Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை பெருமாள் கோயில்
 
சென்னை பெருமாள் கோயில் (217)
 
அருள்மிகு அனந்தபத்மநாப சுவாமி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு அனந்தபத்மநாப சுவாமி தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை அடையார், அடையாறு காந்திநகர், சென்னை 600020.
+91 44-24412529.
சென்னை கிண்டியிலிருந்து வருபவர்கள் ராஜ் பவனிலிருந்து மத்ய கைலாஷ் சந்திப்பில் கிழக்கே சென்றால் அடையார் பகுதியினை அடையலாம்.
சுமார் 48 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கொண்ட அனந்த பத்மநாபசுவாமி, திருவாட்டாறு, திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி போன்று மிகப் பெரிய உருவம். மூன்று சன்னிதிகள் விரிந்துள்ளார். 1962ல் கட்டப்ட்ட கோயில். அனந்தபத்மநாபசுவாமி சயனைத் திருக்கோலம் கிழக்கு திருமுகமண்டலம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு வேணுகோபாலசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வேணுகோபாலசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை மண்ணடி, லிங்கி செட்டி தெரு, சென்னை 600001.
சென்னை சென்ட்ரல் தாண்டியுடன் உள்ள தென்னிந்திய ரயில்வே அலுவலகத்திற்கு செல்லும் சாலை பூக்கடை காவல் நிலையத்திற்குச் செல்லும். இங்குள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையிலிருந்து பழைய கொத்தவால்சாவடிக்குச் செல்லும் பாதையில் சென்றால் வரும் பகுதி மண்ணடியாகும். இங்குள்ள லிங்க செட்டி தெருவில் உள்ளது கோயில். பேருந்து எண்கள் 18, 1, 20, 57, 15-ஏ, 15-பி, 15-சி மற்றும் பாரிமுனை செல்லும் 8-ஏ, 8, 8-பி, 11-ஏ. 21-சி, 38-எச், 44, 44-சீ, 56-சி, 56-சி 58, 116 செல்லும்.
தெலுகு பேரி வைஷ்ய பஜனை கோயிலாக இருந்தது இது. சுமார் 110 ஆண்டுகள் பழமையானது. பிரார்த்தனை அனுமான் வரப்பிரசாதி. வெண்ணெய் காப்பிட்ட வெண்ணெய் பஸ்மம் செய்யப்பட்டு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி இங்கு 10 நாட்கள் பிரம்மோற்சவமும், ஆண்டாளுக்கு ஆடிப்பூரம், ஆஞ்சநேயருக்கு அனுமத்ஜயந்தியும், பிரதி பவுர்ணமி சத்யநாராயண பூஜையும், ராமநவமியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வேணுகோபாலசுவாமி ருக்மணி சத்யபாமா நின்ற திருக்கோலம் புல்லாங்குழுலுடன் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: -
அருள்மிகு சந்தான வேணுகோபாலசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு சந்தான வேணுகோபாலசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை முத்தியால்பேட், 115, பிடாரியார் கோயில் தெரு, முத்தியால்பேட், சென்னை 600001.
+91 9841112889, 9940504864
முத்தியால்பேட் ரயில் நிலையத்திலிருந்து பவளக்காரத் தெருவைத் தாண்டியதும் உள்ளது முத்தயால்பேட் காவல் நிலையம் அதற்கு அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு அருகாமையில் உள்ளது. இக்கோயில், பாரிமுனை செல்லும் பேருந்துகள் செல்லும். விவரம் மண்ணடி தலக்குறிப்பில் உள்ளது.
300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பக்தர்கள் மூலவர் திருவாய்புறத்திற்கு வெண்ணை சாற்றுவது வழக்கமாக உள்ளது. 2005ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. நித்ய வடை மாலை சாற்றப்படும் ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு ஓர் பையில் காரிய சித்திக்காக தேங்காய் கட்டப்படுகிறது. பலன் கிடைத்ததும் அதை கழற்றி விடுகின்றனர். பூமியில் கிடைத்த பெருமாள் குழந்தை பாக்கியம் கிட்டும். சந்தான வேணுகோபாலசுவாமி ருக்மணி சத்யபாமா கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு வேங்கட நரசிம்மர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வேங்கட நரசிம்மர் தேவஸ்தானம் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை 600015.
+91 9381163501.
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ளது. சைதாப்பேட்டை பேருந்துகள் மற்றும் மேற்கு மாம்பலத்தில் இருந்து வெஸ்ட் சைதாப்பேட்டை வரும் பேருந்துகளில் செல்லலாம் 100 அடி ரோடிலிருந்து வருபவர்கள் மேட்டுப்பாளையம், கோடம்பாக்கம் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.
சைதாப்பேட்டை என்பது சைபர்கான்பேட்டை என்கிற சொல்லின் திரிபேயாகும். ரகுநாதபுரம் என்கிற புரதானப் பெயர் கொண்ட இந்தப் பகுதியில் ராமர் பிரதானக் கோயிலில் எழுந்தருளியிருந்தாகவும் பிற்காலத்தில் இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் தகவல். பழமை வாய்ந்த காரணீஸ்வரர் கோயில் 400 ஆண்டுகள் நிரம்பிய சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்த இந்தப் பகுதியில் உள்ள இக்கோயில் 12ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு மன்னர்களால் கட்டப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆண்டுக்கு ஒரு முறை எழுந்தருளுகிறார். இதற்கான காரணமாக அங்கு சேவை சாதித்த தெள்ளிய நரசிம்மர் இத்தலத்திற்கு எழுந்தருள பிரசன்ன வெங்கடேசர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் ஆதலால் இவருக்கு வேங்கட நரசிம்மர் என்கிற நாமகரணம் என்றும் கூறப்படுகிறது. முன்னர் குறிப்பிட்ட இராமர் இப்போது இக்கோயிலிலேயே ஓர் சன்னிதியில் விளங்குகிறார். பிரம்மோற்சவம் சித்திரை ஹஸ்தத்தில் துவங்கி 10 நாட்கள் நடைபெறும். ஆஞ்சநேயர் சன்னிதியும் அமைந்த இக்கோயிலில் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. வேங்கட நரசிம்மர், பிரசன்ன வேங்கட நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவி, நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுகமண்டலம்.
பூஜை நேரம்: காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8.45 மணி வரை
அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை பெரியமேட், ரிப்பன் பில்டிங் பின்புறம், சென்னை 600003.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எவரஸ்ட் ஹோட்டல் தாண்டியவுடன் குதிரைகள் லாயம் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள பூங்கா ரயில் நிலையத்தின் சிக்னலுக்கு நேர் எதிரே உள்ளது ரிப்பன் மாளிகை இதற்கு மிகச் சமீபத்தில் இக்கோயில் உள்ளது.
இங்கு திருமலைப் பெருமாள் சாமுத்ரிகா லக்ஷணத்தோடு பிரசன்ன வெங்கடேசர் விளங்குகிறார் கிருஷ்ணச் க்ஷேத்திரம் என்பது புரதானப் பெயர். பொதுவாக கார்த்திகை சோமவாரம் சிவனுக்கு உகந்த வழிபாடு தினமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இக்கோயிலின் அமைந்துள்ள தல விருக்ஷமான நெல்லி மரத்தில் கிருஷ்ணர் விளங்குவதாகவும் அவருக்கு இந்த நாளில் நெல்லிக்காயில் விளக்கேற்றி வணங்கப்படுகிறது. திருமலை தீர்த்த வாரியின் போது இங்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. பிரசன்ன வெங்கடேச பெருமாள் அலர்மேல் மங்கை நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை கோட்டூர்புரம், கோட்டூர், அடையார் (சி.எஸ்.ஆர்.ஐ.பின்புறம்) சென்னை 600085.
+91 9381007641.
சென்னை சி.எல்.ஆர். ஐ(சென்ட்ர்ல் லெதர் இன்ஸ்டிடியூட்) வளாகத்திற்கு பின் பக்கம் அமைந்துள்ளது. அடையாறு, திருவொன்மியூர், ஐ.ஐ.டி. தரமணி செல்லும் பேருந்துகள் கோட்டூர்புரம் செல்லும், சைதாப்பேட்டையிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன.
சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலம் சேரர் காலத் திருப்பணிக் கோயில், கேட்டூர் என்கிற பெயரில் மன்னார்குடி வட்டத்தில் ஞான சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது. இருப்பினும் மருந்தீஸ்வரர் கோயில் கல்வெட்டில் இந்தப் பகுதியினை சோழ மண்டலத்துப் புலியூர் கோட்டத்துக் கோட்டூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல், கோடு என்கிற வார்த்தைக்கு யானையின் தந்தம், விலங்குகளின் கொம்பு என்பது உட்பட 27 பொருள்கள் உண்டென அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தசாவதாரத்தில் வராக அவதாரத்தில் பூமியினைத் தன் கொம்புகளால் தாங்கிக் காத்த புராணத்தகவலோடு இத்தலம் இந்தப் பொருளால் வர்ணிக்கப்படுகிறது. பூமியினைக் கோட்டு இடை (கொம்புகளின் இடையில்) கொண்ட ஊர் கோட்டூர் ஆனது. ராமநவமி. கிருஷ்ணஜயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, சித்ரா பவுர்ணமி, மாத ஸ்வரணம் முக்கிய நாட்களாக விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. ஏகாதசி, அமாவாசை, பவுர்ணமியும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு வேணுகோபாலசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வேணுகோபாலசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை பவளக்காரத் தெரு, 117 பவளக்காரத் தெரு, சென்னை 600001.
+91 9841324988, 9940059564
சென்னை கடற்கரை ரயில்நிலையம் தாம்பரத்திற்குச் செல்லும் புறநகர் ரயில்கள் புறப்படும் இடமாகும். இங்கிருந்து மேற்கே இத்தலம் உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து வருபவர்கள் வடக்கே செல்ல வேண்டும். இவ்விடத்திலிருந்து சுமார் 10 நிமிட நடை தூரத்தில் இக்கோயில் 8-ஏ, 8, 8-பி, 11-ஏ, 21-சி, 38-எச். 44, 44-சீ, 56-சி, 58, 116 பேருந்துகள் செல்லும் காளத்தீஸ்வரர் கோயிலும் அருகில் உள்ளது. இது நான்காவது இடப்புறம் பிரியும் சாலை.
சென்னை நகரத்தில் பல நூற்றாண்டுகளைக் (700) கடந்து இருக்கக் கூடிய ஒரே கிருஷ்ணன் கோயில் இது. ஸ்ரீநிவாஸப் பெருமாள் மற்றும் ராமர் சன்னிதிகளும் உள்ளன. திருமழிசை ஆழ்வார் இங்கு பல ஆண்டுகள் தங்கியிருந்து மங்களாசாஸனம் செய்ததாகத் தகவல். திருமழிசை க்ஷேத்திரத்து உற்சவம் திருமழிசை பிரான் இத்தலத்தில் பல ஆண்டுகள் வைத்துப் பாதுகாக்கப்பட்டதாகவும் தகவல். இதன் காரணமாக இன்றும் இங்கு திருமழிசை பிரான் வாழித்திருநாமம் சாற்று முறையின் போது பாடப்படுகிறது. சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம். ஆடிப்பூரம் மற்றும் ஆடி வெள்ளி, கோகுலாஷ்டமி, புரட்டாசி வைபவம் என எண்ணற்ற உற்சவங்கள் நடைபெறுகின்றன. வேணுகோபாலசுவாமி ருக்மணி சத்யபாமா நின்ற திருக்கோலம் புல்லாங்குழலுடன் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு நடாதூர் அம்மாள், ஆஞ்சநேயர் வரதராஜப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு நடாதூர் அம்மாள், ஆஞ்சநேயர் வரதராஜப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை பிராட்வே, 227 பிராட்வே சாலை, பிராட்வே, சென்னை 600001.
+91 9940029541
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரசு பொது மருத்துவமனையை அடுத்து வரும் இடப்புறச்சாலை பிராட்வேக்குச் செல்கிறது. இந்த சாலையே இராஜாஜி சாலையாக, பர்மா பஜார், உயர் நீதி மன்றப் பகுதிக்குச் செல்கிறது. பேருந்துகள் 15-பி, 50, எம்50, 150, 53, 153, 101, 53-ஈ ஆகியன செல்லும்.
நிகமாந்த தேசிகர் ஒரு சமயம் நடாதூர் அம்மாள் அவர்களின் உபன்யாசம் கேட்டுக்கொண்டிருந்த போது, மூன்று வயதே நிரம்பிய அவர் ஓர் ஸ்லோகத்தின் வரியை அடி எடுத்துக்கொடுத்தார். நடாதூர் அம்மாள் என்பவர் நிகமாந்த தேசிகர் என்னும் வேதாந்த தேசிகருக்கும் முற்பட்ட காலத்தவர். இவர் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு எவ்வாறு திருக்கச்சி நம்பிகள் போன்றோர் நித்ய கைங்கர்யம் செய்து வந்தனரோ அவ்வாறே நித்யம் காய்ச்சிய பசும்பாலில் குங்குமப் பூவும் பச்சைக் கற்பூரமும் சேர்த்து இரவில் அர்த்த ஜாமத்திற்கு தரும் கைங்கர்யம் செய்து வந்தார். அவ்வாறு இருக்கையில் அடியார் ஒருவர் அந்தப் பாலைச் சுடச்சுட நைவேத்யம் செய்த போது, அதை வாங்கி பெருமாளுக்கு நாக்குச் சுடும் எனவே அதனை ஆற வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும் எனக் கூறினார். பெருமாளும் அன்றிரவு இவர் கனவில் தோன்றி என்னை தாயைப் போல் முன் நின்று பரிவு காட்டிமையால் காஞ்சிக்கு அருகாமையில் உள்ள அவரது ஊர்ப்பெயரையும் சேர்த்து நீர் நடாதூர் அம்மாள் என்றே வழங்கப்படுவாய் எனப் பெயரும் சூட்டினார். நடாதூர் அம்மாள் திருமலை யாத்திரை சென்ற போது பசியால் வாடிய போது பிரம்மச்சாரி சிறுவன் வடிவில் பெருமாள் தயிர் சாதம் வழங்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட மகானின் மூலவர் அமைந்துள்ள தலமிது. சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மகா மண்டபம், நடாதூர் அம்மாள் சன்னிதி மற்றும் இராஜகோபுர, திருமடப்பள்ளி திருப்பணிகளும் நடைபெற உள்ளன. விசேஷமாக திருக்கல்யாண உற்சவம், மற்றும் ஆஞ்சநேயர் திருமஞ்சனம். பிரத்யகே திருக்கல்யாண உற்சவம் என்கிற பல வைபவங்கள் மூலம் இத்திருக்கோயிலின் இந்தப் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன. அனைவரும் மனமுவந்து கைங்கர்யம் செய்ய வேண்டும். பிரதி இரண்டாவது ஞாயிற்றுகிழமை கல்யாண உற்சவம் உண்டு. பங்குனி உற்சமும் சிறப்பாக நடைபெறுகிறது. வரதராஜப் பெருமாள் நடாதூர் அம்மாள், ஆஞ்சநேயர் ஸ்ரீதேவி பூதேவி. நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை - மணி முதல் - மணி வரை (ஒரு கால பூஜை. தகவல் தெரிவித்து சேவிக்கலாம்.
அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை நெற்குன்றம், 42 கருணீகர் தெரு, நெற்குன்றம் சென்னை 600107.
+91 44-64624760, 9962559123.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு மேட்டுக்குப்பம், இரயில் நகர் பேருந்து நிலையத்திற்கு அடுத்து வருவது நெற்குணம் நிறுத்தம். இதற்கு அருகில் உள்ளது இத்தலம். தயாசதன் விடுதி நிறுத்தத்தில் இறங்கி உள்ளே சென்றால் இடப்புறம் செல்லும் இரண்டாவது பிரிவில் லாரி ஷெட்டிற்குப் பின்புறம் உள்ளது.
கஜேந்திர மோக்ஷப் புராணத்தோடு சம்பந்தப்பட்ட கோயில் கரி என்றால் யானை என்கிற பொருளில் யானைக்கு அடைக்கலம் தந்தப் பெருமாள் இந்த கரி வரதராஜப்பெருமாள் என்று ஓர் தகவல் கூறப்படுகிறது. ஐந்தறிவுள்ள ஜீவ ராசிகளான யானை மற்றும் முதலைக்கு மோக்ஷம் தந்த இப்பெருமான் மனிதப் பிறவிக்குத் தாமஸ் போவாரா-இந்தக் கோயில் 400 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயில் பெருமானை வணங்க அவர் நமக்குநேத்ர தரிசனம் வழங்குகிறார். அதாவது பெருமாளுக்கு மின்சார விளக்குகளை அணைத்து தீபாராதனைக் காட்ட பெருமாளின் கண்கள் இரண்டும் திறந்து கண்ணின் மணிகள் உருளுவது போன்று அமைந்திருக்கிறது. பெருமாளுக்கு முக மலர்ச்சியும் ஏற்படுகிறது. இப்படி கருணைக் கண்ணோடு நிதர்சனமாக ப்ரத்யக்ஷ அருள் பாலிப்பவனாக இவர் விளங்குகிறார். ஏகாதசி, ஹஸ்தம் திருமஞ்சனம் நடைபெறுகிறது. சந்தான கிருஷ்ணன் வெண்ணையுடன் விளங்கியப் புத்திரப் பேறு நல்குகிறார். பெருமாள் பெயரில் கடிதங்கள் அனுப்பப்பட்டால் கோரிக்கைகள் பெருமாள் முன் வைத்துப் படிக்கப்பட்டு, பாதத்தில் வைத்து வழிபட, காரிய சித்தியும் கிடைப்பதாகத் தகவல், வரதராஜ ஆஞ்சநேயர் திருமண தோஷ நிவர்த்தித் தருகிறார். ஜாதகம் வைத்து இவரை வழிபட 48 நாட்களில் திருமணப் பாக்கியம் கிட்டிய பக்தர்கள் உண்டு. கரிவரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு வைகுந்தவாசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வைகுந்தவசாப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை நொளம்பூர், நொளம்பூர், சென்னை 600077.
+91 9283119460
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பேலஸ் கல்யாண மண்டபத்திற்குத் திரும்பும் பாதை அம்பத்தூருக்குச் செல்கிறது. இந்தப்பாதையிலேயே நொளம்பூர் செல்லலாம். அண்ணாநகரிலிருந்து வரும் போது முகப்பேர் தாண்டி வாவின் நிறுத்தத்தில் இடப்புறம் திரும்பினால் ஜெ.ஜெ.நகர் பேருந்து நியைத்திலிருந்து இடப்புறம் செல்லும் சாலை டி.ஏ.பி.சி. மற்றும் அக்ஷயாஹோம்ஸ் பகுதிக்குச் செல்லும் இந்தப்பாதையிலும் நொளம்பூர் அடையலாம். இந்த சாலையில் பிரியா கல்யாண மண்டபம் மற்றும் குட்வில் மருத்துவமனை பகுதியில் இந்தக் கோயில் உள்ளது.
சத்ய ஸ்ரதச் க்ஷேத்திரமான காஞ்சியிலிருந்து பாயும் க்ஷீ ர நதி என்னும் பாலாற்றில் நீராடி வணங்கியபோது அத்திரி மகரிஷிக்கும் மார்கண்டேயருக்கும் இப்பெருமாள் பிரத்யக்ஷம் ஆனார். தொன்மை வாய்ந்த இத்தலம் மார்கண்டேயபுரி என முற்காலத்தில் அழைக்கப்பட்டது. 7 அடி ஆஜானுபாஹுவாக சேவை சாதிக்கும் மரகதக் கல்லாலான இவரை இந்த மகரிஷிகள் வணங்குவதாக அமைந்துள்ளது பிரதிஷ்டை மோக்ஷ கைவல்யம் தரும் பெருமாள். வாசலில் வலப்புறம் காரிய சித்தி யந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர் கோயிலில் உள்ளது போலவே வலப்புறம் நின்று பெருமானை சேவித்தால் ஸ்ரீதேவியுடனும், இடப்புறம் நின்று சேவித்தால் பூதேவியுடனும் காட்சி தருகிறார். ஒன்பது சனிக்கிழமை தொடர்ந்து சேவிப்பவர்களுக்கு காரிய சித்தி கிட்டும் மரகதம் சார்ந்து வரும் தீர்த்தம் சர்வ வியாதியிலிருந்து நிவாரணம் தரும் என ஐதீகம். வைகுந்தவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுகமண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை
<< Previous  17  18  19  20  21  22  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar