SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
(விநாயகர் புராணச் சுருக்கம்)(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்தவத்திரு கந்தசாமி சுவாமி அருளியது)காப்பு (கட்டளைக் கலித்துறை)சரதோற் பவநிலை யன்பர்க் கிடுமா வணிச்சதுர்த்திவிரதோத் தமர்தம் விழிவிருந் தாகும் விநாயகத்தேவிரதோற் சவமாண் பிரதம் பொலியு மிசைத்தமிழ்ப்பாவரதோத் திரமா வாக்குரு பாதம் வணங்குதுமே.நூல் - எண்சீர் விருத்தங்கள்1. பிரமனரி யுருத்திரனா மூவர்களும் புரிந்தபெருந்தவத்துக் கிரங்கியருட் பேருருவங் காட்டிப்பரவைமணற் கதிகமுறு மண்டவகை களின்சீர்பார்த்துவர வயிற்றுள்விட்டப் பான்மீளப் புரிந்துவரமநந்தங் கொடுத்தருள்வக் கிரதுண்டத் தேவுன்மகிமையென்சிற் றறிவுகொண்டு மதிப்பெளிதோ விரங்கிக்கரமளித்தாண் டமைத்தருள்வாய் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.2. விளங்கபிசித் தின்மனைவி குணவதிபாற் பிரமன்வீரியத்தாற் கருப்பமுற்று மேனிபெற்ற கணன்முன்வளங்கொள்கபி லன்கதிர்ச்சிந் தாமணியைக் கொள்கான்மாதவப்பே ருருக்காட்டி வன்கணற்கொன் றிருடியுளங்குளிர்ந்துன் பாற்புனைசிந் தாமணிப்பே ரேற்றாயுற்றவிந்நா ளோராட லுஞற்றியடிச் சிறியேங்களங்கமறா தென்னிசைப்பாய் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநா யகனே.3. வேதனது கொட்டாவி தனிலுதித்து மகவாய்வேண்டுவரங் கொண்டுலகர் வெம்பிமடிந் திடவேதீதமைகை கொடுதழுவுஞ் சிந்தூரன் றன்னைச்சிவைவயிற்றி லுதித்தானைத் திருமுகமேற் றருளிக்கோதமையன் வைன்வடிவைக் கைகொடெடுத் தன்பிற்குழைத்துமணம் பொழிசந்தக் குழம்பெனமேற் றிமிர்ந்தாய்காதலுற்றே மெமக்கருள்வாய் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.4. வேந்தபிநந் தனன்வேள்வி யழித்துலகை யலைக்கும்விக்கினனை யழிப்பவரே ணியன்மனைப்பா லுதித்துச்சாந்தமலி பார்சுவராச சிரமமிசை வளர்ந்துசவுபரிசா பங்கொள்பெருஞ் சாளிமிசை யூர்ந்துபோந்தவிக்கி னனைவணங்கார்க் கிடர்புரிந்தெம் பாதம்போற்றுநர்பா லகல்கவெனப் புகன்றருளா லாண்டாய்காந்தமிசைந் தெமையீர்ப்பாய் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.5.கொல்லால மொத்துமறை கவர்ந்துகொடுந் தீமைகுயிற்றுசங்கா சுரன்றுணையாக் குலவுகம லனைமுன்மல்லாலப் பெயர்மறையோ னாவேதங் கொணர்ந்துமாதவர்கட் கருளிவெம்போர் வயக்கியவ னுடலைவில்லாருஞ் சூலத்தான் மூன்று துண்டம் படவேவீழ்த்தியுயி ரினைப்பாத வீட்டமையப் புரிந்தாய்கல்லானென் றெனைக்கழியேல் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநா யகனே.6. மண்ணுருவி லுமைசதுர்த்தி பூசைசெயச்சோதிமயவுருவங் காட்டியன்னை வாஞ்சனையிற் சுதனென்றெண்ணுருவங் கொண்டுயர்பிந் தியமாயூ ரேசரென்றளவி லாட்டியற்றி யிடர்புரிசிந் துவினை.நண்ணுபர சாலொழித்துத் தேவர்சிறை மீட்டநாதநின்மெய் நாதமுடிப் பரதமுடி யுடனேகண்ணுமக மும்பொருத்தாய் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சி விநாயகனே.7. சண்டனது வீரியத்தி லாங்கனலா சுரனாற்சங்கடமுற் றிடுமிமையோர் சந்தோடம் பெறுமாறுண்டருளி யெவ்விதத்துந் தீராவெப் பதனையுறுமறுகம் புல்லருந்தி யொழித்தெனை யொப் பாருந்தொண்டரென வெளிதிலருச் சனைபுரிந்து போற்றுந்துணிவமையக் கூட்டிநின் றூயவருண் மகிமைகண்டனனோ கண்டிலனோ சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.8. மாமருவும் புயத்திருமால் புத்திரெனன் றுதிப்பமாதவஞ்செய் மாதவன்சு முதைனையைக் கொல்லத்தூமன் விடுஞ் சேனைமுற்று மாய்த்தவனைப் புகையாற்றொலைத்தவர்க்கு வலிந்திருமைச் சுகங்களும்மீந் திடவேசேமமலி தரும்பால சந்திரப்பேர் பெற்றதிரங்கலிய னியற்றிடற்கஞ் சினதோசெப் பிடுவாய்காமர்பொலி திருக்கோயிற் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே9. மந்திரமூ லத்திலிசை சிவன்சக்தி யாண்பெண்வாரணமாக் கூடவுரு வாய்ந்துகண பதியாயிந்திரனா தியரடங்க விபுதைமின்மா கதப்பேரிருடியுட னிபவடிவுற் றீன்றகய முகனையுந்தியகொம் பாற்சாடி மாலுமைசா பத்தாமுரகவடி வொழித்தனையென் னுறுகணறி கிலையோகந்தியிலாங் கலிப்பொதும்பர்ச் சிரவணமாபுரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.10. காசிபனு மதிதியுஞ்செய் தவத்தின்மகோற் கடப்பேர்க்காதலனா யற்புதங்கள் கரையறவே காட்டிக்காசிநகர் மன்னவன்மா தவமாயாண் டுற்றுக்கதித்தசுராந் தகனைநராந் தகனைமடித் தருளியாசில்சித்தி புத்திமணங் கொண்டிறைசேய்ம மணமுமாற்றிமறு மைச்சுகமு மளித்தனையெற் கெந்நாள்காசினித்துன் பறுத்தருள்வாய் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே11. பிரமசுரன் பெறும்வரத்தாற் றனதுசென்னி தானேபிடித்தழியப் புரிமுகந்தன் பெறுமுகுந்தை நகரிற்சுரரணுகா தாண்டவிர்கா சியையுமவ்வா றாற்றுந்துராசதற்கா வுடுண்டிமெய்ப்பேர் தோய்ந்துமைபா லுதித்துச்சிரமிசைத்தா ளமைத்தடக்கி ஞானமளித் ததன்பின்திவோதாதன் றனக்கிருமைச் சீலமுமீந் திட்டாய்கரவிலின் பென் றெமக்கருள்வாய் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநா யகனே12. தவமலிம ரீசிமுனி யுள்விழைந்த வண்ணஞ்சங்கரியை வல்லவைப்பேர் தாங்குமக ளாக்கிநவமலிய மணந்துதிரு மாலருள்பன் னிரண்டுநந்தனியார் களமைணந்து நாரணற்கின் புறவேசிவமலிகீ தையையருளிச் சுகவிசுவ ரூபதெரிசனமீந் தனைகடைக்கண் செலுத்தியெனக் குதிப்புங்கவமலிசா வுந்தொலைப்பாய் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே13. அம்பிகைதன் மகவானாய் வல்லபையா கச்செய்தனிமணங்கொண் டாய் சிவனுக் காமுதற்சே யானாய்மொய்ம்பிசைதே ரச்சொடித்தாய் திரிபுரத்தை யழிக்கமுன்னின்று பலவரமு முறையிலளித் திட்டாய்தெம்பிசைமெய்ப் பிரணவத்தி னுட்பொருளா யெல்லாத்தேவருமா யன்றிநின்றாய் திறமெவர்கண் டளப்பார்கம்பிதமன் பர்க்கொழிப்பச் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சிவிநாயகனே.14. குவிவார்ந்த மனத்துடனுன் சரித்திரங்கேட் போர்கள்குலவுநல மத்தனையுங் கொள்வரெனத் தேற்றச்செவிவாய்கொண்ட நுபவித்த வேதவியா சனுக்குந்திறற்சோம காந்தனுக்குஞ் சிந்தித பேறளித்தாய்புவிவாய்ப்பற் றமைத்திடுபுன் புல்வாய்ப் பட்டுள்ளம்புழுங்குகந்த சாமியென்றன் புன்மொழியாற் றுதித்தகவிவாய்ப்பக் கேட்டருள்வாய் சிரவணமா புரத்திற்கவினிரதா ரோகணமெய்க் காட்சி விநாயகனேவாழி வெண்பாசிரவை நகர்வாழி சிங்கச் சதுர்த்திவிரதவிழாப் போற்றமிகு மெய்ச்சீர் -வரமருவுதொண்டரினத் தோடுலகிற் றோய்சுபங்க ளத்தனையும்விண்டழைந்து வாழி மிக வே.