Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் சிவன் கோயில்
 
காஞ்சிபுரம் சிவன் கோயில் (498)
 
அருள்மிகு திருப்பதங்காடு உடையார், (மகாதேவர், நாயனார்) திருக்கோயில்
அருள்மிகு திருப்பதங்காடு உடையார், (மகாதேவர், நாயனார்) திருக்கோயில், பாலூர்,காஞ்சிபுரம் மாவட்டம்.
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்<லும் சாலையில் 11 கி.மீ, தொலைவில் பாலூர் அமைந்துள்ளது.
இரண்டு கோபுரங்கள் கொண்ட நுழைவாயிலு<டன் அமைந்த கோயிலின் நந்திமண்டபம் பல்லவர் காலத்துச் சிம்மத் தூண்களைக் கொண்டதாக அழகு சேர்க்கிறது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், உற்சவ மண்டபம் என்று, பல சிறப்புகளோடு திகழும் கோயில்.
அருள்மிகு முக்தீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு முக்தீசுவரர் திருக்கோயில், ஆத்தூர்,காஞ்சிபுரம் மாவட்டம்.
செங்கல்பட்டிலிருந்து பாலு<õர் செல்லும் சாலையில் உள்ள ஆத்தூரில் இக்கோயில் அமைந்துள்ளது
செங்கல்பட்டு நகரத்திலும் சிவாலயங்கள் உள்ளன. காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அவற்றுள் குறிப்பிடப்பட வேண்டியவை. கோதண்ட ராமசுவாமி மற்றும் கைலாசநாதர் கோயில்கள் முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.
அருள்மிகு பதங்கீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு பதங்கீசுவரர் திருக்கோயில், பாலூர்,காஞ்சிபுரம் மாவட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலூர் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது.
பதங்கம் என்பது சூரியனைக் குறிக்கும் சொல். சூரியன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால், பதங்கீசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். சன்னதியின் முகப்பில், கம்பாநதியின் வெள்ளப்பெருக்கிலிருந்து ஈசனின் திருமேனியைக் காத்திடும் வகையில், அன்னை சிவலிங்கத்தை தழுவிய கோலத்தை அழகுமிக்க புடைப்புச் சிற்பமாகக் காண்கிறோம்.
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில்
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
சிரசில் முன்குடுமியோடு காட்சி தரும் சிகாநாதர் அருள்பாலிக்கும் திருக்கோயில். ஊரின் எல்லையில் பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். கருவறை விமானம் கஜ ப்ருஷ்டம். கூற்றுவ நாயனார் திருப்பணி செய்த திருக்கோயில். பஞ்சமூர்த்தி திருவுலாவில், கூற்றுவநாயனார், சண்டிகேசுவரரின் இடத்தில் பவனி வருவது தனிச்சிறப்பு.
அருள்மிகு வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில், புலிப்பாக்கம்,காஞ்சிபுரம் மாவட்டம்.
செங்கல்பட்டுக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது புலிப்பாக்கம்.
புலிவனம், புலிவாய், புலியூர் என்று அடைமொழியோடு வரும்போதே, புலிக்கால் முனிவர் வழிபட்ட திருத்தலம் என்று கொள்ளலாம். அங்கே யோகமலையில் வியாக்ரபுரீசுவரர் எழுந்தருளியுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாராயணி அம்மன் சிலையுடன் பரிவார தேவதைகள் திருமேனிகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கும் சிறப்பாக நடந்தேறியது.
அருள்மிகு அஷ்டபுரீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு அஷ்டபுரீசுவரர் திருக்கோயில் ஆனூர் காஞ்சிபுரம்
செங்கல்பட்டு-திண்டிவனம் நெடுஞ்சாலையிலிருந்து சற்றே விலகி, கிழக்கே பூதூர் செல்லும் பாதையில் உள்ளது அனூர்.
அஷ்டபுரீசுவரர் என்ற திருநாமத்துடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். சவுந்திரவல்லி தனி சன்னதி கொண்டுள்ளாள். சிறிய அழகிய திருக்கோயில்.
அருள்மிகு குணம் தந்த நாதர் திருக்கோயில்
அருள்மிகு குணம் தந்த நாதர் திருக்கோயில் ஓரகாட்டுப்பேட்டை காஞ்சிபுரம்
செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் 4 கி.மீ பயணித்து ஆற்றைக் கடந்தால் ஊரை அடையலாம்
எம்பெருமான் காஞ்சி மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் குணம் தந்த நாதராக எழுந்தருளியுள்ளார். அன்னை திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். உள்சுற்றில் காசி விசுவநாதர் சன்னதியும் உள்ளன. இங்கிருந்து ஆற்றோரமாகவே 2 கி.மீ தெற்கே சென்றால் காவி தண்டலம் என்ற தலத்தை அடைவோம்.
அருள்மிகு நஞ்சுண்டேசுவரர் திருக்கோயில்
அருள்மிகு நஞ்சுண்டேசுவரர் திருக்கோயில் சாலவாக்கம் காஞ்சிபுரம்
திருமுக்கூடலிலிருந்து செங்கல்பட்டை சென்றடைய பாலாற்றின் கரை வழியே பயணித்து, சாலவாக்கத்தை அடையலாம். உத்திரமேரூர்-மாமண்டூர் சாலையில் கூட்டு ரோடிலிருந்து வடக்கே 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவர்ணாம்பிகையுடன், சுவர்ணபுரீசுவரர் எழுந்தருளியுள்ள திருத்தலம் இது. பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருத்தலம் ஆலயம் அருகில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் மேலவலம் காஞ்சிபுரம்
படாளம் கூட்டு ரோட்டைக் கடந்ததும் மேலவலம் பேட்டை எனும் சந்திப்பை அடைகிறோம். அங்கிருந்து மேற்கில் 3 கி.மீ பயணித்து புதுப்பட்டு எனும் கிராமத்தை அடைகிறோம்.
மூலவர் ஆபத்சகாயேசுவரர் எனும் திருநாமங்கொண்டு எழுந்தருளியுள்ளார். கம்பீரமான சிவலிங்கத் திருமேனி. கருவறையின் பின்புறம் மாடத்தில் திருமால் எழுந்தருளியுள்ளார்.
அருள்மிகு அமரேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு அமரேஸ்வரர் திருக்கோயில் சோமங்கலம் குன்றத்தூர்
குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் பாதையில் சோமங்களம் அடுத்தாற்போல் அமரம் பேடு உள்ளது. சென்னை கிண்டி- போரூர்- குன்றத்தூர்- சோமங்கலம்- அமரம்பேடு ஸ்ரீ பெரும்புதூர் பேருந்து எண் 88 ஆர்
இந்திரன் ஈசனை வழிபட்ட தலங்களை வழிபடுவது விசேஷம். இந்திரன் வழிபட்டதால் அவன் பெயரிலேயே அமரேஸ்வரர் என்று பெயர் கொண்ட ஈசன். எதிரில் உள்ள குளத்தில் தாமரை மலர்கள் அதிகம் உள்ளதால் தாமரைக் குளம் என்றும் இந்திரன் நீராடியதால் இந்திரன் குளம் என்றும் இக்குளம் அழைக்கப்படுகிறது. விடியற்காலையில் கைலாய மலை போலவும் தேவர்கள் பாடுவது போலவும் அமைந்துள்ள குளக்கரை இங்கு விசேஷமானதாகும்.
<< Previous  47  48  49  50  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar