Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை பெருமாள் கோயில்
 
சென்னை பெருமாள் கோயில் (217)
 
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,
தில்லை கங்காநகர், சென்னை
அருள்மிகு அருளாளப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு அருளாளப் பெருமாள் திருக்கோயில் முன்னூர் சென்னை
திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் உள்ள ஊர் ஆலங்குப்பம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ளது முன்னூர். முன்னூற்று என்ற ஊரே நாளடைவில் முன்னூர் என்று மருவியது.
இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் கோயில் கொண்டுள்ளார் அருளாளப்ப பெருமாள். இங்கே தனிச் சன்னதியில் யோக பீடத்தில் சுயம்புவாக அருள்புரியும் யோக நரசிம்மர் சிறந்த வரப்பிரசாதி. பொக்லைன் இயந்திரத்தின் மூலம் கோயில் திருப்பணிகள் நடந்த வேளையில் பூமியிலிருந்து வெளிப்பட்டவர் இந்த யோக நரசிம்மர். அன்றைய தினம் சுவாதி நட்சத்திரம் என்பதாலு<ம். பிரதோஷ வேளையில் தெய்வத் திருமேனி கிடைத்ததாலும் இந்த நரசிம்மர் மிகவும் சாந்நித்தியமானவர் என்று சொல்லப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். இங்கே தனிச் சன்னதியில் அருளும் வைஷ்ணவி தேவியை வழிபட காரியத்தடைகள் நீங்கும். இந்த அம்பிகை சங்கு மற்றும் சக்கரத்துடன் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும்.
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் திருவல்லிக்கேணி சென்னை
சென்னை திருவல்லிக்கேணியில் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தின் பின்புறம் ராம்நகர் பிரதான சாலையில் இருக்கிறது. கோதண்டராம பக்த பஜனை மந்திரம்.
ஒருசமயம் இந்தப் பகுதிக்கு வந்த மகாத்மா காந்தியடிகள் இவர்களது ராமபக்தியை வியந்து பாராட்டியதோடு. இந்த பஜனை மந்திரில் அமர்ந்து ரகுபதி ராகவ ராஜாராம் உள்ளிட்ட பல ராம பஜன்களையும் பாடியிருக்கிறார்.
அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் மயிலாப்பூர், சென்னை.
சென்னை, மயிலாப்பூரில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
புதிய இடத்துக்குப் போகும்போது, தயக்கம் எழுவது இயல்பு. மாறாக, அந்த வீட்டுக்குரியவரே வந்து அழைத்துச் சென்றால், அந்தத் தயக்கம் எழாது. அப்படி தாமே முன்வந்து பக்தர்களை பரமபதம் அழைத்துச் செல்கிறான் அடியவர்க்கு எளியவனான பகவான். பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்க்கு அரிய வித்தகன் என்று, பகவானின் குணவிசேஷத்தைச் சிறப்பித்துச் சொல்வார்கள் ஆழ்வார்கள். பகவானின் எளிய தன்மையை உணர்த்துகிற வைபவம்தான், வைகுண்ட ஏகாதசி திருநாள்.
அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில், விருகம்பாக்கம், சென்னை.
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் என்ற இடத்தில் காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது, சுந்தர வரதராஜ பெருமாள் கோயில்.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகு ததும்பக் காட்சி தருகிறார் சுந்தர வரதராஜ பெருமாள். இவரின் சன்னதியில் நின்றாலே, நம் சங்கடங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்! அனுமன், ராமானுஜர், நம்மாழ்வார், அழகிய மணவாளர், திருமங்கை ஆழ்வார் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. பெருமாளுக்கு எதிரில் கருடாழ்வார் சன்னிதி கொண்டிருக்க, பக்கத்தில் ஆண்டாள் சன்னிதி கொண்டு, பெருமாளைச் சேவித்தபடி காட்சி தருகிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருடசேவை நடைபெறும் அதேநாளில், இங்கேயும் கருடசேவை நடைபெறும் என்பது சிறப்பு. அதற்கு முதல் நாள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னர் கோயிலில் இருந்து, ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்டு, மறுநாள் பெருமாளுக்கு அலங்கரிக்கப்படும்.
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை.
கோயிலில் உள்ள தீர்த்தக் குளத்தை, புஷ்கரணி என்பார்கள். சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் திருக்குளத்தை சந்திர புஷ்கரணி என்றும், சந்திர தீர்த்தக் குளம் என்றும் அழைத்தார்கள். காலப்போக்கில், இது சித்திரைக் குளம் என்று மருவியதாம்.
சுமார், 6, 000 வருடங்கள் பழைமை மிக்கது இந்தத் திருக்குளம் என்கிறது ஸ்தல புராணம். சந்திர பகவானுக்குச் சாபம் ஏற்பட்டு, அதனால் உடலில் நோய் தாக்கி அவஸ்தைப்பட, அதில் இருந்து விமோசனம் பெற வழி தெரியாமல் தவித்தார் சந்திர பகவான். பிறகு, ஆதிகேசவ பெருமாளை நோக்கிக் கடும்தவம் இருந்தார். ஏழு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தத்தை எடுத்து வந்து, இங்கே திருக்குளம் உருவாக்கி, அதில் நீராடினால், உன் சாபமும் நீங்கும்; சரும நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என அருளினார் ஆதிகேசவ பெருமாள். அதன்படி, சந்திர பகவான் இந்தத் திருக்குளத்தை அமைத்து, அதில் ஏழு புண்ணிய தீர்த்தங்களையும் கலந்து நீராடி, பெருமாளை ஸேவிக்க... சாபம் நீங்கப் பெற்றார். இந்தத் திருக்குளத்தில் மலர்ந்திருந்த செந்தாமரையில் இருந்துதான் மயூரவல்லித்தாயார் எழுந்தருளி, திருக்காட்சி தந்தார்; தாயாரின் உபதேசம் பெற்று, பெருமாளுக்குப் பேயாழ்வார் சேவைகள் புரிந்த தலமும் இதுவே என்கிறது ஸ்தல புராணம். தீராத நோயாங் அவதிப்படுவோர், இங்கு வந்து திருக்குளத்தில் நீராடினால், விரைவில் பிணிகள் நீங்கும்; பழைய பொலிவைப் பெறலாம் என்பது ஐதீகம்! பண்டிகை மற்றும் முக்கியமான திருவிழா நாட்களில், இந்தத் திருக்குளத்து நீரைக் கொண்டு, ஆதிகேசவப் பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறும். பங்குனி மாதத்தில், இங்கே பிரம்மோத்ஸவம் பிரமாண்டமாக நடைபெறும். 9-ம் நாள் விழாவில், இந்தக் குளத்தில் தீர்த்தவாரி உத்ஸவம் சிறப்புற நடைபெறும். முக்கியமாக, தை அமாவாசையின்போது நடைபெறும் ஐந்து நாள் விழாவில், இங்கே சித்திரைத் திருக்குளத்தில் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது நடைபெறுகிறது தெப்பத் திருவிழா.
அருள்மிகு அமிர்தவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு அமிர்தவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், சேலையூர், சென்னை.
சென்னை, தாம்பரம் அருகே சேலையூரில் அமைந்துள்ள அமிர்தவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் பெருமாள் மிக சக்தி வாய்ந்ததாகும். 1,000 வருடங்களுக்கும் பழைமையான திருக்கோயில். மகா மண்டப முகப்பில் அழகிய தசாவதாரம், தாயார், பெருமாள் சிற்பங்கள் உள்ளன. இங்கே துவஜ ஸ்தம்பம், பலிபீடத்திற்கு பதில் திருச்சங்கம், திருச்சக்கரம், கருடாழ்வார், ஆஞ்சனேயர் முதலிய நித்ய சூரிகளைத் தாங்கிய திருவிளக்குக் கம்பம் தனது தொன்மையை பறைசாற்றுகிறது. கருவறையில் சுமார் மூன்றடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியோடு நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகிறார் பெருமாள். ஸ்ரீராமர் சன்னிதியில் சீதாப்பிராட்டியும், லட்சுமணப் பெருமாளும் வலம் இடமாக மாறி எழுந்தருளியுள்ளனர். கண்டு தரிசிப்போருக்கு அள்ளிக் கொடுப்பவர் இத்தல தாயார் என்பது ஐதீகம்.
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், மேட்டுப்பாளையம் (சென்னை), கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம், சென்னை 600033.
இக்கோயில் கோவிந்தன் ரோட்டில் உள்ள ஆதிகேசவ பாஷ்யகார சுவாமி தேவஸ்தானத்திற்கு அருகே மேற்கு மாம்பலம் மேட்டுபாளையம் பகுதியில் உள்ளது.
இராமானுஜர் தரிசித்த தலமாகவும், முற்காலத்தில் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்துப் பெருமாள் ஆண்டுக்கு ஒரு முறை எழுந்தருளியதாகவும் தகவல் கூறப்படுகிறது. அஹோபிலம் எனக் கூறுவது போல மாபிலம் என்கிற வார்த்தையே மருவி மாம்பலம் ஆனதாக செவி வழிச் செய்தி கூறுகிறது. ஸ்ரீநிவாஸப் பெருமாள் பத்மாவதி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு பாஷ்யக்கார மற்றும் ஆதி சென்ன கேசவப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பாஷ்யக்கார மற்றும் ஆதி சென்ன கேசவப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை மேற்கு மாம்பலம், கோவிந்தன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600033.
சென்னை மேற்கு மாம்பலத்தின் மையப் பகுதியில் உள்ளது. மேற்கு மாம்பலம் பகுதி தியாகராய நகர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்குக் கீழே தெற்கு உஸ்மான் ரோட்டில் வலப்புறம் போத்தீஸ் கடைக்கு எதிராக செல்லும் துரைசாமி சுரங்கப் பாதையில் சென்றால் வரும் முதலில் வருவது தம்பையா சாலை. பின் வருவது ஆர்ய கவுடா சாலை. பேருந்துகள் 11-ஏ, 5-ஏ, பி, ஜி மற்றும் 18, 9எம் செல்லும். இந்த கோயில் கோதண்டராமர் கோயிலிற்கு வலப்புறம் செல்லும் கோவிந்தன் தெருவில் ஸ்ரீநிவாஸா திரையரங்கம் அருகில் உள்ளது.
இராமானுஜர் விஜயம் செய்து மங்களாசாசனம் செய்த கோயில். பொதுவாக பாஷ்யக்காரர் எனக் கோயிலில் பெயர் குறிப்பிட்டுள்ள பெருமாள் கோயில்கள் இராமானுஜரால் விஜயம் செய்யப்பட்டவை என்கிற யூகத்தைத் தருகிறது. மேலும் ஸ்ரீபெரும்புதூர் தலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆதி கேசவப் பெருமாளுடன் இவருக்குக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பாஷ்யக்கார மற்றும் ஆதி சென்ன கேசவப் பெருமாள் செங்கமலவல்லி, ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 9 மணி வரை.
அருள்மிகு கோதண்டராமர் தேவஸ்தானம் திருக்கோயில்
ருள்மிகு கோதண்டராமர் தேவஸ்தானம் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை 600033.
தியாகராய நகர் மேட்லி சாலையிலிருந்து தண்டவாளத்தைத் தாண்டி மேற்கே செல்லும் வழியில் இடப்புறம் உள்ள கே.ஆர். கோயில் தெருவில் உள்ளது. கே.ஆர். என்பது கோதண்டராமரைக் குறிக்கும். மாம்பலம் ஸ்டேசன் கணிணி முன் பதிவு நிலையம் தாண்டி உள்ள பாலத்தைக் கடந்தால் கோயில்.
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். ஆந்திர மாநிலம் ஹரிதாஸ் மடத்தினால் கட்டப்பட்ட கோயில். 1927ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது, தக்ஷிண பத்ராசலம் என்கிற பெயரும் வழங்கப்படுகிறது. திருநீர்மலை திவ்ய தேச ரங்குநாதர் தீர்த்தப் பரிகிரஹம் (பெருமாள் இடம் மாறி அருள் பாலிப்பது) இங்கு விளங்குவதாக நம்பப்படுகிறது. சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சமேதராய் காட்சி தர, வீர ஆஞ்சநேயர், யோக நரசிம்மர் மற்றும் ரங்கநாதருக்கும் சன்னிதிகள் உள்ளன. சீதா தேவி ராமர் மடியில் சேவை சாதிக்கிறார். கோதண்டராமர் சீதா லக்ஷ்மண சமேத கோதண்டராமர் ரங்கநாயகி பட்டாபிஷேகக் கோலம்.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
<< Previous  15  16  17  18  19  20  21  22  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar