Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை பெருமாள் கோயில்
 
சென்னை பெருமாள் கோயில் (217)
 
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை நுங்கம்பாக்கம், காவல் நிலையம் அருகில், நுங்கம்பாக்கம், சென்னை 600034.
+91 44-28270990, 9841016996.
சென்னை கோடம்பாக்கம் ஹை ரோடிலிருந்து வரும் போது வள்ளூவர் கோட்டம் சந்திப்பில் வலப்புறம் செல்லும் சாலை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் செல்கிறது. அதன் அருகே இக்கோயில் உள்ளது. 17-எம், 17-ஈ, 47-ஏ, 37-பி, ஈ, 9ஏ, 10ஏ, 10-சி, 147, 26, 25-பி பேருந்துகள் செல்லும்.
தொண்டை மண்டலத்தில் அமைந்த பொம்மராஜன் என்கிற சிற்றரசன் ஆண்ட பொம்மராஜபுரம் தான் இன்றைய நுங்கம்பாக்கம். அவனுக்கு ஏற்பட்ட வயிற்று வலி தீர திருமால் அவன் கனவில் தோன்றி வைணவனாய் இருந்த போதும் அகத்தீஸ்வரரை வழிபடச் சொன்னதாக வரலாறு. அதற்குக் கைம்மாறாக இந்தக் கோயிலை அவன் கட்டினான். நூற்றாண்டுகள் கடந்த வன்னி மரம் தல விருக்ஷமாக விளங்கிறது. ரதசப்தமியன்று 7 வாகனங்களில் பெருமாள் எழுந்தருளுவது சிறப்பான வைபவம். மக்கட்பேறும், திருமண பாக்கியமும் தரும் தாயார், காரியசித்தி நல்கும் ஆஞ்சநேயரும் இக்கோயிலில் வரப்பிரசாதிகள். சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது, பிரசன்ன வெங்கடேசர் அலர்மேல்மங்கை நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை வடபழனி, சிவன் கோயில் தெரு, வடபழனி, சென்னை 600026.
சென்னை வடபழனி 100 அடி ரோடு ஜங்ஷனில் உள்ள சரவண பவன் ஹோட்டலுக்கு எதிரே வேங்கீஸ்வரம் சிவன் கோயில் உள்ளது. அதன் அருகே சிவன் கோயில் தெருவிலேயே இக்கோயில் உள்ளது. 25,17,12-சி, 37, 25-சி, 12-பி, 27-சி பேருந்துகள் செல்லும்.
ஆம்ராரண்யம் (மாமரக்காடு), வேங்கீஸ்வரம் என்றும் அழைக்கப்படும் தொன்மை வாய்ந்த சிவன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கோயில் இந்தத்தலத்துச் சிவனை வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷனின் அம்சம்) பூஜித்தனர். வியாக்ரபாதர் தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் பூக்களைப் பறித்து சிவனுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ய விழைந்ததால் அவருக்கு மரம் ஏற புலி நகங்களும் புலிக்காலும் கிடைக்கப்பெற்றவர் என்பது புராணச் செய்தி, பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் சாந்தநாயகி உடனுறை வேங்கீஸ்வரர்த் திருக்கல்யாணத்திற்கு இந்தப் பெருமாள் திருமணச் சீர்வரிசையுடன் எழுந்து அருளுகிறார். கார்கோடகன் இந்தத் தலத்துப் பெருமாளை வழிபட்டதால் கோடன் பாக்கம் என்பது மருவி கோடம்பக்கம் ஆனதாக செவி வழிச் செய்தி கூறுகிறது, சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, சுந்தரவல்லித்தாயார் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுகமண்டலம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை எழும்பூர், 6எல்என்.பி.கோயில் தெரு, எழும்பூர் சென்னை 600008.
+91 44-28193439, 9444807535.
சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து மிக அருகில் எழும்பூர் பிரதான சாலையில் உள்ள குறுக்குத் தெருவில் உள்ளது பேருந்து எண்கள் 28, 27-ஏ, 27, 27-பி,17, 17-ஈ, எம்-127-பி செல்லும்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கநாதரும், திருவேங்கடத்தில் ஸ்ரீ வராஹமூர்த்தியும் ஆதி மூர்த்தியாகத் திகழ்வது போன்று இங்கு பெருமாள், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து இறங்கி வந்து முதலில் லக்ஷ்மி நாராயணனாகவும் பின்னர் ஸ்ரீநிவாஸராகவும் சேவை சாதிப்பதாக ஐதீகம். ஸ்ரீநிவஸப்பெருமாள் லக்ஷ்மிநாராயணன் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு வரதராஜப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வரதராஜப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை புரசைவாக்கம், சோலையம்மன் தெரு, புரசைவாக்கம், சென்னை 600007.
சென்னை கெல்லீஸ்பேருந்து நிலையத்திற்கு அடுத்து வரும் பேருந்து நிலையம் புரசைவாக்கம் டேங்க் ஆகும். அதன் அருகில் இந்தக் கோயில் உள்ளது. சூளை செல்லும் பேருந்துகள் மற்றும் அயன்புரத்திலிருந்து பாரிமுனை செல்லும் பேருந்துகள் செல்லும். புரசை ஸ்ரீநிவாஸப்பெருமாள் தலக் குறிப்பில் பேருந்து தகவல்கள் உள்ளன.
புரசை பகுதியில் உள்ள இரண்டு பெருமாள் கோயில்களில் இது ஒன்று, மிகவும் பழமை வாய்ந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி நடைபெற்றுள்ளது. ஆழ்வார்களுக்கும் தனிச் சன்னிதி <உள்ளது. உடையவர் மற்றும் திருக்கச்சி நம்பிகளுக்கும் சன்னிதி உள்ளது. புரசைவாக்கத்தில் உள்ள பிரசித்த பெற்ற 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்காதீஸ்வரர் கோயிலிற்கு ஓர் வரலாறு உள்ளது. அதன்படி பகீரதன் சாப விமோசனம் பெற கங்கையினைக் கமண்டலத்தில் இங்கு நிறுவி சிவனை வழிபட்டதால் கங்காதீஸ்வரர் ஆனார். இது சென்னைப் பஞ்ச பூதத் தலங்களில் நீருக்கான தலம். இன்றும் இங்குள்ள கிணற்றில் நீர் வற்றுவதில்லை எனத் தகவல் எங்கும் காணாத அபூர்வ குறுந்தை மரம் இங்கு தென்கிழக்கு மூலையில் உள்ளது. இதன் கீழ் இருந்து கொண்டு மாணிக்க வாசகர் போதனை செய்ததாக வரலாறு. வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு பிரசன்ன வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பிரசன்ன வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை அமைந்தகரை, வெள்ளாளத் தெரு, அமைந்தகரை, சென்னை 600029.
+91 9941229563, 9789023888.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள லக்ஷ்மி திரையரங்கத்திற்கு எதிரில் உள்ள வெள்ளாளத் தெருவில் உள்ளது. இக்கோயில் 15, 15-பி, 15-எச், 15-சி, 15-டி, 27-பி மற்றும் கோயம்பேடிலிருந்து பாரிமுனை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் செல்லும்.
சிவா விஷ்ணு இணைந்து அருகருகே அமைந்தப் பகுதிகளில் இதுவும் ஒன்று. காஞ்சி வரதராஜரைப் போல் அருள் பாலிக்கும் பெருமாள், முற்காலத்தில் கோசை மாநகர் என்று அழைக்கப்பட்ட தற்போதைய கோயம்பேட்டில் உள்ள வைகுண்டவாசப் பெருமாள் கோயில் மற்றும் குறுங்காலீஸ்வரர் கோயில் உள்ள பகுதியில் லவ குசா அஸ்வமேத் குதிரையினைக் கட்டிப்போட, அதைத் தேடி வந்த ராம லக்ஷ்மணர்கள் வந்து அமர்ந்த கரை என்பது அமைந்த கரையானது என ஓர் செவி வழிச் செய்தியும் உள்ளது. பல்லவர் காலத்திருப்பணிக் கோயில். ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீநிவாஸர், ஆஞ்சநேயர் மற்றும் கண்ணாடி அறையில் கோதண்டராமர் சீதா லக்ஷ்மண சமேதராய் அருள் பாலிக்கிறார். தனுர் மாதம் மற்றும் ரத ஸப்தமி உற்சவங்கள் நடைபெறுகின்றன.
பூஜை நேரம்: காலை - மணி முதல் - மணி வரை, மாலை - மணி முதல் - மணி வரை
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை புரசைவாக்கம், 125 வெள்ளாளத் தெரு, புரசைவாக்கம், சென்னை 600084.
+91 44-42601121, 044-26401342, 9444455170.
சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அபிராமி திரையரங்கிலிருந்து செல்லும்போது மதார்ஷா அருகே வலப்புறம் செல்லும் சாலை வெள்ளாளத் தெரு ஆகும். இந்தத் தெருவில் தான் புரசைவாக்கம் பெனிபிட் ஃபண்டு உள்ளது இத்தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தாசப்பிரகாஷ் சிக்னலில் இடப்புறம் திரும்பியும் வெள்ளாளத் தெருவிற்கும் வரலாம். அங்கு ஒன் வே உள்ளதால் சுற்றிக்கொண்டு வரவேண்டும் பேருந்துகள் 7-ஏ, 34, 16-ஏ, 22, 29-டி, 23-சி, 27-கே, 7-எப், 7-எச் 58, 29-ஈ, 159, எம்-59 செல்லும்.
ஸ்ரீமந்நாராயணன் அர்ச்சாவதார ரூபத்தில் ஸ்ரீநிவாஸனாக அருள் புரியும் இக்கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பலாசபுரி என்பது புரசைவாக்கத்தில் செட்டியார் வம்ஸத்தினரால் நிறுவப்பட்டதாகும். இந்தப் பகுதியில் வாழ்ந்த பக்தன் கனவில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் திருவேங்கடவன் தோன்றி இங்கு கோயில் அமைத்து வழிபடச்சொல்லிக் கூறி மறைந்தார். விழித்தெழுந்த பக்தன் அருகில் ஓர் மணி இருந்ததைக் கண்டு தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் கூறினான். பூஜை மணி அருகில் இருந்ததால் திருவேங்கடவனின் மணியின் அவதார அம்சமாகக் கருதப்படும் ஸ்வாமி தேசிகன் இக்கோயில் அமைய திருவுளம் கூட்டியுள்ளார் என அறிந்து நிறுவப்பட்டது, பெருமாள், ஆண்டாள் நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையார், உடையவர், ஸ்வாமி தேசிகன், சுதர்சன ஆழ்வார் உள்ளனர். பொதுவாக யோக நிலையில் 4 கரங்களிலும் சக்ராயுதத்துடன் விளங்கும் நரசிம்மர், சற்று வித்யாசமாக இங்கு 2 கரங்களில் சக்கரமும், 2 கரங்களை யோக நிலையிலுமாக உள்ளார். ஸ்ரீவைகானஸ ஆகமம் மற்றும் வடகலை சம்பிரதாயம் அனுஷ்டிக்கப்படுகிறது, திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாளின் அபிமானத் தலமாக விளங்கும் இத்தலத்திற்கு அஹோபில மட ஜீயர், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள், மைசூர் பரகாலமடம் ஜீயர் சுவாமிகள், காஞ்சிப் பெரியவர் விஜயம் செய்துள்ளனர். 1984, 1995, 2006ல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஸம்ப்ரோக்ஷணம் நடந்துள்ளது. புரசை அரசனாகத் திகழும் பெருமாளுக்கு தாயார் நவராத்ரி உற்சவம், ஸ்வாமி தேசிகன் அவதார உற்சவம், புரட்டாசி சனிக்கிழமை கருடசேவை, தை ஸ்ரவண தீர்த்தவாரி, பிரம்மோற்சவம் 10 நாட்கள், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2 ஸ்வரண நக்ஷத்திரம் சம்பவிக்கும் மாமாங்க உற்சவத்தில் ஸ்வாமி தேசிகனுக்கு பிரதம அவதார உற்சவம் முதல் ஸ்ரவணத்தில் நடைபெறும். தொடர்ந்து சிறந்த கோயில் நிர்வாகத்திற்கான சுழற்கேடயம் பரிசு பெற்ற கோயில். புரட்டாசியில் திருப்பதி செல்ல முடியாதவர் இப்பெருமானை தரிசித்து புண்ணியம் பெறலாம். நினைத்த காரியம் தரிசித்த உடன் முடியும். காஞ்சி பெரியவர் 1967ல் அருள் வாக்கு கூறினார். திருமலை பிரார்த்தனைகளை இங்கே நிறைவேற்றலாம் எனக் கூறி உள்ளார். எல்லா மடாதிபதிகளும் வருகை தந்து ஆசி வழங்கிய தலம், 300 ஆண்டுகள் பழமையானது. சென்னையிலேயே மிகச் சிறப்பான கோயில் என 3 முறைகள் முதல் பரிசு பெற்ற கோயில். ஸ்ரீநிவாஸப்பெருமாள் யோக ஸ்ரீநிவாஸன், அலர்மேல்மங்கை.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11.40 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.45 மணி வரை
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை சிந்தாதரிப்பேட்டை, அக்ஹாரத்தெரு, சிந்தாதரிப்பேட்டை, சென்னை-600002.
+91 44-28452527.
சென்னை சிந்தாதரிப்பேட்டை பகுதி சிம்ஸன் வளாகத்திற்குப் பின்புறம் உள்ளது. தற்போது பறக்கும் இரயில் நிலையமும் உள்ளது. இப்பகுதியில் உள்ள சிந்தாதரிப்பேட்டை மார்க்கெட்டுக்கு அருகே அக்ரஹாரத் தெருவில் உள்ள கோயில். எழும்பூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் செல்லும். விவரம் பார்க்க எழும்பூர் தலம். எழும்பூரிலிருந்து 1கிமீ. சிந்தாதரிப்பேட்டை வந்தவுடன் சிவா விஷ்ணுகோயில் எனக் கேட்டால் தெரியும். எழும்பூர் செல்லும் பேருந்துகள் பற்றிய விவரத்திற்குப் பார்க்க எழும்பூர் தலம்.
7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த கோயில். ஆதிபுரீஸ்வரர் கோயிலோடு இணைந்த ஜோடிக் கோயிலுது. வெங்கடேச கிராமிணி தெருவில் அங்காளம்மன் பார்வதி பரமேஸ்வரர் கோயில். ஐயா முதலித் தெருவில் சுப்பிரமணியசுவாமிகோயிலும், நைனியப்ப நாயக்கன் தெருவில் திருவரங்கப்பெருமாளுடன் திகழும் இந்தக் கோயில்களும், ஆதி பொன்னியம்மன் கோயிலும் உள்ளன. 1600ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியினர் பருத்தி மற்றும் தறி நெசவு வாணிபம் செய்ய வணிபம் செய்ய வணிகர்கள் பலர் அவர்களுக்கு தேவையான மூலப் பொருட்களைத் தந்து வந்தனர். அவர்களில் பிரதானமாக இருந்த சுங்குராமர் என்பவரின் தோட்டம் தற்போது உள்ள பெரியமேட்டிற்குத் தெற்கே அமைந்திருந்தது. அதை தங்களுக்கு ஆர்ஜிதப்படுத்திய ஆங்கிலேயர்கள் 1735ல் சிந்தாதரிப்பேட்டையில் புதிய நெசவுத் தொழில் மையம் அமைத்தனர். அதுவே சின்னதறிப் பேட்டை பின்னர் மருவி சிந்தாதரிப்பேட்டை நன்மதிப்பினை இழந்த சுங்குராமரைத் தொடர்ந்து பதவி வகித்தவரே அவருடன் பணி புரிந்த தம்பு செட்டியாவார். இவர் அங்கே அந்த பெரியமேட் தோட்டத்தில் புதிய நெசவாளர் மையம் அமைக்க அதற்கு ஆள் பலம் சேர்த்தவரே ஆதியப்ப நாராயணர் ஆவர் என்பது வரலாற்றுச் செய்தி. இவர்கள் பெயரிலேயே அப்பகுதியில் தெருக்கள் விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிகேசவப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆதிலக்ஷ்மி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுகமண்டலம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 9 மணி வரை.
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், 11 கேசவப் பெருமாள், சந்நிதி தெரு, மயிலாப்பூர், சென்னை 600004.
+91 44-24953799.
மயிலை கேசவப் பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள சித்ரகுளத்தின் சமீபம் உள்ளது.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வேதாந்த தேசிகர் 730 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆசார்யர். ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலிருந்து இவரது மூர்த்தம் இந்தக் கோயிலில் முதலில் நிறுப்பட்டது. இவர் ஹயக்ரீவர் உபாசகர் ஆவார். எனவே மைசூர் பரகால மடத்தில் இருப்பது போலவே ஹயக்ரீவர் செய்யப்பட்டு இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மயிலை பறக்கும் இரயில் நிலையம் அருகே பரகால மடம் உள்ளது என்பது அறியத்தக்கது. நிகமாந்த தேசிகர் இராமானுஜரின் பாஷ்யம் மற்றும் கீத பாஷ்யம் ஆகியவற்றிக்கு விரிவுரை எழுதியவர். இவர் விசிஷ்ட அத்வைதத்தின் பிதாமகர். மேலும் உடையவர். ஆழ்வார்கள், ஆசார்யர்கள், ஆஞ்சநேயர், ராமர், யோக நரசிம்மர், சுதர்ஸனர் சன்னிதிகளும் உள்ளன. ஸ்ரீநிவாஸர், அலர்மங்கை.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை மயிலாப்பூர், பெருமாள் கோயில் தெரு, இராயப்பேட்டை மருத்துவமனை, எதிரில், இராயப்பேட்டை, சென்னை 6000004.
+91 9486575578.
சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எதிரில் உள்ள வீதியில் உள்ளது. 12, 12-ஜி, 1, 21-ஜி, 21, 29-சி, 29-எம், 38எப், 45-பி, 41, 41-டி, 5-ஈ கோயம்பேடிலிருந்து செல்லும் காவல் நிலையத்திற்கு எதிரே செல்லும் பாதையில் உள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில், யோக நரசிம்மர், சுதர்ஸனர், சத்யநாராயணப் பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், லக்ஷ்மி ஹயக்ரீவர், இதர ஆழ்வார் சன்னிதிகள் உள்ளன. பவுர்ணமியன்று சத்ய நாராயணருக்கு விசேஷ பூஜை உண்டு. மூலவருக்கு வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறியதும், வெண்ணைக் காப்பு சாற்றுவது இந்தத் தலத்தில் மட்டும் தான் ஐதீகம். பரமபத வாசல் எனத் தனியாக இல்லாததால் வைகுண்ட ஏகாதசியன்று பிரகாரத்தை சுற்றி வருவதே அந்தப் பலனைத் தரும்.
கல்வெட்டு அமைந்த தொன்மை வாய்ந்த தொண்டை மண்டலத்துத் தலம். ராஜப்பேட்டை என்பது புராதனப் பெயர். அதுவே மருவி ராயப்பேட்டையானது. ஸ்ரீநிவாஸர் கட்கம் ஏந்தி (கத்தி) ஓர் ராஜாவைப் போல் சேவை சாதிப்பதால் ராஜாப்பேட்டை என்கிற பெயர் இருந்து வந்தது. ஸ்ரவணம், கருடசேவை, ஸுதர்ஷண ஜெயந்தி, அனுமத் ஜெயந்தி, பங்குனி உத்திரம், ஆடிப்பூரம் ஆழ்வார் மற்றும் ஆச்சாரியர்கள் திருநக்ஷத்திரம் விசேஷ நாட்களாக அனுஷ்டிக்கப்படுகின்றன.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு ஸ்ரீரங்கமன்னர் சுவாமி மணவாள மாமுனிகள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீரங்கமன்னர் சுவாமி மணவாள மாமுனிகள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை ஆழ்வார்பேட்டை, 57, பீ மன்ன முதலி 2வது தெரு, மயிலாப்பூர், சென்னை 6000004.
+91 9884121507, 9840987649, 9444786737.
சென்னை மயிலாப்பூரில் உள்ள பீமன்ன முதலித் தெருவில் உள்ளது இக்கோயில். மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் டி.டி.கே சாலை செல்லும் பேருந்துகள் இந்தப் பகுதிக்குச் செல்ல உதவும் ரங்காச்சாரி சாலைக்கும் சி.பி.ராமஸ்வாமி சி.வி.ராமன் சாலைக்கும் இடையே செங்குத்தாக அமைந்துள்ளது. பீ மன்ன முதலி 2வது தெரு ஸ்ரீவில்லிப்புத்தூரைப் போன்று ரங்கமன்னராக சேவை சாதித்தாலும் அங்கு வாளோடு இருப்பதைப் போலல்லாமல் இங்கு சங்கு சக்ர, கதை, அபய ஹஸ்தத்தோடு (ஸ்பன பேரையுடன்) உள்ளார். உபய நாச்சியாருக்குப் பதிலாக ஆண்டாள் மற்றும் மகாலக்ஷ்மியுடன் உள்ளார். வைகுண்ட ஏகாதசி, ஆடிப்பூரம், ஆண்டாள் திருக்கல்யாணம், ஆதிசேஷனின் அம்சமாகவும், ஆதிசேஷனின் அவதாரமாகவும் போற்றப்படும் மணவாள மாமுனிகள் மற்றும் உடையவருக்கு திருநட்சத்திர நாட்களில் 10 நாட்கள் உற்சவம், பங்குனி உத்திரம், நரசிம்ம ஜெயந்தி மற்றும் கார்த்திகை ஸ்வாதியில் ஹோமங்கள், ராமநவமி, தனுர், மாதப் பூஜைகள், அனுமத் ஜெயந்தி ஆகியவை விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி அருள் பாலித்த லக்ஷ்மி நரசிம்மர் கிணற்றில் மீது ஸ்தாபிக்கப்பட்டு வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். இவரது சன்னிதியில் மணி கட்டி 48 நாட்கள் வழிபட்டால் வேண்டியது நிறைவேறும். எங்கும் இல்லாத வண்ணம் மிக அருகில் நின்று நரசிம்மரைச் சேவிக்கலாம். பெருமாளுக்கு ரேவதி நட்சத்திரத்தில் விசேஷ திருவாராதனைகளும் நரசிம்மருக்கு பிரதோஷ நேரத்தில் ஸஹஸ்ரநாம வழிபாடும் நடைபெறுகிறது. சிறிய கோயிலாக இருந்தாலும் அத்தனை அம்சங்களும் நிறைந்து விளங்குவது சிறப்பு.
சுமார் 100 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கோயில். அனைத்து ஆழ்வார்களுக்கும் இங்கே சன்னிதி உள்ளது. இராமானுஜருக்கு ப்ரத்யேக சன்னிதி உள்ளது. ஆதிசேஷனின் அவதாரமாக முதலில் உடையவரும் பின்னர் மணவாள மாமுனிகளும் தோன்றியதால் சித்திரை திருவாதிரையும், ஐப்பசி மூலமுமான இவர்களது திருநக்ஷத்திர நாட்களில் ஒரே மூர்த்தத்திற்கு திருமஞ்சனம் செய்யப்படுவதாகத் தகவல் ஆழ்வார்கள் ஆசார்யர்களின் வழிகாட்டுதல் மூலம் காண்கிறோம். எனவே அத்தகையோர் பெயரில் அமைந்த இந்த ஆழ்வார்பேட்டை ரங்கமன்னார் கோயில் இதைப் பற்றிச் சிந்திக்க ஏற்ற தலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 9 மணி வரை
<< Previous  16  17  18  19  20  21  22  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar