Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவள்ளூர் மாவட்டம்>திருவள்ளூர் பெருமாள் கோயில்
 
திருவள்ளூர் பெருமாள் கோயில் (15)
 
அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்
சேவா சபா ட்ரஸ்ட்,நரசிங்கபுரம் போஸ்ட், பேரம்பாக்கம்-631 402,திருவள்ளூர் மாவட்டம்
+91 94443 51026 94425 85638
சென்னை ஸ்ரீபெரும்புதூர் சாலையில் எம்.பி.டிஸ்டிலரீஸ் அருகே வலப்புறம் திரும்பி பேரம்பாக்கம் அடைந்தால் அங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் ஊர். கூவம் நதியின் எதிரே கரையில் உள்ளது. சென்னையிலிருந்து 55 கி.மீ.தூரம்.
லட்சுமி நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கு திருமுகம் மரகதவல்லித்தாயார். திறக்கும் நேரம்:காலை 7.30 முதல் 12.00 வரை, மாலை 4.30 முதல் 8.00 வரை.
அருள்மிகு சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கோயில்
ஊத்துக்கோட்டை திருவள்ளூர் மாவட்டம்
சென்னைக்கு வடமேற்கே 66 கி.மீ.
இக்கோயில் 90/110 அடி அகலம், நீளம் கொண்டு ஒரு பிராகாரத்தடன் மூலவர் சுந்தரவரதராஜப் பெருமாள். தனிச் சன்னதியில் சுந்தரவல்லித் தாயார் மற்றும் பிராகாரத்தில் பன்னிரு ஆழ்வார்கள் உள்ளனர். தி.பி. 500க்கு பிற்பட்ட கோயிலாகும். தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. வைகுந்த ஏகாதசியன்று உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்
வடமதுரை திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூரிலிருந்து வடகிழக்காக 23 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் 30 அடி உயர இராஜகோபுரத்துடன் இறைவன் ஆதிகேசவ பெருமாள் தனிச்சன்னதியில் ஆதிலட்சுமித்தாயார். இக்கோயில் 250 வருட முற்பட்டது. ஒருகால பூஜை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு வைகுந்தநாதப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வைகுந்தநாதப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், நெமிலி, திருத்தணி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் 631201.
+91 8576-2264590
சென்னை திருப்பதி சாலையில் திருத்தணி சுமார் 100 கிமீ. இருப்புப் பாதை நிலையமும் கூட தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு முன்னதாகவே நாகலாபுரத்திற்கு 14கிமீ தூரம் என்கிற கைகாட்டியில வலப்புறம் திரும்ப வேண்டும். திருத்தணியில் இருந்து நாகலாபுரம் செல்லும் பாதையில் 5கிமீல் நெமிலியும் நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோயில் அதிலிருந்து 3கிமீ தூரத்திலும் உள்ளன. அங்கிருந்து திரும்பி வரும் போது வலப்புறம் பிரியும் பாதையில் சுமார் 9 கிமீ சென்றால் பிரசித்தி பெற்ற மத்தூர் பெரிய மகிஷாசுரமர்த்தினி கோயில் உள்ளது. நாகலாபுரத்தில் வேதநாராயணசுவாமி திருக்கோயில் உள்ளது.
பிருகு முனிவர் பூரியில் தவத்தை முடித்துக் கொண்டு காஞ்சியிலேயே மிக புனிதமான தலம் எதுவோ அங்கு சங்கு சக்ர காதயுதனாகக் காட்சி தரவேண்டும் என வேண்ட அனைத்து இடங்களின் புனிதத்தையும் நெமிலி தலத்தையும் எடையிட்டுப் பார்த்தால் தன் கையில் உள்ள நெல் கடைக்கு மேலாக (நெல் மேல்) இருக்கும் எனக் கூறுவது போல் உருவம் அமைந்துள்ளது. மேலும் இதே நெல்லுக்கு மற்றோர் தலக்குறிப்பும் உள்ளது. முன்பு ஒரு சமயம் தன் நிலத்தில் விளைச்சல் அதிகமாக இல்லாததால் உழுவன் ஒருவன் இப்பெருமாளிடம் வேண்டி தன் நிலத்தில் நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என வேண்டினான். இறைவனும் அவனுடைய கோரிக்கைக்குச் செவி சாய்த்து அபரிமிதமான விளைச்சலைக் கொடுத்தார். இருப்பினும் நிறைவு பெற்ற விவசாயி பெருமாளுக்கு எதுவும் கொடுக்காமல் அவனே வீட்டிற்கு எடுத்துச்சென்று அனுபவிக்க எண்ணினான். அந்த க்ஷணமே அந்த நெல் குன்று கல்லாக மாறியது. தன் தவறை உணர்ந்து இறைவனிடம் மன்றாட இறைவன் அதை மீண்டும் நெல்லாக்கி அதிலிருந்து ஒரே ஒரு நெல்மணியைத் தனக்கும் ஏனையவற்றை அவனுக்கும் திருப்பிக் கொடுத்தார். இன்றும் பெருமாளின் இடக்கரத்தில் இரு விரலுக்கிடையே நெல்மணியுடன் விளங்குகிறது. இங்குள்ள காளிங்க நர்த்தன கிருஷ்ணனும் அபூர்வமான அமைப்பு கொண்டது. ரோகிணியில் இவருக்குச் செய்யும் திருமஞ்சனம் ராகு கேது மற்றும் இதர தோஷநிவர்த்தி தருகிறது. கடைசி பல்லவர மன்னனாகிய அபராஜிதனால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்.
அருள்மிகு கல்யாண வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு கல்யாண வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், அருங்குளம், திருத்தணி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் 631209.
+91 44-27885697, 9943138297, 9442385763.
திருவள்ளூர் திருத்தணிப் பாதையில் 12 கிமீ தொலைவில் என். என். கண்டிகைக்கு முன்னால் உள்ளது. திருத்தணியிலிருந்து 12 கிமீ. திருவள்ளூர் கனகம்மாசத்திரம் ஆற்காடுகுப்பம் வந்து அருங்குளம் கூட்ரோடில் 3 கிமீ வந்தால் முருகன் கோயில் அருகே இத்தலம்.
மிகவும் தொன்மை வாய்ந்த தலம். மூலவர் சாளக்ராமத்தால் ஆனவர். இதே ஊரில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலும் உள்ளது. சந்திரசேகரர் உற்சவரும் இக்கோயிலில் உண்டு. கல்யாண வரதராஜப் பெருமாள் கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
<< Previous  1  2 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar