Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாமக்கல் மாவட்டம்>நாமக்கல் முருகன் கோயில்
 
நாமக்கல் முருகன் கோயில் (95)
 
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காந்தமலை, மோகனூர் 637015, நாமக்கல் வட்டம், மற்றும் மாவட்டம்.
+91 9842441633
நாமக்கல் அருகே உள்ள மேகனூரிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. மோகனூரிலிருந்து நாமக்கல் 9 கிமீ. 39 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். 12 ராசிகளையும் 27 நட்சத்திரங்களையும் இவை குறிக்கின்றன.
அபயானந்த சுவாமி வழிபட்ட தலம். தேவார வைப்புத்தலம் மோகனூரில் உள்ளது. இந்த அசலதீபேஸ்வரரின் மீது பங்குனி இரண்டாவது வாரத்தில் இரண்டு தினங்கள் சூரிய ஒளி காலையில் அம்பாள் மீதும் மாலையில் சுவாமி மீதும் விழும். வல்லப கணபதி, காவடி தூக்கிய இடும்பன், கால பைரவர் சன்னிதிகள் உள்ளன. அருணகிரிநாதருக்கும் சிலை உள்ளது. ஆனி மூலத்தில் இவருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. மாம்பழம் கிடைக்காததால் பழனி சென்ற முருகனை ஒரு கணம் நிற்கச் சொல்லி பார்வதி அழைத்த போது முருகன் நின்ற இடம் இந்த மக(மோக)னூர். இங்கு பழனி போல் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தண்டாயுதத்துடன் முருகன் காட்சி தருகிறார்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில்
அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில், வேளுக்குறிச்சி (பேளுக்குறிச்சி), நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம், 637402.
+91 9842546555, 9443008705
நாமக்கல்லிலிருந்து 24 கிமீ கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஊர். சேலம் ராசிபுரம் வழியாக நாமக்கல் வழியில் சேந்தமங்கலம் பேருந்தில் வேளுக்குறிச்சி அடையலாம். சேந்தமங்கலத்தில் சோமேஸ்வரர் கோயிலும் உள்ளது.
வள்ளியை மணந்த முருகன் நான்கு கரங்களுடன் வேடன் கோலத்தில் வள்ளியுடன் உள்ளார். குறிஞ்சி நிலத்து இறைவன் விளங்கும் வேலவன் குறிஞ்சியே வேளுக்குறிச்சியானது. ஔவையார் கடை ஏழு வள்ளலில் ஒருவரான வல்வில் ஓரியினைச் சந்தித்த போது இந்த முருகனை வழிபட்டதாக வரலாறு. வேடனைப் போல் முடிந்த தலைமுடியும், இடக்கையில் சேவலும், வலக்கையில் வஜ்ஜிரவேலும், இடையில் பிச்சுவா கத்தி சொருகியும், பாதணிகள் அணிந்தும் உள்ளார். மூலஸ்தானத்தில் சேவலுடன் இவ்வாறு உள்ளது இத்தலம் மட்டுமே என்று கருதப்படுகிறது. (சிக்கலில் வெளியே உள்ளது.) கடை ஏழு வள்ளலில் ஒருவரான ஓரி வணங்கிய தலம். மனைவியுடன் சிலை உள்ளது. இந்தப் பகுதியில் நிறை கோயில்கள் ஓரியின் காலத்தில் வளர்ந்தவை. ராசிபுரம், கொல்லிமலை போன்ற நிறைய தலங்கள் இவற்றில் அடங்கும்.
பூஜை நேரம்: காலை 7.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை.
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குருசாமிபாளையம், நாமக்கல் மாவட்டம் 637403.
+91 4286-227781
நாமக்கல்லிலிருந்து 50 கிமீ. பில்லாநல்லூரில் உள்ளது.
இத்தலத்தில் முருகன் பாலசுப்பிரமணியாகவும், தண்டாயுதபாணியாகவும் அருள்பாலிக்கும் தலம். முருகனின் படைத் தளபதி வீரபாகு வழிபட்ட தலம். அவனது வழித்தோன்றல்கள் கட்டிய கோயில். பங்குனி உத்திரம் விசேஷம். 9 செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷ நிவர்த்தி கிட்டும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் தீரும். திருமண பாக்கியமும் இவ்வாறு வழிபட கிட்டும்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு சுந்தர கந்தசுவாமி திருக்கோயில்
அருள்மிகு சுந்தர கந்தசுவாமி திருக்கோயில், காளிப்பட்டி 637501, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்.
+91 4288- 287511, 04286- 227781
சேலம் திருச்செங்கோடு சாலையில் திருச்செங்கோட்டிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது காளிப்பட்டி. மல்லசமுத்திரத்திற்கு வடக்கே 3 கிமீ தொலைவில் உள்ளது. சேலம்-சங்ககிரி சாலையில் விநாயகா மிஷன், அரியத்தூர் கல்வி நிறுவனம் தாண்டியதும் 1008 சிவ லிங்கங்கள் நந்தியுடன் திகழும் கோயில் உள்ளது.
18ம் நூற்றாண்டில் தைப்பூசத்திற்கு பழனிக்கு பாதயாத்திரையாக காவடியெடுத்து ஆண்டுதோறும் சென்ற பக்தனுக்கு இந்தத் தலத்திலேயே காட்சி தந்து குடியிருக்க விரும்புவதாக அருள் பாலித்த தலம். பாம்பு விஷக்கடி ஏற்பட்டால் இன்றும் இந்தக் கோயிலுக்கு உள்ளே கொண்டு வரப்பட்டு தீர்த்தத்தினை பூசாரி தெளிக்க நிவர்த்தி பெறுவதாக ஐதீகம். கருஞ்சாம்பல் பிரசாதமும் தரப்படுகிறது. இடும்பன் சன்னிதியில் கொடுக்கப்படும் மையினை 3 நாட்கள் நெற்றியில் இட்டுக்கொண்டால் குடும்ப ஒற்றுமை, பய நீக்கம், தொழில் முன்னேற்றம் கிட்டும் என ஐதீகம். வைகாசி விசாகத்தில் பாலபிஷேகம் செய்ய திருமண பாக்கியம் கிட்டும். வீணை ஷாமன்னா இந்த முருகனை வேண்டிப் பிறந்தவர் (1828-1908) இங்கு வள்ளி தெய்வயானையுடன் முருகன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.
பூஜை நேரம்: -
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், காளிப்பட்டி, நாமக்கல்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து 22 கி.மீ. தொலைவில், திருச்செங்கோடு-சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது காளிப்பட்டி முருகன் கோயில்.
பழநிக்குச் சென்று தண்டாயுதபாணியை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். ஆனால் அந்த பழனியாண்டியே காளிப்பட்டிக்கு தரிசனம் தந்துள்ளார். தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியம்பதி நோக்கிப் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அதேபோல், காளிப்பட்டியைச் சேர்ந்த அன்பர்களும் பாதயாத்திரையாகவும் காவடி எடுத்தபடியும் வருடந்தோறும் வருவார்கள். ஒருமுறை, காளிப்பட்டியில் இருந்து பழநி நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்கள், ஓரிடத்தில் இளைப்பாறினார்கள். அனைவரும் அயர்ந்து தூங்க, பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், உங்கள் ஊருக்கே நான் வருகிறேன். அங்கே கோயில் கட்டி வழிபடுங்கள் என அருளினார். பிறகு, பழநிக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் முடித்துவிட்டு ஊர் திரும்பியபோது, ஊரில் ஓரிடத்தில் மயில் நிற்பதைப் பார்த்து அதிசயித்துப் போனார்கள். அதையடுத்து மயில் நின்ற இடத்திலேயே முருகனுக்குக் கோயில் எழுப்பி, வழிபடத் துவங்கினார்கள் ஊர் மக்கள். காளிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் எவரையேனும் பாம்பு கடித்துவிட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து, சன்னிதியில் படுக்கவைக்கின்றனர். முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தைப் பருகக் கொடுத்து, விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுவிட விஷமானது முறிந்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு, பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று, திருத்தேரில் வீதியுலா வரும் கந்தன், அழகுடன் காட்சியளிக்கிறார். சஷ்டி, கிருத்திகை, அமாவாசை என மாதந்தோறும் பாலபிஷேகம் செய்து வழிபடுகின்றனர் பக்தர்கள். தைப்பூச நாளில், ஏராளமான பக்தர்கள் வந்து பாலாபிஷேகம் செய்வதுடன், பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்து வேண்டிக் கொள்கின்றனர். அந்த நாளில் இந்த முருகனை தரிசித்தால், கல்யாண வரம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழ்வர் என உறுதியுடன் தெரிவிக்கின்றனர் ஊர்மக்கள்.
<< Previous  8  9  10 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar