Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருநெல்வேலி மாவட்டம்>திருநெல்வேலி பெருமாள் கோயில்
 
திருநெல்வேலி பெருமாள் கோயில் (267)
 
அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த பரிசராக் கட்டளை
சங்கரன்கோவில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு சங்கரநாயரணசுவாமி திருக்கோயில் முறம்பன்குளம் உச்சிகாலகடட்ளை
சங்கரன்கோவில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு வெங்கடஜலாபதி திருக்கோயில்
திருவேங்கடம்,சங்கரன்கோவில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில்
சங்கரன் கோவில்-627 756,திருநெல்வேலி மாவட்டம்
+91 4636 222265
தென்காசி விருதுநகர் இருப்புப்பாதையில் உள்ள ஊர். ராஜபாளையத்திலிருந்து 32 கி.மீ. திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. வடமேற்கேயும் குற்றாலத்திலிருந்து பேருந்தில் சென்றால் சுமார் 50 கி.மீ., 32 கி.மீ. தொலைவில் ஊதியமலை முருகன் தலம் உள்ளது.
வன்மீக நாதர் கிழக்குத் திருமுகம், கோமதி அம்மன் சங்கர நாராயணர் நின்ற திருக்கோலம். திறக்கும் நேரம்:காலை 5.00 முதல் 12.00 வரை, மாலை 4.00 முதல் 9.00 வரை.
அருள்மிகு அழகிய மணவாளபெருமாள் திருக்கோயில்
செங்கோட்டை - 627 809, திருநெல்வேலி மாவட்டம்.
+91 4633 - 233 493
திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ.
நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவிழா : ஆடி திருவிழா, கிருஷ்ணஜெயந்தி, மார்கழி திருப்பள்ளியெழுச்சி, சிறப்பு : முன்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த திருக்கோயில் சுந்தரவர்ம என்ற அரசன் பெருமாளை மஹாபிரதிஷ்டை செய்ததாக வரலாறு. மூலவருக்கு 365 நாட்களும் அதிகாலை அபிஷேகம் நடைபெறும்.
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்
கிருஷ்ணாபுரம் திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலியிலிருந்து தென்கிழக்காக 13 கி.மீ.
தாமிரபரணியாற்றின் தென்பகுதியில் இக்கோயில் சுற்றுமதில் சுவற்றுடன் மூன்று பிரகாரங்களுடன் மூலவர் மற்றும் உற்சவர் வெங்கடாசலபதி, திருமகள் பூமிதேவியுடன் காட்சியளிக்கிறார். உள்பிராகரத்தில் வரமங்கைத் தாயார், கருடன், பன்னிரு ஆழ்வார்கள் உள்ளனர். மகாமண்டபத்தில் அர்ச்சுனன், கர்ணன், குறவன், குறத்தி, அரச குமாரியைக் குறத்தி தூக்கிக்கொண்டு ஓடுவது, நாட்டியமாடும் பெண் என சிற்ப சிலைகளும் ÷நர்த்தியாக அமைந்துள்ளன. வடவேங்கடம் போன்று அமைந்துள்ள இக்கோயில் தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 11 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது. விஜய நகர மன்னர் கிருஷ்ணப்பநாயக்கர் மன்னர் இக்கோயிலை விரிவுபடுத்தி இங்குள்ள சிலைகள் யாவும் வடிவமைத்ததாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
அருள்மிகு லட்சுமி நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்
புளியங்குடி திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோயிலிருந்து மேற்கே 16 கி.மீ.
இக்கோயில் ஊரின் வடமேற்குப் பகுதியில் ஒரு பிராகாரத்துடன் மூலவர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் லட்சுமி நரசிங்கப் பெருமாள். உற்சவர் சுந்தரராஜப் பெருமாள் மற்றும் திருமகள் பூமிதேவியுடன் காட்சியளிக்கிறார். தீர்த்தம் லட்சுமி தீர்த்தம். தல விருட்சம் புளியமரம். பிராகாரத்தில் கருடன், நம்மாழ்வார் உள்ளனர். தினமும் 2 கால பூஜை நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமி, ஸ்ரீராமநவமி, புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி அன்றும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.
அருள்மிகு லக்ஷ்மிவராகர் திருக்கோயில்
கல்லிடைக்குறிச்சி திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரத்திற்கு தென்கிழக்கே 3 கி.மீ.
திருக்கரந்தை, கல்யாணபுரம். தாமிரபரணியாற்றின் தென்பகுதியில் இக்கோயில் இரண்டு பிராகாரங்களுடன், 3 நிலை இராஜகோபுரத்துடன் மூலவர் லக்ஷ்மிவராகர் இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டுக் கொண்டு இடது மடியிலே பூமிதேவியை அமர்த்திக்கொண்டும், இடது கை பூமிதேவியின் இடையைப் பரிவுடன் அணைத்துக் கொண்டும், வலது கை தேவியின் முழங்கால்களை ஆதரவுடன், ஒரு கையில் சங்கும், மறுகையில் சக்கரமும் கொண்டு காட்சியளிக்கிறார். மணி மண்டபத்தில் உற்சவர் லட்சுமிவராகர் மற்றும் நீலாதேவி, பூமிதேவியுடன் காட்சியளிக்கிறார். பிராகாரத்தில் திருமகளுக்கும் பூமிதேவிக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. தீர்த்தம் வராக தீர்த்தம், இத்தல இறைவனை குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மத்ஸ்ய புராணத்தில் தாமிரபரணி மகாத்மியத்தில் 13வது அத்தியாயங்களில் இத்தலத்தைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக் கோவை 200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காப்பியமாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இத்தல இறைவனை வழிபட்டு, ஒரு கீர்த்தனை பாடியுள்ளார். தினமும் நான்குகால பூஜை நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் கருடசேவையும், ஆவணியில் 7 நாட்கள் பவித்திர உற்சவமும் நடைபெறுகிறது.
அருள்மிகு ராஜ கோபாலசுவாமி திருக்கோயில்
மன்னார்கோயில் திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரத்திற்கு வடமேற்கே 5 கி.மீ.
இக்கோயில் 300 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஐந்து நிலை இராஜகோபுரமும், இரண்டு பிராகாரங்களுடன் மூலவர் ராஜ கோபாலசுவாமி மற்றும் தனிச்சன்னதியில் வேதவல்லித் தாயார், புவன வல்லித்தாயார். பிராகாரத்தில் இராமர், கிருஷ்ணர், விஷ்வக்சேனர், இராமானுஜர், பன்னிரு ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள் உள்ளனர், குலசேகர ஆழ்வார் தனிச்சன்னதியில் வடக்கு பகுதியில் உள்ளார். பிருகு முனிவருக்கு இத்தல எம்பெருமான் பரமபத நாதராகவும், வேதநாராயணராகவும், அரங்க நாதராகவும் மூன்று நிலைகளில் இறைவன் காட்சி தந்த தலம். மார்க்கண்டேய முனிவரும் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்ற தலம். கல்வெட்டுகளில் இத்தலத்தை இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம் என்னும், இறைவனை அழகிய மன்னனார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. நான்கு கால பூஜை நடைபெறுகிறது. சித்திரை மாதப் பௌர்ணமி அன்று உற்சவம் நடை பெறுகிறது.
அருள்மிகு ராமசாமி திருக்கோயில்
பாப்பான்குளம் திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார்குறிச்சிக்கு அருகில்
இக்கோயில் வராக நதிக்கரையில் 300 ஏக்கர் நிலப்பரப்பளவில், இரண்டு பிராகாரங்களுடன், மூலவர் ராமசாமி மற்றும் சீதாதேவி காட்சி தருகின்றனர். இக்கோயில் ஆற்றங்கரையில் புளிய மரத்தினடியில் இருந்ததை பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் விரிவுபடுத்தி திருப்பணி செய்ததை கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. வெளிப்புற பிராகாரத்தில் உள்ள கல்வெட்டுக்களில் சேரனை வென்றான் திருமடைவிளாகம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. தினமும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது. சித்திரை மாத பௌர்ணமி அன்று பிரமோற்சவம் நடைபெறுகிறது.
<< Previous  24  25  26  27  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar