Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை பெருமாள் கோயில்
 
சென்னை பெருமாள் கோயில் (217)
 
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தையப்பத் தெரு, ஸ்டான்லி மருத்துவமனை அருகில், சென்னை 600001.
+91 9710521874, 9841412602.
தையப்ப தெரு பிடாரி கோயில் தெருவிலிருந்து சற்று தொலைவு சென்றால் ஸ்டான்லி மருத்துவமனை வரும். அதன் அருகே இந்தக் கோயில் உள்ளது. ஆச்சாரப்பன் தெரு வழியாகவும் இந்தக் கோயிலுக்கு வரலாம்.
அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகளுக்குக் பெருமாள் காட்சி கொடுத்த தலம். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு சுமைதாங்கி இராமர் கோயில் தல வரலாற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. மாதாந்திர சுதர்ஸன ஹோமம் நடைபெறுகிறது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பூமியில் கிடைத்த பெருமாள், ஆதி வராகர், கோதண்டராமர், சீதா, நரசிம்மர், அனுமன் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் ன்னிதிகள் உள்ளன. வைகானஸ ஆகமம். சந்தான கிருஷ்ணனை மடியில் வைத்துக் கொள்ள புத்திர பாக்கியம் கிட்டும். பிரசன்ன வெங்கடேசர் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு சென்ன கேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு சென்ன கேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், 84 தேவராஜ முதலித் தெரு, சென்னை 600003.
+91 44-25353793. 044-25353793.
சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள என்.எல்.சி. போஸ் ரோடில் பிரியும் தெரு தேவராஜ முதலித் தெரு ஆகும். கண்ணாடி வியபாரத் தெரு இது. பாரிமுனை செல்லும் பேருந்துகள் 18,20,6- டி, 57-எஃப், 7,15, 15-பி, 15-டி, 15-எம் செல்லும்.
சென்ன மல்லீஸ்வரர் மற்றும் சென்ன கேசவப் பெருமாள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்த கோயில் இந்தக் கோயில் ஆங்கிலேயர் வருகைக்கு முன் பிரபலமாயிருந்த 3 கோயில்களுள் ஒன்று. முன்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் இருந்த இந்தக் கோயில் ஆங்கிலேயர் காலத்தில் ஆயுதக்கிடங்கிற்காக அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் மக்கள் கூக்குரல் இட தேவராஜ முதலி தெருவில் மீண்டும் நிறுவப்பட்டது. திருநீர்மலை பெருமாள் கோயிலின் விக்கிரகங்கள் தவறுதலாக இங்குள்ள விக்கிரகங்களுடன் கலந்து பின் இங்கேயே தங்கி விட்டன. நல்ல மல்லியின் மணம் திகழ்வதால் மல்லீஸ்வரர் என்கிற பெயர் ஏற்பட்டதாகத் தகவல். சென்ன கேசவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9.30 மணி வரை
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யாங்கரசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யாங்கரசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை ஆச்சாரப்பன் தெரு, 89, ஆச்சாரப்பன் தெரு, கொத்தவால் சாவடி, சென்னை 600001.
+91 9445208364.
சென்னை பூக்கடை காவல் நிலையத்திலிருந்து கொத்தவால் சாவடிக்குப் போகும் வழியில் இத்தெரு உள்ளது. கிடங்குத் தெரு வழியாக வந்தால் இக்கோயிலை அடையலாம். மண்ணடியிலிருந்தும், பூக்கடை காவல் நிலையத்திலிருந்தும் வரலாம்.
மேற்கு மாம்பலத்தில் உள்ளது போலவே இதுவும் உடையவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இங்கு விசேஷமாக தூணில் எழுந்தருளியிருக்கும் ஹிரண்ய வத நரசிம்மருக்கு லக்ஷ்மி நரசிம்ஹர் உற்சவரும் உண்டு. சஞ்சீவி ஆஞ்சநேயர் தெற்கு பார்த்து உள்ளார். பழைய உடையவர் கோயில். ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யாங்கரசுவாமி நின்ற திருக்கோலம் மேற்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு திருவூரகத்தான் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு திருவூரகத்தான் தேவஸ்தானம் திருக்கோயில், குன்றத்தூர், சென்னை 600069.
+91 44-24780436, 9840158781.
சென்னை ஆற்காட் ரோடிலிருந்து போரூர் ஜங்ஷனில் மேற்கே செல்லும் சாலை குன்றத்தூருக்குச் செல்லும். அதே போல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள குமணஞ்சாவடி வழியாக மாங்காடு மார்க்கமாகவும் குன்றத்தூரை அடையலாம். குன்றத்தூரில் சேக்கிழார் கோயில், முருகன் கோயில், வடதிருநாகேஸ்வரம் சிவன் கோயில் (ராகு தலம்) மற்றும் இக்கோயிலும் உள்ளன. இந்தக் கோயில் குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் வழியிலேயே உள்ளது.
பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் பிறந்த ஊர். அவரது குடும்பத்தில் வந்த புலவர் பக்தவத்சலம் இப்பெருமானின் திருவந்தாதிப் பாடி மழை பெய்தது என்கிற வரலாறு கொண்ட கோயில், இரண்டாம் ராஜேந்திரன். (1256 கிபி), பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் மற்றும் தெலுங்கு சோழ மன்னன் விஜய கண்ட கோபாலன் காலத்திலிருந்து அமைந்த திருத்தலம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. ராயர் கோபுரம் என்கிற பெயரிலேயே கோயில் கோபுரம் அறியப்படுகிறது. மகாபலிபுரம் திவ்ய தேசத்துப் பெருமாளின் அமைப்பு கொண்ட மூலவர். திருவூரகத்தான் திருவருந்த வல்லி, மேற்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு வரதராஜ மணவாள மகாமுனித் தேவஸ்தானம் திருக்கோயில்,
அருள்மிகு வரதராஜ மணவாள மகாமுனித் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை பழயை கொத்தவால் சாவடி, 38, வரதா முத்தப்பன் தெரு, கொத்தவால் சாவடி, சென்னை 600001.
+91 44-25245605, 9445355431, 9445208364.
சென்னை சென்ட்ரல் தாண்டியவுடன் வரும் பூக்கடை காவல் நிலையத்திலிருந்து கொத்தவால் சாவடிக்குச் செல்லும் பாதையில் உள்ள வரதா முத்தப்பன் தெருவில் கோயில். இது அண்ணாபிள்ளைத் தெருவிற்கு சமீபத்தில் உள்ளது. ஆச்சாரப்பன் தெருவிற்கு பின்புறம் உள்ளது. கிடங்குத் தெரு வழியாகவும் வரலாம்.
தென்கலை சம்பிரதாயத்தில் வைணவ சமய ஆச்சார்யர்களில் இறுதியாக விளங்கிய மணவாள மாமுனிகள் (கிபி 1370-1403) பெயரில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆழ்வார் திருநகரியில் தோன்றிய இவர் இராமானுஜர் மீது யதிராசவிம்சதி இயற்றிவர். தத்வத்ரயம், இரஹசியத்ரயம், வசன பூஷணம், ஆசாரிய ஹ்ருதயம், ஞானசாகரம், ப்ரமேய சாரம், பெரியாழ்வார் திருமொழி, இராமானுஜ நூற்றந்தாதி ஆகிய எட்டு நூல்களுக்கு உரை எழுதியவர். திருவரங்கத்தில் 22 ஆண்டுகள் வைணவத்தைப் பரப்பியவர். இவரை ஆசாரியாகக் கொண்டு உய்ந்தவர்கள் அஷ்ட திக்கஜங்கள் என்னும் 1 வானமாமலை ஜீயர், 2 பட்டர்பிரான் ஜீயர், 3 திருவேங்கடஜீயர், 4 கோயில் அண்ணன் 5பிரதிவாதி பயங்கரம் 6 அண்ணன் எறும்பியப்பா 7 அப்பிள்ளை மற்றும் 8 அப்பிள்ளார் ஆவர். ராமானுஜரால் வாராய் என் செல்லப்பிள்ளாய் என்றழைக்கப்பட்டதால் மேல்கோட்டையில் அமைந்து போலவே இங்கும் செல்லப் பிள்øளாய் என்றழைக்கப்பட்டதால் மேல்கோட்டையில் அமைந்தது போலவே இங்கும் செல்லப் பிள்ளை சன்னிதியில் வைரமுடி சேவை நடைபெறுகிறது. பெண்களுக்கு மக்கட்பேறு மற்றும் திருமணபாக்கியம், தாயார் பெருந்தேவிக்கு 6 வாரம் அர்ச்சனை செய்தால் கிட்டும், மேலும் அரங்கநாதர் தொடங்கி வைணவத்தால் போற்றப்படும் அனைத்துச் சன்னிதிகளும் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது. வைகாசி பிரம்மோற்சவம், உடையவர் உற்சவம், மாசி மகம், பங்குனி உற்சவம், மணவாளர் அவதார உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீநிவாஸர் உற்சவம் என விழாக்கோலம் பூண்ட திருக்கோயிலாக விளங்குவது குறிப்பிடத்தக்கது 1976 மற்றும் 1996 சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றுள்ளது. இது புதிய உடையவர் கோயில். வரதராஜப் பெருமாள் பெருந்தேவி மணவாள மாமுனிவர் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு பைராகி மடம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பைராகி மடம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், ஜெனரல் முத்தையா தெரு, பைராகி மடம், சென்னை 600079.
+91 44-25382142.
சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள என்.எஸ்.சி போஸ் ரோடின் வலப்புறம் திரும்பினால் இந்த கோயில் உள்ளது. பிடாரி கோயிலில் இருந்து வருபவர்கள் தையப்ப முதலித் தெரு தாண்டி ஆச்சாரப்பன் தெருவைக் கடந்தால் இத்தெரு இடப்புறம் பிரியும். நேராகச் சென்றால் யானை கவுனி ரங்கநாதர் கோயிலுக்குச் செல்லலாம்.
பைராகி என்கிற வடநாட்டு அன்பரால் கட்டப்பட்ட சுமார் 465 ஆண்டுகள் பழமை மிக்கத் திருக்கோயில், திருவேங்கடம், மதுரா, அயோத்தி, திருவரங்கம், அஹோபிலம், திருவிடந்தை, சோளிங்கூர் என்கிற திவ்ய தேசத்தில் விளங்கும் அனைத்துப் பெருமாள்களும் ஒருசேர ஒரே தலத்தில் அமைந்துள்ளது மிகச் சிறப்பான விஷயம். மும்பாய் நகரில் உள்ள ஃபனஸ்வாடி வெங்கடேசப் பெருமாள் கோயிலும் இக்கோயிலின் அமைப்பே கொண்டது. வரதராஜர், வராஹர், ஆண்டாள், கிருஷ்ணர், ரங்கநாதர், லக்ஷ்மிநரசிம்மர் என யாவரும் அருள் பாலிக்கும் தலம். மேலும் வைணவத்து ஆசார்யர்கள் மற்றும் ஆழ்வார்களுக்கும் சன்னிதிகள் உள்ளன. தாயார் உற்சவர் சிலையில் மூக்குத்தி போடும் அளவுக்கு சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல். புரட்டாசியில் 10 பிரம்மோற்சவம் திருப்பதியில் நிகழும் அதே சமயத்தில் நடைபெறுகிறது. பைராகி மடம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு வரதராஜப் பெருமாள் மற்றும் திருகச்சி நம்பிகள்தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் மற்றும் திருகச்சி நம்பிகள் தேவஸ்தானம் திருக்கோயில், பூவிருந்தவல்லி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பூந்தமல்லி, சென்னை 600056.
+91 44-26272066.
சென்னை கோயம்பேடிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றால் 16 கிமீல் பூந்தமல்லி. நகரின் மையப்பகுதியில் உள்ள கோயில். தாம்பரத்திலிருந்து வருபவர்கள் மதுரவாயில் பைபாஸில் வர வேண்டும். இங்கிருந்து 9 கி.மீ. பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள துர்க்கா பவன் ஹோட்டலுக்கு அருகே பிரியும் தெருவில் கோயில்.
காஞ்சி வரதராஜனின் சன்னிதியில் நின்ற போது தனக்கு வேர்ப்பதைக் கண்டு ஆண்டாண்டு காலமாக இச்சன்னிதியின் புழுக்கத்தில் பகவான் அவதிப்படுகிறாரே என எண்ணி விசிறியதைப் பார்த்து ஆலவட்டில் (விசிறி) சமர்ப்பிக்கும் பணியைச் செய்ய திருக்கச்சி நம்பிகளுக்கு அனுமதியளித்தார் பெருமாள். காஞ்சி வரதரிடம் தன் கேள்விகளுக்கு பதில் பெற இராமானுஜர் வைத்த நம்பிக்கைத் தொண்டர் திருக்கச்சி நம்பிகள். பூவிருந்தவல்லி இவரது அவதாரத் தலம். கஜேந்திரவரதன், காஞ்சி பூரணர் என அழைக்கப்பட்ட வைசியராண இவர் தொண்டுக்குக் கிடைத்த பெயர் திருக்கச்சி நம்பிகள். குலத்தால் உயர்ந்தவர் இராமானுஜர் என்ற போதிலும், அவர் நான் தோளில் பூணூலைத்தான் சுமக்கிறேன் நீங்கள் நெஞ்சில் வரதரைத் தாங்குகிறீர்கள் என நம்பிகளிடம் கூறி தன்னை சிஷ்யனாக ஏற்க காலில் விழுகிறார். இராமானுஜரின் குரு யாதவப் பிரகாசருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது அவரைக் கொல்ல திட்டமிடப்பட்டது. காஞ்சிக்கு தப்பித்து வந்து சேர்ந்த இராமானுஜர், வரதராஜப் பெருமாளிடம் 6 கேள்விகளுக்கு பதில் பெற்றுத்தர திருக்கச்சி நம்பிகளைக் கேட்டுக்கொண்டார். அவை 1 பரம்பொருள்யார், 2 உண்மைத் தத்துவம் எது, 3 பரமனை அடையும் உபாயம் யாது. 4 இறக்கும் போது இறைவன் நினைவு அவசியமா, 5 மோக்ஷம் எப்போது கிட்டும் மற்றும் 6 தான் யாரை குருவாக ஏற்பது என்பன. அதற்கு 1 தானே பரம்பொருள், 2 எதுவும் மாயை இல்லை எல்லாமே உண்மை எனவும் 3 இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் உள்ள வேறுபாடே தத்துவம் எனவும், 4 அந்திம காலத்தில் இறைவனை நினைக்கத் தேவையில்லை-நவ்வயதில் நினைத்தாலே போதும், 5 சரணாகதி தத்துவத்தை பின்பற்றுவர்ருக்கு ஆத்மா உயிரை விடும்போது மோக்ஷம் எனவும் 6 பெரிய நம்பிகளே அவருக்கு குருவெனவும் ஆறு விளக்கங்களைப் பெற்றுத் தந்தார். மாசி மிருகஷீர்ஷம் இவரது நட்சத்திரம் (பிப்ரவி 2010 ஆயிரமாவது ஆண்டு பூர்த்தியானது.) வரதராஜப்பெருமாள் மற்றும் திருகச்சி நம்பிகள் ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீநிவாஸர் நின்ற திருக்கோலம் மேற்கு திருமுகமண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு பச்சை வாரணப் பெருமாள் (அமிர்தவல்லி சமேத ஹரிதவாரணப் பெருமாள்) முதலியாண்டான் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பச்சை வாரணப் பெருமாள் (அமிர்தவல்லி சமேத ஹரிதவாரணப் பெருமாள்) முதலியாண்டான் தேவஸ்தானம் திருக்கோயில், நசரத்பேட்டை, சென்னை 600123.
+91 9444558608
பூவிருந்தவல்லியிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. பூவிருந்தவல்லி சாலையில் வலப்புறம் செல்லும் சாலையில் வலப்புறம் சாலையில் பனி மலர் பொறியியல் கல்லூரி தாண்டியதும் எதிர்ப்பக்கத்தில் உள்ள பகுதி நசரத்பேட்டை இந்தப் பகுதிக்கு அகரமேல் கிராமம் என்று பெயர். பேட்டை என்றும் கூறப்படுகிறது. பட்டர் வீடு எதிரில் உள்ளது. 53-கே. மேப்பூர் பேருந்து எம்.எம்.டி.ஏவிலிருந்தும், சைதாப்பேட்டை மேட்டூர் பேருந்து 54-ஈ அகரமேல் வரையிலும், மந்தவெளியிலிருந்து 54-எஃப் அகரமேல் வரையிலும் செல்கின்றன.
யபதியாய், அவாப்த ஸமஸ்த காமனாய், நித்ய முக்தானுபாவனாய் பச்சைவாரணப் பெருமாள் சேவை சாதிக்கும் தலம் அகரமேல். புருஷமங்கலம் என்கிற புராணப் பெயர் கொண்ட தலம். இராமானுஜரின் முதல் சீடர் ஆசார்யர் முதலியாண்டான் அவதாரத் தலம். அனந்தநாராயண தீக்ஷிதர் மற்றும் நாச்சியாரம்மன் தம்பதியருக்கு திருப்பதி பாத யாத்திரைக்குப்பின் திருநின்றவூர் பெருமாளை குழந்தை வேண்டி திரிசித்தபோது அருகிருந்த ராமர் கோவிலில் தங்கிய போது ராமனே இவர்களுக்கு குழந்தையாகப் பிறப்பான் என்று கனவில் கூறினார். தாசரதி என்கிற பெயர் கொண்ட இவர் ராமரின் அம்சமாகக் கருதப்படுகிறார். உடையவரின் விருப்பப்படி இவர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மணியக்காரக் கைங்கர்யம் செய்தவர். இராமனுஜருக்குக் கீழ் தன் சிரக என்று இருந்த சீடர். உடையவரின் பாதுகையாகவும், த்ரிதண்டமாகவும் விளங்கியவர். சன்னியாசம் மேற்கொள்ளும் போது உடையவர். தனக்கு இஷ்டமானவைகளைத் துறக்கும் போது, முதலியாண்டான் நீங்கலாகத் தர்ப்பணம் விடுவதாகச் சங்கல்பம் செய்ததிலிருந்து முதலியாண்டான் மீது அவருக்கிருந்த அபரிமிதமான பற்று தெரிகிறது. இராமானுஜர் தோற்றுவித்த 74 சிம்மாசனத்தில் முதன்மையாகக் கருதப்படுவர். இவருக்கு சித்திரையில் 10 நாட்கள் உற்சவம். புனர்கவில் சாற்று முறை நடைபெறுகிறது. தாயார் சன்னிதியில் உள்ள பீடத்தில் பசு நெற்றியில் சர்க்கரைத் கோலமிட்டு 6 வாரங்கள் வணங்கினால் வம்ச விருத்தி கிட்டும். ஆண்டாள் திருமண பாக்கியம் தருபவர். தர்மபுஷ்கரணி மற்றும் பலா தல விருக்ஷமாகக் கொண்ட தலம். முதலியாண்டாரை வணங்க நீண்ட ஆயுள் அமையும் என்று ஐதீகம். பெருமாள் திருவடி தெற்கு பார்த்து இருப்பதால் விசேஷம் 1000 ஆண்டுகள் பழமையானது. வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் (சொர்க்க வாசல்) சேவை பிரதி வருடம் நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தோடு கூடிய 10 நாட்கள் பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம், நவராத்திரி, ஆடிப்பூரம், ராமநவமி விசேஷ உற்சவங்கள் நடைபெறுகின்றன. பச்சைவாரணப்பெருமாள் (ஹரிதவாரணப் பெருமாள்) அமிர்தவல்லி, முதலியாண்டான் ஸ்ரீதேவி பூதேவி ருக்மணி சத்யபாமா வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம் திருவடி தெற்கு பார்த்த வண்ணம்
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு வைகுந்தவாசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வைகுந்தவாசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை மாங்காடு, மாங்காடு காமாக்ஷியம்மன் கோயில் அருகில், மாங்காடு, சென்னை 602102.
+91 44-26272053.
சென்னை அமைந்தக்கரை - பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து வரும்போது இடப்புறம் பாலத்திற்கு கீழே சென்று மாங்காடு சாலையை அடையலாம். குமணஞ்சாவடியிலிருந்தும் வரலாம். போரூர் வழியாக வருபவர்கள் குன்றத்தூர் பாதையில் வலப்புறம் திரும்பினால் மாங்காட்டை அடையலாம். அம்மன் கோயிலுக்கு அருகில் இந்தக் கோயில் 53-ஈ பிராட்வேயிலிருந்தும், இதர குன்றத்தூர் பேருந்துகள் போரூர் மார்க்கமாக பல்லாவரத்திலிருந்து செல்லும். பூந்தமல்லி பேருந்துகள் 153, 101, 53யில் செல்பவர்கள் குமணஞ்சாவடியில் இறங்கிச் செல்லலாம்.
பார்வதி சிவபெருமானின் கண்ணைப் பொத்தியதும் உலகம் இருண்டது. கண்ணைத் திறந்தும் பெருமானின் சாபம் பெற்று பூமியில் மாங்காட்டில் பஞ்சாக்னி அமைத்து தவம் புரிந்த தலம். இறைவன் தாக்ஷண்யம் காட்டாது போகவே, மணலால் லிங்கம் செய்து வழிபட பாலாற்று வெள்ளமும், மழையும் லிங்கத்தை அழிக்க முற்பட தன் உடலால் காத்தாள். ஒற்றைக் காலில் ஊசியின் மீது தவமேற்றாள். இறைவனும் தவத்தை மெச்சி ஏகாம்பரம் (ஏகம்-ஒரு ஆம்ரம்-மாமரம்) கீழ் வந்து தன்னையடைந்து திருமணம் புரிவாயாக என்றதாக வரலாறு பின்னர் காமாட்சியாக அருள் பலித்தார். ஆதிசங்கர் சக்ரம் பிரதிஷ்டை செய்த தலம். அர்த்த மேரு உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவித்தாயாருடன் அருள் பாலிக்கும் வைகுந்தவாசப் பெருமாள் கையில் காமாக்ஷி அம்மனுக்கென திருமணத்திற்காகத் தரும் ஹாரத்தை வைத்துள்ளதாக ஐதீகம் மாங்காட்டில் சுவாமியினைத் திருமணம் செய்து கொள்வற்காக அம்பாள் தலத்தில் அமர்ந்தாகவும், பின்னர் வைகுண்ட வாசப் பெருமாள் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்தாகவும் புராணச் செய்தி கூறுகிறது. சூதவனம் எனும் மாமரக்காடு கொண்ட பகுதியாதலால் மாங்காடு ஆனது. வைகுந்தவாசப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி கிழக்கு திருமுகமண்டலம் அமர்ந்த திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு காரம்பாக்கம் சிவ வீர ஆஞ்சநேயர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிக காரம்பாக்கம் சிவ வீர ஆஞ்சநேயர் தேவஸ்தானம் திருக்கோயில், ஆஞ்சநேயர் கோயில் தெரு, மாருதி நகர், போரூர், சென்னை 600116.
+91 9884240679, 044-32997984
சென்னை கிண்டி பூந்தமல்லி சாலையில் கிண்டியிலிருந்து 6 கிமீ தொலைவில் போரூர் காவல் நிலையத்திற்கு அருகே உள்ளது.
ராமர் சீதையைத் தேடி வந்தபோது தாருகாவனம் என்றழைக்கப்பட்ட இத்தலத்தில் முகாமிட்டார். மாலை நேர சிவ பூஜை செய்ய சிவன்கோயில் தென்படாத போது அனுமனை அழைத்து கயிலைக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரச் சொன்னார். கயிலாயத்தின் அழகில் மயங்கிய அனுமன் வந்த காரியத்தை மறந்தார். நேரம் தவறுவதால் இராமனே ஓர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். அனுமன் வந்து பார்த்த போது இராமர் லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜையை முடித்திருந்தார். அந்தத் தலமே குருவிற்குரிய இராமனதீஸ்வரம் என்று அழைக்கப்படும் போரூர் தலம் வட இராமேஸ்வரமும் ஆகும். இராமேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் இவரை வணங்க பலன் கிடைக்கும் என ஐதீகம். குரு ராகவேந்திரரின் குருவான வியாசராயரால் 600 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட 566 ஆஞ்சநேயர் சிலைகளுள் எந்த விதச் சிதைவும் இல்லாமல் திகழும் மாருதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மன நலம் குன்றியவர்கள் நிவர்த்தி பெறுவதோடு, கல்வி மேம்பாடு, திருமணத்தடை நீக்கம் தந்தருளி தரிசித்தவுடன் மனோதைரியமும் தரும் இறைவனாக விளங்குகிறார். ஒரு மண்டலத்தில் காரிய சித்தி அருளும் இவருக்கு மட்டைத் தேங்காய் பிரார்த்தனை பிரசித்தம். வேண்டிக்கொண்டு மட்டைத் தேங்காயினை கொடுத்தால் சுவாமியிடம் வைத்து எண் போடப்படுகிறது. கோயிலிலேயே வைக்கப்படும் அத்தேங்காய் பிரார்த்தனை நிறைவேறியதும் உரிக்கப்பட்டு சுவாமிக்குப் படைக்கப்படும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமையும் கொண்டு விளங்குகிறது. சிவ வீர ஆஞ்சநேயர் வடக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
<< Previous  18  19  20  21  22  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar