SS திருத்தேருலாக்காட்சித் தோத்திர விண்ணப்பப் பஞ்சகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திருத்தேருலாக்காட்சித் தோத்திர விண்ணப்பப் பஞ்சகம்
திருத்தேருலாக்காட்சித் தோத்திர விண்ணப்பப் பஞ்சகம்
திருத்தேருலாக்காட்சித் தோத்திர விண்ணப்பப் பஞ்சகம்

(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்
தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)

1. அகிலாண்ட கோடிகள் சிருட்டிக்கும் வண்ணமுய
லயனகந் தைப்பிணிப்பா
லாற்றியப டைப்பதிடை யூற்றில்விட லாற்றன
தகந்தளர்ந் துன்னைநாடித்
திகிலாண்ட நெஞ்சுடன் புலனஞ் சொடுங்கித்
தியானமா தவமுயலமுன்
நெரிசனந் தந்தவற் குறுதுணைபெ றத்துணைச்
செயலொடறி வானவின்ப
முகிலாண்ட குந்தளத் தேவியர்ச் சுதையான
முறையினால் குபுமணங்கொண்
மூர்த்திநீ யாமுமச் சீர்த்திமே விடவருளி
முற்றுநற் றுணைபுரிகுவான்
செகிலாண்ட வாகனத் திரளிலுயர் வாகியவிர்
தேருலாக் காக்ஷியருளே
சிரவணபு ரக்கடவுள் பரவணத் தெஞ்சிந்தை
தேருலாக் காக்ஷியருளே.

2. மூவர்க்கு முத்தொழில் வழங்கிவக் கிரதுண்ட
மூர்த்தியெனு மேனிதாங்கி
மூரியலை வாரியுடை தோய்பாரி லுறுபொருள்கண்
முற்றுமா கித்தருவிசை
தேவர்க்கு வாசமாம் பதியுற்ற தேனுவொடு
சிந்தாம ணிச்செல்வமுற்
செப்புபல பொருளுமாய்ப் பாதலத் தொடுமற்ற
செல்வவுல கத்தினுள்ளோர்
யாவர்க்கு மாம்புவன போகவகை யாவையு
மகட்டினுட் டேரவருள்செய்
இறைவனே பேரின்ப நிறைவனே யுன்னிருபொன்
னிணையாடிக் குடியாகவே
சேவர்க்கு மச்சொடித் திடுமுதற் றேவநின்
றேருலாக் காக்ஷியருளே
சிரவணபு ரக்கடவுள் பரவணத் தெஞ்சிந்தை
தேருலாக் காக்ஷியருளே

3. மடம்பிடித் துறதாம் பிடித்ததே மேலென்னும்
வாதம்பி டித்துநீங்கா
மதம்பிடித் திடுகுஞ் சரத்திற் செருக்கியெது
வல்லமையு முள்ளோமெனும்
அடம்பிடித் திடுமனிதர் தம்மையு மறக்கருணை
யாலாண்டு மெய்யன்பர்பா
லாற்றிசை யறக்கருணை யூற்றின்முழு குற்றிடற்
காம்புண்ணி யம்பொருத்த
வடம்பிடித் திடுமாறு வலிதான கருணையவர்
மாட்டினுமி சைத்தருளுமோர்
வாரணமு கக்கையருள் வாரியே வரமெலாம்
வாரிமிசை வீசியெம்மைத்
திடம்பிடித் திடவலிதி லாண்டவாண் டவநினது
தேருலாக் காக்ஷியருளே
சிரவணபு ரக்கடவுள் பரவணத் தெஞ்சிந்தை
தேருலாக் காக்ஷியருளே

4. சொல்வளம் பெற்றநின் றிருவிழாக் காட்சியெந்
துணைவிழிக் கண்டின்புளஞ்
சுரக்கவெண் ணியமோமுன் யாம்
தூயபுண் ணியமோமுன் யாம்
நல்வளம் பெற்றிடச் செய்மாத வங்கொனின்
ஞானவா னந்தமயமாய்
நண்ணியவ ருட்பெருக் கோவிவை க ளொன்றான
நன்மையோ விம்மைமறுமைப்
பல்வளம் பல்கிடமுன் னல்கிடுநின் மெய்யருட்
பரவையிடை மூழ்கவெம்மைப்
பண்ணியவொர் திண்ணியப் புண்ணியக் கண்ணியவ
பாரமாண் பென்புகலுவோஞ்
செல்வளம் பொலிபே ரருட்காட்சி யிறைவநின்
றேருலாக் காக்ஷியருளே
சிரவணபு ரக்கடவுள் பரவணத் தெஞ்சிந்தை
தேருலாக் காட்சியருளே

5. தோண்டுதொறு மூறிடு மணற்கேணி போலமெய்த்
தொண்டிய ருள்ளின்பநீர்
சுரந்தழிவி லாதபல் வரந்தந்து காத்திடுந்
தும்பிகை நம்பிக்கையால்
வேண்டுதொறு நல்கருட் கற்பகத் தருவான
மெய்படைத் துள்ளவுனையே
மிகநாடு சென்மமே மன்மார் தருமுத்தி
வித்தாமெ னுந்துணிவினோம்
ஆண்டுதொறு வாக்கொளுனை யாண்டுதொறு
மகலாம லன்பார்வி ழாப்புரிந்தே
யானந்த வாரிதியின் மூழ்கிடவெம் முளமீ
தமைந்தறிவொ டன்புதவுவாய்
தீண்டுதொறு முறுபவம் பிரியச்செய் புரிவடத்
தேருலாக் காக்ஷியருளே
சிரவணபு ரக்கடவுள் பரவணத் தெஞ்சிந்தை
தேருலாக் காக்ஷியருளே

தானனாத்தாத்ததன - தனதானா

பாரின்மேற் சீர்த்தநர ராகும்வாய்ப் பேற்றும்வழி
பாடதாற் றாக்கொடிய     ருறவாலே

பாழின்மாப் போற்பலுபி ருனைவாய்ப் பாற்பெய்திடு
பான்மையோர்ப் பாற்றியுன    தருளாலே
சீரின்மேற் பாற்புலவர் யாருமேத் தேற்றமலி
சீலவாக் கூட்டியடி    யவரோடே
தேகமேற் றாக்கதியின் மீதநாட் கூட்டமறை
தேடுதாட் சூட்டிடவு    ளிசைவாயே
காரின்மேற் றோற்றுகர வீகையாற் றூக்கநிறை
காவலோற் கேக்கமுள    முறுமாறே
காமர்தாட் போற்றுமௌவை தோய்கைநீட் டாற்கயிலை
காணவேற் றேற்றமுறு    முதல்வோனே
நீரின்மேற் றோற்றுகுமிழ் போலமாற் றாக்கையிடை
நேர்தராச் சீர்த்தியருள்    குருநாதா
நேரிலாக் காக்ஷிமலி தேருலாச் சீர்ச்சிரவை
நீடுபேற் றாக்கமருள்    பெருமாளே

தனதனனா தானன -தனதானா

ஒருகணமா னாலுமெ னுயிரிடையா னாதமை
யுனதிருதாள் பேணியு    ளுருகாதே
யுணவுடைமா டாடுகள் வயன்மனைசேய் மாதர்க
ளுலகமைவாழ் வாதிகள்    சதமாயே
கருதுபுவீ ணேயலை தருமனமா மாயைசெய்
கவலைகள்போ தாதுகொ     லினிமேலே
கருணையினா யேனையு னடியர்முனாள் கூடிய
கதியிலிநாண் மேவிட    வருள்வாயே
மருமலிவா னோர்பணி மகபதிசீ காழியின்
வயினமைகா னார்மலர்    வனமேசீர்
மலிபுகழாம் வாசனை யுலகிடைமா றாதுற
மகிமைகொள்கா வேரியை    யருள்கோவே
தெருளிலுதூ னாருட லிடையயரா தேயருல்
செறிவிழிதோய் தேசிக    வடிவாவாய்
சிரவணவூர் வாழ்விசை கவினிரதா ரோகண
சிவகணநா தாசுரர்    பெருமாளே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar