Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் பெருமாள் கோயில்
 
காஞ்சிபுரம் பெருமாள் கோயில் (445)
 
அருள்மிகு ஸ்ரீதேவி பூமி தேவி ஸமேத புண்டரீக வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீதேவி பூமி தேவி ஸமேத புண்டரீக வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், புலிப்பாக்கம், வழி சிங்கப்பெருமாள் கோயில், காஞ்சி மாவட்டம் 603011.
+91 9788705156.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 55 கிமீல் உள்ள இருப்புப் பாதை நிலையம் சிங்கப்பெருமாள் கோயில். சிங்கப் பெருமாள் கோயிலிருந்து செங்கல்பட்டு சாலையில் 8கிமீ தொலைவில் இத்தலம் உள்ளது.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். விஜய நகர மன்னர்கள் போர்க்காலத்தில் இங்கு தங்கிய போது பெருமாள் கனவில் தோன்றி கோயில் கட்ட பணித்ததாக வரலாறு. தாமரை மலர் மேல் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் அருள் பாலிக்கிறார். புண்டரீக வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 8 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு தகவல் தெரிவித்து சேவிக்கலாம்)
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், வல்லிபுரம், பொன்விளைந்த களத்தூர் வழி, காஞ்சி மாவட்டம் 603405.
+91 44-27441182, 9626139060, 9443279185.
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் பாதையில் உள்ள பொன்விளைந்த தளத்தூருக்கு அடுத்து உள்ள ஊர். 8 கிமீல் உள்ளது. பொன்விளைந்த களத்தூர் செங்கல்பட்டிலிருந்து 6கிமீ. அந்த ஊரிலேயே வல்லிபுரத்திற்கான மைல்கள் உள்ளது. இங்கிருந்து மதுராந்தகம், மாமல்லபுரம் செல்ல வழி உள்ளது.
மூலவரை அர்ச்சகர் பிரதக்ஷணம் செய்யும் வண்ணம் 3 அடி இடைவெளி உள்ள கோயில். தாயார் ஒருவர் கையில் கமலமும் மற்றொருவர் கையில் மொக்கும் அமைந்திருப்பது விசேஷம் அம்புஜவல்லித் தாயார் தனி சன்னிதியில் இரு கரங்களும் ஆஹ்வான ஹஸ்தமாக விளங்குவது சிறப்பாகும். ஆழ்வார்கள் மூலவராக 14 பேர் எழுந்தருளியுள்ளனார். சன்னிதியின் நேர் எதிரே சுமார் 100 அடி தூரத்தில் சிறிய திருவடி இருக்கிறார். 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சன்னிதியின் கோபுர வாசலில் நின்று ஸேவித்தால் பலிபீடம் ஒரு பக்கம் துவஜஸ்தம்பம் ஒரு பக்கம், விமானம் ஒரு பக்கமாக மாறி மாறி தெரியும். சன்னிதியில் உள் நின்று பார்த்தால் நேராக இருக்கும். இது ஒர் அதிசய அம்சம். திருமணத்தடை, மகப்பேறு, சர்ப்ப தோஷம் நிவர்த்தியாகும் தலம். ஹனுமானை 9 முறை வலம் வந்து வெற்றிலை மாலை, வடைமாலை சமர்பித்தால் நினைத்தகாரியம் கைகூடும் வைகானஸ ஆகமப்படி சக்ரவர்த்தி பட்டாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் 7 தலைமுறைகளாக கைங்கர்யம் செய்து வருகின்றனர். நித்ய பூஜை, விளக்கு எண்ணெய், கற்பூரம், திருவாரதனைக்கு அரிசி, சாம்பிராணி, பரிமளம், ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம், ஆகியவற்றிற்கு கைங்கர்யம் செய்ய வேண்டிய கோயில். ஒரு கால பூஜை தான் நடைபெறுகிறது. கண்ணுறும் மக்கள் இரு கால பூஜை நடைபெற கைங்கர்யம் செய்து பெருமாளின் அருளுக்குப் பாத்திரமாகலாம். நாகதோஷ மற்றும் திருஷ்டி தோஷ நிவர்த்தி தலம். ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி, கிழக்கு திருமுகமண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: -
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், முகுந்தகிரி, மதுராந்தகம் வட்டம், காஞ்சி மாவட்டம்.
+91 44-27269234, 9962011293.
மதுராந்தகத்திலிருந்து 14 கிமீ தொலைவில் செங்கல்பட்டு சோத்துப்பாக்கம் பாதையில் உள்ளது. காஞ்சியிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணம். செங்கல்பட்டு பைபாஸ் பிரியுமிடத்தில் உள்ளது.
புராதனமாக விளங்கிய சிறிய கோயில். மதுராந்தக ஏரி காத்த இராமர் கோயிலிலிருந்து முற்காலத்தில் இங்கு பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். ஏரியில் கிடைத்த பெருமாள் இந்த ஸ்ரீநிவாஸப் பெருமாள். முன்பு இது பிரதானமாக கோதண்டராம தேவஸ்தான மெனும் இராமர் கோயிலாக விளங்கியது. ராமர் பிம்பங்கள் பின்னமானதால் தற்போது ஸ்ரீநிவாஸர் மட்டும் திகழ்கிறார். பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பணிக்கு முயற்சி நடைபெற்று வருகிறது. ஸ்ரீநிவாஸப் பெருமாள் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், மெய்யூர் 603121, செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சி மாவட்டம்,
+91 44-27293386, 9444330122, 9444006963
செங்கல்பட்டு மதுராந்தகம் சாலையில் பாலாற்று பாலம் தாண்டி இணைப்பு சாலையில் 3கிமீ தூரத்தில் இந்த ஊர். சத்யபுரி மற்றோர் பெயர் டி-6, 7, 8, 9 பேருந்துகள் செங்கல்பட்டிலிருந்து செல்கின்றன. செங்கல்பட்டிலிருந்து 7 கிமீ. சென்னை கோயம்பேடிலிருந்து 129பி. செல்கிறது.
நாலூர், ஆத்தூர், பலாப்பூர், கலியப்பேட்டை ஆகியவற்றுடன் இணைந்த ஊர். 700 ஆண்டுகளுக்கு முன் கடலில் மிதந்து வந்து உற்சவர் விக்கிரகங்கள் இவ்வூரில் ஒதுங்கின. செய்வதறியாது திகைத்த ஊர் மக்களில் மூவரின் கனவில்தோன்றி முன்பு ஒரு காலத்தில் சத்யபுரி என்கிற சமஸ்கிருத பெயரால் அழைக்கப்பட்ட இத்தலத்திலேயே தங்க விழைவதாகப் பெருமாள் திருவுளம் கொண்டார். நாகபட்டணம் சவுந்தராஜப் பெருமாளின் வடிவமைப்புக் கொண்டதால் அந்தப் பெருமானின் பெயரையே சூட்டி ஆராதனை செய்து வருகின்றனர். அங்கு சவுந்தராஜப் பெருமாள். இங்கு சுந்தரராஜர். இக்கோயிலில் முதலில் மூலவர் மட்டுமே சேவை சாதித்து வந்தார். இவ்வாறு ஒதுங்கிய உற்சவரின் அமைப்பு கைவிரல் முதற்கொண்டு அனைத்து அம்சங்களும் இப்பெருமாள் (மூலவர்) போலவே இருந்தது ஆச்சரியமான உண்மை. அத்தனைச் சாமுத்ரிகா லக்ஷணமும் ஒரே மாதிரியாகத் திகழ்கிறது என்பது கண்டு கண்டு வியக்கத்தக்கச் செய்தி. சன்னிதியில் உள்ள மிகச்சிறிய காளிங்க நர்த்தன கிருஷ்ணர் ருக்மணி சத்யபாமா சகிதம் உள்ளார். சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சித்ரவாடி, பொலாம்பாக்கம் அஞ்சல், மதுராந்தகம் வட்டம், 603309 காஞ்சி மாவட்டம்.
+91 44-27540073, 27540074, 9443240074. 9840461920.
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் இருப்புப் பாதை நிலையமான மதுராந்தகத்திலிருந்து கூவத்தூர் பாதையில் 8கிமீ. முதுகரைக்கு அருகில் உள்ளது. செய்யூரிலிருந்து 14 கிமீ. செய்யூர் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்த் தலம்.
இந்தக் கோயில் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மேலும் வேணுகோபாலஸ்வாமி கோயில் அருகே கட்டப்பட்டுள்ளது. சிம்மகிரியில் லக்ஷ்மி நரசிம்மர் கோயில் மலை மேல் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. 13-02-2011 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
பூஜை நேரம்: காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை.
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், வில்லியம்பாக்கம், வழி ஆத்தூர், செங்கல்பட்டு வட்டம், காஞ்சி மாவட்டம் 603101.
+91 44-27426229, 9751285416.
செங்கல்பட்டு ஆத்தூரை அடுத்து இந்த ஊர் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து ஆத்தூர் 6 கிமீ. ஆத்தூரிலிருந்து வில்லியம்பாக்கம் 3 கிமீ. ஆத்தூர் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிற்கு முன்னால் வரும் மேம்பாலத்தில் கீழே செல்லும் காஞ்சி பாதையில் வலப்புறம் திரும்பியவுடன் முதலில் வரும் ஊர். இங்கு முக்தீஸ்வரர் கோயிலும் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயிலும் உள்ளது.
இந்தக் கோயில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். கோயில் ஆலம் என்கிற ஊரைச் சேர்ந்த ராமானுஜ தேசிகன் ஆச்சாரியார் என்பவரால் திருவாராதனை செய்யப்பட்ட பெருமாள். தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. வாகன மண்டபம், இதர சன்னிதிகள் யாவும் உள்ளன. பாலாற்றின் மறு கரையில் உள்ள சித்தஞ்சேரி என்கிற இடத்தில் தொன்மையான சிவன் கோயிலும் உள்ளது. இதே ஆத்தூரில் உள்ள தொன்மை வாய்ந்த கல்யாண வரதராஜப் பெருமாள் கோயில் ரெட்டியார் தெருவில் உள்ளது. ஆத்தூர் டீக்கடை பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டும். கோப்பெருஞ்செங்கன் கட்டியது. சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1231ல் தெலுங்கு சோழ மன்னன் திருக்காளத்தி தேவன் விஜயகண்ட கோபாலனுக்கு காஞ்சி வரதராஜர் கனவில் தோன்றி கோயில் கட்ட பணித்ததாக வரலாறு. கல்யாணத் தடை நீக்கும் பெருமாளாக இவர் விளங்குகிறார். ஸ்ரீநிவாஸப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுகமண்டலம்.
அருள்மிகு விஜய வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு விஜய வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், தொழுப்பேடு, பாபுராயன்பேட்டை, மதுராந்தகம் வட்டம், காஞ்சி மாவட்டம் 603310.
+91 9790986393.
அச்சிரப்பாக்கத்திலிருந்து பாதை பாபுராயன்பேட்டைக்குச் செல்கிறது. மேலும் அச்சிரப்பாக்கம் அருகில் உள்ள பெரும்பேற்றுக் கண்டிகையில் அம்புஜவல்லித்தாயார் உடனுறை கரி வரதராஜப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் திருப்பணி நடைபெற உள்ளது. இந்த ஊரில் மலை மேல் உள்ள முருகன் அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர்.
தொன்மை வாய்ந்த தலமிது. முற்காலத்தில் ஸ்ரீரங்கத்தைப் போன்று பெரிய அளவில் இருந்த கோயில். திருப்பணி வெகு நாட்களாக நடைபெறவில்லை. வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
அருள்மிகு ஆஞ்சநேயஸ்வாமி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஆஞ்சநேயஸ்வாமி தேவஸ்தானம் திருக்கோயில், கானாத்தூர், வண்டலூர் திருப்போரூர் வழி, சென்னை 600048.
+91 9445299105.
வண்டலூர் திருப்போரூர் பாதையில் உள்ளது. மலை மேல் கோயில். வண்டலூர் கேளம்பாக்கம் பாதையில் கேளம்பாக்கத்திலிருந்து 5கிமீ வலப்புறம் சென்றால் புதுப்பாக்கத்தில் சிறிய மலை மீது உள்ளது வீர ஆஞ்சநேயர் கோயில் 108 படிகள் கொண்டது. சாலையில் உள்ள ஆஞ்சநேயர் சிலை வழிகாட்டியாக உள்ளது. கொளத்தூரிலிருந்து 4கிமீ. மேலும் ஈ.சீ ஆர் சாலையில் கானாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மாயாஜால் ஃபன் சிடிக்கு எதிரே உள்ள மீன் மார்க்கட்டிற்கு அருகே பிரியும் முதல் வலப்புறச் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பூரி ஜகந்நாதர் கோயில் உள்ளது. கடற்கரைக்கு மிக அருகில் உள்ள தலம். நல்ல இயற்கை வனப்புடன் விளங்கிறது.
சஞ்சீவ பர்வதத்தைக் கொணர்ந்த போது சூரிய நமஸ்காரத்திற்காக இங்கு ஆஞ்சநேயர் சிறிது நேரம் தங்கியதாக வரலாறு. புதுப்பாக்கம் மலை யானை படுத்தது போல் உள்ளதால் கஜகிரி என்று பெயர். 12ம் நூற்றாண்டு சாளக்ராமத் திருமேனி. ஆதி அந்தப் பிரபு என விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளனர். சமுத்திரம் பார்த்த திருமுகமண்டலம். அருகே சக்கர காளியம்மன் தற்போது கட்டப்பட்ட கோயில் உள்ளது. தற்போது இந்த ஆஞ்சநேயர் கோயில் உட்பட 12 கோயில்களுக்கு யாத்ரிகர்கள் டூர்களில் வருகின்றனர். ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோயில் வடக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை
அருள்மிகு யோக ஆஞ்சநேயர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு யோக ஆஞ்சநேயர் தேவஸ்தானம் திருக்கோயில், செங்காடு, இல்லளூர் போஸ்ட், திருப்போரூர் வழி, செங்கல்பட்டு வட்டம், காஞ்சி மாவட்டம் 603110.
+91 9962042066, 9884042064.
திருப்போரூருக்கு அருகே உள்ளது.
இந்தக் கோயிலில் யோக நரசிம்மர் மற்றும் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கின்றனர்.
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், கருங்குழி, வழி வடலூர், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் 607303.
+91 4142-299871, 9487155477.
வடலூருக்கு அருகே உள்ள தலம்.
2000 ஆண்டு தொன்மை வாய்ந்த இத்தலம் விஜயநகர மன்னர் அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோயில், த்ரேதாயுகத்தின் முடிவில் கோபில மகரிஷி சரயு நதிக்கரையில் தலம் செய்ய நாரதரின் அறிவுரையின் பேரில் மிகச்சிறந்த தலமான இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வணங்கும் பாக்கியம் பெற்றார். கோபில மகரிஷிக்கு காட்சி கொடுத்த இப்பெருமாள் அவர் விருப்பப்படி துவாபர மற்றும் கலியுகங்களிலும் அவ்வாறே காட்சி கொடுப்பதாக உறுதி அளித்து இன்றும் சேவை சாதிக்கிறார். சோழர் காலத்தில் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் இடிக்கப்பட்டு, மூலவர் கடலில் எறியப்பட்ட போது இத்தலத்தில் அந்தக் கோயிலின் உற்சவர் பாதுகாக்கப்பட்டு பிற்காலத்தில் இராமானுஜர் விஜயம் செய்து திருப்பதியில் பிரதிஷ்டை செய்ததாக வரலாறு. ராமானுஜர் மங்களாசாசனம் செய்துள்ளார். அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை ராமலிங்க சுவாமிகள் வழிபட்ட பெருமாள். திருவருட்பாவில் பாடல் பெற்ற தலம். வள்ளலார் ஜோதியில் கலந்த தைப்பூச திருவறை ஜோதி தரிசனத்திற்கு முன்பு இங்கு கற்பூரம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. வள்ளலாரின் பக்தர் பாலு ரெட்டியாருக்கு வயிற்று வலியினைப் போக்கியதற்கு நன்றி தெரிவித்து கொடுத்த நிலங்களை அவர் இக்கோயிலுக்கு தானம் செய்ததாக வரலாறு. மகாபாரதத்தில் நடந்து களைத்து கண்ணனின் வடிவாக இங்கு பெருமாள் காட்சி அளிக்கிறார். திருமணத்தடை நீக்கம், சனி தோஷ நிவர்த்தி மற்றும் பொருளாதாரம் மேம்படுத்தும் தலம். திருவோணத்தன்று வழிபாடு செய்து விசேஷம். லக்ஷ்மி நாராயணப்பெருமாள் ராஜ்யலக்ஷ்மி ஸ்ரீதேவி பூதேவி கலியாண ஸ்ரீநிவாஸன் அமர்ந்த திருக்கோலம் (சுகாசனம்) கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை.
<< Previous  41  42  43  44  45  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar