Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>ஈரோடு மாவட்டம்>ஈரோடு சிவன் கோயில்
 
ஈரோடு சிவன் கோயில் (251)
 
அருள்மிகு மாந்தீஸ்வரர் திருக்கோயில்
வெள்ளிஇறைச்சல் தாராபுரம் வட்டம், ஈரோடு மாவட்டம்
காங்கேயத்திலிருந்து கிழக்கே 12 கி.மீ.
இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஆர்த்தகபாலீஸ்வரர் திருக்கோயில்
பாப்பிணி, தாராபுரம் வட்டம் ஈரோடு மாவட்டம்
காங்கேயத்திலிருந்து கிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில்
கீரனூர், தாராபுரம் வட்டம் ஈரோடு மாவட்டம்
காங்கேயத்திலிருந்து வடக்கே 8 கி.மீ.
நொய்யல் ஆற்றின் தென்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கடேஸ்வரர் திருக்கோயில்
கடையூர், தாராபுரம் வட்டம் ஈரோடு மாவட்டம்
காங்கேயத்திலிருந்து தென்மேற்கே 7 கி.மீ.
இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
காங்கேயம், தாராபுரம் வட்டம் ஈரோடு மாவட்டம்
தாராபுரத்திலிருந்து வடக்கே 30 கி.மீ.
இக்கோயிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
அருள்மிகு பட்டாலிபால் வெண்ணீஸ்வரர் திருக்கோயில்
சிவன்மலை, தாராபுரம் வட்டம் ஈரோடு மாவட்டம்
காங்கேயத்திலிருந்து வடமேற்கே 4 கி.மீ.
இக்கோயில் 200 படிகள் கொண்டது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். நஞ்சுண்டேஸ்வரர். அம்மன் பர்வதவர்த்தினி, அருகில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். தலமரம் கொட்டி மரம். வள்ளியைக் கவர்ந்து வந்த முருகப்பெருமானைப் பின் தொடர்ந்த வேடர்களை முருகன் போரில் மாய்த்தார். பின்பு வள்ளியின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் உயிர்ப்பித்தார். எனவே இக்கருத்தைத் தரும் பட்டாலியூர் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்றும் கூறுவர். சிவவாக்கியர் இக்கோயிலை எழுப்பியதாகவும், தவம் புரிந்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. அனுமன் சிவபெருமானை வழிபட்டதனால் அனுமனுக்கு, தனிச்சன்னதி இங்கு <உள்ளது.. இங்குள்ள பழைய தாயில் இருக்கும் பழைய நெய் தீராத நோய்களைத் தீர்க்கு சக்திவாய்ந்தது. பட்டாலி ஆறுமுகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார். இத்தலம் பழனியைப் பேன்றே உள்ளது. தலபுராணம் அம்பலவாண கவிராயர் இயற்றியுள்ளார். நான்கு கால பூஜை, கந்த சஷ்டி தைப்பூசம், பங்குனி உத்திரத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு நாட்டூர்நாதர் திருக்கோயில்
பரஞ்சேர்வழி, தாராபுரம் வட்டம் ஈரோடு மாவட்டம்
காங்கேயத்திலிருந்து வடக்கே 9 கி.மீ.
நொய்யல் ஆற்றின் தென்பகுதியில் இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இவர் மத்யபுரீசுவரர் என வழங்கப்படுகிறார். ஆலயம் கிழக்கு நோக்கியது சுவாமி கோயிலின் இடப்பாகத்தே அம்மன் கோயில் உள்ளது. ஊர் நட்டூர் எனவும், ஆலயம் பரன்பள்ளி என வழங்கப்படுகிறது. திருநாவுக்கரசு சுவாமிகள் அடைவுத் திருத்தாண்டகத்தில் பள்ளி என வழங்கும் ஊர்களைக் குறித்து அருளிய பாடலில் பரன்பள்ளி என இவ்வூர் குறிக்கப்படுவதால் இத்தலம் தேவார வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
தாராபுரம் ஈரோடு மாவட்டம்
கரூர்க்கு தென்மேற்கே 61 கி.மீ.
அமராவதியாற்றின் கரையில் இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அகத்திய முனிவர் வழிபட்டு காட்சி கண்ட தலம். தலபுராணம் வேலாயுதப்பண்டிதர் 243 பாடல்கள் கொண்டது.
அருள்மிகு விக்ரமசோழீஸ்வரர் திருக்கோயில்
பச்சபாளையம், தாராபுரம் வட்டம் ஈரோடு மாவட்டம்
காங்கேயத்திலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
உத்தமபாளையம், தாராபுரம் வட்டம் ஈரோடு மாவட்டம்
காங்கேயத்திலிருந்து தென்கிழக்கே 16 கி.மீ.
நாகமநாயக்கன்பட்டி வட்டமலை ஆற்றின் கரையில் இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  21  22  23  24  25  26  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar