Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் சிவன் கோயில்
 
காஞ்சிபுரம் சிவன் கோயில் (498)
 
அருள்மிகு நந்தீச்சுவரர் திருக்கோயில்
நந்திவரம், செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
வண்டலூரிலிருந்து தெற்கே 7 கி.மீ.
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் தாஷாயணி, நந்தி தீர்த்தம். இக்கோயில் நந்திவர்ம பாண்டியனால் கட்டப்பெற்ற கோயில். நந்தி பூசித்த லிங்கம், ஒரு கால பூஜை. மார்கழி திருவாதிரை உற்சவர் நடைபெறுகிறது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
பாண்டூர், செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
கூடுவாஞ்சேரியிலிருந்து தென்கிழக்காக 6 கி.மீ.
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் திரிபுரசுந்தரி மற்றும் ஆதிகேசவ பெருமாள்.
அருள்மிகு முருகேசுவரர் திருக்கோயில்
தையூர், செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
திருப்போரூர்க்கு வடக்கே 7 கி.மீ.
இக்கோயில் 1-72 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
அருள்மிகு தோக்கீசுவரர் திருக்கோயில்
வில்லியம்பாக்கம், செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
செங்கற்பட்டுக்கு வடமேற்கே 7 கி.மீ.
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 300 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோயில்
கொட்டமேடு, செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
திருப்போரூர்க்கு மேற்கே 7 கி.மீ.
இக்கோயில் 68 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு புற்றீசங்கொண்டீஸ்சுவரர் திருக்கோயில்
சிறுகுன்றம், செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
செங்கற்பட்டிலிருந்து கிழக்காக 13 கி.மீ.
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
பெருந்தண்டலம், செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
செங்கற்பட்டிலிருந்து கிழக்காக 11 கி.மீ.
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருக்கரையீஸ்வரர் திருக்கோயில்
மானாமதி, செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
திருப்போரூர்க்கு தெற்கே 9 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு வன்மீகநாதர் திருக்கோயில்
திருப்போரூர், செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
செங்கற்பட்டிலிருந்து வடகிழக்கே 25 கி.மீ.
இக்கோயில் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் முருகப் பெருமானுக்கே முதல் வழிபாடு. இத்தலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமான் வள்ளிதெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். தீர்த்தம் சரவணப் பொய்கை, தலமரம்- வன்னி. கண்ணுவமுனிவரால் சாபம்பெற்ற திருமால் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற தலம். இத்தலத்தில் அருகில் உள்ள சிறுமலைமேல் பாலம்பிகை உடனுறை கைலாசநாதர் காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் விண்ணிலே போர் புரிந்த தலம் இத்தலம். அசுரர்களது ஆவணத்தை அழித்து ஞானம் அளித்த தலம். பிரணவப் பொருளை <உபதேசம் பெறும் செப்புத் திருமேனியும், வலது காலை மயிலமேல் ஊன்றி வில்லேந்திய கோலத்தில் காட்சியளிக்கும் செப்புத் திருமேனியும் இத்தலத்தில் காட்சியளிக்கின்றன. ஸ்ரீ மத் சிதம்பர சுவாமிகள் மதுரை மீனாட்சியம்மையின் அருள்பெற்று இத்திலத்திற்இ வந்தபோது முருகப்பெருமான் கந்தசாமிப் பெருமானாக காட்சிதந் தருளினார். சுவாமிகள் அருளிய திருப்போரூர்ச் சந்நிதிமுறை பிரசித்திபெற்றது. அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ், புரசை சபாபதி முதலியார் இயற்றிய தலபுராணம் இத்தலத்திற்கு உள்ளது.
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்
செம்பாக்கம், செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
திருப்போரூர்க்கு மேற்கே 7 கி.மீ.
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அழகாம்பிகை. தலவிருட்சம் நாவல்மரம். இக்கோவிலை ஜம்பு என்னும் சிற்றரசன் கட்டியதாகும். முருகப் பெருமான் திருந்போரூரில் சூரனை சம்ஹாரம் செய்தபோது சூரனின் சிரம் விழுந்த இடம் சிரம்பாக்கம் என்பது மருவி செம்பாக்கம் என வழங்கும் தலமாகும்.
<< Previous  36  37  38  39  40  41  42  43  44  45  46  47  48  49  50  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar