Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவாரூர் மாவட்டம்>திருவாரூர் பெருமாள் கோயில்
 
திருவாரூர் பெருமாள் கோயில் (156)
 
அருள்மிகு அபீஷ்டவரதராஜ சுவாமி திருக்கோயில்
காரப்பங்காடு திருவாரூர் மாவட்டம்
ராஜமன்னார்குடிக்கு தெற்கே 30 கி.மீ.
நீலாம்புதவனம். இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன், ஒரு பிராகாரத்துடன் கருவறையில் மூலவர் அபீஷ்டவரதராஜ சுவாமி மற்றும் திருமகள், பூமிதேவியுடன் காட்சியளிக்கிறார் தாயார் பெருந்தேவிநாச்சியார் தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார். தலவிருட்சம் பாதிரி மரம். இம்மரம் சிவப்பு பாதிரி, வெள்ளைப்பாதிரி என இரண்டு மரங்களாக அமைந்துள்ளது. தீர்த்தம் வரத புஷ்கரிணி. விமானம் புண்யகோடி விமானம். இத்தல இறைவனைப் போற்றி மணவாளமாமுனிகள் பாடித் துதிக்கப்பட்ட திருத்தலம். தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. வைகாசி மாதம் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு வரதராஜர் திருக்கோயில்
அருள்மிகு வரதராஜர் திருக்கோயில் வஸ்தராஜபுரம் திருவாரூர்
திருவாரூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் இருக்கும் பேரளம் எனும் ஊரின் மேற்கே சுமார் 3 கி.மீ யில் இருக்கிறது வஸ்தராஜபுரம் கிராமம். இவ்வூரின் கிழக்கே திருமீயச்சூர், மேற்கே திருப்பாம்புரம், தெற்கே திருவீழிமிழலை, வடக்கே தேரழுந்தூர் திருத்தலங்கள் உள்ளன.
எல்லா இடங்களிலும் மூலவரின் வடிவிலேயே உற்சவரும் அமைந்திருப்பார். ஆனால் இங்கிருப்பவரோ மாறுபட்ட வடிவினர். காளிங்கன் எனும் பாம்பினை அடக்கிடும் திருவடிவம் இவருடையதாக இருப்பதால்தான் நாககிரகங்களின் தோஷம் போக்கி நன்மை தருவார். இவர் என்பது ஐதிகமாக இருக்கிறது.
அருள்மிகு வீரகோதண்டராமர் திருக்கோயில்
தில்லைவிளாகம் திருவாரூர் மாவட்டம்
திருத்துறைப்பூண்டிக்கு தென் மேற்காக 20 கி.மீ.
தண்டகாரண்யம் தில்லைவனம். புண்டரீகபுரம் என வேறு பெயர்கள் கொண்டு, கோரையாற்றின் தென் பகுதியில் இக்கோயில் 0 60 செண்ட் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரமும், அர்த்த மண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம், கூடிய இரண்டு பிராகாரங்களுடன் மூலவர் வீரகோதண்டராமர் சீதாதேவி, இலட்சுமணர், அனுமன் ஆகியோர் கம்பீரமான நின்ற திருக்கோலமும், கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்கள். கருவரையில் கற்சிலைகளே கிடையாது. எல்லாம் பஞ்சலோக சிலைகளாகவே காட்சி தருகின்றனர். இங்குள்ள மூர்த்திகள் அனைவரும் தி.பி. 1893 ஆம் ஆண்டில் இதே இடத்தில் கிடைக்கப் பெற்றவர்கள் . இராமர் இலங்கைச் சென்று இராவணனை வென்று சேது கடற்கரை வழியே திருப்பி வந்தபோது இவ்விடத்தில் தங்கியதாக தலபுராணம் கூறுகிறது. தலவிருட்சம் தில்லைமரம். விமானம் ஆனந்த விமானம். தீர்த்தம் கோயிலுக்குப் பின்புறம் சீதா தீர்த்தம் என்னும் ஹேம புஷ்கர்ணியும், இராம தீர்த்தமும், வடபுறம் அனுமன் தீர்த்தமும் கோயிலைச் சுற்றி மூன்று புறமும் அமைந்துள்ளன. பிராகாரம் சுவர்களில் 39 வகையான இராமாயணக் காட்சிகளை சித்தரிக்கும் வண்ணப் படங்களாக வரையப்பட்டுள்ளன. மூலவர் வீரகோதண்டராமர் காண்பதற்கு ஸ்ரீராமச் சந்திரமூர்த்தியே கண்ணெதிரில் காண்பது போன்ற ஒரு தோற்றம். உயிருள்ளவையோ என்று வியந்து நிற்கும் வகையில் மனித உடற்கூறுகளுடன் ஒத்திருக்கும் இந்த <<<உற்சவ சிலைகளில் கரத்திலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள், விரலில் உள்ள ரேகைகள், கை, கால் நகங்கள், விரல்கள் தனித்து தெரியும்படியும், முகத்தில் கூர்மையான நாசி, மலர்ந்த கண்கள், உடலின் வடிவமைப்பு, கோதண்டத்தை ஏந்தியிருக்கும் திருக்கரங்களின் விரல்களின் வளைவு நெளிவுகள், சிரசில் இருக்கும் கிரீடம், ரோமம் படிந்த அனுமனின் சிலையாவுமே சிற்பத்திறனின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் நான்கு கால பூஜை வைகானச ஆகமமுறைப்படி பூஜை செய்யப்படுகிறது. தமிழ்வருடப்பிறப்பு, ஆடி, தை அமாவாசையன்றும், நவராத்திரி, திருக்கார்த்திகை வைகுண்ட ஏகாதசி, ராமநவமி அன்றும் அதிவிமரிசையாக உற்சவங்கள் நடைபெறுகின்றன. வேதாரண்யத்தில் நீராடி, தில்லைவிளாகத்தில் இராமபிரானைத் தொழுவதால் எல்லாக் காரியங்களும் கைகூடும் என்ற நம்பிக்கை இங்குள்ள மக்களிடம் பரவியுள்ளது.
அருள்மிகு ராமசாமிப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு ராமசாமிப் பெருமாள் திருக்கோயில் வயலூர் திருவாரூர்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் பயணிக்கும்போது, மிகச் சிறிய கிராமமான மாவூர் எனும் ஊரைப் பார்க்கலாம், அங்கிருந்து கிழக்கில் எட்டுக்குடியிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது வயலூர் எனும் கிராமம்.
தமிழகத்தில் ஸ்ரீராமபிரானுக்கு கோயில் அமைந்திருப்பது மிகவும் குறைவுதான். அப்படிப்பட்ட நிலையில் வயலூர் எனும் கிராமத்தில் ராமசாமிப் பெருமாள் கோயில். பிரகாரத்தில் அனுமனும் கருடாழ்வாரும் அழகு ததும்பக் காட்சி தருகின்றனர்.
அருள்மிகு கண்டுளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு கண்டுளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில், பாடகச்சேரி வழி, வலங்கைமான் 612804, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம்.
+91 9952848340, 9840053289.
வலங்கைமான் வட்டத்தில் உள்ளது வலங்கைமானிலிருந்து திருவாரூர் பாதையில் 8 கிமீ தொலைவில் உள்ளது.
ராமர், லக்ஷ்மணர் சீதாப்பிராட்டியினைத் தேடி வந்த போது சீதையின் பாடகம் (கொலுசு) தென்பட்ட இடம். எனவே இதைக் கண்டு உளம் மகிழ்ந்த பெருமாளாக இந்தப் பெருமாள். இந்த ஊரில் கண்டுளம் மகிழ்ந்த பெருமாள் கோயில் சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலும் தற்போது திருப்பணி நடைபெற்று வருகின்றன. 250 ஆண்டுகளாக குடிசையில் பாலாலாயம் செய்யப்பட்டிருந்த கோயில் 24-08-2011ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இத்தலம் இராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த தலமாகும். பாடகச்சேரி சுவாமிகளின் அவதாரப் பதி. பாடகச்சேரி சுவாமிகள் காஞ்சி மகாமுனியால் போற்றிப் பேசப்பட்டவர். 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இவர் பல கோயில்களுக்கு தன் கழுத்தில் தூக்கினைச் சுமந்து நிதி சேகரித்து புணருத்தாரணம் செய்து மகான். இருப்பினும் அவருக்கு இந்தக் கோயிலுக்குத்திருப்பணி செய்ய உத்தரவு கிடைக்கவில்லை. இவருடைய திருவுருவம் கும்பகோணம் நாகநாதசுவாமி கோயிலில் உள்ளது. தன்னை நாகநாதசுவாமி ஊழியன் என்றே அழைத்துக்கொண்டார். இவர் தன் காலத்தில் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தவர். பைரவ உபாசகர். இவர் அன்ன தானம் செய்யும் போது கண்காணாத இடத்திலிருந்து நாய்கள் அமைதியாக வந்து உணவு அருந்திவிட்டுச் செல்லும். கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். எப்போது வேண்டுமானாலும் சேவிக்கலாம்.
பூஜை நேரம்: -
அருள்மிகு கல்யாணவரதராஜப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு கல்யாணவரதராஜப் பெருமாள் திருக்கோயில், ஆவணம் பருத்தியூர், 31 அக்கிரஹாரம் ஆவணம், பருத்தியூர் சேங்காலிபுரம் வழி, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் 612604.
+91 9786867387.
குடமுருட்டியாறு பாயும் குடவாசலிலிருந்து 3கிமீ தொலைவில் உள்ள சேங்காலிபுரம் ப்ளாவடிக்கு அருகே உள்ள ஊர் ஆவணம் பருத்தியூர். ப்ளாவடி அல்லது குடவாசலிலிருந்து ஆட்டோவில் வரலாம். கும்பகோணத்திலிருந்து 25 கிமீ தூரம். கும்பகோணம் நாச்சியார் கோயில் பாதை வழியாக நாகப்பட்டினம். ப்ளாவடி, குடவாசல், நன்னிலம், மாதிரிமங்கலம், திருமருகல் பேருந்துகள் ஆவணி பருத்தியூர் வழியாகச் செல்லும்.
கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ள ஆதி வரதராஜர் பிரயோகச் சக்கிரத்துடன் காட்சியளிக்கிறார். துர்வாசரின் சாபத்திலிருந்து மன்னன் அம்பரிஷனைக் காக்க இப்பெருமாள் பிரயோகச் சக்கிரத்தைச் செலுத்தியதாக வரலாறு. துர்வாசர் தன் முடிக் கற்றையைக் கொண்டு அரக்கனை உருவாக்கி அம்பரீஷைக் கொல்ல முற்பட்ட போது அந்த அரக்கனை பிரயோகச் சக்கிரத்தால் பெருமாள் கொன்றார். அனைத்து எதிர்ப்புகளிலிருந்தும் நம்மைக் காக்கும் பெருமாள் இவர். ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்யத்திற்காக சுதர்ஸன ஹோமம் செய்யப்படுகிறது என்று ஆஹிர் புதன்ய சம்ஹதையில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்தப் பெருமாளை வணங்க அனைத்து எதிர்ப்புகள் மற்றும் தீரா நோய்களிலிருந்தும் விடிவு கிடைக்கும். திருவல்லிக்கேணி வேதவல்லித் தாயாரின் ரூபமாக அருள் பாலிக்கும் மஹாலக்ஷ்மி தாயார் சன்னிதி உள்ளது. இங்கே இராமர் மற்றும் சிவன் சன்னிதிகளும் உள்ளன. சுண்டல் பானகம் நீர்மோர் பிரசாதம் வழங்கப்படுகிறது. விநாயக சதுர்த்தி, வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், ராமநவமி விசேஷம் கோதண்டராம குளத்தில் பாதம் நனைத்து தொடர்ந்து மாத புனர்வக நட்சத்திரத்தில் பிரதக்ஷணம் செய்ய காரிய சித்தி கிட்டும். கல்யாணவரதராஜப் பெருமாள் மகாலக்ஷ்மி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். ஒரு கால பூஜை இதர நேரத்தில் தகவல் தெரிவித்து தான் சேவிக்க முடியும். திருவாராதனை செய்பவர் 10 கிமீ தூரத்திலிருந்து வருகிறார்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை
<< Previous  14  15  16 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar