Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
முதல் பக்கம்>மாவட்ட கோயில்>புதுக்கோட்டை மாவட்டம்>புதுக்கோட்டை சிவன் கோயில்
 
புதுக்கோட்டை சிவன் கோயில் (104)
 
அருள்மிகு பொன்வாசிநாதர் திருக்கோயில்
அருள்மிகு பொன்வாசிநாதர் திருக்கோயில், இலுப்பூர், விராலிமலை.
விராலிமலையிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ளது இலுப்பூர்.
இறைவன்- ஹேமவிருத்தீசுவரர் (பொன்வாசிநாதர்). இறைவி- சொர்ணாம்பிகை. பொன்னன் எனப்படும் குருபகவான் வழிபட்டதால், பொன்வாசிநாதர் எனப் பெயர் கொண்டார் பெருமான். குரு பலம் பெறவும், குரு தொடர்பான தோஷங்கள் அகலவும் இந்த பொன்வாசிநாதரையும் சொர்ணாம்பிகையையும் வழிபடுவது சிறப்பு; பொன்னாபரணங்கள் சேரும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சோழீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சோழீஸ்வரர் திருக்கோயில், பன்றக்குடிவயல், திருவரும்பூர், புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில், கீரனூரில் இருந்து திருவரும்பூர் செல்லும் வழியில், 10 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பன்றக்குடிவயல். இங்கே, பேருந்து நிறுத்தம் அருகிலேயே கோயில் அமைந்திருக்கிறது.
இந்தக் கோயிலில் பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்பதால்தான் இங்கு எம்பெருமானுக்கே சோழீஸ்வரர் என்ற திருநாமம் வந்தது. கோயிலுக்கென நிலங்களும் இருந்ததையும், அவற்றை நிர்வகிக்க சிலரை மன்னர்கள் நியமித்ததையும் கல்வெட்டுகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரு கல்வெட்டில், தர்மத்தைச் சிதைப்பவன், கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தைச் செய்தவனுக்குச் சமம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. நாயக்கர் கால சித்திரங்களும் கல்தூணில் இடம் பெற்றிருக்கின்றன. சுமார் 300 வருடங்களுக்கு முன் ராமேஸ்வரத்துக்குப் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பஞ்சமுக ஈசனை தரிசித்து விட்டுத்தான் ராமேஸ்வரம் சென்றிருக்கிறார்கள். பக்தர்களுக்காகவே இங்கு பல அன்னதான சத்திரங்கள் இருந்தன என்றும், அவை நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டவை என்றும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பிரதோச வழிபாடு, நவராத்திரி வழிபாடும் நடக்கிறது.

பூஜை நேரம்: -
அருள்மிகு திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில். புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாநகரின் கிழக்குப் பகுதியில், இந்த மாநகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் விதம் அமைந்துள்ளது திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில்.
பாண்டியர்களின் காலத்தில் கட்டப்பட்ட மகிளனேஸ்வரர் திருக்கோயிலும், பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து கட்டப்பட்ட திருக்கோகர்ணேஸ்வரர் கோயிலும் ஒரே இடத்தில் ஒன்றாய் இருப்பது மேலும் சிறப்பு. இங்கு, அன்னை பிரகதாம்பாள் சக்தி சொரூபிணியாய் காட்சி தருகின்றாள். தெற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த கோயிலின் உள்ளே நுழைந்தால், முழுமுதற் கடவுள் விநாயகரும், தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியும் அருகருகே அமர்ந்து, ஒரே சன்னிதியில் காட்சி தருவது விசேஷ அம்சம் என்கிறார்கள். குருபார்வை கோடி நன்மை, விநாயகனை வழிபடின் வெற்றிக்கு இல்லை தடை என்ற நோக்கில், இந்த இருபெரும் தெய்வங்களும் ஒருங்கே சன்னிதி கொண்டுள்ள இந்தக் கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் தடைகளையும் குறைகளையும், ஒன்றாய் தரிசனம் தருகின்ற தட்சிணாமூர்த்தியும் விநாயகரும் விரைவில் தீர்க்கின்றனர் என்பது நம்பிக்கை. கல்விக்கு அதிபதியான தட்சிணாமூர்த்தி, விநாயகருடன் சேர்ந்து அருள்புரிவதால், மாணவர்கள இங்கு வந்து வணங்கிச் சென்றால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். இங்கு, சப்த லிங்க வழிபாட்டின் மூலம் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பல்லவர்கள் கட்டிய மலைக் கோயிலில், கல்விக்கடவுளான சரஸ்வதிதேவி அருள்பாலிக்கிறாள். சரஸ்வதி தேவியை மனமுருக வேண்டி, தேன் மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியும். தட்சிணாமூர்த்தியின் சிலை இங்கு புடைப்புச் சிற்பமாக இருக்கிறது. இவரை வழிபடுவதன் மூலம், கல்வியுடன் சேர்த்து இசை ஞானத்தையும் ஒருங்கே பெற முடியும் என்பது நம்பிக்கை. சக்தி சொரூபிணியான பிரகாதாம்பாள் திருப்பாதத்தில் வைத்து வழிபடப்படும் அரைக்காசு இங்கு விசேஷம். அம்மனுக்கு காசு எடுத்து வைத்து வேண்டிக் கொண்டால், நினைத்தது நடக்கும். பிரகதாம்பாள் புதுக்கோட்டை மன்னரோடு நேருக்கு நேர் பேசிய தெய்வம் என வரலாற்றுச் சம்பவம் ஒன்று கூறப்படுவதால், பிரகதாம்பாளை பேசும் தெய்வம் என்றே அழைக்கின்றனர் இப்பகுதி மக்கள். சிவபெருமான், காமதேனுவுக்கு மோட்சம் தரக் காரணமாக இருந்த சிவ ஸ்தலம் இது. இங்கு ஈசனை வழிபடுவதால் மோட்சம் கிட்டும். கல்விக்கு அருளும் கடவுளர்களோடு இங்கு உறைந்திருக்கும் அம்பாளையும் ஈசனையும் வழிபட திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
<< Previous  9  10  11 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar