Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>ராமநாதபுரம் மாவட்டம்>ராமநாதபுரம் சிவன் கோயில்
 
ராமநாதபுரம் சிவன் கோயில் (57)
 
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், நயினார் திருக்கோயில்
ராமநாதபுரம் மாவட்டம்
+91 266522
அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் திருக்கோயில்
பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்
+91 229640
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
கமுதி ராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூரிலிருந்து மேற்கே 18 கி.மீ.
குண்டாற்றின் கரையில் இக்கோயில் 34 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
மண்டலமாணிக்கம், கமுதி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
கமுதியிலிருந்து வடக்கே 4 கி.மீ.
குண்டாற்றின் கரையில் இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
சாயல்குடி, முதுகுளத்தூர் வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூரிலிருந்து தெற்கே 25 கி.மீ.
குண்டாற்றின் கரையில் இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
மணலூர், முதுகுளத்தூர் வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூரிலிருந்து வடமேற்கே 10 கி.மீ.
குண்டாற்றின் கரையில் இக்கோயில் 212 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு செஞ்சடைநாதர் திருக்கோயில்
திருமாலுகந்தன்கோட்டை, முதுகுளத்தூர் வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
சாயல்குடியிலிருந்து வடமேற்கே 14 கி.மீ.
இக்கோயில் 200 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். அம்மன் கருணாகடாச்சியம்மை. திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம். இரண்டு கால் பூஜை நடைபெறுகிறது. வைகாசி விசாகம், பங்குனி உத்திரத்தன்று உற்சவம் நடைபெறுகிறது. இராமந்தபுரம் சமஸ்தானத்தின் மேற்பார்வையில் உள்ளது.
அருள்மிகு பூவேந்திரநாதர் திருக்கோயில்
மாரியூர், முதுகுளத்தூர் வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
சாயல்குடியிலிருந்து கிழக்கே 12 கி.மீ.
இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் பவளநிறவள்ளியம்மன். துர்மகேந்த முனிவர், வருண பகவான் வழிபட்ட தலம். ஒரு கன்னிப்பெண்ணின் சாபத்தால் இவ்வூரை மணற்புயல் தாக்கி இவ்வூரை மணலாக மூடப்பட்டதால் இவ்வூர் மாரியூர் என்று பெயர் பெற்றதாக கூறுவர்.
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
நயினார் கோயில், பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடியிலிருந்து கிழக்கே 12 கி.மீ.
வைகையாற்றின் வடபகுதியில் இக்கோயில் 164 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 45 அடி உயர இராஜகோபுரமும், மூன்று பிரகாரங்களுடன் மூலவர் நாகநாதர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கியும், அம்மன் சௌந்தராநயகி தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். தலவிருட்சம் மருதமரம். தீர்த்தம் வாசுகி தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளுது. உள்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர். சனீஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன், 63 நாயன்மார்கள்ல சோமாஸ்கந்தர், சௌந்தரராஜ பெருமாள் முதலிய சன்னதிகள் உள்ளன. திரிசங்குவிற்ணு உதுவ மறுத்த ஆயிரம் முனிவர்கள் விசுவாமித்திரரால் சாப்ம் பெற்றனர். இத்தலத்தில் வழிபட்ட முனிவர்கள் சாபவிமோசனமும். ஞானோபதேசமும் பெற்றனர். மாணிபத்திரன் என்னு கந்தர்வன் இத்தல இறைவன் அருளால் மனக்குழப்பம் நீங்கி அமைதி பெற்றான். புலிக்கு அஞ்சிட வேடயனாருவன் வில்வ மரத்தின் மேலேறிப் பிறைத்தான் என்றும் புலி விருஷபமானதாகவும் ஐதீகம். மங்கள தீர்த்தம் கோயிலில் உள்ளே அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே நாகர் கோயில் உள்ளது. இத்தலத்திற்கு தலபுராணம் சிற்றம்பல கவிராயர் மருதவப் புராணம் இயற்றியுள்ளார். நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. வைகாசியிலி பிரமோற்சவமும், தைப்பூசத்தில் வைகையாற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இவ்வாலயம் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் மேற்பார்வையில் உள்ளது.
அருள்மிகு சந்திரசேகரசுவாமி திருக்கோயில்
பரமக்குடி ராமநாதபுரம் மாவட்டம்
மானாமதுரையிலிருந்து தென்கிழக்கே 27 கி.மீ.
வைகையாற்றின் தென்கரையில் இக்கோயில் 32 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். அம்மன் விசாலாட்சியம்மை. இரண்டு கால பூஜை. சித்திரைமாதத்தில் பிரமோற்சவம்.
<< Previous  1  2  3  4  5  6  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar