Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தூத்துக்குடி மாவட்டம்>தூத்துக்குடி அம்மன் கோயில்
 
தூத்துக்குடி அம்மன் கோயில் (418)
 
அருள்மிகு வடக்குவாச் செல்லியம்மன் திருக்கோயில்
அமுதுண்ணாகுடி, சாத்தான்குளம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்
அருள்மிகு வெயிலுகந்தம்மன் திருக்கோயில்
படுக்கப்பத்து, சாத்தான்குளம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்
குதிரைகுளம், ஓட்டப்பிடாரம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்
அருள்மிகு அலங்கார நாயகி (தெப்பக்குளம் மாரியம்மன்) திருக்கோயில்
அருள்மிகு அலங்கார நாயகி திருக்கோயில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், தூத்துக்குடி.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.
தூத்துக்குடி நகரில் முதன்முதலில் எழுந்த மாரியம்மன் கோயில் இது. கோயிலுக்கு எதிரிலேயே தெப்பக்குளம் இருப்பதால் இந்த அம்மனை தெப்பக்குளத்து மாரியம்மன் என்றும் அழைக்கின்றனர்.
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரபட்டினம், உடன்குடி வட்டம் 628206, தூத்துக்குடி மாவட்டம்.
+91 4637-222888.
திருச்செந்தூரிலிருந்து 15 கிமீ தெற்கே உள்ளது. உடன்குடியிலிருந்து 5கிமீ. திருநெல்வேலியிலிருந்து 65கிமீ. இந்தத் தலம் தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் நெடுஞ்சாலைப் பாதையில் உள்ளது. இதே பகுதியில் ஞானமூர்த்தேஸ்வரர் திருக்கோயிலும் உள்ளது. இத்தலத்தை தரிசனம் செய்யும் போது வள்ளியூர் முருகன் கோயில் திருப்புகழ்த்தலத்திøனையும் தரிசிக்கலாம்.
16-17ம் நூற்றாண்டுக் கோயில் அம்பாள் சிவமயமாக பரிவர்த்தனை நிலை என்கிற அமைப்பில் காட்சி தருவதாக ஐதீகம். அதாவது ஜோதிடத்தில் தங்களுடைய வீட்டை இரு கிரகங்கள் பரிவர்த்தனை முறையில் மாற்றி அமர்ந்தால் பரிவர்த்தனை யோகம் என்க் கூறப்படுகிறது. உதாரணம் சுக்கிரன் செவ்வாயின் இடத்திலும் செவ்வாய் சுக்கிரன் இடத்திலும் மாறி இருத்தல். அந்த வகையில் சுவாமியின் சக்தியினை அம்பாளுக்குக் கொடுத்திருப்பதாக ஐதீகம். அம்மை நோயினால் தாக்குண்டவர்கள் அம்பாளின் பீடத்தைச் சுற்றி நீர் கட்டி வழிபட அம்மை நோய் நீங்குவது கண்கூடாக நடைபெறும் நிகழ்ச்சி. ஒரு மண்டலம் இவ்வாறு வழிபடுகின்றனர். அம்மை முத்துக்களை ஆற்றி அருள் பாலிப்பதால் முத்து ஆற்று அம்மன் என்பது மருவி முத்தாரம்மன் ஆனது. தசரா (நவராத்திரி) விசேஷம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு முத்துமாலை அம்மன் திருக்கோயில்
அருள்மிகு முத்துமாலை அம்மன் திருக்கோயில், குரங்கணி வழி ஏரல், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம், 628623.
+91 4639-273387, 8940309234
திருநெல்வேலி திருச்செந்தூர் பாதையில் உள்ளது. ஏரல் என்கிற ஊர். இவ்வூரிலிருந்து 3 கிமீ. தொலைவில் உள்ள தலம்.
இராமாயணக் காலத்தோடு சம்பந்தப்பட்ட தலம். இராவணன் சீதையினைக் கவர்ந்து சென்ற போது ஆபரணங்களை பல இடங்களில் வீசனாள். அதில் முத்து மாலை விழுந்த தலமிது. மேலும் குரங்குகள் சேனையாக அணிவகுத்து நின்றதால் ஊர் பெயர் குரங்கணியானது. சீதை வீசிய முத்து மாலை ஓர் மண் கலையத்தில் அவ்வூரில் பாதுகாத்து வைத்திருந்த போது முத்து மாலை வெள்ளத்தில் மூழ்கியது. பின்னர் மருது சகோதரர்களின் கனவில் தோன்றி அம்பாள் ஆலயம் எழுப்பக் கோரி பிரத்யக்ஷமானாள். அதனால் முத்து மாலையம்மன் என்கிற பெயர் பெற்றாள்.
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை
அருள்மிகு குணவதியம்மன் திருக்கோயில்
அருள்மிகு குணவதியம்மன் திருக்கோயில், (நல்லதாய் அம்மன்), முத்தாலக் குறிச்சி, வழி செய்துங்கநல்லூர், விட்டலாபுரம் போஸ்ட், ஸ்ரீ வைகுண்டம் வட்டம் 628809, தூத்துக்குடி மாவட்டம்.
+91 9842139686.
திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உள்ள வாசவரம். செய்துங்கநல்லூரிலிருந்து 6கிமீ தூரத்தில் உள்ளது. கருங்குளம் தலமும் இப்பாதையில் உள்ளது கருங்குளம் செய்துங்கநல்லூரிலிருந்து 4 கிமீ.
மதுரை தம்பதியருக்கு அருள் பாலித்த அம்மன். பொருளாதார நெருக்கடியால் சம்பந்தி வீட்டாரால் பிரசவம் பார்க்க முடியாத பெண்ணைக் கணவன் கடிந்த போது நொந்து தாமிரபரணிக்கரையில் நடந்தாள். பிரசவ வேதனையால் துடித்த அவளை வயதானப் பெண்ணொருத்தி பிரசவம் பார்த்து நல் மகவு பிறக்க உதவினாள். மனைவியினைத் தேடி வந்த கணவனுக்குச் சிறுமி ஒருத்தி மனைவி உள்ள இடத்தைச் சுட்டிக் காட்டினாள். மனம் மாறி அப்பெண்ணுக்கு நன்றி பாரட்ட இரவு வரை அதே இடத்தில் காத்திருக்க தான் நல்ல பிள்ளை பெற்றுத் தந்த குணவதியம்மன் என்று உணர்த்தினாள். இன்றும் குழந்தைப் பேறுக்காவும் சுகப் பிரவத்திற்காகவும் அன்னையை பெருந்திரளானோர் வணங்கின்றனர். நல்லதாய் என்கிற மற்றோர் பெயரும் உண்டு.
பூஜை நேரம்: காலை 7 மணியிலிருந்து மாலை 8 மணி வரை.
அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோயில்
அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோயில், (பத்ரகாளியம்மன் திருக்கோயில்), தளவாய்புரம், வழி கயத்தார், கோவில்பட்டி வட்டம் 628952. தூத்துக்குடி மாவட்டம்.
+91 4630-263538
கோவில்பட்டியில் மதுரை திருநெல்வேலி பாதையில் உள்ள ரயில் நிலையம். இங்கிருந்து கயத்தாறு வழியில் உள்ளது. தளவாய்புரம். மதுரையிலிருந்து 127கிமீ. கோவில்பட்டியிலிருந்து 59 கிமீ. ராஜபாளையத்திலிருந்து 35 கிமீ. செய்துங்கநல்லூரிலிருந்து விட்டலாபுரம் 2 கிமீ. அங்கு பாண்டுரங்கன் கோயில் உள்ளது. கயத்தாரில் இராமாயணக் கால கோதண்டராம ஈஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி (உலகாண்டேஸ்வரி) திருக்கோயில் உள்ளது.
கிழக்குத் திசை நோக்கி அருளும் அம்பாள் 4 கரங்களுடன் திகழ்கிறாள். மக்கட்பேறு தொழில் அபிவிருத்தி தருபவள். இத்தலத்தில் மிளகாயினால் ஹோமம் செய்யும் போது தொண்டைக் கமறல் இராது என்பது அதிசயம். கயத்தாரில் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் 16.10.1799ல் ஒர் மரத்தில் தூக்கிலிடப்பட்டான்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை
<< Previous  40  41  42 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar