Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>கரூர் மாவட்டம்>கரூர் பெருமாள் கோயில்
 
கரூர் பெருமாள் கோயில் (58)
 
அருள்மிகு புற்றுப்பெருமாள் (ம) நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்
எருமார்பட்டி, கரூர் மாவட்டம்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
புலியூர்,கோவில்பாளையம்,புலியூர் சிமெண்ட் ஆலை போஸ்ட்,கரூர் மாவட்டம்-639 114
+91 422 2532366 92442 82844
திருச்சி கரூர் கோவை சாலையில் உள்ள ஊர். திருச்சியிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரமும் கோவையிலிருந்து சுமார் 120 கி.மீ. தூரத்தில் உள்ளது. செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் எதிரே செல்லும் சாலையில் சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்தில் ஊர்.
நின்ற திருக்கோலம், கிழக்கு திருமுகம். திறக்கும் நேரம்: காலை 9.00 முதல் 10.00, மாலை 5.00 முதல் 6.00 வரை.
அருள்மிகு யோக நரசிம்ம சுவாமி திருக்கோயில்
சிந்தலவாடி அஞ்சல்-639 129,கரூர் மாவட்டம்
+91 432 3242628
திருச்சி கரூர் சாலையில் சிந்தலவாடி கிராமத்தின் சாலையின் தென்புறம் உள்ள தலம். மகாதானபுரம், இலாலாப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகில் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. மாயனூர் ஜெயங்கொண்டம் நகரப்பேருந்தில் குளித்தலை மாயனூர் பகுதியிலிருந்து வரலாம். பேருந்து நிலையத்திலிருந்து 100 அடியில் கோயில். திருச்சியிலிருந்து 7 மணிக்கு புறப்படும் ரயில் மகாதானபுரத்திற்கு 8.30க்கு வரும்.
வீற்றிருந்த திருக்கோலம். தெற்கு திருமுகம் திறக்கும் நேரம்: காலை 7.00 மணி முதல் ஒரு காலம் உச்சி கால பூஜை. மாலை தீபம் மட்டும் ஏற்றப்படுகிறது.
அருள்மிகு அபயபிரதானரங்கநாதர் திருக்கோயில்
கருவூர் கரூர் மாவட்டம்
நாமக்கல்லிருந்து தெற்கே 32 கி.மீ.
அமராவதி ஆற்றின் வடகரையில் இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஒரு பிராகாரத்துடன், மூலவர் அபயபிரதானரங்கநாதர் பள்ளி கொண்டு காட்சியளிக்கிறார். தாயார் ரங்கநாயகி. பிராகாரத்தில் கருடன், அனுமன் உள்ளனர். இத்தல இறைவனை திருமகள், பூமிதேவி, அனுமன், மார்க்கண்டேயமுனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி இக்கோயிலை கட்டியதாக வரலாறு. தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. சித்திரை மாதம் 11 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு கல்யாண நரசிங்கபெருமாள் திருக்கோயில்
ராமகிரி கரூர் மாவட்டம்
திண்டுக்கல்லிருந்து வடக்கே 40 கி.மீ.
இக்கோயில் சிறிய இராஜகோபுரத்துடன் ஒரு பிராகாரத்துடன் மூலவர் கல்யாண நரசிங்கபெருமாள் மற்றும் தனிச்சன்னதியில் கமலவல்லித்தாயார் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர். பிராகாரத்தில் ஆழ்வார் சன்னதி உள்ளது. நாயக்கர் மன்னர்கள் இக்கோயிலை விரிவுபடுத்தி திருப்பணிகள் செய்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகிறது. தினமும் இரண்டு காலம் வைகானச முறைப்படி பூஜை நடைபெறுகிறது. பங்குனி மாதம் பிர÷மாற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு நீலமேகப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிக நீலமேகப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், குளித்தலை, குளித்தலை போஸ்ட், கரூர் மாவட்டம் 639104.
+91 9944558249, 9443360611.
ஸ்ரீரங்கத்திலிருந்து காவிரி தென்கரையில் 45கிமீ தூரம் கடம்பந்துறை அருகில் திருச்சி கரூர் சாலையில் உள்ளது.
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியன் திருப்பணி செய்தது. மகேந்திரவர்மனும், முதலாம் நரசிம்ம பல்லவனும் திருப்பணி செய்துள்ளார்கள். ஸ்ரீரங்கத்தைப் போல் 7 மதில் சுவர்கள் அமைந்திருந்த கோயில். அனந்தாழ்வான் என்கிற பக்தர் இக்கோயில் மற்றும் திருப்புல்லாணி கோயில் கட்டமைப்புகளுக்கு 18ம் நூற்றாண்டில் உதவியதாக செய்தி. நீலமேகப் பெருமாள் கமலநாயகி கிழக்கு திருமுக மண்டலம் நின்று திருக்கோலம். விசேஷ நாட்களில் இரவு 9.30 வரை.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்
அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில், கரூர் தேவர்மலை, கரூர் மாவட்டம் 639001.
+91 9443338941, 9443154677, 9894227527.
கரூரிலிருந்து குஜ்ஜிலியம்பாறை வழி திண்டுக்கல் செல்லும் சாலையில் 30கிமீ தொலைவில் உள்ள பாளையத்திலிருந்து கிழக்கில் 5கிமீ தேவர்மலை டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் பாளையத்திலிருந்து உள்ளன. பாளையத்திலிருந்து திருச்சி, மணப்பாறை செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியாகச் செல்லும்.
கதிர் நரசிங்கப் பெருமாள் ஹிரண்யன் வதம் முடித்துத் திரும்பும் போது தேவர்களும் ரிஷிகளும் வழி மறித்ததால் தேவர்மறி என்பது மருவி தேவர்மலையானது. இக்கோயிலுக்கு அருகே அவர் அப்போது உண்டாக்கிய குளமே மோக்ஷ தீர்த்தமாகும். (பிரம்ம மற்றும் ஆகாச தீர்த்தம் இதர பெயர்கள்). 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பதி கிருஷ்ணதேவராயர் மற்றும் நாயக்கர் பாண்டியர் காலத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்யப்பட்டதாகும். ஆஹ்வான இடது கரம் (பக்தர்களை அழைப்பதும்), அபய ஹஸ்தம் (பக்தர்களைத் காப்பது), நெற்றிக் கண்ணோடு விளங்கும் இவரது கோலம் சிறப்பானதாகும். பிரதோஷ காலத்தில் இவரைச் சுற்றி 11 முறை வலம் வந்தால் காரிய சித்தி கிட்டும். மேலும் திருமணத்தடை, குடும்பப் பிரச்சினை விலகும். வில்வம் தல விருக்ஷம். இத்தலத்தில் சுவாதி திருமஞ்சனம் மற்றும் மார்கழி கருட சேவை, வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறுகின்றன. தற்போது திருப்பணி நடைபெற்று வருவதால் பக்தர்கள் மனமாற நன்கொடை அளித்து இறைவனது அருளுக்குப் பாத்திரமாகலாம். லக்ஷ்மி நரசிம்மர் கதிர் நரசிங்கப் பெருமாள், கமலவல்லி, அமர்ந்த திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை.
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், இராஜேந்திரம், வழி குளித்தலை, குளித்தலை, கரூர் மாவட்டம் 639104.
+91 9952617057.
திருச்சி குளித்தலை சாலையில் குளித்தலையிலிருந்து 5கிமீல் ஊர். திருச்சியிலிருந்து குளித்தலை இருப்பு நிலையம் 37 கிமீ. கரூரிலிருந்து 39 கிமீ.
883 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழியின் விளக்கத்தில் இடம்பெற்ற தலம். திரு ஆய்குலத்து ஆழ்வார் வாழ்ந்த தலம். காணும் பொருள்களிலும் கேட்கும் ஒலியிலும், கேட்கும் குரலிலும் கண்ணணையேக் கண்டவர் இவர். மகானின் சிந்தனை, போக்கு, செயல் யாவும் கண்ணனைக் குறித்ததே. ஒரு சமயம் தனது வயலுக்குச் சென்ற போது மேகக் கூட்டத்திலும் கண்ணனைக் கண்டு மூர்ச்சையாகியதாக வரலாறு குறிப்பிடுகிறது. மேலும் இராமானுஜரின் பிரதான சீடரான கூரத்தாழ்வார் இத்தலத்தில் தங்கி ஆராதித்த வரதராஜப் பெருமாள் இவர். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பதி. உடையவர் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் சென்ற போது இத்தலத்திலேயே கூரத்தாழ்வார் தங்கிவிட்டார். திருமலைசாகரம் தல வரலாற்றில் குறிப்பிட்டதுபோல் உடையவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் கட்டம் வரை கூரத்தாழ்வார் இங்கேயே தங்கினார். பூணூலையும் குடுமியினையும், திருமண்ணையும் துறந்த ஓர் அந்தணர் மீண்டும் வீட்டிற்கு மனம் மாறி வந்து இவையனைத்தையும் தரித்தபோது அவனது பெற்றோர்கள் கூரத்தாழ்வாரை கண்ணுற்று மாற்றம் பெற்றாயா எனக்கேட்டதாக வரலாறு. திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாக்கும் தலம். வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி நின்ற திருக்கோலம். கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை
<< Previous  4  5  6 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar