Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சேலம் மாவட்டம்>சேலம் அம்மன் கோயில்
 
சேலம் அம்மன் கோயில் (495)
 
அருள்மிகு கன்னிகாபரமேஸ்வரி திருக்கோயில்
சேலம்
+91 -427-2267 335
அருள்மிகு சின்னமாரியம்மன் திருக்கோயில்
சேலம்.
+91-427-2269 344
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்
சேலம்.
+91--427-2212 407
அருள்மிகு குஞ்சுமாரியம்மன் திருக்கோயில்
அருள்மிகு குஞ்சுமாரியம்மன் திருக்கோயில், தாரமங்கலம், சேலம்.
சேலத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவிலுள்ள தாரமங்கலத்தில் சந்தைப்பேட்டைக்கு அருகில் குஞ்சு மாரியம்மன் கோயில் உள்ளது.
சிறு குழந்தைகளைக் காப்பாற்றுகின்ற தாயாக இப்பகுதி மக்களால் வணங்கப்படுகிறாள். குஞ்சு மாரியம்மன். கோயிலின் நுழைவு வாயில் சமீபத்தில்தான் நவீன கட்டடக்கலையைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த வாயிலை இரண்டு பூதகணங்கள் தூண்களாகத் தாங்குகின்றன. இந்தக் குஞ்சு மாரியம்மனுக்கு தை மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. தாரமங்கலத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோயிலும் உள்ளது. வணிகத்திற்கு கண்ணனூர் சென்று திரும்பியவர்களின் வண்டி பாரக்கல்லாக உதவிய மாரியம்மன், தனது திருவிளையாடலால் வணிகர்களின் தெய்வமாகவும் மாறிவிட்டாள். மாரியம்மனும் பத்ரகாளியும் இணைந்து கருவறையில் காணப்படுகிறார்கள். ஆடிமாதம் இக்கோயிலில் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் உலோக மணிகள், மரத்தொட்டில்கள் கட்டி தங்கள் பிரார்த்தனையை செலுத்துகின்றனர். கைலாசநாதரை நாயகராகக் கொண்டு திகழும் பிரதான கோயில் உள்பட, பல கோயில்களைக் கொண்ட தாரமங்கலம் ஒரு தெய்வீக நகரம்.
அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில்
அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில், மேச்சேரி
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள மேச்சேரியில் உள்ளது. பத்ரகாளி அம்மன் கோயில்.
சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி வழிபடுகின்றனர். தொடர்ந்து ஏழு அமாவாசைகள் அம்மனை வணங்கினால் நினைத்தது கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வடக்கு நோக்கிய கோயிலில் புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பத்ரகாளி உக்ரம் சிறிதும் இன்றி உன்னதமான எழிலுடன் பாசமிகு தாயாக எட்டுக் கரங்களுடன் சுமார் நான்கடி உயரத்தில் கையில் சூலாயுதத்தோடு அருள்புரிகிறாள். எதிரே சிம்ம வாகனம் காணப்படுகிறது வேல்கள் நடப்பட்டுள்ளன. கருவறை சுவர்களில் துர்கை, வைஷ்ணவி, பார்வதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி உருவங்கள் காணப்படுகின்றன. விளக்குத்தூண், கொடிமரம், விசாலமான மணி மண்டபத்தோடு கோயில் விளங்குகின்றது. நான்கு திசைகளிலும் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வடக்கே ராஜகோபுரம். தெற்கே மற்றும் மேற்கே மூன்று நிலை கோபுரங்கள் கட்டப்பட்டு விட்டன. கிழக்கு கோபுரமும் கருவறை கோபுரமும் கட்டப்பட உள்ளன. கிழக்கு நோக்கி தனி சன்னிதியில் ராஜகணபதி வீற்றிருக்கிறார். அருகிலேயே நாகப்புற்று ஒன்று காணப்படுகிறது. மேற்கு திசை நோக்கி கால பைரவருக்கு தனி சன்னிதி எழுப்பப்பட்டுள்ளது. பழமையான இந்த கோயிலில் மாசி மாதம் பவுர்ணமி அன்று தேரோட்டத்தோடு திருவிழா நடைபெறுகிறது. கட்டுக்கட்டாய் ரூபாய் நோட்டுகளை தட்டில் வைத்து பூசாரியிடம் நீட்டுகிறார் பக்தர் ஒருவர். அதைப் பெற்று பத்ரகாளி அம்மனிடம் வைத்து பூஜை செய்து அம்மன் பிரசாதத்தோடு பக்தரிடம் திருப்பித் தருகிறார் பூசாரி. உங்கள் பிரார்த்தனைதான் என்ன என்று பக்தரிடம் கேட்டால். “புதிய நிலம் ஒன்றை வாங்குவதற்கு முன்பு நிலத்திற்குரிய முன் பணத்தை அம்மனிடம் வைத்து பூஜை செய்து வியாபாரத்தைத் துவக்கிறோம் ” என்கிறார் பக்தர். ஆயி எங்களை சுபிட்சமாக வைப்பாள் என்கிறார் அவர். அன்னையை ஆயி என வட்டார மொழியில் அழைத்து இங்கு பிரார்த்தனை செய்வதைக் காணமுடிகிறது. ஆயி என்றால் அம்மா என்று பொருள். பத்ரம் என்றால் மங்களம் என்று அர்த்தம். தன்னை பக்தியோடு வணங்குவோர்க்கு தாய் போன்ற பாசத்தோடும் பரிவோடும் அருள்பவள் என்பதால், இவளை தாயாகவே பாவித்து வழிபடுகின்றனர். இங்கு அமாவாசை வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
<< Previous  48  49  50 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar