Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் அம்மன் கோயில்
 
தஞ்சாவூர் அம்மன் கோயில் (598)
 
அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில், நரசிங்கம்பேட்டை, மயிலாடுதுறை.
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் நரசிங்கம்பேட்டை உள்ளது.
இரண்யனை வதம் செய்த தோஷம் நீங்க ஈசனை நரசிம்மர் வழிபட்ட தலம், நரசிங்கம்பேட்டை. இங்கு வீற்றிருந்து தன்னை வணங்குவோர்க்கு வேண்டும் வரம் அளித்து, அவர்கள் கஷ்டங்களைப் போக்குகிறாள் கஸ்தூரி அம்மன். கஸ்தூரி அம்மனின் பராக்கிரமங்களை விவரிக்கும் அழகிய வண்ண ஓவியங்கள் மேற்கூரையில் வரையப்பட்டுள்ளது. சிறிய கோயில் என்றாலும், சுற்றி வர பிராகாரமும் உள்ளது. கஸ்தூரி அம்மன், பல நூறு குடும்பங்களுக்குக் குலதெய்வமாக விளங்குகிறாள். வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு அழகிய திருவுருவில் அம்மன் அருள்பாலிக்கிறாள். மணப்பேறு, மகப்பேறு உள்பட பதினாறு பேறுகளையும் அருளும் இந்த அம்மனை ஆடியில் வழிபடுவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
அருள்மிகு செல்வமாகாளி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு செல்வமாகாளி தேவஸ்தானம் திருக்கோயில், உடையாளூர் 612804, வழி கும்பகோணம், தஞ்சை மாவட்டம்.
+91 9444143758.
கும்பகோணத்திலிருந்து 7கிமீ ஊருக்கு வடக்கே மடிகொண்டான் நதிக் கரையில் உள்ளது. வலங்கைமானிலிருந்து 3கிமீ மேற்கேயும், 3 கிமீ கிழக்கேயும், பழையாறை, பட்டீஸ்வரத்திலிருந்து 1 கிமீ, குடமுருட்டி முடிகொண்டான் ஆற்றின் நடுவே உள்ளது.
ராஜராஜன் காலத்தில் உடைவாள் தயாரிக்கும் பட்டறை இருந்த இடமாதலால் உடையாளூர் என ஊர்ப்பெயர் பெற்றது. அவன் நிறுவிய 8 காளி கோயில்களில் இதுவும் ஒன்று. கரங்கள் எட்டிலும் ஆயுதம் ஏந்தி அசுரனை வதைத்த வண்ணம் கோலம். செல்வத்தை வாரி வழங்கும் அன்னை பலருக்குக் குலதெய்வமாக உள்ளாள். இவள் அருளால் செல்வம் கண்டோர் எங்கிருந்தாலும் இவளை வந்து தரிசிக்க மறப்பதில்லை. உடையாளூரில் முதல் மாடி கொண்ட கட்டிடங்கள் உள்ளவர்கள் வீடு அம்மன் கோயிலைவிட உயர்ந்து இருந்தால் அழிந்து விடும் என்று நம்புகின்றனர். சோழர்களின் காவல் தெய்வமாகவும் திகழும் அம்மன். சோழர் வழிபட்ட அஷ்ட காளிகளில் ஓன்று.
பூஜை நேரம்: காலை - மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை (வெள்ளியன்று மதியம் 2 மணி வரை)
அருள்மிகு ஆகாச மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஆகாச மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், திருநறையூர் 612602, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.
கும்பகோணம்-பூந்தோட்டம் சாலையில் 10கிமீ தொலைவில் உள்ளது. நாச்சியார் கோயில் பகுதியில் உள்ளது.
திருநறையூர் சித்தீச்சுரம் என்பது பாடல் பெற்ற தலம். மாரியம்மன் அம்சமாக அருள் பாலிக்கும் அம்பாள். கவரைச் செட்டியார். குலத்தோர் வளையல் வியாபாரத்திற்கு சமயபுரம் சென்ற போது சமயபுர மாரியம்மன் இளம் பெண் உருக்கொண்டு தனக்கு வளையல் அணிவிக்கும்படி கேட்டாள். வளையல் உடைந்தது. கனவு கலையப்பெற்றது. நிஜத்திலும் வளையல் உடைந்து கிடந்தது. வந்தோருக்கு அம்மை வார்த்திருந்து. இøதைப் பார்த்து வந்தோர் அதிர்ச்சியுற்ற போது வைகாசி அமாவாசைக்கு அடுத்த வெள்ளியன்று ஆகாச மார்க்கமாய் திருநறையூருக்கு வந்து அருள் பாலிப்பதாக அசிரீரியாகக் கூறினார். அவ்வாறே செய்யவும் செய்தாள்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை.
அருள்மிகு பெட்டி காளியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பெட்டி காளியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், (அகத்தீஸ்வரர் திருக்கோயில்), நத்தம் கொரநாட்டுக் கருப்பூர், அஞ்சல் வழி கும்பகோணம், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் 612501.
+91 0435-2443460, 9944728215, 9865065124,
கும்பகோணத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கருப்பூர் உள்ளது. இந்த ஊரைத் தாண்டி 2கிமீ தூரத்தில் உள்ள நத்தம் என்னும் இடத்தில் கோயில் உள்ளது.
விக்ரமாதித்தனின் அந்திம காலத்தில் காளி இருபக்கமாகப் பிரிந்த போது அதை ஓர் பெட்டியில் பூட்டி அவள் திருவிளையாடல் காலக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டது என எண்ணி உஜ்ஜயினியிலிருந்து ஆற்றில் மிதக்க விட அது இங்கு ஒதுங்கியது. ஊர் மக்கள் அந்தப்பெட்டியைத் திறக்க பயப்பட 8 வயது சிறுமியொருத்தி வேதமோதி அன்னையை வெளியில் எடுத்தாள். ஓர் குடிசையில் வைத்துப் பூஜித்தனர். ஒரு சமயம் குடிசை தீப்பிடித்தது. இருப்பினும் சிலை ஒன்றும் ஆகவில்லை. மகா பெரியவரிடம் சென்று கேட்டபோது அம்பாளை சுந்தரேஸ்வரர் கோயிலேயே வைத்து ஆராதிக்கும்படி கூறிவிட்டார். ஆண்டுக்கு ஒரு முறை புறப்பாடும் காளிக்கு நிகழ்கிறது. பல்லக்கில் ஆவேசத்துடன் ஆட ஆட பவனி வருவதாகவும் முகமழித்த ஆண்களும், கர்ப்பிணிப் பெண்களும் அந்த நாளில் தரிசிக்கக் கூடாதென்றும் ஐதிகம். சுந்தர மாகாளி பிரசித்தி பெற்ற பெட்டி காளியாகப் போற்றப்படும் இத்தலத்தில் அபிராமி சுந்தரேஸ்வாருடன் அருளுகிறார். சுந்தரர் 7-98-3
பூஜை நேரம்: காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 9 மணி வரை.
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தேவஸ்தானம் திருக்கோயில், கருவளர்சேரி 612402, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் .
+91 435-2430598, 9843899924, 9443873137.
கும்பகோணத்திலிருந்து 12 தொலைவில் கும்பகோணம் வலங்கைமான் மன்னார்குடி பாதையில் மருதாநல்லூரிலிருந்து 1கிமீ தொலைவில் உள்ளது.
ஸ்ரீ அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும் அருள் பாலிக்கும் இத்தலத்தில் அம்பாள் மிகப் பிரசித்தம். கர்ப்பரக்ஷாம்பிகா திருக்கருக்காவூர் கருக்காக்கும் நாயகியாகவும் இவள் கருவளர்க்கும் நாயகியாகவும் போற்றப்படுகிறாள். புற்றிலிருந்து சுயம்புவாக வெளிப்பட்ட அம்பாள் அம்பாளின் முழு உருவமும் சிவராத்திரி மற்றும் நவராத்திரி நாட்களில் தான் காண முடியும். அம்மனுக்கு தைலக் காப்பு மட்டும் தான். அபிஷேகம் இல்லை. ஸ்ரீசக்ரத்திற்கும், மகா மேருவிற்கும் பூஜை செய்யப்படுகிறது. 7 வங்காள மஞ்சள் மற்றும் எலுமிச்சம் பழம் கொண்டு பூஜை செய்யப்பட்டு தம்பதியினருக்கு அந்தப் பழரசத்தை சமமாக உட்கொள்ளும்படி கூறப்பட்டு ஆலயப் படிக்கு பூஜை செய்யப்பட்டு வேண்டிக் கொள்ளப்படுகிறது. இவ்வாலயத்தில் வேண்டிக்கொள்வோருக்கு மக்கட் பேறு கிட்டுவது நிச்சயம் என்பது நிதர்சனம்.
பூஜை நேரம்: நாள் முழுவதும் திறந்திருக்கும்.
அருள்மிகு கோடியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு கோடியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், கருந்தட்டான்குடி, (கருந்திட்டைக்குடி), தஞ்சாவூர் 613001, தஞ்சை மாவட்டம்.
+91 9367182045.
தஞ்சை மாநகரின் கருந்தட்டான்குடி பகுதியில் உள்ளது. மேல வீதியில் பச்சைக்காளி, பவளக் காளி, சூலக்காளி ஆலயங்கள் உள்ளன. தஞ்சை கும்பகோணம் பாதையில் 2கிமீல் கோயில்.
விஜயாலயச் சோழன் கட்டிய புராதனக் கோயில். தஞ்சாசுரனை காலின் கீழ் அமர்த்தியபடி திருவுருவம். சந்துரகோபன் என்கிற அந்தணன் தர்மம் தவறியதால் தேசம் க்ஷீணமானது. இதைக் தடுக்க அம்பாள் அவனை அழித்து காத்ததாக வரலாறு. பெரியநாயகி உடனுறை வசிஷ்டேஸ்வரர் அருள் பலிக்கிறார், தேவார வைப்புத் தலம் உள்ளது.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை.
அருள்மிகு வடபத்ரகாளி நிகம்ப சூதனி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வடபத்ரகாளி நிகம்ப சூதனி தேவஸ்தானம் திருக்கோயில், பூமால் ராவுத்தர் கோயில் , தெரு, தஞ்சாவூர் 613403, தஞ்சை மாவட்டம்.
+91 4362-274476.
தஞ்சை பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் கீழ வாசல் அருகே உள்ளது.
சோழர் வழிபட்ட காளிகளில் ஒன்று. கௌசீக என்கிற பெயரோடு தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சும்ப, நிசும்பனை அழித்த வரலாற்றோடு சம்பந்தபட்ட அம்மன். அம்பாளுக்கு இதனால் நிசும்ப சூதனி என்கிற பெயரும் உண்டு. முதலாம் மற்றும் இரண்டாம் ராஜராஜன் வழிப்பட்ட தலம். நம்மைத் தாக்கும் தீய சக்திகளை அழிக்கும் தலம், 850ல் விஜயாலயச் சோழன் நிறுவியது. திருவாலங்காடு செப்புத் தகடுகளின் படி விஜயாலய சோழன் முத்தரையர்களை வென்று வடகிழக்கே நிசும்ப சூதனியினை நிர்மாணித்தான் என்கிறது வரலாறு. சிலர் நவகாளிகள் சோழர்களைக் காத்ததாகவும் கூறுகின்றனர்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை.
அருள்மிகு அஷ்டபுஜகாளி கல்யாண சுந்தரேஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு அஷ்டபுஜகாளி கல்யாண சுந்தரேஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில், நல்லூர் 614208, பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம்.
+91 9363141676.
கும்பகோணம் தஞ்சாவூர் பாதையில் 20கிமீ தொலைவில் உள்ளது திருக்கருக்காவூர். இந்த ஊரிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது நல்லூர்.
உலக அதிசயமாக ஒரே நாளில் ஒன்றரை நாழிகைக்கு ஒரு முறை. ஒரு நாளில் ஐந்து முறை நிறம் மாறும் சிவலிங்கம் கொண்ட மாடக்கோவில் இது. பாடல் பெற்ற தலம். இந்த ஆலயத்தில் கோஷ்டத்தில் திகழும் இந்த மகாகாளி எண் கரங்களுடன் ஊழிக்காலத்திலும் அழியாத ஆலயத்தில் அருள்கிறாள். மக்கட்பேறுக்கும், இவள் முன்னே நின்று வளைகாப்பு செய்துகொண்டு சுகப்பிரசவத்திற்கு வேண்டுவதும் ஐதீகம்.
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8 மணி வரை.
<< Previous  58  59  60 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar