| அருள்மிகு சௌந்தரபாண்டீஸ்வரர் திருக்கோயில் |
| மேலக்கருவேலங்குளம், நாங்குனேரி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| களக்காடுவிலிருந்து ஒரு கி.மீ. |
| பொதிகை மலைத் தொடரின் அடிவாரத்தில், ஆற்றிற்கு மேற்கே இக்கோயில் 58 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. தல விருட்சம் நெல்லிமரம். இத்தலம் காடுகள் நிறைந்த பொதிகைமலை அடிவாரத்தில் உள்ளதால் இக்காட்டிலுள்ள யானைகள் இவ்வூருக்கு வந்து கோயிலுக்கு முன்னுள்ள திருக்குளத்தில் சுற்றிவலம் வந்து விளையாடுவதைக் கண்டு களித்த சௌந்தரபாண்டியன் என்னும் மன்னர் இங்கு ஒரு நகரத்தை ஏற்படுத்து, ஒரு சிவாலயம் கட்டுவித்து இறைவனுக்கு தமது பெயரில் சௌந்தரபாண்டீஸ்டரர் என்ற பெயரும், இவ்வூருக்கு கரிவலங்குளம் என்றும் பெயரிட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. தென்னாட்டில் புகழ்பெற்ற நடராஜ ÷க்ஷத்திரங்களில் இத்தலமும் ஒன்றாகும். சிதம்பரம், கட்டாரிமங்கலம், செப்பரை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம் என இவ்வைந்து ஊர்களிலும் உள்ள நடராஜ மூர்த்தியிலி திருவுருவங்கள் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாள்தோறும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. திருவாதிரைத் திருநாளில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
| அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் |
| தேவநல்லூர், நாங்குனேரி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| நாங்குனேரியிலிருந்து வடமேற்கே 9 கி.மீ. |
| இக்கோயில் 1-01 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் |
| பத்மனேரி, நாங்குனேரி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| களக்காட்டிலிருந்து வடக்கே 5 கி.மீ. |
| பச்சலாற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் |
| பதை, நாங்குனேரி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| களக்காட்டிலிருந்து வடக்கே 3 கி.மீ. |
| பச்சலாற்றின் கரையில் இக்கோயில் 65 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ராமலிங்கர் திருக்கோயில் |
| செண்பகராமநல்லூர், நாங்குனேரி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| நாங்குனேரியிலிருந்து கிழக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு திருவழுத்தீஸ்வரர் திருக்கோயில் |
| ஏர்வாடி, நாங்குனேரி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| நாங்குனேரியிலிருந்து தென்மேற்கே 8 கி.மீ. |
| நம்பியாற்றின் கரையில் இக்கோயில் 6-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு ராமலிங்கர் திருக்கோயில் |
| பனகுடி, நாங்குனேரி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| ஏர்வாடியிலிருந்து தெற்கே 11 கி.மீ. |
| இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் |
| காவல்கிணார், நாங்குனேரி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| ராதாபுரத்திலிருந்து மேற்கே 8 கி.மீ. |
|
| அருள்மிகு தோணீஸ்வரர் திருக்கோயில் |
| கலிங்கபட்டி, சங்கரன் கோயில் வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| கரிவலம் வந்தநல்லூரிலிருந்து கிழக்கே 9 கி.மீ. |
| நிட்சேப நதிக்கரையில் இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் |
| உவரி, நாங்குனேரி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| திசையன்விளையிலிருந்து தெற்கே 6 கி.மீ. |
| திசையன்விளையிலிருந்து தெற்கே 6 கி.மீ. கடற்கரைத்தலம். இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். ஆலயத்திற்கருகேயுள்ள கடல் சிவதீர்த்தம். நான்கு கால பூஜை நடைபெறுகிறது. வைகாசியில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. |
|
|