Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு நிருதிலிங்கேசுவரர் திருக்கோயில்
மேட்டுப்பாளையம், சென்னை-600 077
+91 9383439033, 9840899191
பாரிவாக்கத்திலிருந்து 1.5 கி.மீ இக்கோயில் உள்ளது. செல்லும் வழி : சரவணா வாட்டர்கம்பெனி சேர்ந்து செல்லும் சாலையில் மேட்டுப்பாளையம் என கேட்டு செல்ல இத்திருத்தலத்தை அடையலாம்.
அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோயில்
மேட்டுப்பாளையம், சென்னை - 600 077.
பாரிவாக்கத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது.
அருள்மிகு கோமழீசுவரர் திருக்கோயில்
கோலப்பன்சேரி, சென்னை-600 072.
+91 9444665787
அம்மன் கோமலாம்பிகை, தலமரம் வில்வம், திருமணதடை உள்ளவர்கள் இறைவனை கார்த்திகை திங்கள் கிழமைகளில் 1008 முறை வலம் வந்து பால் அபிஷேகம் செய்ய திருமணம் நடைபெறும். திருக்கோயில் எதிரில் மரத்தடியில் சிவலிங்கதிருமேனி வேர்களால் மூடப்பட்டு மேற்கூரையின்றி அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு கேதாரீசுவரர் திருக்கோயில்
காவல்சேரி, சென்னை - 600 072.
கோலப்பன்சேரியிலிருந்து திருமழிசை செல்லும் வழியில் பத்செட்டியார் வயல்வெளியில் அடர்ந்த மரங்களின் நடுவே ஆவுடையாரின்றி மேற்கூரையின்றி வழிபாடின்றி அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு சக்திமுற்றேசுவரர் திருக்கோயில்
வாயலநல்லூர், சென்னை-600 072
+91 9840190676, 9710844638
வாயலநல்லூர் அரசுபள்ளி சேர்ந்த சாலையின் கடைசியில் ஊருக்குள் குளக்கரை மேல் அருள்பாலிக்கிறார்.
சதுர ஆவுடையாருடன் பல நூறு ஆண்டுகளாக மிகப்பெரியபாணலிங்க திருமேனி குளத்தின் கரையில் உள்ளது.
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
அணைக்கட்டு சேரி, சென்னை-600 072
+91 9789967455, 9952074893, 9941310484
ஊருக்கு செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது.
அம்மன் அகிலாண்டேசுவரி.
அருள்மிகு காசிவிசுவநாதேசுவரர் திருக்கோயில்
தண்டரை, சென்னை-600 072
அம்மன் விசாலாட்சியம்மை.
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்
சேக்காடு, சென்னை-600 071.
+91 9962184285
இந்துக்கல்லூரி ரயில்வே கிராசிங் கடந்து சேக்காடு ஊருக்குள் 1 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது.
அம்மன் வேதநாயகி.
அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோயில்
சத்தியா நகர், அணைக்கட்டு சேரி, சென்னை-600 072
+91 9941583266, 9884728668
அணைக்கட்டு சேரியிலிருந்து சோரஞ்சேரி போகும் வழியில் சத்தியாநகர் ஆற்று ஓரத்தில் இக்கோயில் உள்ளது.
வெள்ளை நிறத்தில் பெரிய சிவலிங்கம் (ஆவுடையாரின்றி) சிமெண்ட்,செங்கல் கொண்டு ஆவுடையார் செய்து, மேற்கூரை போட்டு பிரதோஷ வழிபாடு மட்டும் நடத்துகிறார்கள்.
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில்
4 வது மெயின் ரோடு, நங்க நல்லூர், சென்னை-600 061
அம்மன் அர்த்த நாரீசுவரி. இத்திருக்கோயிலின் பக்கத்திலுள்ள பொது குளத்தில் சிவலிங்க திருமேனி கவிழ்ந்து கிடக்க, அவ்வழி சென்ற மகா பெரியவர் சிவனடியார்களுடன் அச்சிவலிங்கத்தை சரியாக பிரதிஷ்டை செய்துள்ளார். இத்திருக்கோயில் கருவறை உள்சுவரில் அர்த்தநாரீஸ்வரர் ரிஷபத்துடன் காட்சிதருகிறார். சண்டிகேசுவரர் சிறப்பாக உள்ளார்.
<< Previous  34  35  36  37  38  39  40  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar