| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| எடாங்கிமங்கலம், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| பூவாளூர்க்கு வடகிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 144 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு திருபுவனேஸ்வரர் திருக்கோயில் |
| கிள்ளியநல்லூர், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| திருவாசிக்கு மேற்கே 5 கி.மீ. |
| கொள்ளிட ஆற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் |
| வேங்கன்குடி, லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| மணச்சநல்லூர்க்கு வடகிழக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| மருதூர், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| பூவாளூர்க்கு மேற்கே 7 கி.மீ. |
| கூழையாற்றின் தென்கரையில் இக்கோயில் 229 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கனகாம்பிகை. |
| அருள்மிகு அபராதீஸ்வரர் திருக்கோயில் |
| நகர், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| பூவளூர்க்கு மேற்கே 5 கி.மீ. |
| கூழையாற்றின் தென்கரையில் இக்கோயில் 500 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். அம்மன் அதுலசுந்தரியம்மன். |
| அருள்மிகு சுயம்பிரகாசநாதர் திருக்கோயில் |
| காளஸ்தினாம்பட்டி, லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| புள்ளம்பாடிக்கு தெற்கே 6 கி.மீ. |
| நந்தியாற்றின் கரையில் இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சியம்மன். |
| அருள்மிகு சாமவேதீஸ்வரர் திருக்கோயில் |
| திருமங்கலம், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| லால்குடிக்கு வடக்கே 4 கி.மீ. |
| மேன்மழநாடு, திருவிருநதமங்கலம், பரசுராமேஸ்வரர், கொன்றைவனம், கூழையாற்றின் தென்கரையில் இக்கோயில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். அம்மன் லோகநாயகி. தலவிருட்சம் கொன்றை. உள்பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமணியர், மகாலஷ்மி, சோமஸ்கந்தர், அப்பர், சம்பந்தர், சனீஸ்வரர், பரசுராமர், சூரியன். சந்திரன் முதலிய சன்னிதிகள் உள்ளன. திருமகள் இத்தல இறைவனை வழிபட்டதனால் திருமங்கலம் என்றும் பெயர். 63 நாயன்மார்களில் ஒருவரான் ஆனாய நாயனார் இத்தலத்தில் ஆயர் குலத்தில் அவதரித்து, மாடுகளையெல்லாம் மேய்ப்பதோடு, சிவபெருமானிடம் அன்பைப் பெருகும்படி புல்லாங்குழலில் வாசித்து இறைவனின் அருளைப் பெற்ற தலம். நாயனாரின் திருவுருவம் இக்கோயிலின் வடமேற்கில் தனிச்சன்னிதியில் காட்சியளிக்கிறார். பரசுராமர் இத்தலத்தில் தாயைக் கொன்ற பழிநீங்க இத்தல இறைவனை வழிபட்டு கொலைப் பாவம் நீங்கப்பெற்ற தலம். இக்கோயிலில் 13 கல்வெட்டுக்கள் உள்ளன. சோழ, நாயக்கர் கலத்தியவை. நான்கு கால பூஜை, பிரமோற்சவம் சித்திரையிலும், கார்த்திகை மாதத்தில் அஸ்தத்தில் ஆனாய நாயனாரின் உற்சவமும் நடைபெறுகிறது. |
| அருள்மிகு அங்கனீஸ்வரர் திருக்கோயில் |
| ஆதிகுடி, லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| லால்குடிக்கு கிழக்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 55 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பிரியாம்பிகை. |
| அருள்மிகு மருதாநாதீஸ்வரர் திருக்கோயில் |
| அங்கரை, லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| லால்குடிக்கு வடமேற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சுந்தரகாஞ்சினியம்மன். |
| அருள்மிகு அம்பலவாணேஸ்வரர் திருக்கோயில் |
| நெருஞ்சாலக்குடி, லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| லால்குடிக்கு மேற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் வாலாம்பிகை. |
|
|