Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>கன்னியாகுமரி மாவட்டம்>கன்னியாகுமரி சிவன் கோயில்
 
கன்னியாகுமரி சிவன் கோயில் (52)
 
அருள்மிகு தாணுலிங்கேசுவரர் திருக்கோயில்
தெங்கம்புதூர், நாகர்கோயில் வட்டம் கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோயிலிருந்து தெற்கே 7 கி.மீ.
இக்கோயில் 35 செணட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு குந்தீஸ்வரர் திருக்கோயில்
அனந்தபுரம், தோவாளை வட்டம் கன்னியாகுமரி மாவட்டம்
பூதப்பாண்டியிலிருந்து வடகிழக்கே 6 கி.மீ.
இக்கோயில் 81 செண்ட் நிலப்ரப்பபளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
இறச்சகுளம், தோவாளை வட்டம் கன்னியாகுமரி மாவட்டம்
பூதப்பாண்டியிலிருந்து தெற்கே 6 கி.மீ.
பழையாற்றின் மேற்கு பகுதியில் இக்கோயில் 27 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் ஜடாயுபுரத்தில் ஜடாதேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
பறக்கை, நாகர்கோயில் வட்டம் கன்னியாகுமரி மாவட்டம்
சுசீந்திரத்திலிருந்து தெற்கே 3 கி.மீ.
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரில் சொக்கநாதர் திருக்கோயிலும், காசிவிஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளன. இவ்வூர் பெருமாள் கோயிலில் சிறப்புற்று விளங்குகிறது. மதுசூதனப் பெருமாள் ஆலயம் மிகவும் பிரபலமானது. கருடனுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படும் தலமாகும். சித்திரை மாதம் 10ஆம் நாள் சூரிய ஒளி மூலவரின் பாதங்களில் படுகிறது. பங்குனி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு பூதலிங்கசுவாமி திருக்கோயில்
பூதப்பாண்டி, தோவாளை வட்டம் கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோயிலிருந்து வடக்கே 10 கி.மீ.
பழையாற்றின் மேற்குக் கரையில் தாகைமலையின் அடிவாரத்தில் இக்கோயில் உள்ளது. மூலவர் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அம்மன் சிவகாமியம்மை. உள்பிரகாரத்தில் விநாயகர், முருகப்பெருமான், நடராஜர், நினைத்ததை முடிக்கும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர் முதலிய சன்னிதிகள் உள்ளன. மூலஸ்தானம் அமைந்துள்ள இப்பாறையைச் சுற்றிலும் எளுப்பப்பட்டிருக்கும் உயர்ந்து கற்சுவர் ஒரு சிறிய கோட்டையின் தோற்றத்தை கொண்டதாகும். கோயிலின் வடக்கே திருக்குளம் உள்ளது. இவ்வாலயத்திற்கு விமானம் இல்லை. செட்டி மண்டபத்தில் உள்ள இரு துவாரகர்களினன் தோற்றம் சிறப்பானதாகும். தைமாதத்தில் பிரமோற்சவமும், ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றன. நாள்தோறும் 6 கால் பூஜை நடைபெறுகிறது.
அருள்மிகு ஜெயந்தீஸ்வரர் திருக்கோயில்
அழகிய பாண்டியபுரம், தோவாளை வட்டம் கன்னியாகுமரி மாவட்டம்
பூதப்பாண்டியிலிருந்து வடக்கே 5 கி.மீ.
பழையாற்றின் கரைப்பகுதியில் இக்கோயில் 57 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கல்வெட்டுக்களில் இவ்வூரை அதியனூர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூர்க்கு அருகில் உள்ள குறத்தியறை என்னும் சிற்றூரில் ஒளவையாரம்மன் கோயில் உள்ளது.
அருள்மிகு ஜயந்தீசுரர் திருக்கோயில்
தாழைக்குடி, தோவாளை வட்டம் கன்னியாகுமரி மாவட்டம்
பூதப்பாண்டியிலிருந்து தெற்கே 4 கி.மீ.
இக்கோயில் 2-38 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அழகம்மை. தாழைகள் நிறைந்த காட்டைச் சீராக்கி மக்கமள் குடியேறியதால் தாழைக்குடி என்று பெயர் பெற்றது. தேவேந்திரன் மகன் ஜயந்தன் இத்தலத்திற்கு வந்து தங்கிச் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவர் ஜயந்தீசுவரமுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலை வீரகேரளவர்மன் கட்டியதாக கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. நாள்தோறும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு நீலகண்ட சுவாமி திருக்கோயில்
அருள்மிகு நீலகண்ட சுவாமி திருக்கோயில் கல்குளம் நாகர்கோவில்
பத்மநாபபுரம் அழகான அரண்மனை கொலு வீற்றிருக்கும் இயற்கைப் பேரழகு நிரம்பிய ஊர். நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராகத் திகழ்ந்த ஊர் இது. இங்குள்ள கல்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற நயினார் நீலகண்ட சுவாமி கோயில்.
கேரளப் பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும் கட்டுமானங்கள் அமைந்த கோயில் இது. மிகவும் பழமையான இந்தக் கோயிலில் ஏராளமான சிற்பங்களை நிறுவித் திருப்பணி செய்தவர் மன்னர் திருமலை நாயக்கர். கேரள மன்னனான மார்த்தாண்ட வர்மாவும் திருப்பணிகள் செய்து இந்த ஆலயத்தை அழகுப்படுத்தியிருக்கிறார். இங்கே பிராகாரத்தில் கையில் விளக்கு ஏந்திய அழகுப் பாவையர் சிலைகள் ஒரே வரிசையில் ஏராளமாக நிற்கும் அழகோ அழகு!
அருள்மிகு மதுசூதனப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு மதுசூதனப் பெருமாள் திருக்கோயில், பறக்கை, நாகர்கோவில்.
நாகர்கோவிலுக்கு தென்கிழக்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருத்தலம் பறக்கை.
இத்தலத்தில் மதுசூதனப் பெருமாள் கோயில் கொண்டு அருள்புரிகிறார். இக்கோயில் பெருமாளுக்காக, காஞ்சிபுரத்தில் சிற்ப சாஸ்திரத்தில் நிபுணனான ஒரு சிற்பி, கருங்கல்லில் ஒரு கருடனை பெருமாளைத் துதித்தபடி வடித்தான்.
அருள்மிகு சிவபெருமான் திருக்கோயில்
அருள்மிகு சிவபெருமான் திருக்கோயில், இறச்சகுளம், நாகர்கோவில்.
நாகர்கோவில் அருகேயுள்ள இறச்சகுளம் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகிறார். கோயிலின் வடக்குப் பக்கம் சிறிய பாறை வடிவில் சாஸ்தா அருள்பாலிக்கிறார்.
<< Previous  3  4  5  6  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar