Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சேலம் மாவட்டம்>சேலம் முருகன் கோயில்
 
சேலம் முருகன் கோயில் (119)
 
அருள்மிகு சுப்ரணியசுவாமி திருக்கோயில்
அம்மாபேட்டை, சேலம்
+91 --427-2240 064
அருள்மிகு சுப்ரணியசுவாமி திருக்கோயில்
சித்திரை சாவடி, சேலம்
+91 -427-2210 419
அருள்மிகு கந்தாஸ்ரம முருகன் திருக்கோயில்
அருள்மிகு கந்தாஸ்ரம முருகன் திருக்கோயில், கந்தகிரியில், சேலம்.
சேலம் மாநகரின் அருகில் ஆத்தூர் சாலையில் உள்ள உடையாப்பட்டி என்னும் கிராமத்தின் சமீபம் கந்தகிரியில் உள்ளது, கந்தாஸ்ரமம்
சேலம் மாநகரில் கந்தாஸ்ரம முருகன் கோயிலை நிறுவியவர் ஸ்ரீமத்ஸத்குரு சாந்தானந்த சுவாமிகள். உலகத்தார் அனைவரும் இன்புற்று வாழவேண்டும் என்ற பெருநோக்கு உடைய அருளாளர் அவர். ஞானஸ்கந்த குருநாதரையும் அஷ்டதசபுஜமகாலட்சுமி துர்க்கா பரமேஸ்வரியையும் இங்கே பிரதிஷ்டை செய்துள்ளனர். பதினாறடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர், பஞ்சமுக கணபதி, தத்தாத்ரேயர், தன்வந்திரி பகவான், ஸ்வர்ணாகர்ஷண பைரவர், பதினாறடி உயரமுள்ள இடும்பன், வேதவியாசபகவான், நான்கு வேதமூர்த்திகள் ஆதிசங்கரர், ஸ்வயம்பிரகாசர், சதாசிவர், குமரபரமகுரு விக்ரகங்கள் உள்ளன. முருகப்பெருமானைச் சுற்றி, தம்பதி சமேதராய் நவகிரகங்கள் காட்சி தருகின்றன. சத்தம், சங்கடம், சச்சரவு எனும் சராசரி வாழ்க்கையிலிருந்து விலகி, மாநகரிலிருந்து தள்ளி இருக்கும் இக்குன்று அமைதி தவழும் கோயில்! முருகனுக்கு நேர் எதிரே புவனேஸ்வரி அன்னை தன் மகனைப் பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறாள். தாய்க்கும் சேய்க்கும் ஒரே நேரத்தில் ஆராதனை நடப்பது ஆனந்த தரிசனம்! ஏழை, பணக்காரன் எனும் பாகுபாடு இன்றி, கடவுள் முன் எல்லோரும் சமமாக நின்று கரங்கூப்பித் தொழுவதை இங்கே காணமுடியும். அர்ச்சகர் காட்டும் ஆரத்தி தட்டில் தட்சணை போடுவதுகூட கிடையாது. வேதங்கள் பரிபாலிக்கப்பட, காலம் காலமாக வேதமந்திரங்கள் தொடர்ந்து ஒலித்து உலகிற்குத் துணை நிற்கும் விதமாக வேதத்தினைப் பயிற்றுவிக்கும் வேதபாடசாலையும் இங்கே இருக்கிறது.
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி, சேலம் 636014, சேலம் மாவட்டம்
+91 427-2240064, 04272-242789, 0427-2252599
சேலத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள குன்றின் மீது கோயில் அமைந்துள்ளது. 700 படிகள் செல்ல வேண்டும். தர்மபுரி மற்றும் மேச்சேரி செல்லும் நெடுஞ்சாலை சேலம் நகரப் புற நகர் பகுதி தாண்டும் பாதையில் இடப்புறமே உள்ளது. நெடுஞசாலையிலிருந்து கோயில் தெரியும். குமரகிரியில் குளமும் உள்ளது. குமரகிரியில் ஒரு புறத்தில் சென்ராயப் பெருமாள் கோயிலும் உள்ளது.
குட்டிப் பழனி என்றழைக்கப்படும் குன்றின் மீது கோயில். பழனியில் வளர்ந்த ஸ்ரீலஸ்ரீ கருப்பண்ண சுவாமிகளுக்கு முருகன் முதியவர் கோலத்தில் இந்த மலையில் தன் பாதங்கள் உள்ள அடையாள இடத்தைக் காட்டினார். அங்கு முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு முருகன் வடக்கு நோக்கிய தண்டாயுதபாணியாக நின்ற கோலத்தில் உள்ளார். பங்குனி உத்திரத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் திரிசத அர்ச்சனை அடிப்பட்டவர்களுக்கும், விபத்துகளில் சிக்கியவர்களுக்கும் செய்யப்படுகிறது. அரிச்சிமலர்களை பன்னீரில் கலந்து இது செய்யப்படுகிறது. குபேர திசைநோக்கி உள்ளதால் செல்வம் செழிக்கும் எனப் படி பூஜை வழிபாடு செய்யப்படுகிறது. நீண்ட ஆயுளுக்காகவும் இது செய்யப்படுகிறது.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு ஞான சத்குரு பாலமுருகன் திருக்கோயில்
அருள்மிகு ஞான சத்குரு பாலமுருகன் திருக்கோயில், கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில், சித்தர்மலை, சேலம் வட்டம், சேலம் மாவட்டம் 636030.
+91 427-2491389, 9843175993
100 படிகள் கொண்டது. சேலத்திலிருந்து சித்தர் கோயில் மற்றும் எடப்பாடி பேருந்துகள் இக்கோயில் வழியாக செல்லும். மேற்கே 21 கிமீ தூரம். சேலத்திலிருந்து இளம்பிள்ளை பாதையில் உள்ளது. சேலம் இரும்பு ஆலை அருகே உள்ளது.
அடிவாரத்தில் சித்தேஸ்வரர் சின்முத்திரையுடன் உள்ளார். திருமூலர் பரம்பரையில் வந்த கஞ்சமலை சித்தர் வாழ்ந்த ஊர். அவரே பிற்காலத்தில் சித்தேஸ்வரர் ஆனார். தல தீர்த்தமான காந்த தீர்த்தத்தில் உப்பு, மிளகு மற்றும் வெல்லம் போட்டு நீராடினால் கட்டிகள் மற்றும் பரு முதலானவை நீங்கும். திருமூலரின் திருமந்திரம், புறநானூறு கொங்கு மண்டல சதகம் ஆகியவை இத்தலத்தைக் குறிப்பிடுவதாகத் தகவல். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும் இராத்தங்கல் வழக்கம் உள்ளது. சித்திரையில் மூன்றாவது செவ்வாய் உற்சவம் நடைபெறுகிறது. சித்தர் கோயில் சிங்கமுகக் கிணறு மாடு படுத்திருப்பது போன்ற அமைப்பு கொண்டது.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை (பிரதிஞாயிறு சிறப்பு வழிபாடு. விசேஷ நாட்களில் காலை 6 முதல் இரவு 8 வரை இடைவிடாது தரிசனம்.)
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சித்திரைச்சாவடி, செவ்வாய்பேட்டை, சேலம் 636002.
+91 427-2252599, 0427-2210419
சேலம் ஆத்தூரிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது.
இத்தலத்தில் வள்ளி தெய்வயானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகனுக்கென அமைந்த தனிக்கோயில் இது.
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வடசென்னிமலை, காட்டுக்கோட்டை, ஆத்தூர் வட்டம் 636141, சேலம் மாவட்டம்.
+91 4282-235100, 04282-235201
அரசு கலைக்கல்லூரி அருகே உள்ளது. ஆத்தூரிலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது.
இத்தலத்தில் மூன்று வடிவில் முருகன் காட்சி அளிக்கும் தலம். அனைத்தும் சுயம்பு. வர்ணாசிரம தர்மத்திற்குத் தக்கவாறு புன்முறுவல் முகத்தோடு குழந்தை வடிவமாக மூலஸ்தானத்திலும், இதர சன்னிதியில் தண்டாயுதபாணியாகவும், வள்ளி தெய்வயானை உடனும் காட்சி தருகிறார். வசிஷ்டதீர்த்தம் உள்ளது. பங்குனி, உத்திரம், திருக்கார்த்திகை, தைப்பூசம் மற்றும் கந்தசஷ்டி விசேஷம். முன்பு சிறுவன் ஒருவன் மலை மீது விளையாடிக் கொண்டிருக்கும் போது மற்றோர் சிறுவன் அவனோடு மலை மீது ஏறி திடீரென ஒளிரும் வெளிச்சத்துடன் காட்சி தந்து மறைந்தான். பின்னர் அதே இடத்தில் இந்த சுயம்பு மூர்த்திகள் இருப்பதை மக்கள் அறிந்தனர். முதலில் சுயம்பு மூர்த்தியும் தண்டாயுதபாணிதான் இருந்தது. கிரிவலம் வரும் வழக்கம் உள்ளது. கிரிவலப் பாதையில் உள்ள அவ்வையார் சிலையருகே நின்று நிலம் வாங்குவோர் வேண்டிக்கொண்டுகல் கொண்டு செல்கின்றனர். நிலம் வாங்கும் பாக்கியம் கிட்டும் என்கிற நம்பிக்கை உள்ளது. 60 படிகள் மீது வேண்டிக்கொண்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்று நம்பப்படுகிறது. பங்குனி <உத்திரம் விசேஷம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை 636201, சேலம் மாவட்டம்.
+91 9360112670, 9443411184
சேலம் நாமக்கல் சாலையில் 4வது கிமீல் சீலநாயக்கன்பட்டியின் அருகே உள்ளது. சிறிய குன்றின் மீது கோயில். வாகனம் நேராக மேலே செல்லும்.
கிழக்கு நோக்கிய பாலசுப்பிரமணியர் தன் வாகனத்தின் கழுத்தைப் பிடித்தவாறு அபூர்வமான நின்ற திருக்கோலம். தெற்கு நோக்கிய சக்கர கால பைரவர் சன்னிதி உள்ளது. அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்கிற இலக்கணநூல் இந்தத் தலத்திலிருந்து தான் இயற்றப்பட்டது. குழந்தை வடிவமாக அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த தலம். நின்ற கோலத்தில் முருகன் 43 கோணங்கள் கொண்ட சக்ர தேவியின் பிரதிஷ்டையும் உள்ளது. இங்குள்ள சுனை நீரில் சப்த ரிஷிகள் சிவராத்திரியினை ஒட்டிய பவுர்ணமி நாட்களில் நீராடுவதாக ஐதீகம். கொங்கு மண்டல சதகம் மற்றும் பாபநாச புராணத்தில் கரடி சித்தர், சிவ சித்தர், கஞ்சமலை சித்தர், பழனி போகர் ஆகியோர் இத்தலத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளதாகத் தகவல். கண்வர் மற்றும் கிளி வடிவ சுகர் தவம் மேற்கொண்ட தலம். மேலும் ஊத்துமலையில் சத்ய நாராயணர் கோயிலும் உள்ளது.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு கந்தசாமி திருக்கோயில்
அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், அயோத்தியாபட்டணம், சேலம்.
சேலத்தில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் அயோத்தியாப்பட்டிணம் அமைந்துள்ளது.
அயோத்தியில் பட்டாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு விபீஷணனுக்கு ராமர், பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தந்த இடம் அயோத்தியாப்பட்டிணம். இந்த ஊரில் ராமர் கோயிலிக்கு அருகில் பேரூர் செல்லும் சாலையில் வடக்கு திசை நோக்கி கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. சிறிய மூன்று நிலை கோபுர நுழைவாயிலைக் கொண்டது. இந்தக் கோயில், கோபுரத்தில் முருகனின் வடிவங்கள் சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. சாலைக்கு மறுபுறம் எதிர்புறத்தில் விளக்குத் தூண் காட்சி தருகின்றது. இதன்மூலம், சாலை பிற்காலத்தில் உருவாகியதை உணரமுடிகிறது. விளக்குத் தூணின் அடிப்பகுதியில் முருகர், விநாயகர், வேல், பசுவோடு கூடிய லிங்கம் ஆகியவை நான்கு புறங்களிலும் சித்திரிக்கப்பட்டுள்ளன. நவக்கிரகம், விநாயகர், இடும்பன், சன்னிதிகள் தனித்தனியே உள்ளன. மகா மண்டபத்தில் இரண்டு காவலர் சிலைகள் காணப்படுகின்றன. எதிரே மயில் உருவம் நிறுவப்பட்டுள்ளது. கோயிலை நிறுவியவர்களுக்கும் சிலை எடுத்திருக்கிறார்கள். கருவறையில் கந்தசாமி கருணை வடிவாய்க் காட்சி தருகிறார். தைப்பூசம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
<< Previous  10  11  12 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar