SS மகா சாஸ்தா அனுக்ரஹ கவசம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மகா சாஸ்தா அனுக்ரஹ கவசம்!
மகா சாஸ்தா அனுக்ரஹ கவசம்!
மகா சாஸ்தா அனுக்ரஹ கவசம்!

ஸ்ரீகுஹ்ய ரத்ன சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள மிக அற்புதமான ஸ்தோத்திரம் இது. கொடுமையும் அதர்மமும் மிகுந்த கலியுகத்தில், உலக உயிர்கள் காக்கப்படவும், அவர்கள் மேன்மை அடைவதற்குமான வழி என்ன என்று கேட்ட உமையவளுக்கு, பரமேஸ்வரன் சாஸ்தாவின் மகிமைகளைக்கூறி ஸ்ரீமஹாசாஸ்தா அனுக்ரஹ கவசம் குறித்து உபதேசித்தார்.

சத்ரு பயம், வியாதி, யுக்த பயம், கடன், கெட்ட கனவு முதலான தீவினைகளைக் களைந்து சகல நன்மைகளையும் அருளும் ஸ்ரீமஹா சாஸ்தா அனுக்ரஹ கவசம்.

தேஜோ மண்டலமத்யகம் த்ரிநயனம்
திவ்யாம்பராலங்க்ருதம்
தேவம் புஷ்பசரேக்ஷுகார்முக-
லசன்மாணிக்ய பாத்ராபயம்;
பிப்ரானம் கரபங்கஜை; மதகஜ-
ஸ்கந்தாதி ரூடம்விபும்
ஸாஸ்தாரம் சரணம் பஜாமி ஸததம்
த்ரைலோக்ய ஸம்மோஹனம்

கருத்து: ஒளிக்கூட்டத்தின் நடுவில் இருப்பவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த வஸ்திரத்தால் அலங்கரிக்கப்பட்டவரும், தேவரும், புஷ்ப பாணம், கரும்பாகிய வில், மாணிக்கத்தால் செய்த பாத்திரம், அபய முத்திரை ஆகிய நான்கையும் தாமரை போன்ற கைகளில் தரித்திருப்பவரும், மத யானையின் முதுகின் மேல் அமர்ந்தவரும், மூவுலகங்களையும் மோஹிக்கச் செய்பவருமான சாஸ்தாவைச் சரணடைகிறேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar