SS விநாயகமூர்த்தி திருவுலாக்காட்சி அழைப்பு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விநாயகமூர்த்தி திருவுலாக்காட்சி அழைப்பு
விநாயகமூர்த்தி திருவுலாக்காட்சி அழைப்பு
விநாயகமூர்த்தி திருவுலாக்காட்சி அழைப்பு

(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்
தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)

அறுசீர் விருத்தங்கள்

1. சீராரகண்ட சிவபோகந் திரண்டோர் உருவாய்ச் சிரவணபே
ரூரார்கிதுடர்தீர்த் திடும்பொருட்டா யுலாப்போந்தாகு மிடைபூத்தப்
பேரானந்த மயந்தருமப் பெருக்கிற்குளித்துப் பேரகத்தே
சேராநிற்போந் திரும்போம்நாம் சேரவாருஞ் செகத்தீரே.

2. ஒன்றாய்ப்புவன கோடியெலா மோங்கிநிமிர்ந்து நின்ற பொருளாய்
நின்றானந்தப் பெரும்போக நிலையாம்ஞான வகண்டமது
குன்றாவாகு மிசையுருவாய்க் குலவிச்சிரவைப் பதியிடத்திற்
பொன்றாதருளல் கடண்தில்நாம் புகுவோம் வாருஞ் செகத்தீரே.

3. தோற்றமனைத்துந் தனக்குள்ளே தோற்றியொடுக்கித் தோற்றாத
மாற்றமான பதியொன்றே வயங்கும்பசுக்கள் துரிசறுத்துக்
கூற்றமென்னு மவமிருத்துக் கூடாவண்ணஞ் சிரவணவூர்
தேற்றமடைய நிறைபொருளைச் சேரவாருஞ் செகத்தீரே.

4.கோடாகோடி புவனமெலாங் கோத்துநீக்கஞ் கோத்துநீக்கஞ் சிறிதின்றி
வாடாதமைத்தான் பெருஞ்சோதி மயமாயாகு மிசைபூத்துக்
கோடாச்சிரவை மாநகரிற் கொடுந்தீப்பிணிக ளணுகாதே
தேடா தமைந்தான் றிருவடியைச் சேரவாருஞ் செகத் தீரே.

5. மனிதவுருப்பெற் றிருந்துமனம் வாக்குக்காய மாமூன்றி
லனியமின்றி யருவுருவு மருவுமுருவு மாவானைக்
கனிவிலறியா மடமையுளீர் காண்மின்சிரவை மாநகர்ப்பாற்
செனிமினாகு மிசைச்சுடரைச் சேரவாருஞ் செகத்தீரே.

6. கலகப்புலன்வாய்ச் சுகம்விரும்பிக் காலமவத்திற் கழிக்காதே
அலகற்றிடுமா மறைமுடிமே லமைசெம்பொருளேயாகுவின்மீ
திலகிப்பிறப்பற் றிடுங்கதியி லேற்றவடைந்த தாதலினெந்
திலகச்சிரவைப் பதியிடத்திற் சேரவாருஞ் செகத்தீரே.

7. வாக்குமனங்கொண் டுணர்வருஞ்சின் மயமேயருளான் மானிடரைக்
காக்கும்படியே ருருக்கொண்டு கவினாராகு மிசையன்பர்
நோக்கும்படிநின் றதுகருத்துள் நுழையக் கண்டு பேரின்பந்
தேக்கும்படியாஞ் சிரவணத்தே சேரவாருஞ் செகத்தீரே.

8. மறந்துநினைந்துஞ் சுழன்மாயா மனத்தின் புணர்ப்பான் மாநிலத்தில்
பிறந்துமிறந்துந் தடுமாறிப் பேய்த்தேர் நீருண்டயராதே
நிறந்தங்கியவா குவின்மிசைதோய் நின்றபூரணத்தைக் கண்டுருகச்
சிறந்தசிரவைப் பதியின்பாற் சேரவாருஞ் செகத்தீரே.

9. வானுந்தியதே வரும்விரும்பு மனிதப்பிறப்பின் மாத வச்சீர்
தானுந்திடப்பெற் றீர்மாயைச் சளத்துட்கிடந்து தளராதே
ஊனுந்திடவுட் கலந்துருக்கு மொளியான்சிரவை யிடையின்பத்
தேனுந்தியற்கை யின்பமுறச் சேரவாருஞ் செகத்தீரே.

10. செகத்தீரென்சொற் றணவாதீர் செஞ்சாலிகள்சூழ் சிரவணவூர்
முகத்தேகோயில் கொண்டமர்ந்து மொய்க்குங் கொடுந்தீ விடசுரத்தை
யிகத்தேமுற்று மறமுருக்கி யெங்குமங்க ளாகரமாய்
அகத்தேபுறத்தே யமர்ந்தானை யாகுமிசை கண் டுய்வீரே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar