Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் பெருமாள் கோயில்
 
தஞ்சாவூர் பெருமாள் கோயில் (371)
 
அருள்மிகு கோபாலகிருஷ்ணசாமி கோயில்
க்ஷகாத்தங்குடி,கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம்
+91 435 2467167
அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில்
வடுவூர் - 614 019, தஞ்சை மாவட்டம்.
தஞ்சையிலிருந்து 24 கி.மீ.
நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை திருவிழா : சித்திரை வருடப்பிறப்பு, நரசிம்ம ஜெயந்தி, நவராத்திரி. பிரதிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில் மூலவருக்கு திருமஞ்சனம் <உற்சவர் புறப்பாடு நடைபெறும். சிறப்பு : கண்வ மகரிஷி பூஜித்து பெருமாளின் காட்சிபெற்றார். இத்தலத்திற்கு தட்சிண அயோத்தி என்ற சிறப்பு பெயரும் உண்டு. தஞ்சைமாவட்டத்தின் மிகப்பெரிய பரப்பளவு (316.5 ஏக்கர்), கோதண்டராமர் ஏரி இவ்வூரில் உள்ளது.
அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில்
அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் கும்பகோணம்
+91 0435-2403284
கும்பகோணம் மகாமக குளத்தின் அருகில் அமைந்துள்ளது.
-
அருள்மிகு வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில்
கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம்
ஜெயம்கொண்டசோழபுரத்திற்கு கிழக்கே 8 கி.மீ.
கொள்ளிடம் ஆற்றின் வடகரைப் பகுதியில் இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கிய 60 அடி உயர கோபுரமும் கொண்டு மூலவர் வீரநாராயணப் பெருமாள் 6 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் திருமகள் பூமிதேவியுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். தாயார் மகாலக்ஷ்மி தனிச்சன்னதியில் தென் பிராகாரத்தில் உள்ளார். உள்பிராகாரத்தில் ஆண்டாள் சன்னதியும், ராமர் சன்னதியும் உள்ளது. உற்சவர்கள் வீரநாராயணப்பெருமாள், தாயார், ஆண்டாள், கருடாழ்வார், தேசிகர், நாதமுனிகள், குருகைவலப்பர் ஆகியோர்கள் உள்ளனர். ஆளவந்தார் இத்தலத்தில் வசித்து முக்தியடைந்த தலம். தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. மாசி மாதத்தன்று தீர்த்தவாரி உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்
திருவலஞ்சுழி தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்திற்கு மேற்கே 8 கி.மீ.
அரசலாற்றின் தென்கரையில் இக்கோயில் ஐந்து நிலை இராஜகோபுரமும், மூன்று கோபுரமும், இரண்டு பிராகாரங்களுடன் மூலவர் சௌந்தரராஜப்பெருமாள், தாயார் சௌந்தரவல்லித்தாயார். தீர்த்தம் இந்திர தீர்த்தம். காவிரியாறு. பிராகாரத்தில் கோபாலகிருஷ்ணன், சக்கரத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. காவிரியாறு இத்தலத்திற்கு அருகில் வந்ததும் வலமாகச்சுழித்து ஓடியதால் திருவலஞ்சுழி என்றும் பெயர். இந்திரன் தனக்கு ஏற்பட்ட தொழுநோயை நீங்க இத்தலத்தில் தவமிருந்து, பூஜைகள் செய்திட மகிழ்ந்த பெருமாள் இந்திரனுக்கிருந்த நோயை போக்கியருளினார். இந்திரன் மகிழ்ந்து இத்திருக்கோயிலைக் கட்டுவித்ததாக புராணம் கூறுகிறது. கல்வெட்டுக்களில் சோழ, விஜயநகர அரசர்கள் இக்கோயிலை பல நிலைகளில் புதுப்பித்து திருப்பணிகள் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு ஆதிகேசவபெருமாள் திருக்கோயில்
பந்தநல்லூர் தஞ்சாவூர் மாவட்டம்
குத்தாலத்திலிருந்து வடமேற்கே 10 கி.மீ.
திருப்பந்தணைநல்லூர். கொன்றைவனம். கொள்ளிடம் ஆற்றின் தென் பகுதியில் இக்கோயில் உள்ளது. மூலவர் ஆதி÷கசவபெருமாள். தாயார் பரிமளவல்லித்தாயார். பிராகாரத்தில் ஸ்ரீநிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், அனுமன் உள்ளனர். பார்வதி தேவி ஆடிய பந்து வந்து அணைந்த காரணத்தால் பந்தணைநல்லூர் என்று பெயர். சோழ மன்னன் கோயிலை கட்டுவித்தாக கல்வெட்டில் குறிப்பிபடிப்பட்டுள்ளது. கல்வெட்டில் இவ்வூரை வடகரை விருதராச பயங்கர வளநாட்டு விளத்தூர் நாட்டுப்பந்தணை நல்லூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜை நடைபெறுகிறது. பங்குனி மாதம் உத்திரதன்று உற்சவமாக கொண்டாடப்படுகிறது.
அருள்மிகு ஹயக்ரீவர் திருக்கோயில்
அருள்மிகு ஹயக்ரீவர் திருக்கோயில் மேல காவேரி கும்பகோணம்
இக்கோயில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேல காவேரி அருகில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஹயக்ரீவர் மூலவராக உள்ளார். இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலில் அஞ்சநேயர் சனி பகவானை தன் காலகளினால் மதிப்பது போன்ற காட்சி அமைந்திருப்பது சிறப்பு.
அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பாபநாசம் தஞ்சாவூர்
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசம் உள்ளது.
பராந்தக சோழன் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டது.கருவறையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி உள்ளார். மற்றொரு சந்நிதியில் பங்கஜவல்லி தாயாரும் ஆண்டாளும் எழுந்தருளி உள்ளனர் வைகாசி திருவோணம் மூன்று நாள் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி மற்றும் பெருமாளுக்குரிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் திருக்கோயில் சோத்தமங்கலம் கும்பகோணம்
+91 9443381128
கும்பகோணம்- பாபநாசம் வழி. திருக்கருகாவூரில் இருந்து 3 கி.மீ
ரங்கநாதர் என்றாலும், இங்கு சயனத் திருக்கோலம் இல்லை. அபூர்வமாக, நின்ற திருக்கோலம்தான்! மூலவர் ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக இங்கு திகழ்வார். பன்னிரு ஆழ்வார்களுடனும், நெற்றிக் கண்ணை உடைய சிவ அம்சம் பொருந்திய ஹனுமனுடனும் அருள்பாலிக்கிறார்கள். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் அம்மன்பேட்டை தஞ்சாவூர்
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது அம்மன்பேட்டை. தஞ்சாவூரில் இருந்து அடிக்கடி டவுன் பஸ் வசதி உண்டு. அம்மன்பேட்டை கடைத்தெரு பஸ் ஸ்டாப் என்று சொன்னால் இறக்கிவிடுவார்கள்.
இங்கு வரதராஜபெருமாள் மூலவராக வீற்றிருக்கிறார். சிற்ப நுட்பங்களாலும் பிரமாண்டத்தாலும் நம்மைக் கவர்கிற திருவையாறு திருத்தலம். சப்த ஸ்தான தலங்களில் முக்கியமானதும் முதன்மையானதுமான அற்புதமான தலம் என்கின்றனர் பக்தர்கள்.
<< Previous  34  35  36  37  38  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar