Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>கோயம்புத்தூர் மாவட்டம்>கோயம்புத்தூர் அம்மன் கோயில்
 
கோயம்புத்தூர் அம்மன் கோயில் (818)
 
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
ஊட்டி கோயம்புத்தூர் மாவட்டம்
+91 423 244 2754
அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில்
அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில், வெள்ளக்கிணறு கோவை-641 029
+91 97894 99707
கோவை காந்திபுரத்திலிருந்து (8 கிமீ.) மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள துடியலூரிலிருந்து சரவணம்ப்பட்டி செல்லும் வழியில் உள்ள வெள்ளக்கிணறு கிராமத்தில் கோயில் அமைந்துள்ளது.
இங்குள்ள அம்மனிடம் வேண்டினால், நினைத்த காரியம் நிறைவேறும். அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துகின்றனர்.
அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்
அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோவை.
கோவை மாவட்டத்தின் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவை கோனியம்மனின் இடது செவியில் தோடும், வலது செவியில் தண்டலமும் இருக்கிறது. தண்டலம் என்பது, இறைவன் காதில் அணியும் அணிகலன். இங்கு அம்மனுக்கு எட்டுக் கைகள். வலப்பக்கம் உள்ள நான்கு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கும், இடப்பக்கம் உள்ள கரங்களில் கபாலம், தீ, சக்கரம், மணியும் துலங்குகின்றன.
அருள்மிகு தண்டுமாரி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு தண்டுமாரி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், உப்பிலிபாளையம், அவிநாசி சாலை, காந்தி பஸ்நிலையம் அருகே, கோயம்புத்தூர் 641018, கோவை மாவட்டம்.
+91 422-2300360,2304106, 9791760161, 9363216808.
கோயம்புத்தூர் காந்தி பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி பாதையில் 1கிமீ தொலைவில் உப்பிலிபாளையத்தில் இந்த ஆலயம் உள்ளது.
தண்டு என்றால் படை வீரர்கள் தங்கும் இடம் என்று பொருள். இந்த ஊர்க் கோட்டையில் முற்றுகையிட்ட திப்பு சுல்தானின் படை வீரர் கனவில் அருகே தான் எழுந்தருளியிருப்பதாகக் அன்னை கூறினாள். அது போலவே ஓர் வேப்ப மரத்தின் கீழ் அம்மன் தென்பட்டாள். அவளுக்கு ஆலயமும் அமைத்தான். வடக்கு பார்த்து வீற்றிருந்து கோலத்தில் நாட்கரங்களுடன சங்கு, கட்கம், கதை அபய ஹஸ்தத்துடன் அருளுகிறாள்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை.
அருள்மிகு வனபத்ரகாளி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வனபத்ரகாளி தேவஸ்தானம் திருக்கோயில், தேக்கம்பட்டி 641113, வழி மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்.
+91 4254-222286, 0423-2442754,
இந்த ஊர் மேட்டுபாளையத்திலிருந்து 8 கிமீ. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
அம்பாள் சுயம்பு. பகாசுரனை அழிக்க பீமன் வணங்கிய அம்பாள். ஆரவல்லி, சூரவல்லி என்னும் ஏழு சகோதரிகளின் பெண் ஆதிக்கப் போக்கை ஒடுக்க பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டத் தலம். நெல்லூர்பட்டினம் என்பது புராதனப் பெயர். பகாசுரன் திருவுருவம் அம்மன் முன் உள்ளது. அம்பாளுக்குச் சார்த்திய எலுமிச்சம் பழங்கள் வியாதி போக்கும் என்பது ஐதீகம்.
பூஜை நேரம்: காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை.
அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், வழி பொள்ளாச்சி 642110, கோபிசெட்டிபாளையம் , வட்டம் கோவை மாவட்டம்.
+91 4259-246246, 04259-229065, 642126, 9942051744.
அவிநாசி திருப்பூர் பொள்ளாச்சி பாதையில் உள்ள ஊர். வடக்கைப் பாளையத்தில் பழைய காசி விஸ்வநாதார் கோயில் வடக்கே உள்ளது.
வலக்கால் மடக்கியும் இடக்கால் தொங்கவிட்டும் கட்கம், உடுக்கை, சூலம், கபாலம் என நாற்கரத்துடன் வீற்றிருந்த கோலத்தில் வடதிசை நோக்கி அருள் பாலிக்கும் அன்னை தனது அபிஷேக தீர்த்தத்தினால் அம்மை மற்றும் கண் நோயினை நீக்க வல்லவள். முற்காலத்தில் வேலாயுதம் பாளையம் என்கிற பகுதியில் பசுக்கள் பால் சொறிந்து வீணானதை உணர்ந்த யாதவர்கள் பசுக்களை அடிக்க முற்பட ஓரிடத்தில் பசு ஓன்றின் குளம்பு கல் மீது பட்டு இரத்தம் பீறிட்டது. பயந்த மக்களின் கனவில் அம்பாள் தோன்றி அவ்விடத்தில் ஆலயம் எழுப்பச் சொன்னதாக வரலாறு. வடக்கு வாயிற் செல்வி என்பது மற்றோர் பெயர்.
பூஜை நேரம்: காலை 6 மணியிலிருந்து மாலை 8 மணி வரை. (இடைவிடாது தரிசனம்).
அருள்மிகு சௌடாம்பிகை தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு சௌடாம்பிகை தேவஸ்தானம் திருக்கோயில், ராஜ வீதி (டவுன் ஹால் ரோடு) , கோயம்புத்தூர் 640001, கோவை மாவட்டம்.
+91 422-2477456, 0422-2230214, 04255-264431
சென்னையிலிருந்து கோவை 486 கிமீ. கோவை டவுண் ஹால் சாலையில் உள்ளது. மேலும் கோவை மணிக்கூண்டு பகுதியில் ஸ்ரீகோனியம்மன் கோயிலும் உள்ளது. பல்லடத்தில் (கோவையிலிருந்து 42 கிமீ) அங்காளம்மன் கோயில் உள்ளது.
மன வேதனைத் தீர்க்கும் மாரியம்மன் திருமாலை நோக்கித் தவமிருந்த தேவலன் என்னும் முனிவரின் தவத்திற்கு அசுரர்கள் பங்கம் விளைவித்தனர். திருமாலும் சக்ராயுதம் கொண்டு தடுத்தார். அதற்கும் பலன் இல்லாமல் போக முனிவர் அடிப்பட்ட போது அம்பாள் முனிவருக்கு அபயமளித்தாள். ஆறு வீதி 18 செட்டிமைக்கு உட்பட்ட தேவாங்கர் சமுதாயத்தினருக்கு உட்பட ஆலயம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு பொன்னூத்தம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பொன்னூத்தம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், வரப்பாளையம், வழி துடியலூர் 641034, கோவை மாவட்டம்.
கோயம்புத்தூர் மேட்டுபாளையம் சாலையில் துடியலூருக்குப் பிரியும் சாலையில், பன்னிமாடை வரப்பாளையம் பாதையில் ஸ்ரீபொன்னூத்தமன் கோயில் உள்ளது. துடியலூர் வரப்பாளையத்திற்கு சிற்றுந்துகள் செல்கின்றன. தனி வாகனத்தில் செல்வோர் ஆலயம் வரை வரப்பாளையத்தில் இருந்து செல்லலாம்.
ஸ்ரீபொன்னூத்தம்மன் தென் கிழக்கு திசை நோக்கி அருள் பாலிக்கிறாள். 300 அடி உயரமுள்ள சஞ்சீவி மலையில் சுயம்புவாக ஓர் குகையில் உள்ள பராசக்தி வடிவ அம்மன். அம்மனின் வலப்புறம் ஓர் சுனை உள்ளது. எப்போதும் நீர் வருகிறது. விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளும் உள்ளன. பேரூர் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சாந்தலிங்க அடிகளாரால் 2008 ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மக்கட்பேறு கொடுக்கும் அம்மன். இந்த அம்மனை ஓர் வெள்ளை ராஜ நாகம் காப்பதாகவும் அவ்வப்போது அது பாலுண்ண வருவதாகவும் கூறப்படுகிறது. அதே பகுதியில் உள்ள டாக்டர் முத்துலக்ஷ்மி விஸ்வநாதன் என்பவர் அடிக்கடி கொல்லூர் மூகாம்பிகையினை தரிசிக்கச் செல்வதைக் கண்டு இந்த அம்மன் கொல்லூர் சென்று ஏன் வழிபடுகிறாய் என்னையே இந்த இடத்தில் வழிபடு எனப் பணித்தாள். அவர்கள் பின்னர் 108 படிகளை இவ்வாலயத்திற்கு அமைத்தனர். அமாவாசை விசேஷம்.
பூஜை நேரம்: காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை.
<< Previous  80  81  82 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar