Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>புதுக்கோட்டை மாவட்டம்>புதுக்கோட்டை சிவன் கோயில்
 
புதுக்கோட்டை சிவன் கோயில் (104)
 
அருள்மிகு ஆதிகைலாயநாதர் திருக்கோயில்
அருள்மிகு ஆதிகைலாயநாதர் திருக்கோயில் வடக்கூர் புதுக்கோட்டை
அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ ல் உள்ள ஆவுடையார் கோயிலுக்கு மிக அருகில் வடக்கூர் இருக்கிறது.
வடக்கூர் என்று வழங்குகின்றது. ஆதிகைலாயநாதர்-சிவகாமி அம்மன் சிவாலயம். ராசகோபுரம் உள்ளது
அருள்மிகு சாந்தநாத சுவாமி திருக்கோயில்
அருள்மிகு சாந்தநாத சுவாமி திருக்கோயில்; திருவரங்குளம், புதுக்கோட்டை.
புதுக்கோட்டையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது திருவரங்குளம். குலோத்துங்க சோழிங்கபுரம் என்றழைக்கப்பட்ட இத்தலத்தின் இறைவன், சாந்தநாத சுவாமி; இறைவி, பெரியநாயகி.
ஏழு தீர்த்தங்கள் கொண்ட இத்தலத்தில் அம்பாள் சன்னதிக்கு முன்னே உள்ள ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்தபடி அவளை மனதார பிரார்த்தித்தால் எப்பேர்ப்பட்ட மனக்குழப்பமும் நீங்கி விடும் என்பது ஐதீகம். குழந்தைகள் நோயுற்றால் தத்து கொடுக்கும் வழக்கம் இங்குள்ளது. குழந்தையை சுவாமி, அம்மன் சன்னதியில் வைத்து, இனி இது உன் குழந்தை. நீ தான் ஒரு குறையும் இல்லாமல் காப்பாத்தணும் என்று கூறி, தத்துக் கொடுத்துவிட்டு பிறகு எடுத்துச் செல்கின்றனர். இப்படிச் செய்வதால் குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகுவதோடு நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ்வார்களாம்.
அருள்மிகு விருத்தபுரீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு விருத்தபுரீசுவரர் திருக்கோயில், அன்னவாசல், புதுக்கோட்டை.
புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது அண்ணல்வாயில் என்கிற அன்னவாசல்.
அப்பர் பாடிய அடைவுத் திருத்தாண்டகத்தில் குறிப்பிடப்படும் தேவார வைப்புத் தலம் இது. இறைவன்- பழம்பதிநாதர் (விருத்தபுரீசுவரர்), இறைவி- அறம்வளர்த்த நாயகி. இக்கோயில் பிராகாரத்தில் இரண்டு பெரிய சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. சூரியன், பைரவர், முருகன், சித்தி விநாயகர் ஆகியோர் தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். பெருமாளுக்கும் தனிச் சன்னிதி உண்டு.
அருள்மிகு குன்னாண்டார் திருக்கோயில்
அருள்மிகு குன்னாண்டார் திருக்கோயில், கீரனூர், புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகில் உள்ளது இத்திருத்தலம்.
இங்குள்ள இரு குடைவரைக் கோயில்களில் ஒன்றில், சிவபெருமான் நான்கு கைகளுடன் (முன் வலக்கை வில்லைப் பிடித்த நிலையிலும், முன் இடக்கை தொடை மீது வைத்தவாறும் மேல் பின் இடக்கையில் மழுவும், பின் வலக்கை சடையைத் தாங்கியபடியும்) வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.
அருள்மிகு மூவர் திருக்கோயில்
அருள்மிகு மூவர் திருக்கோயில், கொடும்பாளூர், புதுக்கோட்டை.
குடுமியான்மலையிலிருந்து மேற்கே பத்து கி.மீ. தொலைவில், கொடும்பாளூரில் உள்ளது. மூவர் கோயில். இதை திருமுதுகுன்றம் உடையார் கோயில் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
வெட்டவெளியில் உள்ள சிவலிங்கம், பிரம்மா, விஷ்ணு, ஈசன் ஆகியோரின் வடிவமாக முசுகுந்தேசுவரர் என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறார். பழங்காலத்தில் 108 சிவன்கோயில்கள் இங்கு இருந்ததாகக் கல்வெட்டு மூலம் அறிகிறோம்.
அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில்
அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கொடும்பாளூர், புதுக்கோட்டை.
புதுக்கோட்டையிலிருந்து கொடும்பாளூர் செல்லும் வழியில் உள்ளது இத்தலம்.
இறைவன் - கேடிலியப்பர். இறைவி- வளமலை நாயகி. மலை மீது அமைந்த இக்கோயில், சிவத்தலமாக இருந்தாலும், முருகனுக்கு அனைத்து விழாக்களும் நடக்கின்ற சிறப்புடையது.
அருள்மிகு சத்குரு சம்ஹார மூர்த்தி சுவாமி திருக்கோயில்
அருள்மிகு சத்குரு சம்ஹார மூர்த்தி சுவாமி திருக்கோயில், தாண்டீஸ்வரம், புதுக்கோட்டை.
புதுக்கோட்டையிலிருந்து இலுப்பூர் செல்லும் வழியில் அன்னவாசல் தாண்டியவுடன் இலுப்பூருக்கு முன்பாக உள்ளது தாண்டீஸ்வரம்.
சத்குரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் இங்குள்ள தாண்டி மரப்பொந்தின் உள்ளே அமர்ந்து தியானம் செய்தார். இங்கு சுவாமிகளுக்கு சிலை அமைக்கப்பெற்று, சுவாமிகளின் ஜனன நாளான புரட்டாசி ஆயில்ய நட்சத்திர தினத்தில் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமைதோறும் பெருந்திரளாக பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
அருள்மிகு மெய்கண்ணுடையாள் திருக்கோயில்
அருள்மிகு மெய்கண்ணுடையாள் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகில் கிழக்கு எல்லையில் வடக்கு நோக்கி கோயில் கொண்டுள்ள மெய்கண்ணுடையாள் அம்மன் அமைந்துள்ளது.
இந்த அம்மனே ஊரின் காவல் தெய்வமாகும். தங்களுக்குப் பலவிதங்களில் துன்பம் கொடுப்பவர்களையும், சொத்துக்களை அபகரித்தவர்களையும் தண்டிக்கும் சக்தி கொண்டவள் இந்த மெய்கண்ணுடையாள் அம்மன். இங்கு நீராடி ஈரத் துணியுடன் வந்து அம்மன் முன் நின்று தங்கள் குறைகளைச் சொல்லி, நீதான் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று முறையிட்டால் நல்ல தீர்ப்பு சொல்வாள் இந்த அம்மன் என்கிறார்கள்.
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், வேங்கை வாசல், புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வாசல் அருகே அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
எண்கோண வடிவில் முருகப்பெருமானின் தவக்கோல சன்னிதி உள்ளது. இங்கு முருகப்பெருமான் தாமரை மலர்மீது ஒரு காலை மடித்து வைத்தும், மறு காலை நீட்டி அமர்ந்தும் காட்சி தருகிறார். எல்லாக் கோயில்களிலும் மூலஸ்தானத்தின் இருபுறமும் துவாரக பாலகர்கள் இருப்பர். ஆனால் இங்கு ஒரு பக்கம் துவார பாலகரும், மறுபக்கம் விநாயகரும் உள்ளனர். மூலவரின் மீது தினமும் மாலை வேளைகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி அர்த்த நாரீஸ்வர தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருகிறார்.
அருள்மிகு கதலிவனேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு கதலிவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களம்பூர், புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்குள்ள தல விருட்சம் வாழை. இக்கோயிலின் உட்பிராகாரத்தைச் சுற்றி ஏராளமான வாழை மரங்கள் வளர்கின்றன. இம்மரங்களில் கிடைக்கும் வாழைப்பழங்கள் பஞ்சாமிர்தம் செய்ய மட்டுமே பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
<< Previous  8  9  10  11  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar