Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>கன்னியாகுமரி மாவட்டம்>கன்னியாகுமரி பெருமாள் கோயில்
 
கன்னியாகுமரி பெருமாள் கோயில் (74)
 
அருள்மிகு அருள்மிகு நரசிம்ம மடம்
திரவட்டார் ,கல்குளம் வட்டம்,கன்னியாகுமரி
அருள்மிகு மதுசூதனப் பெருமாள் திருக்கோயில்
எருளப்பபுரம்,கோட்டார்,நாகர்கோயில்-629 002, கன்னியாகுமரி மாவட்டம்.
+91 4652 241421 242701
நாகர்கோவிலிலிருந்து மணக்குடி செல்லும் பாதையில் 5 கி.மீ. தூரத்தில் ஊர். சமீபத்தில் உள்ள கண்டாங்குளம் எதிரில் சிவன் கோயிலும் எதிரில் மகாதேவரும் உள்ளனர்.
மதுசூதனப் பெருமாள் நின்ற திருக்கோலம், கிழக்கு திருமுகம்.தாயார் லட்சுமி தேவி மற்றும் பூமிதேவி திறக்கும் நேரம்:காலை 5.00 முதல் 11.00 வரை, மாலை 5.00 முதல் 8.00 வரை.
அருள்மிகு பாலகிருஷ்ணன் திருக்கோயில்
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரிலிருந்து வடமேற்காக 19 கி.மீ.
இக்கோயில் திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் பாலகிருஷ்ணன் இருகரங்களில் வெண்ணெய் உருண்டையுடன் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கிறார். பிராகாரத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர், நம்மாழ்வார். பேயாழ்வார், கிணத்தடிலிங்கம், திருமகள், பூமிதேவியுடன் கூடிய உற்சவ பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். இக்கோயில் தி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் ÷வணாட்டரசன் ஆதித்யவர்மன் இக்கோயிலை கட்டியதாகவும், கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது. இக்கோயிலின் காவல் தெய்வமான பூதத்தான் சிறந்த வரப்பிரசாதியாக வழிபடப்படுகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று வெகு விமரிசையாக உற்சவம் கொண்டாடப்படுகிறது. தினமும் 4 கால பூஜை நடைபெறுகிறது.
அருள்மிகு மதுசூதனப் பெருமாள் திருக்கோயில்
பறக்கை கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவிலிருந்து தென்கிழக்காக 6 கி,மீ.
இவ்வூரில் அமைந்துள் திருக்கோயிலின் மூலவர் மதுசூதனப் பெருமாள் இருக்கரங்களில் சங்கும், சக்கரமும். கீழ் வலது கரம் அபயமுத்திரையையும், இடது கரம் இடுப்பில் ஊன்றியும் காட்சியளிக்கிறார். இச்சன்னதியை நோக்கியவாறு அஞ்சலி ஹஸ்தராகக் கருடாழ்வார் காட்சியளிக்கிறார். இக்கோயில் தி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய திருக்கோயிலாகும். காஞ்சிபுரத்தை சேர்ந்த சிற்பி ஒருவன் சில்ப சாத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு கல் கருடனை மிகவும் தத்ரூபமாக வடித்த போது அக்கல் கருடன் உயிர்பெற்றுப் பறந்து இத்தலத்திற்கு வந்து இவ்வாலயத்தில் உள்ள குளத்தில் நீராடி இறைவனை வழிப்பட்டு செல்லும் போது இதனைக் கண்ட ஒருவன் தன் வாளால் வீசியபோது கருடனின் இறகு வெட்டுப்பட்டு இத்தல இறைவனான மதுசூதனப் பெருமாளை அழைத்தவாறு கருடன் வீழ்ந்து இறைவனின் அருளால் மோட்சம் பெற்றது. இதைக் குறிக்கும் விழாவாக ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் 10ம் நாளன்று கதிரவனின் கதிர்கள் இத்தல இறைவன் மீது விழுகின்றன. தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
<< Previous  6  7  8 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar