| அருள்மிகு திருக்கண்டீஸ்வரர் திருக்கோயில் |
| கீழ்பிடகை, ஸ்ரீவைகுண்டம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
| ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே 5 கி.மீ. |
| இக்கோயில் வரதராஜபுரம் என்னுமிடத்தில் 1-65 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு மகாதேவகைலாசபதி திருக்கோயில் |
| மங்களகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
| பெருங்குளத்திலிருந்து தெற்கே ஒரு கி.மீ. |
| தாமிரபரணியாற்றின் வடகரையில் இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ராமபரமேஸ்வரர் திருக்கோயில் |
| முக்காணி, ஸ்ரீவைகுண்டம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
| ஏரல்லிருந்து கிழக்கே 6 கி.மீ. |
| தாமிரபரணியாற்றின் வடகரையில் இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சேரசோழபாண்டியஈஸ்வரர் திருக்கோயில் |
| திருக்கல்லூர், திருச்செந்தூர் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
| ஆழ்வார்திருநகரிலிருந்து கிழக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஏகாந்தலிங்கேசுவரர் திருக்கோயில் |
| ஸ்ரீபரங்குசநல்லூர், ஸ்ரீவைகுண்டம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
| ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென்கிழக்கே 2 கி.மீ. |
| தாமிரபரணியாற்றின கரையில் இக்கோயில் 76 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். அம்மன் தருமஸம்வர்த்தினி. |
| அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் |
| ஆத்தூர், திருச்செந்தூர் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
| காயல்பட்டிணத்திலிருந்து வடக்கே 8 கி.மீ. |
| தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் இக்கோயில் உள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் சோமசுந்தரி. தீர்த்தம் சந்திரபுஷ்கரணி. தலவிருட்சம் ஆலமரம். உள்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், ஜுரதேவர், காசிவிஸ்வநாதர், சொக்கர் முதலிய சன்னதிகள் உள்ளன. தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளதால் இத்தலம் என்றால் சந்திரன், சந்திரனுக்கு அருள்பாலித்தால் சோமநாதர் என்று பெயர் பெற்று விளங்குகிறார். இத்தலத்தில் திருமால் சயனக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். |
| அருள்மிகு கைலாசாநாதர் திருக்கோயில் |
| சேறுடமங்கலம், திருச்செந்தூர் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
| ஆத்தூரிலிருந்து வடகிழக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 1-25 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு காஞ்சி விஜயகாசி கொண்டபாண்டீசர் திருக்கோயில் |
| குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் |
| திருச்செந்தூரிலிருந்து தென்மேற்கே 14 கி.மீ. |
| இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் 150 அடி <உயர கோபுரம், இராண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் அறம்வளர்த்தநாயகி. தலவிருட்சம் மாமரம். பாண்டிமன்னன் குலசேகரபாண்டியன் இக்கோயிலை விரிவுபடுத்தி கட்டுவித்த தலம். நாள்தோறும் நான்கு கால பூஜை. சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
| அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் |
| அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்,
தூத்துக்குடி |
| தூத்துக்குடியில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| இக்கோயிலில் சோமவார வழிபாடு மிகவும் விசேஷமாகும். அதிலும் கார்த்திகை சோமவாரம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தினங்களில் நெல் பரப்பி அதன் மீது வலம்புரி சங்குகளை வைத்து அவற்றையே ஈசனாகக் கருதி பூஜைகள் செய்கிறார்கள். தொடர்ந்து ருத்ரம், சமகம், லிங்காஷ்டகம் ஜபித்து வழிபாடுகள் நடக்கும். அபிஷேக ஆராதனை நிறைவாக சங்காபிஷேகம் நடைபெறும். சோம வார தினங்களில் விரதமிருந்து சங்கர ராமேஸ்வரரை பூஜித்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமும் கை கூடும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. |
|
|