Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருப்பூர் மாவட்டம்>திருப்பூர் அம்மன் கோயில்
 
திருப்பூர் அம்மன் கோயில் (105)
 
அருள்மிகு மாரியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோயில்
பச்சாம்பாளையம் திருப்பூர்
+91 421 247 2200
அருள்மிகு காளியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு காளியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், பாரியூர் கொண்டம், கோபிசெட்டிபாளையம், வட்டம், திருப்பூர் மாவட்டம் 638476.
+91 4285-222010.
கோபிசெட்டிப்பாளையம் அந்தியூர் பாதையில் 3கிமீ. தூரத்தில் பாரியூர். கோபிசெட்டிப்பாளையம் ஈரோடு நகரத்திலிருந்து 34கிமீ தொலைவில் உள்ளது. திருப்பூரிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள பெருமாநல்லூரில் கொண்டத்துக் காளியம்மன் கோயில் உள்ளது.
திருமணமாகாத பெண்ணொருத்தி வெறுப்புற்று தீ மித்து உயிரை இந்த அம்மன் முன் மாய்த்துக்கொள்ள முற்பட்டபோது அம்பாள் ஆட்கொண்ட தலம். ஆடி மாதங்களில் பூ மிதிக்கும் பழக்கம் கொண்ட கொங்கு தேசத்துப் பகுதியில் பாரியூர் குண்டம் என அக்காலத்தில் அழைக்கப்பட்டது மருவி பாரியூர் கொண்டம் ஆனது. வீற்றிருந்த கோலத்தில் எட்டு கரங்களோடு அம்பாள். மக்கட்பேறு, தீய சக்திகளிலிருந்து விடுதலை. திருமணத் தடை நீக்கம் ஆகியவை நல்கும் தலம். 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலம்
பூஜை நேரம்: காலை6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை.
அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், கருவலூர், அவிநாசி வட்டம் 641670, திருப்பூர் மாவட்டம்.
+91 4296-288254.
கருவலூர் திருப்பூரிலிருந்து 25 கிமீ. அவிநாசி மேட்டுப்பாளையம் 8கிமீ.ல் உள்ள ஊர். சூலக்கல்லிலும் மாரியம்மன் கோயில் உள்ளது.
முதலையிடமிருந்து பல ஆண்டுகள் கழித்து உயிர் மீட்ட அதிசயம் நடந்த தலம் அவிநாசி பாடல் பெற்ற தலம். அந்த அதிசயம் நடந்த போது கருவுற்று மேகம் பொழிந்ததால் இவ்வூர் இப்பெயர் பெற்றதாகத் தகவல். குழந்தைச் செல்வம் தரும் இவள் பாலகியாக நின்ற திருக்கோலமாக விளங்கிறாள். நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல்1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் 8 மணி வரை.
அருள்மிகு நித்திய சுமங்கலி மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு நித்திய சுமங்கலி மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், ராசிபுரம் 637408, நாமக்கல் மாவட்டம்.
+91 4287-220411, 04287-244275, 9994071835.
ராசிபுரத்திலிருந்து நாமக்கல் செல்லும் பாதையில் உள்ள தலம்.
உழவுத் தொழில் செய்து வந்த போது கலப்பையில் சிக்கிய பீடத்தின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பாள். நாற்புரம் கொல்லிமலை சூழ உள்ளத் திருத்தலம். ஆலயத்தில் உள்ள வேம்புக் கம்பம் சிவனின் அம்சமாகக் கருதப்பட்டு மாங்கல்ய பாக்கியம் கோரி பெண்கள் அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமமிட்டு வழிபடுகின்றனர். மன்னர் பலருக்கு ஆயுளை மீட்டுத்தந்த அம்பாள்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9 மணி வரை.
அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், ஒருவந்தூர் 637015, வழி மோகனூர், நாமக்கல் மாவட்டம்.
+91 4286-224144, 9443341125.
மோகனூர் காட்டுப்புத்தூர் பாதயில் உள்ள ஊர். நாமக்கல் மோகனூர் பாதையில் 12 கிமீ. தூரத்தில் உள்ள தலம். நாமக்கல்லில் கூலிப்பட்டி பகுதியில் (4 கிமீ) மாரியம்மன் கோயிலும் உள்ளது.
1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம். உப்பு மணல் மிகுந்த இப்பகுதியினைத் தோண்டிய போது இரத்தம் பீறிட வெளிப்பட்ட உருவமிது. அம்மையப்பனாக இணைந்து அருள் பாலிக்கும் திருவுருவம். ஓரு சேர இருவரும் அமைந்ததால் ஒருவந்தூர் என ஊரின் காரணப் பெயர். தினந்தோறும் திருவிழாவாக பூஜை சாமான்கள் மற்றும் சேவல் ஊருக்குள் கொண்டு சென்று வலம் வருகிறது. திருமண பாக்கியம் கிட்டும் தலம். ஆலயத்தில் மலையாள கருப்பண்ணசாமி, மதுரை வீரன், பட்டவன், சடையாச்சி, பேச்சியம்மன், சப்த கன்னிகைகளும் உள்ளன.
பூஜை நேரம்: காலை 6 மணியிலிருந்து மாலை 8 மணி வரை. (இடைவிடாது தரிசனம்).
<< Previous  9  10  11 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar