Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருச்சி மாவட்டம்>திருச்சி அம்மன் கோயில்
 
திருச்சி அம்மன் கோயில் (546)
 
அருள்மிகு இராம மூர்த்தி பஜனை மடம்
ஆலத்துடையான் பட்டி,துறையூர்,திருச்சி மாவட்டம்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்
ஆதனூர்,துறையூர், திருச்சி மாவட்டம்
அருள்மிகு ஜைடைப்பெருமாள் (ம) வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
ஆலத்துடையான் பட்டி,துறையூர்,திருச்சி மாவட்டம்
அருள்மிகு பிடாரியார் திருக்கோயில்
ஆலத்துடையான் பட்டி,துறையூர்,திருச்சி மாவட்டம்
அருள்மிகு கிருஷ்ணப் பஜனை மடம்
எரகுடி,துறையூர், திருச்சி மாவட்டம்
அருள்மிகு பிடாரியார் விநாயகர் திருக்கோயில்
தென்கரை,துறையூர், திருச்சி மாவட்டம்
அருள்மிகு வட பத்ரகாளி அம்மன் கோயில்
அருள்மிகு வட பத்ரகாளி அம்மன் கோயில் திருச்சி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ளது.
சத்ரபதி சிவாஜி இக்காளியை வழிபட்டு போரில் வெற்றி வாகை சூடியதாக கோயில் வரலாறு கூறுகிறது.
அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில்
அன்பில், லால்குடி தாலுகா, திருச்சி மாவட்டம்.
திருச்சியிலிருந்து 22 கி.மீ.
நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருவிழா : வைகாசி, பங்குனியில் முதல் ஞாயிறு பூச்சொரிதல் விழா, கடைசி செவ்வாய் திருத்தேர் உற்சவம் சிறப்பு : நண்பகல் 12.00 மணியளவில் கண் குறைபாடு உ<ள்ளவர்களுக்கு பூசாரியால் பச்சிலை மூலிகைகளால் ஆன சாறு கண்களில் பிழிந்து விடப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கண் நோயிலிருந்து குணமடையவதாக கூறப்படுகிறது. சமயபுரம் ஸ்ரீமாரியம்மனின் சகோதரிகளில் மூத்த சகோதரியாக கருதப்படுகிறது.
அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில்
அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம்.
திருச்சி கீழசிந்தாமணியில், காவிரிக் கரைக்கு அருகில் அழகுற அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோயில்.
கைகளில் கிளியும் தாமரையும் ஏந்தியபடி அழகு ததும்பக் காட்சி தரும் திரவுபதியம்மன் கொள்ளை அழகு! இதே திருநாமத்துடன் திருச்சி மாநகரில் ஐந்து இடங்களில் அம்மன் கோயில் கொண்டிருந்தாலும், திருவிழாக்கள் இங்கேதான் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
அருள்மிகு சோலைக்கன்னியம்மன் திருக்கோயில்
அருள்மிகு சோலைக்கன்னியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், திருச்சி.
சிறுவாச்சூர் திருத்தலம், திருச்சி- பெரம்பலூர் வழியில், திருச்சியிலிருந்து 45 கிலோமீட்டர்; பெரம்பூரிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன.
பழமைவாய்ந்த இத்திருக்கோயிலின் கருவறையில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அருள்புரிகிறாள் சோலைக்கன்னியம்மன். அம்மனின் இடப்புறத்தில் சோலை பெரியகன்னியம்மனும், வலப்புறம் நாகக்கன்னியும் வீற்றிருக்கிறார்கள். சுதை வடிவிலான இம்மூன்று தெய்வங்களின் திருவுருவங்கள் சுமார் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சிதருகின்றன. சோலை பெரியகன்னியம்மன் திருமணத்தடைகளை நீக்கி நல்வாழ்க்கையைத் தந்தருள்கிறாள். செவ்வாய் தோஷம், நாகதோஷம், சுக்கிர தோஷம், ராகு தோஷம் மற்றும் பல தோஷங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் இக்கோவிலுக்கு வந்து சோலை பெரியகன்னியம்மனுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் திருமாங்கல்யச் சரடு வைத்து அர்ச்சனை செய்கிறார்கள். திருமாங்கல்யச் சரடினை பெரியகன்னியம்மனுக்கு பூசாரி அணிவிக்கிறார். பிறகு திருமணத்தடையுள்ளவர்களுக்கு கையில் மஞ்சள் நூலால் காப்பு கட்டப்படுகிறது. இந்த வழிபாடு முடிந்த ஆறு மாதங்களுக்குள் அந்தப் பெண்ணுக்கு திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் மகிழ்ச்சியான அனுபவம். நாகதோஷமுள்ளவர்கள் நாகக்கன்னிக்கு அர்ச்சனை செய்து, கோவிலின் பின்புறமுள்ள பாம்புப்புற்றுக்கு முட்டை பால் நிவேதித்து பூஜை செய்து நாகதோஷம் நீங்கப் பெறுகிறார்கள். குழந்தைப் பேறில்லாதவர்கள், பால்முடி கொடுப்பதாக வேண்டிக்கொண்டு, தங்களால் இயன்ற காசினை மஞ்சள் துணியில் முடிந்துவைத்தால், குழந்தை பாக்கியம் நிச்சயமுண்டு என்பது நம்பிக்கைமட்டுமல்ல; பலருடைய அனுபவம். ஒரே சன்னிதியில் அருள்புரியும் மூன்று அம்மன்களால் தோஷ நிவர்த்தி ஏற்பட்டு, திருமணத் தடைகள் விலகி, குழந்தைச் செல்வமும், மங்களகரமான வாழ்வும் கிட்டுகிறது என்பதால், இத்திருக்கோவிலுக்கு திங்கள், வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
<< Previous  52  53  54  55  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar