Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>கோயம்புத்தூர் மாவட்டம்>கோயம்புத்தூர் முருகன் கோயில்
 
கோயம்புத்தூர் முருகன் கோயில் (123)
 
அருள்மிகு பொன்மலை வேலாயுதசாமி திருக்கோயில்
கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வட்டம் கோயம்புத்தூர் மாவட்டம்
+91 4259 242 026
அருள்மிகு மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோயில்
பல்லடம் வட்டம் கோயம்புத்தூர் மாவட்டம்
+91 4255 266 515
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஈச்சனாரி கோவை
கோவை பொள்ளாச்சி சாலையில் காந்திபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது ஈச்சனாரி
குருப் பெயர்ச்சி மற்றும் பிறகிரகப் பெயர்ச்சி நாட்களில் இங்கு 108 மூலிகைகளைப் பயன்படுத்தி விசேஷ யாகச் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளபவர்கள் கிரகப் பெயர்ச்சியின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். திருமணத் தடையுள்ளவர்கள் இங்கு வந்து வேண்டினால் உடனே திருமணம் நடைபெறும் அதுவும் இங்கேயே அவர்கள் திருமணம் புரிந்து கொள்வது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
அருள்மிகு முருகன் திருக்கோயில்
அருள்மிகு முருகன் திருக்கோயில், மருதமலை, கோவை.
கோவையிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோயில் மகா மண்டபத்தில் தென்கிழக்கில் அரசு, கத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை ஆகிய ஐந்து மரங்கள் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து பஞ்ச விருட்சமாகக் காட்சி தருகிறது. இந்த மரத்தடியில் விநாயகர், முருகன் சிலைகள் உள்ளன. இந்த மரத்தில் பல முனிவர்கள் இன்றும் கண்களுக்குத் தெரியாமல் தவம் செய்து வருவதாக ஐதீகம்.
அருள்மிகு பால தண்டாயுதசுவாமி திருக்கோயில்
அருள்மிகு பால தண்டாயுதசுவாமி திருக்கோயில், சுக்கிரவாரப்பேட்டை, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம், 641001.
+91 422-2343557, 2343857
கோவை மாநகரத்தின் மையப் பகுதியில் உள்ளது.
தனயன் கல்வி கணபதி முருகனின் வலப்புறம் உள்ளார். பிரபல கோவை கல்வி விநாயகர் இவரே. ஒரே நேர்க்கோட்டில் அமைந்த நவக்கிரக சன்னதி உள்ளது. சஷ்டி, கிருத்திகை மற்றும் அமாவாசை விசேஷ நாட்கள். இங்கு பால தண்டாயுதசுவாமி கிழக்கு முகமாக நின்றகோலத்தில் உள்ளார்.
பூஜை நேரம்: காலை 5 மணி முதல் 2 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு தண்டபாணி திருக்கோயில்
அருள்மிகு தண்டபாணி திருக்கோயில், கௌமாரமடம், சின்ன வேடம்பட்டி, கோயம்புத்தூர் 641006, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91 422-2666370
கோவை சத்தியமங்கலம் பாதையில் 9 கிமீ தொலைவில் உள்ளது. முதல் 6வது கிமீல் உள்ள கணபதியினைக்கடந்தால் வரும் அத்திப்பாளையத்திலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ளது.
தண்டம் ஊன்றிய கோலத்தில் தேவியருடன் நின்ற கோலத்தில் திகழும் தண்டபாணி இவர். குமரகுருபரர் உற்சவராக உள்ளார். விசேஷ நாட்களில் முருகனுக்கு வேடுவ கோலம், ராஜ கோலம், பெண் கோலம் அலங்காரம் செய்யப்படுகிறது.
பூஜை நேரம்: காலை 4 மணியிலிருந்து மாலை 10 மணி வரை.
அருள்மிகு பஞ்சவேல் முருகன் திருக்கோயில்
அருள்மிகு பஞ்சவேல் முருகன் திருக்கோயில், பூராண்டான் பாளையம், சுல்தான்பேட் வட்டம் 641669, கோயம்புத்தூர் மாவட்டம்.
கோயம்புத்தூரிலிருந்து சுல்தான்பேட் செல்லும் போத்தனூர் சாலையில் 39 கிமீ தொலைவில் உள்ள ஊர்.
வேலே முருகனாக பிரதிஷ்டை செய்து வணங்கப்படுகிறது. குமாரசாமி சித்தர் வழிபட்ட வேல். சித்தர் சமாதியும் உள்ளது. அருகே உள்ள புற்று மண் நோய் தீர்க்கும் தன்மை கொண்டது. பல காலம் கேட்பாரற்றுக் கிடந்த அந்த வேல் வழிபாடு முருகனால் சித்தர் குடும்பத்தாருக்கு கனவில் உணர்த்தப்பட்டு பின் மீண்டும் வழிபாடு தொடங்கியது. பங்குனி உற்சவம் விசேஷம்.
அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில்
அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், பொன்மலை, முத்துக் கவுண்டனூர், முத்துமலை, கிணத்துக்கடவு 642109, கிணத்துக்கடவு வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.
+91 4259-242026, 0422- 2340462, 04253- 292860.
கிணத்துக்கடவு கோயம்புத்தூர் பொள்ளாச்சி சாலையில் 20 கிமீ தொலைவில் உள்ளது.
700 ஆண்டுகள் பழமையானது. பிள்ளைத்தமிழ் பெற்ற தலம். பொன்விளைந்தால் பொன்மலை (கனகமலை) என்கிற பெயர் வந்ததாகத் தகவல். கனககிரி என்கிற பெயரில் உள்ள முருகனை அருணகிரியார் பாடியுள்ளார். முத்துமலை என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு சுனைகள் உள்ளன. முதல் சுனை தீர்த்த நீராட<லுக்கும் இரண்டாம் சுனை நீராடி வழிபடுவதற்கும் என ஐதீகம். வேல் சிறப்பானது. தைப்பூசத்தன்று அருகே உள்ள புற்றிலிருந்து ஒளி வருவதாகக் கூறப்படுகிறது. நேராக உள்ள மயில் வாகனத்தின் அருகே நின்று பார்க்கும்போது சோமாஸ்கந்தர் மற்றும் ஆடல் தெய்வமும் தெரியும். பெண் ஒருத்தியின் கனவில் கிருத்திகை மற்றும் பரணி நட்சத்திரத்தன்று தோன்றி அங்குள்ள 3 காரை மரங்களுக்குக் கீழே தான் உள்ளதாகக் கூறினார். ஊராரிடம் இச்செய்தியினை அவள் கூறியும் யாரும் கேளாதிருக்க மீண்டும் மீண்டும் அவள் கனவில் இந்தச் செய்தி வருவதைக் கண்டு அவளே அவ்விடத்தில் சென்று பார்த்தாள். பின்னர் மக்கள் உதவியுடன் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. இங்கு முருகன் வீரவேலுடன் உள்ளார்.
பூஜை நேரம்: காலை 6.30 மணியிலிருந்து மாலை 7.30 மணி வரை.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி மற்றும் வட்டம், கோவை மாவட்டம் 642104.
+91 4259-229065, 229054, 04252- 278831
பொள்ளாச்சி கோவையிலிருந்து 46 கிமீ தெற்கில் உள்ளது. பொள்ளாச்சியிலிருந்து 14 கிமீ தூரத்தில் மாசாணியம்மன் கோயிலும் உள்ளது. கொழுமத்தில் 500 ஆண்டுகள் பழமையான தத்தாத்ரேயர் கோயில் உள்ளது.
பொருட்கள் விற்கப்படும் சந்தைகள் மிகுந்த வளமான பொருளாதாரப் பகுதியென்பதால் பொருள் ஆட்சி என்கிற வார்த்தை பொள்ளாச்சி ஆனது என்றும் தோட்டம் மற்றும் சோலைகள் நிறைந்த பொழில் ஆட்சி செய்த ஊர் பொள்ளாச்சி என்றும் இரண்டு காரணப் பெயர்கள் அமைந்த ஊர். கொங்கு சுந்தர பாண்டியன் கொங்கு திரிபுவன சக்ரவர்த்தி விக்ரம சோழனால் கட்டப்பட்ட கோயில் என்கிறது கல்வெட்டு. கொச்சி சமஸ்தான பெரும் படப்பு சொரூபம் காலத்தின் ஆறாம் ஆண்டில் திரு அகத்தீஸ்வரமுடையார் கோயில் என்றும் வழங்கப்பட்டதாகத் தகவல். சிவனே அக்காலத்தில் இக்கோயில் பிரதான கடவுள். தற்போதும் மீனாட்சி சுந்தரேஸ்வரராக அருள்பாலிக்கிறார். ஒரே கல்லில் திருவாசியுடன் அமைந்த முருகன் ஒரு முகம் நாற்கரங்களோடு அமர்ந்த கோலத்தி, தேவியருடன் காட்சி தருகிறார். இடப்புறம் தேவமயிலுடன் உள்ளார். 24 கால் மண்டபமும் இதர கோஷ்ட மூர்த்தங்களும் உள்ளன. சிறப்பான யாளி சிற்பங்கள் சுவாமி சன்னிதிக்கு எதிரே உள்ளது. கொழுமம் தத்தாத்ரேயர் கோயிலும் உள்ளன. 1000 ஆண்டுகள் பழமையான கோயில்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை (செவ்வாய், வெள்ளி ராகுகால பூஜை (மணி 3 - 4.30 முதல்மற்றும் 10.30- 12 வரை)
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கோவை அனுவாவி, சின்னத்தடாகம் போஸ்ட், கோவை 641108, பெரியநாயக்கன் பாளையம், வட்டம் கோவை மாவட்டம்.
+91 94434 77295, 98432 84842
250 படிகள் ஏற வேண்டும். மலையடிவாரத்திலிருந்து சுமார் 1 கிமீ தூரம். தெற்கே மருதமலை உள்ளது. மலைப்பாதையிலேயே மருதமலைக்கும் செல்லலாம். கோவை சின்னத் தடாகம் பாதையில் செல்ல வேண்டும். ஆனைக்கட்டி நகரப் பேருந்திலும் கோயிலுக்குச் சென்றடையலாம். அடிவாரத்தில் லலிதாம்பிகை கோயில் உள்ளது. கோவையிலிருந்து 8 கிமீ துடியலூர். அதிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள ஊர் சின்னத் தடாகம். மாலை நேரத்தில் யானைகள் உலவுவதால் பகலில் தரிசிப்பதே நன்று.
இங்கு அனுமனுடன் முருகன் அருள்பாலிக்கும் தலம். ஹனுமான் குமரன் மலை என்கிற பெயரும் உண்டு. அனுமன் சுயம்பு மூர்த்தி. சஞ்சீவி பர்வதத்தைக் கொணர்ந்த போது இவ்விடத்தில் இளைப்பாறிய நேரத்தில் முருகனை வேண்டி அவரது வேலால் நீர்ச்சுனை (காணாச்சுனை) உற்பத்தியானதும் ராமாயண காலத்திலேயே முருகன் வழிபாடு இருந்ததனை உணர்த்துகிறது. முருகனின் வேலும் ராமனின் அம்பும் வேக அளவில் ஒப்பிடப்பட்டுள்ளது. ஹனுமன் சிலையும் உள்ளது. ஹனு (அனுமன்) வாவி (வாபி என்றால் கிணறு) என்பது மருவி அனுவாவி ஆனது. ஐப்பசி சூரசம்ஹாரம், கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் விசேஷ பூஜைகள். 1957ல் இந்த முருகன் கோயிலும் மேலும் 5 மாமரங்களும் வெள்ளத்தில் அடித்துச் சென்றன. பின்னர் 1969ல் இக்கோயில் மீண்டும் கட்டப்பட்டது. கோயிலில் உள்ள சுனை நீரின் ஊற்று எங்கிருந்து வருகிறது என்று இன்று வரை தெரியவில்லை. சுனையில் நீராடுதல் தோல் வியாதிகள் மற்றும் இதர நோய்களைப் போக்கும் என்று நம்பிக்கை. தொடர்ந்து 5 செவ்வாய்க்கிழமை வழிபட புத்திர பாக்கியம் தரவல்லது. இத்தலத்தில் முருகன் நின்ற கோலத்தில் வள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார். மேலும் அருணாசலேஸ்வரரும் உள்ளார்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
<< Previous  10  11  12  13  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar