Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருநெல்வேலி மாவட்டம்>திருநெல்வேலி பெருமாள் கோயில்
 
திருநெல்வேலி பெருமாள் கோயில் (267)
 
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வீரவநல்லூர் திருநெல்வேலி
திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் சேரன்மாதேவிக்கும் அம்பாசமுத்திரத்துக்கு நடுவில் உள்ளது வீரவநல்லூர்.
காசியப முனிவர் தவம் செய்த தலம். முனிவருக்கும் மன்னனுக்கும் மக்களுக்கும் அருள் மழை பொழிந்த ஆலயம்.
அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில்
அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில், திப்பிரமலை, நாகர்கோவில்.
+91 9486548823
நாகர்கோவிலிருந்து 31 கி.மீ., கன்னியாகுமரியிலிருந்து 43 கி.மீ. திங்கள் நகர்- கொளச்சல் சாலையில் 9 கி.மீ. பயணித்தால் கருங்கல் அரசு மேனிலைப்பள்ளி வரும். அருகில் கோயில் வளைவு இறக்கத்தில் திப்பிரமலை கிருஷ்ணன் கோயில்.
தென்னிந்தியாவில் மிகப் பெரிய கிருஷ்ணன் சிலையாக இது கருதப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டின் மூலம் இக்கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகவும் இக்கண்ணன் கருமாணிக்கத்தாழ்வார் என அழைக்கப்பட்டதாகவும், இன்றளவும் இக்கண்ணன் வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள். தாய் யசோதை ஒரு கையில் வெண்ணெயும், மறு கையில் மத்துமாக அருகில் நிற்க, வானுக்கும் மண்ணுக்குமாய் வளர்ந்து, விஸ்வரூபம் காட்டும் கண்ணன். சங்கு, சக்கரம், கதாதாரியாக ஒரு கையில் வெண்ணெய் ஏந்தி, மண்ணை உண்டாயா எனக் கேட்ட தாய்க்கு விஸ்வரூப தரிசனம் காட்டும் கண்ணனை இங்கு மட்டும்தான் காண முடியும்.
அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி டவுன், நெல்லையப்பர் கோயில் அருகில், திருநெல்வேலி 627001.
+91 462- 2320020, 9245777727.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலிருந்து தென் மேற்கில் அரை கிமீ தூரத்தில் உள்ளது.
கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் நீலமணி நாதர், கல்யாண கோலத்தில் தெற்கு திருமுக மண்டலமாக லக்ஷ்மி நாராயணர், உதர சயன கோலத்தில் அனந்த பத்மநாபராக 3 நிலைகளில் காட்சி தருகிறார். கோயிலில் உள்ள பத்மநாப தீர்த்தம் தாமிரபரணி மகாத்மியம் இரண்டாவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளதால் இக்குளம் 500 ஆண்டு பழமை வாய்ந்தது. சுமார் 1500 ஆண்டு பழமை வாயந்த இக்கோயிலை பிற்கால பாண்டியர்கள் திருப்பணி செய்துள்ளனர். கரிய (சனி) மற்றும் மாணிக்கம் (சூரியன்) இவர்களைச் சார்ந்து பெருமாள் பெயர் பெற்றுள்ளதால் கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தோஷங்களையும் நீக்க வல்ல தலம். ஒண் சுடரோடு என்கிற நம்மாழ்வார் பாசுரத்தில் கரிய மாணிக்கமே என்று மங்களாசாஸனம் செய்துள்ளார். புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷமும் இம்மாதத்தில் 11 நாள் பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது. வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் விசேஷம். கரியமாணிக்கப் பெருமாள் ஆஞ்சநேயர் 3 நிலைகள் கிழக்கு தெற்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு ப்ருஹன்மாதவன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ப்ருஹன்மாதவன் தேவஸ்தானம் திருக்கோயில், கோடகநல்லூர், சேரன்மாதேவி வழி, திருநெல்வேலி வட்டம் 627414.
+91 4634-292350.
கோடகநல்லூர் தலம் திருநெல்வேலி சேரன்மாதேவி செல்லும் வழியில் நடுக்கல்லூருக்கு தெற்கே 1கிமீ உள்ளது.
கோடகநல்லூர் தலம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. நவகைலாயத் தலங்களில் ஒன்றனாதும் கூட நவகைலாயத்தில் செவ்வாய்குரிய தலமிது. இதே தலத்தில் எழுந்தருளியுள்ள பிருகன் மாதவன் திருக்கோயில் பழமை வாய்ந்தது. முற்காலத்தில் இத்தலத்தில் காயத்ரி (காயத்ரி என்பது 24 அக்ஷரம் கொண்ட சந்தஸ் வகையாக சமஸ்கிருதத்தில் குறிப்பிடப்படுகிறது.) ஹோமம் செய்து 24 அக்ஷரத்திற்கு ஒருவராக ஆத்ம சமாரோபணம் செய்த தலம் இது. ராகு கேது பரிகாரத் தலம். இங்கு இன்றும் 5 தலை நாகங்கள் உள்ளதாகச் செவி வழிச் செய்தி கூறுகிறது. இருப்பினும் அமிர்த கலசம் என்கிற ஓர் பிரசாதத்தை உண்பதால் பாம்புகளினால் இங்கு எவருக்கும் பாதகம் வராது என்றும் தோஷங்கள் நீங்கும் என்றும் ஐதீகம். சரும வியாதி நிவர்த்தியினைத் தரும் தலம். கனவில் அடிக்கடி பாம்பு தோன்றுபவர்கள் இப்பெருமாளை தரிசிக்க நிவர்த்தி கிட்டும். கோடகநல்லூர் ப்ருஹன்மாதவன் திருக்கோயில் கார்கோடகநல்லூர் என்பதே கோடகநல்லூர் ஆனது. இங்கு கார்கோடகன் இறைவனைக் குறித்து தவமிருந்து பெருமாள் அனுக்கிரகம் செய்ததாக வரலாறு. தவமிருந்த போது ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து நள மகாராஜன் கார்கோடனைக் காத்ததாகவும். அதற்கு தன்னுடைய நன்றியுணர்வோடு சனி பகவானின் தாக்கத்திலிருந்து நளனுக்கு உதவியதாகவும் புராணம் கூறுகிறது. நிகமாந்த தேசிகர் தரிசித்த பெருமாள் இவர்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், கருங்குளம் 627114, தூத்துக்குடி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
+91 4630-264233.
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் பாதையில் சதுங்கநல்லூர் தாண்டி 13 கிமீல் உள்ளது. சிறிய குன்றின் மேல் கோயில். பேருந்து செல்லும். தாமிரபரணியின் தென் கரையில் கோயில். மேலும் திருநெல்வேலி வைகுண்டம் கிருஷ்ணாபுரத்தில் சிற்ப வேலைப்பாடு மிக்க கோயில் உள்ளது.
மலையடிவாரத்திலும் மலை மேலும் கோயில்கள் உள்ளன. மரத்தினால் ஆன வெங்கடேசப் பெருமாள் இரண்டு தேர் ஓட்டும் தடிகள் சந்தன மரத்தினால் ஆனவை அருகருகே வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வகுளாசலம் என்கிற புரதானப் பெயர். சித்ரா பவுர்ணமி சமயத்தில் 10 நாள் உற்சவம். புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட சேவை, விஷ்ணு சஹஸ்ரநாம லக்ஷார்ச்சனை புஷ்பாஞ்சலியுடன், மாசி மகத்துடன் நிறைவு பெறும் வைபவம், ஜுலையில் பவித்ரோத்ஸவம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. அருகே கிருஷ்ணாபுரம் என்கிற ஜயதுங்க நல்லூரிலிருந்து 3கிமீ தொலைவில் உள்ள வேங்கடநாதன் சிற்பக் கோயில், ஸ்ரீதேவி பூமிதேவியுடன் நிற்கிறார். இங்குள்ள சிற்பங்கள் காண்பதற்கு அரிதானவை. வெங்கடேசப் பெருமாள் அலர்மேல்மங்கை நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு காட்டு இராமர் திருக்கோயில்
அருள்மிகு காட்டு இராமர் திருக்கோயில், அருக்கனகுளம், மேலூர், சேந்தமங்கலம் அஞ்சல், திருநெல்வேலி 627358, திருநெல்வேலி மாவட்டம்.
+91 462-2336764, 9443614697.
திருநெல்வேலி இரயில் நிலையத்திலிருந்து சுமார் மூன்றரை கிமீ தூரம். தர்மபதி என்றழைக்கப்படுகிறது தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இக்கிராமம்.
இராமாயணக் காலத்துத் தலம். இராமர் பாதத்தில் ஜாடயு மோக்ஷம் பெற்ற இடம். ஜடாயு தீர்த்தம் உள்ளது. இங்கு எட்டெழுத்துப் பெருமாளுக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் கோயில் உள்ளது. பெருமாள் இந்தத் தலத்தில் இராமராக அருள் பாலிக்கிறார். ராம தூத பக்த வீர ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தர்கள் வழிபட்ட தலம். ஆகம விதிகளுக்கு உட்பட்டும் அப்பாற்பட்டும் பூஜைகள் நடைபெறும் தலம். எட்டு சுற்று ஸ்ரீராமஜெயம் சொல்லி ராமரை வழிபடுவது விசேஷம். மாயாண்டி சித்தரின் சமாதி உள்ளது. மேலும் சிவனும் சுப்பிரமணியரும் அருள் பாலிப்பது விசேஷம் 3 திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவை சித்திரை 18 அன்னதானம் புத்திரகாமேஷ்டியாகம், மார்கழி கல்யாண உற்சவம். மாணவர்களுக்கு முதன் முதலில் பூஜைகள் நடத்திய தலம். இக்கோயிலில் உண்டி, தட்டு காணிக்கை இல்லை. தர்மம் எடுத்து தர்மம் செய்வது இத்தலத்தின் பெருமை. இத்தலத்து ஆஞ்சநேயர் நிராயுதபாணியாக அக்னி வளையத்தில் உள்ளார். துலாபாரப் பிரார்த்தனையும் உள்ளது. பழைய காட்டு ராமர் கோயில் இக்கோயிலுக்கு மிக அருகே உள்ளது. எட்டெழுத்துப் பெருமாள் லக்ஷ்மி பெரியபிராட்டி காட்டு இராமர் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். ஞாயிறு விசேஷம் மதியம் 01.30 வரை இருக்கும். பிரதி ஞாயிறு அன்னதானம் உண்டு.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை
அருள்மிகு நரசிம்மர் மற்றும் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்
அருள்மிகு நரசிம்மர் மற்றும் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில், கீழப்பாவூர், கீழப்பாவூர், ஆலங்குளம் வட்டம், நெல்லை மாவட்டம் 627806.
+91 9442330643.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாவூர்ச்சத்திரத்திலிருந்து கரண்டை பாதையில் 2 கிமீல் ஊர். பாவூர்ச்சத்திரம் நெல்லையிலிருந்து தென்காசி சாலையில் 37 கிமீ ல் உள்ளது. தென்காசியிலிருந்து 16 கிமீ.
நரசிம்மாவதாரம் நிகழந்ததாகக் கூறப்படும் இடம் ஆந்திர மாநிலத்து அஹோபிலம். இந்தக் கோலத்தை முனிவர்க்கு பல இடங்களில் காட்டிய நரசிம்மர் பொதிகை மலையில் தாமிரபரணியின் கிளை நதியாக விளங்கிய சித்ரா நதிக்கரையில் தவம் புரிந்த காஷ்யபர், நாரதர், வருணன், சுகோஷனனுக்கு இத்தலத்தில் 16 கரங்களோடு ஹிரண்யனை தன்மீது கிடத்தி காட்சி தந்தார். இந்த ஊருக்கு ஆதலால் பாண்டி நாட்டு அஹோபிலம் என்கிற பெயரும் உண்டு. பிரகலாதன், காஷ்யபர் மற்றும் காசி மன்னனும் அருகில் உள்ளனர். உக்கிரமாகக் காட்சி தந்த நரசிம்மர் நரசிம்ம தீர்த்தத்தின் குளுமையைக் கொண்டு சாந்தமானார். 800 ஆண்டுகளுக்கு முன் பாண்டியர் கட்டிய கோயில். கருடனின் வழிகாட்டுதலின் படி கோயிலில் கிணற்றடியில் கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன் சாயங்கால பூஜையின் போது சிங்கம் கர்ஜிக்கும் சப்தம் கேட்கும் பால் மற்றும் இளநீர் அபிஷேகம் விசேஷம் தீரா வழக்கு, சூலை நோய், செய்வினை, சத்ரு பய நீக்கம் ஆகியவை கிட்டும், புரட்டாசி சனிக்கிழமை, நரசிம்ம ஜெயந்தி, பிரதோஷம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. நரசிம்மர் மற்றும் பிரசன்ன வெங்கடாசலபதி அலர்மேல்மங்கை பத்மாவதி வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். சுவாதி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை விசேஷ பூஜை நடைபெறுகிறது.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை
<< Previous  25  26  27 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar