| அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில் |
| எளவனூர், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு தெற்கே 17 கி.மீ. |
| பாமணியாற்றின் மேற்குகரையில் இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| பெருவிடமருதூர், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு தெற்கே 20 கி.மீ. |
| கோரையாற்றின் கரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
| குலமாணிக்கம், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு தெற்கே 21 கி.மீ. |
| இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| மண்ணுக்குமுண்டான், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு தெற்கே 21 கி.மீ. |
| கோரையாற்றின் மேற்குகரையில் இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சுயம்புநாத சுவாமி திருக்கோயில் |
| பேரளம், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொல்லுமாங்குடிக்கு தெற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 5-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கோபுரம், பிராகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் பவானியம்மன். தீர்த்தம் அக்கினி தீர்த்தம் ஆலயத்திற்குக் கீழ் உள்ளது. தவத்தின் மிக்கவரான பேரள முனிவர் இத்தலத்தில் சுயம்புநாதரை நோக்கித் தவம்செய்து கலிதோஷத்தால் ஆன்மாக்களுக்கு ஏற்படும் துன்பங்களை இத்தல இறைவனை தரிசித்தவுடன் நீங்கவும், தன் பெயரால் இத்தலம் விளங்கவும் வரம் பெற்ற தலம். இத்தலப் பெருமானாகிய சுயம்புநாதர் தன்னைப் பூசித்த இந்திரனுக்குப் பெறுதற்கரிய பேற்றினைக் கொடுத்தார். சூரியனுக்கு மிகுந்த ஒளியினை அளித்தார். யாக்ஞவல்கியர் பூசித்துப் பிரமஞானத்தைப் பெற்றார். சுக்கிராசாரியர் வழிபட்டு இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றலைப் பெற்றார். மார்கண்டேயர் வழிபட்டு நித்தியத்துவத்தையடைந்தார். விசுவாமித்திரர் வழிபட்டு அதனால் க்ஷத்திரிய உடலைவிட்டு பிராமண்யத்தை அடைந்தார் என இத்தலபுராண வரலாறுகளாகும். |
| அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் |
| கீரனூர், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொல்லுமாங்குடிக்கு வடக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இராஜகோபுரம், மூன்று பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் கிரிஜராம்பிகை. அக்னி பூசித்த தலம். முதலாம் இராஜேந்திரன் என்னும் சோழ மன்னர்களால் கட்டப் பெற்றதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் குறிக்கப்படுகின்றன. 5 கால பூஜை. சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
| அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் |
| பில்லூர், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| பேரளத்திலிருந்து வடமேற்காக 5 கி.மீ. |
| இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
| அன்னதானபுரம், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொல்லுமாங்குடிக்கு வடகிழக்கே 8 கி.மீ. |
| 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு நிதியமனவளநாதர் திருக்கோயில் |
| களியாக்குடி, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொல்லுமாங்குடிக்கு வடகிழக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |
| பாவட்டாகுடி, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொல்லுமாங்குடிக்கு கிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 19 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.மூன்றாம் ராஜராஜசோழன் காலத்து கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. |
|
|