்கடவா மங்களங்கள்

13. மணவாள மாமுனிகள் உளத்திலிருந்து பேருலகக்
கணம் புரந்து களித்தருளும் வேங்கடவா மங்களங்கள்

14. ஈங்கெங்கள் குருமுதலோர் இயம்பியதை மங்களத்தாய்
ஓங்கி உயர் வேங்கடவா உனக்கென்றும் மங்களங்கள்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar