Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>கோயம்புத்தூர் மாவட்டம்>கோயம்புத்தூர் முருகன் கோயில்
 
கோயம்புத்தூர் முருகன் கோயில் (123)
 
அருள்மிகு ரத்னகிரி முருகன் திருக்கோயில்
அருள்மிகு ரத்னகிரி முருகன் திருக்கோயில், சரவணம்பட்டி, கோயம்புத்தூர் 641035, கோவை மாவட்டம்.
+91 422- 5535727
கோயம்புத்தூரிலிருந்து 10 கிமீ தொலைவில் கணபதி, சிவானந்தபுரம், விளாங்குறிச்சி பாதையில் குறும்பாளையத்திற்கு முன் உள்ளது. இதைத் தாண்டிதான் சர்க்கார்சாம குளம் செல்ல வேண்டும்.
சுயம்பு விநாயகர் உள்ள கோயில். முன் சிவனிடம் வரம் பெற்ற அசுரன் தேவர்களைச் சித்தரவதை செய்து இந்திரனைத் துரத்தியபோது முருகன் அவனை மயிலாக மாற்றிய மலை ரத்னகிரி என்று அறியப்படுகிறது. புத்திர பாக்கியம் இல்லாத பெண்ணொருத்தி இரத்தினகிரி முருகனை நினைத்து வேண்டிக்கொண்டு விரதமிருந்து கண்ணீர் மல்க இத்தலத்தை தரிசித்த போது சிறுவன் ஒருவன் திருநீறு கொடுத்து அருள்பாலித்து பின்னர் மறைந்தான். சில நாட்களிலேயே மக்கட்பேறு கிடைத்ததாக வரலாறு. பூபரித்தல் என்கிற செயல் மூலம் முருகனுக்கு மலர்கள் சாற்றப்பட்டு வேண்டிக்கொள்ளப்படுகிறது. முற்காலத்தில் முறை மாமன் மற்றும் முறைப்பெண் இருவரும் மாட்டுப் பொங்கலன்று மலர்களை பரிமாறி இறைவனை வேண்டிக் கொள்ளும் வழக்கம் இருந்தது எனத் தகவல். இத்தலத்தில் முருகன் மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் நாற்கரங்களுடன் உள்ளார்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குருந்தமலை, குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில், மேட்டுப்பாளையம் வட்டம், 641301 கோவை மாவட்டம்.
+91 4254- 2222025
காரமடையிலிருந்து 6 கிமீ மேற்கேயும் மேட்டுப்பாளையத்திலிருந்து 8 கிமீ தென் மேற்கேயும் அமைந்துள்ளது.
குருந்த மரம் சூழ்ந்த சிறிய குன்றின் மீது உள்ளதால் குருந்தமலை எனப் பெயர். அகத்தியருக்கு மந்திர உபதேசம் கிடைத்த தலமாகக் கொள்ளப்படுகிறது. குழந்தை வேலாயுதனாகக் காட்சி தருகிறார். அமாவாசை, கிருத்திகை, பவுர்ணமி, பொங்கல் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள். இந்த விழாக்களின் போது சந்தன மற்றும் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. நல்லண்ண கவுண்டரின் மகன் முதலி கவுண்டர் சந்தான நாடாரை மாடு மேய்த்துப் பார்த்துக் கொள்ள நியமித்தார். பால் தராத பசுவைக் கண்டு சந்தான நாடாரைச் சந்தேகிக்க நடந்த நிகழ்ச்சி தான் இதன் வரலாறு. அந்தப் பசு பால் தராமல் புற்றின் மீது பால் சொரிந்ததைக் கண்டனர் முதலி கவுண்டர் மற்றும் அவரது தந்தை. அச்சமயத்தில் குழந்தை முகம் கொண்ட பாம்பு புற்றிலிருந்து வெளிப்பட்டு பாலைப் பருகியது. பிற்காலத்தில் அதே இடத்தில் 18ம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டது. இங்கு தண்டாயுதபாணியாக நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை
அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில், குமரன் கோட்டம், திருச்சி சாலை, கோயம்புத்தூர், 641503.
+91 9842233307
கோயம்புத்தூரிலிருந்து 19 கிமீ. சிங்கநல்லூர் கண்ணம்பாளையம் தாண்டி சூளூருக்கு முன் உள்ளது இந்தத் தலம்.
அறுபடை வீடுகளில் உள்ளது போலவே அதே திசைகளில் பார்த்த வண்ணம் முருகன் சுவாமிநாதராக அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்கள் ஒரே கல்லினால் ஆனது. அறுபடை வீட்டை தரிசித்த திருப்தி தரும் தலம். கார்த்திகை, கந்த ஷஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திர பிரம்மோற்சவம், சித்திரை வருடப் பிறப்பு விசேஷம்.
பூஜை நேரம்: காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை
<< Previous  11  12  13 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar