Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் சிவன் கோயில்
 
காஞ்சிபுரம் சிவன் கோயில் (498)
 
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
அகரம், செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
திருப்போரூர்க்கு தெற்கே 8 கி.மீ.
இக்கோயில் 64 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
ஒழுகலூர், செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
செங்கற்பட்டுக்கு தெற்கே 5 கி.மீ.
இக்கோயில் 3-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அக்னிபுரீசுவரர் திருக்கோயில்
வழுவாதூர், செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
திருக்கழுக்குன்றத்திலிருந்து தெற்கே 6 கி.மீ.
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
சதராஸ்-603 103, செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
திருக்கழுக்குன்றத்திலிருந்து கிழக்கே 14 கி.மீ.
கடற்கரைத் தலம். இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் காமாட்சியம்மன் மற்றும் திருவராக சுவாமி.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
இக்கோயில் கைலாசநாதர் கோயிலுக்கு போகும் சாலையில் வடக்கு பக்கமாக உள்ள உபநிஷத்பிரம்மேந்திர மடத்தின் உள்ளே லிங்கவடிவில் அகத்தீஸ்வரர் அகத்திய முனிவர் வழிபட்டதனால் இப்பெயர் பெற்ற தலம்.
அருள்மிகு மங்களேசுரம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
பெரிய காஞ்சி மங்கள தீர்த்ததின் தென் கரையில் உள்ளது. உமாதேவியார் தோழி ஒருத்தியான மங்களை, ஒரு லிங்கம் தாபித்து வழிபட்ட தலம். இதனால் இங்கு மங்கள தீர்த்தம் என்றும் பெயர்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
இக்கோயில் புத்தேரி தெருவிற்கு நேரே மேற்கு பக்கமாக 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கிய மூலவர் கைலாசநாதர். 16 பட்டை லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். திருமாலும் நாரதரும் திரிபுராதியரை மயக்கிய பாவத்தை நீக்கிக் கொள்வதற்குப் பூசித்த தலம். கற்றளியாக அமைக்கப்பட்டதில் இதுவே முதல் தளி எனக் கூறிகின்றனர். இராசசிம்ம பல்லவனால் இத்தலம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கல்வெட்டுக் கூறுகிறது. இப்பல்லவனையே ஐயடிகள் காடவர் கோன் நாயனாராகப் புராணம் கூறுகிறது. இத்தலத்தைக் கட்டி முடித்தவுடன் குடமுழுக்குக் நாள் நியமித்தபோது, திருநின்றவூரில் பூசலார் நாயனார் கட்டிய கோயிலுக்கு தாம் செல்ல இருப்பதாகவும் , வேறொரு நாளை நியமித்துக் கொள்ளும் படியாகவும் இறைவன் கனவில் இச்செய்தியை சேக்கிழாராலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில உள்ள முதல் பிரகாரம் மிகவும் விசேஷம்.
அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோல்
காஞ்சிபுரம்
இக்கோயில் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு தெற்கே ஒரு கி.மீ. தூரத்தில் ராஜ வீதியில் உள்ளது.
இக்கோயில் 7-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் வடக்கு நோக்கிய இராஜகோபுரமும், மூன்று பிரகாரங்களும் மூலவர் சுயம்புலிங்கமாக வடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அம்மன் சுந்தராம்பிகையம்மன். பிரகாரத்தில் சதுர்முகேஸ்வரர் பஞ்ச சந்தி விநாயகர், சரஸ்வதி, சாஸ்தா, பைரவர், நடராஜர், சூரியன், முதலிய சன்னதிகள் <உள்ளன. கூர்ம அவதாரமெடுத்த திருமால் வழிப்பட்டதால் கச்சபேசம் என்று இறைவனுக்கு பெயர். பிரம்மன் கலைமகளோடு வந்து சிருஷ்டித் தொழில் செய்யும் அனுக்கிஹம் பெறப் பூசித்த தலம். இவ்வாலயத்தின் மேற்கு நோக்கிய சன்னதியில் ஸ்ரீ இஷ்டசித்தீஸ்வரர். அசுர குருவாகிய சுக்ராச்சாரியார், வஜ்ஜிரயாக்கையும், மிருத சஞ்சீவினியும் பெற பூஜித்த தலம். தீர்த்தம் இஷ்டசித்தி தீர்த்தம். இத்தீர்த்தத்தின் வடக்கில் தருமசித்தீஸ்வரர், தெற்கில் காமசித்தீஸ்வரர், மேற்கில் மோஷசித்தீஸ்வரர் சன்னிதிகளும் இக்கச்சபேசுவரர் திருக்கோயிலும் தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது.
அருள்மிகு அபிராமீசம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
இக்கோயில் பேருந்து நிலையத்திலிருந்து காமாட்சியம்மன் கோயிலுக்கு போகும் வழியில் உலகளந்த பெருமாள் கோயிலுக்கு தென் பக்கத்தில் உள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கியதும், ஒரு பிரகாரத்துடன் மூலவர் சுயம்புலிங்கமாக அபிராமீஸ்வரர். திருமால் வாமனராகி மாவலியை அழித்ததற்குப் பூசித்த தலம்.
அருள்மிகு அமரேசம் திருக்கோயில்
காஞ்சிபுரம்
இக்கோயில் மேற்கு ராஜவீதியில் மேற்கு பக்கம் சிறிது உட்சென்று உள்ளே உள்ளது. கிழக்கு நோக்கிய மூலவர் சுயம்புலிங்கமாக அமரேஸ்வரர். முப்பத்து முக்கோடி தேவர்களும் வழிபட்ட தலம். ஒவ்வொரு தேவரும் தாம் தாம் முதலென்று அகங்கரித்த பொழுது சிவபெருமான் ஒரு துரும்பினால் அவர்கள் பூசித்த தலம். பல்லவர் காலத்து கோயில்.
<< Previous  37  38  39  40  41  42  43  44  45  46  47  48  49  50  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar