Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை அம்மன் கோயில்
 
சென்னை அம்மன் கோயில் (308)
 
அருள்மிகு துர்க்கா, சரஸ்வதி, லட்சுமி திருக்கோயில்
அருள்மிகு துர்க்கா, சரஸ்வதி, லட்சுமி திருக்கோயில் மதனந்தபுரம் சென்னை
சென்னை பேரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது மதனந்தபுரம்
பட்டீஸ்வரம் துர்க்கை, மும்பை மகாலட்சுமி, கூத்தனூர் சரஸ்வதி ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் இக்கோயிலில் நாம் தரிசிக்கலாம். இக்கோயிலில் ஏப்ரல் அல்லது மே மாத முதல் வாரத்தில் நடைபெறுகிறது ராதா கல்யாண மகோத்சவம். இந்த உற்சவத்தில் கலந்து கொண்டு மழலைப் பாக்கியம் திருமணத் தடை நீக்கம், கடன் தொல்லை நீக்கம் கல்வி, அறிவு, வளர்ச்சி என வேண்டிய வரங்களைப் பெறுகிறார்கள் பக்தர்கள். கலியுகத்தில் தெய்வ அருளைப் பெற எளிய வழி நாம சங்கீர்த்தனம் என்று ஸ்ரீ கிருஷ்ணரே சொன்ன வாக்கு.
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில்
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் மேற்கு மாம்பலம் சென்னை
சென்னை மேற்கு மாம்பலம் மேட்டுப் பாளையம் என்ற இடத்தில் உள்ளது.
ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளைகாப்பு சிறப்பாக நடைபெறும் பெண்கள் வளையல்களை அம்மனுக்குக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அம்மனுக்குச் சார்த்திய வளையல்களும், முளைகட்டிய பயறும் பிரசாதமாக வழங்கப்படும். மகப்பேறு சுகமாக அமைய இதைக் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுப்பார்கள். ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையில் பெண்கள் வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்து அம்மனை வழிபடுவது இங்கே சிறப்பானதாகும்.
அருள்மிகு திருவீதி அம்மன் திருக்கோவில்
முருகன் தெரு, சீனிவாசன் நகர், பீர்க்கன்காரணை, சென்னை - 600 063.
+91 9841643080, 9380881264
சென்னை பீர்க்கன்காரணை, சீனிவாசன் நகரில் உள்ள முருகன் தெருவில் கோயில் அமைந்துள்ளது.
-
அருள்மிகு காளி திருக்கோயில்
அருள்மிகு காளி திருக்கோயில், மணிமங்கலம், சென்னை.
சென்னை தாம்பரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது மணிமங்கலம் கிராமம்.
செல்லியம்மன் பெயரில் கோயில் அமைந்திருந்தாலும் கர்ப்பக் கிரகத்தில் மூலதெய்வமாக இருப்பவள் காளிதான். முன் மண்டபத்தில் செல்லியம்மனும், அவளின் மகள்களான சப்த மாதர்கள் ஏழு பேரும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.
அருள்மிகு சுயம்பு துர்கைஅம்மன் திருக்கோயில்
அருள்மிகு சுயம்பு துர்கைஅம்மன் திருக்கோயில், லக்ஷ்மிபுரம், சென்னை.
சென்னைக்குப் பக்கத்திலேயே, குரோம் பேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள லக்ஷ்மிபுரம் (தற்போது துர்கை நகர் என்று அழைக்கப்படுகிறது) பகுதியில் அமைந்திருக்கிறது அருள்மிகு சுயம்பு துர்கை அம்மன் திருக்கோயில்
ஒருபுறம் சிறுமலை, மறுபுறம் இரண்டாகப் பிரிந்து அமைந்த ஏரி என்று அழகிய சூழலில் தெப்பக்குளத்துடன் அமைந்திருக்கிறது சுயம்பு துர்கை அம்மன் கோயில். கருவறையில் சுதை வடிவத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த முழு உருவ அம்மன் சிலையின் அடியில் சுயம்புவாகத் தோன்றிய துர்கை அம்மன் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.1993-ம் வருஷம் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது. 2009-ம் வருஷம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆரம்பத்தில் வரிவடிவமாக இருந்த கண்கள், வாய், மஹிஷனின் வடிவம் ஆகியவை புடைத்துக்கொண்டு வருவதுடன், அம்மனின் திருவுருவமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தும் வருகிறது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தசி அன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை சிறப்புபூஜைகளும் ஹோமமும் நடைபெறுகின்றன. இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள் 5 எலுமிச்சைப் பழங்களை வாங்கி, அவற்றை இரண்டாகப் பிளந்து, 10 தீபங்களாக ஏற்றி ஒரு தட்டில் வைத்துக்கொண்டு, ஒரு தீபத்தை விநாயகருக்கு வைத்துவிட்டு, 9 தீபங்களுடன் கோயிலை 3 சுற்றுச் சுற்றி வந்து, தீபங்களை விளக்கு மாடத்தில் வைத்துவிட்டு, ஹோமத்தில் கலந்துகொள்ள வேண்டும். இந்த பூஜையில் கலந்து கொண்டால் எந்தத் தடங்கலும் இல்லாமல் நல்லபடியாக திருமணம் நடக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
அருள்மிகு ஸ்ரீஅசலாத்தம்மன் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீஅசலாத்தம்மன் திருக்கோயில், வடக்கு மாடவீதி, நுங்கம்பாக்கம், சென்னை.
சென்னை, நூங்கம் பாக்கத்தில், ஸ்டெர்லிங் சாலை பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில், வடக்கு மாடவீதியில் இருக்கிறது அசலாத்தம்மன் கோயில்.
இங்கே அம்மன் சுயம்பு வடிவா குடிகொண்டு தவக்கோலத்தில் இருக்கிறாள். கோயில் கொண்ட இடத்துக்குப் பக்கத்தில் நுங்கு மரம் அதாவது பனைமரங்கள் நிறைஞ்சிருந்த பகுதியானதால் நுங்கம்பாக்கம் அழைக்கப்பட்டது. இன்னிக்கு அந்தப் பகுதி, பசுமைமாறி பரப்பான இடமானதால், குடிசையா இருந்த கோயில் கோபுரத்தோட பிரமாண்டமாயிடுச்சு. சுயம்பு அம்மனுக்கு மேலா அம்மன் உத்தரவுப்படி திருமேனி வடிவம் அமைக்கப்பட்டிருக்கு. எல்லாமே இப்படி மாறிட்டாலும் இன்னிக்கும் தன் அருளில் எந்த மாற்றமும் இல்லாம கோயில் கொண்டிருக்கிறாள் அசலாத்தம்மன். கிழக்குப் பார்த்த ராஜகோபுரம் கடந்தா, வலது பக்கம் சப்த வீரர்கள் இருபுறமும் நாகர்களோட காவல் இருக்கிற சன்னதியை தரிசிக்கலாம். அடுத்து துவாரசக்திகள் காவலிருக்கிற முன் மண்டபம். மண்டபத்தூண்களில் தச ஆயுத தேவதைகள் இருக்கிறது வித்தியாசமான அமைப்பு. இந்த தேவதைகள் பொதுவா முனிவர்கள் தவம் இருக்கிற இடத்துலயும், யாகங்கள் நடக்கிற இடத்துலயும் காவலா இருப்பார்கள். இது அம்மன் தவம் இருந்த இடம் என்கிறதால் இங்கேயும் இப்படி அமைச்சிருக்கு. கருவறையில் வாயிலில் ஒருபுறம் கணபதியும் இன்னொரு பக்கம் முனிவர் வடிவத்தில் அசலன சித்தரும் இருக்கிறார்கள். மூலஸ்தானத்தில் முகத்துல குளுமையோட அருள்மழை வழங்கும் அன்னையா காட்சிதர்றாள், அசலாத்தம்மன். வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, நவராத்திரி, ஆடி மாசத்தில் விசேஷ பூஜைகள் இவளுக்கு நடக்குது. அசையாத தன்மை உடைய அம்மன் என்பதால், அசையாத சொத்துகள் வாங்க, அதுசம்பந்தமான வழக்குகள் தீர, நிலையான செல்வம் பெற, அசையாத மாங்கல்ய பாக்யம் பெற, வம்சம் தழைக்கன்னு ஏராளமான வேண்டுதல்களோடு வருகிறார்கள் பக்தர்கள். தன்மேல அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கிற பக்தர்களுக்கு அனைத்துப் பேறுகளும் தந்து ஆசியளிக்கிறாள் அசலாத்தம்மன்.
பூஜை நேரம்: -
அருள்மிகு பாலாடை அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்,
அருள்மிகு பாலாடை அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.
சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம் பேட்டை பகுதியில் (ஐஸ் ஹவுஸ் அருகில்) அமைந்திருக்கிறது. சின்ன மலையனூர் பாலாடை அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்.
ஐந்து தலைமுறைக்கு முன்னதாக, சென்னை திருவல்லிக்கேணியில் வசித்த கிருஷ்ணப்ப நாட்டார் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் மீது அதீத பக்தி கொண்டவர். ஒருநாள் அவருடைய கனவில் தோன்றிய அம்மன், அவர் வசிக்கும் பகுதியிலேயே, தான் கோயில் கொள்ளப் போவதாக அருளினாள். இதையடுத்து, மேல்மலையனூருக்குச் சென்ற கிருஷ்ணப்பர், அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் உள்ள புற்றில் இருந்து மண் எடுத்துவந்து அம்மன் சிலை வடித்து, குடிசை அமைத்து அதில் எழுந்தருளச் செய்தார். அபிஷேகமின்றி பூஜைகள் செய்து வழிபடவும் தொடங்கினார். பின்னாளில் இந்த அம்மனுக்கு குழந்தைகள் பலரும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார்களாம். பூஜையினால் குளிர்ந்த அம்மனுக்கு, குழந்தைகள் மீது அதீத பிரியம் ஏற்பட்டது. தனது சாந்நித்தியம் உணர்ந்து, குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களின் வேண்டுதலை சடுதியில் நிறைவேற்றினாள். அவளின் சாந்நித்தியம் உணர்ந்த பக்தர்கள் திருமணத்தடை, மாங்கல்ய தோஷம், தீராத நோய்கள் முதலான குறைகள் நீங்க வேண்டியும் அம்மனைத் தேடிவந்து சரண் அடையத்துவங்கினார்கள். அன்றிலிருந்து இன்று வரையிலும் பக்தர்களின் வாழ்வில் வளம் பொங்கச் செய்யும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள் இந்த பாலாடை நாயகி. மேல்மலையனூர் சென்று அங்காள பரமேஸ்வரியை வழிபட முடியாத பக்தர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பாலாடை அணிவித்து வழிபடுகின்றனர். இங்கு மாசித் திருவிழா வெகு விசேஷம். இக்கோயிலின் கும்பாபிஷேகம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றபோது, காஞ்சி மகாபெரியவரால் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது, புதிதாக சொர்ணத்தில் ஸ்ரீசக்ர யந்திரம் மற்றும் அங்காள பரமேஸ்வரி மூல யந்திரம் செய்து, அவற்றை 51 சக்தி பீடங்களுக்கு கொண்டு சென்று பூஜித்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். கடந்த 2015 அன்று மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது.
அருள்மிகு திருவுடையம்மன் திருக்கோயில்
அருள்மிகு திருவுடையம்மன் திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை.
சென்னைக்கு வடக்கே, திருவொற்றியூரில் இருந்து பொன்னேரி செல்லும் பாதையில், 12 கி.மீ. தொலைவில் உள்ளது மேலூர். இங்கே, அன்னை திரிபுரசுந்தரி கோயில் உள்ளது.
திருவுடையம்மனாகத் தென்புலம் நோக்கித் தனிக்கோயிலில் அருளாட்சி செலுத்திக்கொண்டிருக்கிறாள். மேற்கரங்களில் பாசாங்குசத்துடனும், கீழ் வலக்கரம் அபய முத்திரையாகவும், இடக்கரம் வரதஹஸ்தமாகவும் திருக்கோலம் கொண்டு, கருணை வடிவமாக உள்ளாள். கல்வெட்டுகளில் இவ்வூர் வல்லூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில், திருமணங்கள் உடையார் கோயில் என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஊரையும் திருமணங்கா என்றும் அழைத்து வந்திருக்கிறார்கள். 1715-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் இவ்வூரை மேலையூர் என்றும், சுவாமியைத் திருமணங்கீச்வரர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். முதலில் செங்கல் கட்டடமாக இருந்த இந்தக் கோயில், சோழர் காலத்தில் கருங்கல்லால் மாற்றியமைக்கப்பட்டது. அம்பாள் சன்னிதிக்கு முன்புறமுள்ள மண்டபத்தை மிளகு மாற்றியான் மண்டபம் என்று அழைக்கிறார்கள். நாயக்கர்கள் காலத்தில் மிளகுக்கு சுங்கம் வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இந்தப் பகுதியில் மிளகு விற்க வந்த வியாபாரி ஒருவர், சுங்க வரிக்கு பயந்துபோய் அதிகரிகாரிகளிடம், தான் கொண்டு வந்திருக்கும் மூட்டையில் இருப்பது பயறு என்று தெரிவித்தார். அதிகாரிகளும் அவர் கூறியதை நம்பிவிட்டார்கள். பிறகு, வியாபாரி மூட்டையை அவிழ்த்துப் பார்த்தபோது, மிளகுக்கு பதிலாக பயறு நிறைந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். பொய் சொன்னதற்காக அம்பிகையிடம் அவர் மன்னிப்பு வேண்ட, பயறு மீண்டும் மிளகாக மாறியது. அதைத் தொடர்ந்து அந்த வியாபாரி சுங்க பணத்தை கோயிலுக்கே வழங்கி, இந்த மண்டபத்தை கட்டிக் கொடுத்ததாகக் கூறுகிறார்கள். திருமணங்கீச்வரர் சன்னிதி, அம்பிகை கோயிலுக்கு மேற்கே தனிக்கோயிலாக அமைந்துள்ளது. திருவுடையம்மன் கோயிலுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவ்வப்போது வருவதைத் தவிர, பவுர்ணமி தினங்களில் டூரிஸ்டுகள் நிறைய வருகின்றனர். ஆடி, தை மாதங்களில் வெள்ளிக்கிழமை வரும் பவுர்ணமி தினத்தன்றும், சித்ரா பவுர்ணமி தினத்தன்றும், மூன்று தேவியரை ஒரே நாளில் தரிசிப்பதைப் பெரும் புண்ணியமுடையதாகக் கருதும் பக்தர்கள் காலையில் திருவுடையம்மன் கோயிலுக்கு வருகிறார்கள். அடுத்து, திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், அதற்கடுத்தப்படி திருமுல்லைவாயில் கொடியிடை நாயகியையும் தரிசிக்கிறார்கள். இந்த வழக்கத்துக்கு தல புராணத்தில் ஆதாரம் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட தினத்தில் இந்த மூன்று தேவியரைத் தரிசிப்பதற்கு ஒரு விளக்கமும் தரப்படுகிறது. மேலூர் திருவுடையம்மனை இச்சா சக்தியாக முதலில் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியாகத் திருவொற்றியூர் திரிபுரசுந்தரியைத் தரிசித்து, கிரியா சக்தியாக முல்லைவாயில் லதாமத்யாம்பா என்ற கொடியிடையம்மனைத் தரிசிப்பதன் மூலம் ஒரே நாளில் அம்பிகையை மூன்று சக்திகளாக ஆராதிக்கும் பலனைப் பெறுகிறார்கள்.
<< Previous  29  30  31 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar