Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>புதுக்கோட்டை மாவட்டம்>புதுக்கோட்டை சிவன் கோயில்
 
புதுக்கோட்டை சிவன் கோயில் (104)
 
அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில்
ராப்பூசல், குளத்தூர் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
அன்னவாசலிருந்து வடக்கே 8 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சகுந்தலாம்பிகை.
அருள்மிகு மாத்ருபூதேசுரர் திருக்கோயில்
சித்தன்னவாசல், குளத்தூர் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
குளத்தூரிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ.
இக்கோயில் மலையடிவாரத்தில் உள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் சுகந்தகுந்தளாம்பிகை. இவ்வூர் அண்ணல்வாயிலை அடுத்துள்ளதால் சிற்றண்ணல்வாயில் என வழங்கப்பெறுகிறது. அருகில் உள்ள அறிடர் கோடில் எனப்படும் ஒரு சிறிய குகையும், அதனுள் மன்னர்களின் உருவங்கள் எழுதிழ பழங்கால ஒவியங்களும், சமணமுனிவர்களின் உருவங்களும் <<உள்ளன. அவனியசேகரன் ஸ்ரீவல்லவன் காலத்தில் அமைக்கப் பெற்ற கோயிலாகும். மலைமேல் <<உள்ள ஏழிடிப்பட்டம் என்னும் மலை <உச்சிப்பகுதியில் சமணர் குகைகளும். கற்படுக்கைகளும் உள்ளன. தி.பி 2000 வருட முற்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட தாழிகள் இங்குக் கிடைக்கின்றன. இம்மலை உச்சியிலுள்ள சுனையில் சிவலிங்கம் ஒன்று நீரில் அமிழ்ந்துள்ளது, வளம் குன்றிய காலங்களில் சுனையில் உள்ள நீரை இரைத்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வித்தால் மழை பெய்து வருகிறது.
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்
நச்சாந்துபட்டி, திருமயம் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
பேரையூர்க்கு தென்மேற்கே 4 கி.மீ.
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சொக்கலிங்கமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
பனையபட்டி, திருமயம் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
பேரையூர்க்கு தென்மேற்கே 6 கி.மீ.
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விருத்திபுரீசுரர் திருக்கோயில்
அன்னவாசல், குளத்தூர் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
குளத்தூரிலிருந்து தென்மேற்கே 14 கி.மீ.
அண்ணல்வாயில். இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மஜ் தர்மசம்வர்த்தினி, விநாயகர், முருகன் முதலிய பரிவார தெய்வங்களுடன் சிறிய ஆலயமாக உள்ளது. மகமதியர்கள் படையெடுப்பின்போது இவ்வாலயம் இடம் பெயர்த்துச் சிறிய ஆலயமாகக் கட்டப்பட்டது. இத்தலம் தேவார வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய அடைவுத்திருத் தாண்டகத்தில் இத்தலத்தைக் குறித்துப் படியுள்ளார். மேலும் இவ்வூரில் கிராம தேவதைகளாகிய பிடாரி, ஐயனார் ஆலயங்களும், பெருமாள் கோயிலும் உள்ளன. தினமும் இரண்டு கால பூஜை. மாசிமகப் பெருவிழா நடைபெறுகிறது.
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
பனங்குடி, குளத்தூர் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
அன்னவாசலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ.
இக்கோயிலை பரமேசுவரர் கோயில் என்றே அழைக்கின்றனர். கருவறை சதுர வடிவமானது. கருவறையில் வடசுவரில் காணப்படும் பரகேசரிவர்மனின் 14ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவர் பனங்குடி பரமேசுவரர் என்று குறிக்கப்பட்டுள்ளது. விசயாலயன் காலச் சிறு கற்றளிகளில் இக்கோயிலும் ஒன்றாகும்.
அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில்
புல்வயல், குளத்தூர் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
குடுமியான்மலைக்கு தென்கிழக்கே 6 கி.மீ.
திருப்புல்வயல், குமரன்மலை இக்கோயில் கட்டுமலைமேல் அமைந்த கோயில், இத்தல மூலவர் சுயம்புலிங்கமாக அருளுகிறார். அம்மன் வளமுலைநாயகி. தீர்த்தம் சரவணப் பொய்கை. அகத்தியர்க்கு காட்சிதந்த தலம். நடராசப்பெருமான் அகத்தியருக்கு இத்தலத்தில் வலது பாத தரிசனம் கொடுத்த தலம்.இத்தலப் குமரப் பெருமான் தண்டாயுதபாணியாய் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பெற்ற தலம். குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம், அந்தககக் கவி வீரராகவ முதலியார் இயற்றிய பிள்ளைத்தமிழ் முதலியன இத்தல முருகப்பெருமான் மீது பாடப்பட்டுள்ளன. தினமும் இரண்டு கால பூஜை கார்த்திகை சோமவாரத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
குளிபிறை, திருமயம் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதிக்கு வடகிழக்கே 14 கி.மீ.
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
வாளகுறிச்சி, திருமயம் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
திருமயத்திலிருந்து வடமேற்கே 18 கி.மீ.
இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருவருட்காளீஸ்வரர் திருக்கோயில்
குலமங்கலம், திருமயம் வட்டம் புதுக்கோட்டை மாவட்டம்
பேரையூர்க்கு தென்மேற்கே 8 கி.மீ.
மலையகோயில், இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் தர்மசம்வர்த்தினி. உள்பிரகாரத்தில் விநாயகர், சனீஸ்வரர், ஜடாமுனி, நவக்கிரகங்களும், அருகில் 100 அடி <உயரம் கொண்ட மலை உச்சியில் சுப்ரமணியர் காட்சியளிக்கிறார். குடவரைக்கோயில் இக்கோயில் உள்ள கல்வெட்டுக்களின்படி இக்கோயிலை சடவர்ம குலசேகர தேவ பாண்டியன் கட்டுவித்ததாக குறிக்கிறது. தைப்பூசத்தில் 10 நாட்கள் சுப்ரமணியர்க்கு உற்சவம் நடைபெறுகிறது,
<< Previous  6  7  8  9  10  11  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar